[“The
Trotkyist Socialist Labour League India is the only one,
which struggles to build Socialist Republic of Sri Lanka and Eelam as
part of the Socialist Republics of Indian sub-continent among Indian
working class and oppressed mass. In this region, SLL-India
is fighting along with Revolutionary Communist League for the
struggle of self-determination rights of Tamils and against the
Indian government's anti-Tamil Eelam maneuvers.”]
December
1991
இந்திய
மாஜி பிரதமர் ராஜீவ் காந்தி
கொலை பற்றி விசாரணை செய்யும்
விசேட விசாரணைக் குழு (S.I.T)
எதிர்வரும்
ஏப்ரல் மாதத்தில் தாக்கல்
செய்யவுள்ள குற்றப்பத்திரிகையில்
தமிழீழ விடுதலைப் புலிகள்
இயக்கத் தலைவர் வே.
பிரபாகரனையும்
ஒரு எதிரியாக குறிப்பிட இந்திய
காங்கிரஸ் அரசாங்கம் எடுத்துவரும்
ஆத்திரமூட்டல் நடவடிக்கைகள்
மூலம் தமிழ் விடுதலை இயக்கத்துக்கு
எதிரான கொலைகாரச் சதிகளை
இந்தியாவிலும் இலங்கையிலும்
புதிய கட்டத்துக்கு உயர்த்த
முடிவு செய்துள்ளது.
தமிழ்
ஈழம் தேசிய இனத்தினருக்கு
எதிரான இந்தச் சதியில்
ஏகாதிபத்திய கைக்கூலி
நரசிம்மராவ்-பிரேமதாச
அரசாங்கங்கள் கூட்டாகவே
ஈடுபட்டுள்ளன.
தென் ஆசிய
எஜமான்களாக எந்த ஏகாதிபத்திய
ஆட்சியாளர்களை அனைத்துக்
கொள்வது தொடர்பான பிரச்சினைகளின்
பேரில் இந்திய-இலங்கை
ஆளும் வர்க்கங்கள் 'சார்க்'
மகாநாட்டைக்
கூட்டுவதிலும் கலந்து
கொள்வதிலும்,
அதில் என்ன
தான் முரண்பட்டுக் கொண்டாலும்
எந்தவொரு இன,
மதக்
குழுவினரதும் ஜனநாயக கிளர்ச்சி,
எழுச்சிகளை
நசுக்குவதில் அவர்களிடையே
தகராறு கிடையாது.
தமிழ்
தேசிய விடுதலை இயக்கத்தினை
இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கும்
பொருட்டு 'விசேட
விசாரணைக் குழுவின் அநேக
அங்கத்தவர்கள் புனர்விசாரணையின்
இழகிய தடயங்களை இறுக்கும்பொருட்டு
காலத்துக்குக் காலம் இலங்கைகுக்கு
விஜயம் செய்து வந்துள்ளார்கள்.”
(ஹிந்து —
5/12/91)
வடக்கு
மாகாணத்தில் உள்ள ஒடுக்கப்படும்
தமிழ் தேசிய இனத்தினருக்கு
எதிராக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு
மேலாக முதலாளித்துவ சிங்கள
இனவாத அரசாங்கம் கடைப்பிடித்து
வரும் 'உணவுத்தடை'
நடவடிக்கைகள்
அங்கு படுபயங்கரமான பட்டினி
வலயத்தினை ஏற்படுத்தியுள்ளதோடு
வவுனியாவிலும் தீவுப்பகுதியிலும்
சிவில் நிர்வாகத்தை'
புனர்நிர்மாணம்
செய்வதாகக் கூறி அரசாங்க
இனவாத படைகள் கைக்கூலி புளொட்.
டேலோ
இயக்கங்களுடன் ஆரம்பித்துள்ள
நடவடிக்கைகள் அப்பிராந்தியத்தில்
பட்டினியுடனும் எஞ்சிக்
கிடந்தோரையும் வெளியேற
வைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்
சென்று திரும்பிய மாஜி யாழ்
மாவட்ட அரசாங்க அதிபரும்,
இன்றைய
சுற்றாடல் அலுவல்கள் அமைச்சின்
செயலாளருமான டாக்டர் தேவநேசன்
நேசையா குறிப்பிட்டது போல்
"யாழ்ப்பாணத்தில்
போஷாக்கில்லாத குழந்தைகள்
சமுதாயம் ஒன்று உருவாகிறது.
இதனைத்
தடுக்க நாம் விரைந்து நடவடிக்கை
எடுக்காவிட்டால் எதிர்கால
இளைஞர் சமுதாயம் வலுக்குறைந்த
ஊனச் சமுதாயமாகவே இருக்கும்"
இது
"ஊனச்சமுதாயமாக"
எஞ்சி
இருக்கும் நிலைதன்னும்
இப்புதிய இந்திய-இலங்கை
ஆளும் வர்க்கங்களின் சதியினைத்
தொடர்ந்து கிடைக்குமா என்ற
ஐயமும் உருவாகியுள்ளது.
குட்டி
முதலாளித்துவ விடுதலைப்
புலிகள் தலைமை இப்பிற்போக்கு
நரசிம்மராவ் -
பிரேமதாசா
அரசாங்கங்களுடன் நானாவிதமான
உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும்
உக்திகளில் ஈடுபட்டுக்
கொண்டுள்ள நிலையில் இந்த
ஆளும் கும்பல்கள் ராஜீவ்
காந்தி கொலை விசாரணை மீதான
வெறிபிடித்த பிரச்சாரத்தினை
தமிழ் தேசிய இனத்தினருக்கு
எதிராக மட்டுமல்ல முழு இந்திய
தொழிலாள,
ஒடுக்கப்படும்
மக்களுக்கு எதிராகவும்
பயன்படுத்த முடிவு செய்துள்ளன.
இந்திய
காங்கிரஸ் ஆட்சியாளர்கள்
முகம் கொடுத்துள்ள பாரிய
பொருளாதார நெருக்கடியின்
மத்தியில் பிரதமர் நரசிம்மராவ்
ஐரோப்பிய ஏகாதிபத்திய மையங்களில்
பேச்சுவார்த்தைகளில்
ஈடுபட்டுள்ளார்.
எனினும்
ஹெல்மட் ஹோலின் அரசாங்கமும்
சரி ட்ரான்ஸ்வால்ட் மிட்டரண்டின்
அரசாங்கமும் சரி இந்திய தேசிய
முதலாளித்துவ ஆட்சியாளர்கள்
வழங்கும் எந்தவொரு சலுகையுடனும்
திருப்திப் படுவதாய் இல்லை.
சமீபத்தில்
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட
அமெரிக்க சிறப்புப் பிரதிநிதி
குறிப்பிட்டது போல் நாம்
வேண்டும் நிபந்தனைகளைப்
பூர்த்தி செய்ய சிங்கப்பூரினால்
முடியுமானால் இந்தியாவினால்
ஏன் முடியாது?
என்ற தொனியில்
பேசியுள்ளான்.
1940பதுகளில்
இருந்து 'நேரு
சோசலிசம்',
'தேசிய
சோசலிசம்'
என்ற பேரில்
மாஸ்கோ ஸ்டானினிஸ்டுகளின்
ஆதரவுடன் இடம் பெற்ற சகல
தேசியவாத நடவடிக்கைகளையும்
புதுடில்லி அரசாங்கம்
சிதறடித்துள்ளது.
தமிழ்
தேசிய விடுதலை இயக்கத்துக்கு
எதிராக இடம் பெறும் வெறி கொண்ட
பிரச்சாரம் தமிழ்நாடு மாநில
ஜெயலலிதா அரசாங்கத்துக்கும்
தமிழீழ விடுதலைப் புலி
போராளிகளுக்கும் இடையேயான
பிரச்சினையாக அன்றி இந்திய
மத்திய அரசாங்கம்—ஹிந்தி
வெறி சோவினிச பாரதீய ஜனதா
கட்சி உள்ளடங்கலான பிரச்சார
முன்னணி மூலம் முன்னெடுக்கப்படுகின்றது.
காங்கிரஸ்
கட்சி, ADMK
வுக்கும்
மு. கருணாநிதி
தலைமையிலான தி.மு.க.
விற்கும்
இடையேயான பிரச்சினை,
இந்த தமிழ்
ஈழம் மக்களுக்கு எதிரான
பிரச்சாரத்தினை கருணாநிதி
கூறுவது போல் இலங்கையில் இன
நெருக்கடி வெடித்த காலத்தில்
இருந்து (1983)
ஆரம்பிப்பதாக
அல்லது ஜெயலலிதா-நரசிம்மராவ்
கும்பல் கூறுவதைப் போல் 1989ல்
(கருணாநிதி
ஆட்சிக்கு வந்த காலத்தில்)
இருந்து
ஆரம்பிப்பதா?
என்பதே.
இந்த
முதலாளித்துவ கும்பல்களுக்கிடையே
தமிழ் ஈழம் போராட்ட குரல்
வளையை நெரிப்பது தொடர்பாக
வேறு அடிப்படையான கருத்து
வேறுபாடு கிடையாது.
மாஜி
உள்நாட்டுச் செயலாளர் நாகராஜா
கைது தொடர்பான பிரச்சினையில்
பத்திரிகைகளுக்கு அளித்த
பேச்சியில் மு.
கருணாநிதி
இதை ஊர்ஜிதம் செய்துள்ளார்:
“கருணாநிதி
தீவிரவாதிகள் இந்த மாநிலத்தில்
ஏதோஒரு சில மாதங்களுக்கு
முன் வந்து குதித்தது போல்
தோன்றும் வகையில் அன்றி
மாநிலத்தில் 1983ல்
இருந்து விடுதலைப் புலிகளின்
நடவடிக்கைகளை விசாரிக்க ஒரு
உயர்நீதிமன்ற நீதிபதி நியமனம்
செய்யப்பட வேண்டும் என
கோரினார்.”
(ஹிந்து
2.11.91)
இந்திய
முதலாளி வர்க்கம் இந்த விசாரணை
தொடர்பாக இந்திய தொழிலாள-ஒடுக்கப்படும்
மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தும்
முறையில் பயங்கரவாத,
நாசகர
நடவடிக்கைகள் சட்டத்தை (tdaa)
இந்தக் கொலை
விசாரணை தொடர்பாக பயன்படுத்தி
வருகின்றது.
இந்தக் கொலை
தொடர்பான பொலிஸ் விசாரணைகளுக்கு
இந்திய முதலாளித்துவ வெகுஜனத்
தொடர்புச் சாதனங்கள் முன்னுரிமை
கொடுப்பதன் மூலம் இந்திய
பக்டரி மூடுவிழாக்கள்,
வேலைநீக்கங்கள்,
அரசுடமை
நிறுவனங்கள் பன்னாட்டு
கம்பனிகளிடம் ஒப்படைப்பு,
வேலையின்மை
போன்ற கொதிக்கும் பிரச்சினைகளால்
தினமும் முன்னணிக்கு வரும்
இலட்சோப இலட்சம் தொழிலாள-ஒடுக்கப்படும்
மக்களுக்கு எதிராக இன,
மத,
பிராந்திய
வெறிகளை தூண்டி விடுகின்றன.
இந்திய
ஸ்டாலினிச சீ.பீ.ஐ-சீ.பீ.எம்.
தலைவர்களுக்கு
இந்திய முதலாளி வர்க்கக்
கட்சிகளில் இருந்து சுயாதீனமான
வேறுபட்ட வேலைத்திட்டம்
கிடையாது.
இதனால்
இந்திய மத்திய அரசாங்கத்தின்
ஒவ்வொரு பொலிஸ் அரசு வேலைத்திட்டமும்
இத்துரோகத் தலைவர்களின்
ஆசியுடனேயே அமுல் செய்யப்படுகின்றது.
தமிழ்
ஈழத்தினருக்கு எதிரான
தமிழ்நாட்டு பொலிஸ் வேட்டைகள்
இதை நிரூபித்துள்ளன.
இலங்கை-தமிழ்ஈழம்
சோசலிசக் குடியரசு ஒன்றியத்தினை
இந்தியத் துணைக் கண்ட சோசலிச
குடியரசின் பாகமாக அமைக்க
இந்திய தொழிலாள-ஒடுக்கப்படும்
மக்களிடையே ட்ரொட்ஸ்கிச
சோசலிசத் தொழிலாளர் கழகம்
மட்டுமே போராடுகின்றது.
தமிழ்
மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான
போராட்டத்திற்கும் இந்திய
அரசின் தமிழ்ஈழம் விரோத
சதிக்கும் எதிராக இப்பிராந்தியத்தில்
புரட்சிக் கம்யூனிஸ்ட்
கழகத்துடன் இணைந்து போராடுவது
சோ.தொ.கழகமே.