"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Tuesday, July 12, 2016

யூ.என்.பி. இனவாத யுத்தம் வேண்டாம்! சோசலிச குடியரசினை கட்டியெழுப்பு!


[A statement of Revolutionary Labour League: Revolutionary Labour League (RCL) was struggling along with ‪‪SLL-India. Based on the program of the Fourth International which was struggling to unify the millions of working class and oppressed people in India.]

Thozhilalar Paathai, Volume 398
September, 1990

புரட்சி கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

முதலாளித்துவ அமைப்பினை தூக்கி வீசும் புரட்சிகர போராட்டத்தினை வெற்றிக்கு இட்டுச் செல்வதன் மூலமே நாற்றம் கண்ட முதலாளித்துவ அமைப்பு மூலம் சிருஷ்டிக்கப்படும் இந்த அழிவினை ஒழித்துக் கட்ட முடியும். ஒடுக்கப்படும் மக்கள் குழுக்களின் தீர்க்கப்படாத அனைத்து பிரச்சினைகளுக்குமான ஜனநாயகத் தீர்வு வேலைத்திட்டத்தினை தமது சோசலிச வேலைத்திட்டத்துடன் ஒன்றிணைப்பதன் மூலம் தொழிலாள வர்க்கம் தனது சுயாதீனமான வர்க்க நடவடிக்கைகள் மூலம் அதற்கு தலைமை தாங்க வேண்டும்.

இதற்கு அவசியமான புரட்சிகரத் தலைமையை இந்நாட்டினுள் லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் உலக சோசலிசப் புரட்சிக்காகப் போராடும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைக் கிளையான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமே கட்டி எழுப்பி வருகின்றது.

இந்தியாவில் தொழிலாள வர்க்கத்தினையும் கோடானுகோடி ஒடுக்கப்படும் மக்களையும் நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அணித்திரட்டப் போராடி வரும் சோசலிச லேபர் லீக்குடன் இணைந்து புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் போராடி வருகின்றது. இந்தியத் துணைக்கண்ட சோவியத் சோசலிச குடியரசின் மூலம், இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் இந்தத் துணைக் கண்டத்தினை வெட்டி … திணிக்கப்பட்ட ஏகாதிபத்தியச் சார்பு முதலாளித்துவ அரச அமைப்பினை ஒழித்துக் கட்ட வேண்டும். அது உலக சோசலிசப் புரட்சியின் தீர்க்கமான பணியின் ஒரு பாகமாகும், உலக சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்திற்கு தோள் கொடுப்பதன் அடிப்படையில் அழிவுமிக்க ஏகாதிபத்திய உலக அமைப்பினை உலக அரங்கில் இருந்து துடைத்துக் கட்ட முடியும்.

அதன் பேரில் அனைத்துலகக் குழு தலைமை தாங்கும் நான்காம் அகிலமே போராடுகின்றது. அதன் இலங்கைக் கிளையான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தில் சேர்ந்து அந்த வரலாற்றுப் புரட்சிகரப் பணிக்கு தலைமை தாங்கும் போராளிகளாக மாறும்படி தொழிலாள வர்க்க இளைஞர்கள் கிராமப்புற ஏழை போராளிகள் அனைவரையும் அழைக்கின்றது. …

No comments:

Post a Comment