"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Thursday, July 14, 2016

தோழர் ஸ்ரீப் லோங்ஸ்டாப் நினைவு நீடுழி வாழ்க!


[SLL-India‬ announces its condolence to SLL-Australia Comrade.]

Thozhilalar Paathai, Volume 398
October, 1990

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் ஆஸ்திரேலிய பகுதியான சோசலிஸ்ட் லேபர் லீக் உறுப்பினராக பத்தாண்டுகளுக்கு மேல் பணியாற்றிய தோழர் ஸ்ரீப் லோங்ஸ்டாப் ஆகஸ்ட் 14ல் 63 வயதில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். அவருடைய இழப்பு குறித்து சோசலிசத் தொழிலாளர் கழகம் அதன் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிறது.

ஸ்ரீப் லோங்ஸ்டாப் 53 வயதில் டிராட்ஸ்கிச இயக்கத்தில் சேர்ந்து அவருடைய வாழ்க்கையின் மீதி நாட்களை நான்காம் அகிலத்தை கட்டுவதற்காக செலவழிக்க தீர்மானித்தார். அவருடைய நீண்ட அனுபவத்தில், ஸ்டாலினிசம், சமூக ஜனநாயகம், மத்தியவாதம் இவற்றின் காட்டிக்கொடுப்புகளுக்கு எதிராக நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டமே அதாவது உலக சோசலிச புரட்சியே தொழிலாள வர்க்கத்தின் முன்னேற்றத்திற்கு சரியான பாதையை காட்டும் என்பதில் முழு நம்பிக்கையுடன் அவர் செயல்பட்டார்.

No comments:

Post a Comment