"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Showing posts with label 1991-April. Show all posts
Showing posts with label 1991-April. Show all posts

Wednesday, August 24, 2016

இந்தியாவில் ரொக்சியிஸ்டுக்களின் மீதான துன்புறுத்தல்களை கண்டனம் செய்


Thozhilalar Paathai Volume 405 (File 039)
April 1991

சர்வதேசரீதியாக தொழிலாளர் இயக்கம் கட்டாயமாகவும், உடனடியாகவும் இந்திய ரொக்சியிச கட்சியான சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் மீது தற்போது பொலிசினால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட துன்புறுத்தல் நடவடிக்கைகளை கண்டனம் செய்ய வேண்டும்.

 
இந்தியாவில் அலைமோதிக் கொண்டிருக்கும் அரசியல் கொந்தளிப்புக்களின் மத்தியில் அரச படைகள் நான்காவது அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் அரசியல் ஐக்கியம் கொண்ட சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் மீது இலக்கு வைத்திருக்கின்றன.

சமூக நெருக்கடிகள் மோசமாகிக் கொண்டிருக்கும் வேளையில் சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் அங்கத்தவர்களை வாயடைக்கப் பண்ணும் நோக்கத்தில் அவர்கள் மீது பொலீசாரினால் மேற்கொள்ளப்பட்ட தொடர்ந்த பயமுறுத்தல் முயற்சிகள் முழுமையாக தோல்வியடைந்துள்ளன. ... மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட இந்தியாவில் கட்டுப்படுத்த முடியாமல் வளர்ச்சியடையும் பாரிய சமூக நெருக்கடியை தவிர்க்க முடியாத தங்களது கையாலாகாத்தனத்தை மூடிமறைப்பதற்காக முதலாளித்துவ அரசியல்வாதிகள் இனவாதத்தையும், சாதி வெறியையும் மேலும் மேலும் தூண்டிவிடுகையில், சோசலிசத் தொழிலாளர் கழகம் மட்டும் ... தொழிலாளர் இயக்கத்திற்குள், இந்திய தொழிலாள வர்க்கத்தை ஸ்ரீலங்காவினதும், தமிழீழத்தினதும் தொழிலாளர்களுடன் ஐக்கியப்படுத்துவதற்காக போராடும் ஒரேயொரு சக்தியாகும்.
தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தில் மட்டும் 200 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலைமைகளில் பொலீசார் இந்திய ரொக்சியிஸ்ட்டுக்களின் மேல் கவனம் செலுத்துவது மிகவும் மோசமான பயங்கரங்களுக்கான அறிகுறியாகும்.

... வட-கிழக்கு மாநிலமான உத்திரப் பிரதேசத்தில் 1000 ... தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு மேல் பொலீசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததினால் 12 தொழிலாளர்கள் கொல்லப்பட்டதுடன் 60 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தொழிலாளர்கள் அரசிற்கு சொந்தமான டாலா (Dalla) சீமெந்து தொழிற்சாலை தல்மியா (Dalmia) தொழில் நிறுவனக் குழுவிற்கு கையளிக்கப்படுவதை தடை செய்வதற்காக தொழிற்சாலை வாசலில் மறியல் செய்தனர். புது டெல்லிக்கு 340 மைல்கள் கிழக்காக புனித இந்து நகரமான வாரணாசிக்கு அருகாமையில் சுனம்பாத்ரா (Sunebhadra) நகரத்தில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலை உத்தரப் பிரதேச சீமெந்துக் கூட்டு ஸ்தாபனத்திற்கு சொந்தமானதாகும். கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசாங்கம் இந்த தொழிற்சாலையை அதனது புதிய தனியார் சொந்தக்காரர்களுக்கு கையளிக்கவிருந்தது.

பொலீசாரின் இந்த நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிப்பதற்காக அருகில் உள்ள ஒப்ரா (Obra) அனல் மின்சார நிலையத்தைச் சேர்ந்த 7000 தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கியதனால் இப்பிரதேசம் பாரிய மின்சாரத் தட்டுப்பாட்டிற்கு உட்பட்டது.

இத்தொழிற்சாலையை தனியார் துறைக்கு மாற்றுவதற்கான தீர்மானம் தேசிய மாநில அரசுகளின் தனியார் மயப்படுத்தல் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகும். தனியார் மயப்படுத்தலின் போது வேலைக்கான உத்தரவாதம் இல்லா தொழிலாக்கப்படுவதுடன் வேலை நிலைமைகள் பாரியளவில் தாழ்த்தப்படும். இந்த வேலைத்திட்டம் தொழிலாள வர்க்கத்தின் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது.

Dalla தொழிற்சாலையைப் பொறுத்தளவில் வேலைநிறுத்தங்களும் உற்பத்தி குறைவும் குறைந்த லாபத்தை ஏற்படுத்தியது தான் தனியார்மயப்படுத்தலுக்கு காரணமென அரசு நியாயப்படுத்தியது.

அசோசியேட்டன் பிரஸ் செய்தி நிறுவனம் இந்தியாவின் சீமெந்து தொழிற்சாலை தொழிலாளர்களின் மாதாந்த சம்பளம் 75 இலிருந்து 100 டொலர்கள் வரையென அறிவித்துள்ளது.

சோசலிசத் தொழிலாளர் கழகம் இரண்டு வேட்பாளர்களை இந்த தேர்தலில் நிறுத்தி உள்ளது. தென் மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் புக்கிங்காம் கர்நாட்டிக் புடவை ஆலையின் தொழிலாளியான தோழர் மோசஸ் ... வேட்பாளராக போட்டியிடுகின்றார். ஸ்டாண்டர்ட் மோட்டார் தொழிற்சங்கத்தின் முன்னை நாள் நிர்வாகக் குழு அங்கத்தவரான தோழர் கைலாசம் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் ... வேட்பாளராவார்.

மே 21 இல் ராஜீவ்காந்தி கொலை செய்யப்படுவதற்கு முன்பிருந்தே, இந்திய ரொக்சியிஸ்டுக்கள் அரசின் துன்புறுத்தல்களுக்குள்ளாக்கப்பட்டனர். ஏப்ரல் 23 இல் சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் பத்திரிகையான "தொழிலாளர் பாதையின் ஆசிரியரான தோழர் S. ராம் சென்னையில் "சிறீலங்காவில் இனவாத யுத்தத்தினதும், கிராமத்துப் படுகொலைகளினதும் பின்னணியும் தீர்வும்" என்ற தலைப்பில் ஒரு பகிரங்க சொற்பொழிவாற்றிய இரண்டு நாட்களுக்கிடையில் பொலீஸ் ஒருவித அதிகாரமுமற்ற வகையில் பாரியளவில் புலனாய்வுகளையும், விசாரணைகளையும் மேற்கொண்டது. ஏப்ரல் 25 ம் திகதி நாலு மணிக்கு பொலீஸ் அதிகாரி அலுவலகத்தைச் சேர்ந்த குருசாரி எனத் தன்னை அடையாளம் காட்டிய பொலீஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் சென்னையில் சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் தோழர் ராமை சந்திக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தினார். இதனை அடுத்த நாட்களில் இதே பொலீஸ் உத்தியோகஸ்தர் தோழர் மோசஸ் இன் உறவினர்கள் வீட்டிற்கு சென்று அவரது கடந்த காலம், தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை தொடர்பாக விசாரணை நடத்தினார். பின்னர் மே மாதம் 12 ம் திகதி குருசாமி தோழர் மோசஸ் இன் வீட்டிற்குச் சென்றதுடன் அதேதினத்தில் பெரம்பூர் பராக்டுகள் தெருவில் B&C ஆலை தொழிலாளர்களின் குடியிருப்பு விடுதிகளின் வாசலில் தோழர் மோசஸ் இனை நேருக்கு நேர் சந்தித்தார். குருசாமி அவரிடம் சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் ஏனைய அங்கத்தவர்களைப் பற்றியும், கட்சி தொழிலாளர்களின் வேலைநிறுத்தமொன்றில் தலையிட இருக்கின்றதா என்பது பற்றியும் விசாரணை செய்தார்.

மே 16ம் திகதி காலையில் அண்ணாநகர் மேற்கு விசேட பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலீஸ் சேவகர் சிவலிங்கம் (PC 2479) தோழர் கைலாசத்தின் வீட்டிற்கு விஜயம் செய்தார். தோழர் கைலாசத்தை வீட்டில் காணாததால் இந்த உத்தியோகஸ்தர் அன்று மாலை திரும்பவும் சென்று கைலாசம் கண்டிப்பாக தன்னை திருமங்கலம் பொலீஸ் நிலையத்தில் சந்திக்க வேண்டுமென ஒரு தகவலையும் கொடுத்திருந்தார்.

மே 24 இல் இந்த பொலீஸ் துன்புறுத்தல்களை ஒரு முடிவிற்கு கொண்டு வரும்படி சோசலிச தொழிலாளர் கழகம் கோரிக்கை விடுத்தது. சென்னைப் பொலீசின் பொது நிர்வாகிக்கு தோழர் மோசஸ் பின்வருமாறு எழுதினார்: “விசாரணை செய்வதும், குறுக்கு விசாரணைக்கு உட்படுத்துவதுமான மேலே கூறப்பட்ட முயற்சிகள் சட்டப்பூர்வமாக உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான எங்களது ஸ்தாபனத்தின் அங்கத்தவர்களதும், ஸ்தாபனத்தினதும் அரசியல் உரிமைகள் மீதும் சிவில் உரிமைகள் மீதும் சட்ட விரோதமான அத்துமீறல்களை உருவாக்குகின்றது. இந்த நடவடிக்கைகள் சோசலிசத் தொழிலாளர் கழகம் தனது கொள்கைகளையும், வேலைத்திட்டங்களையும் பிரச்சாரம் செய்யும் சட்டரீதியிலான உரிமையுள்ள நடவடிக்கைகளுக்கும், அத்துடன் வட சென்னை லோக்சபா தொகுதிக்கும் வில்லிவாக்கம் சட்டசபைத் தொகுதிக்குமான அதனது வேட்பாளர்களுக்கான தேர்தல் பிரச்சார வேலைகளை மேற்கொள்ளுவதற்கும் ஒரு இடையூறாகும்.

தொழிலாளர் இயக்கத்தின் புரட்சிகர குரலை அடக்குவதற்கான இவர்களது முயற்சிகளில் சென்னை தொழிற்சங்கத்தின் (MTU) ஸ்ராலினிச தொழிற்சங்க அதிகாரத்துடன் பொலீஸ் பகிரங்கமாக இணைந்து செயற்படுகின்றது. கடந்த வருடம் டிசம்பரல் 13 இல் சென்னை தொழிற்சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட B&C மில் தொழிலாளர்களின் கூட்டமொன்றின் போது தோழர் ராம் தொழிற்சாலை வாசலில் வைத்து 30 குண்டர்களினால் தாக்கப்பட்டார்.

இந்த குண்டர்களை ஒழுங்கு செய்வரான வரதராஜன் MLUவின் தலைவரும், ஸ்டாலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் அங்கத்தவராவார். 1989 இல் இவருக்கெதிராக தோழர் ராம் தொழிற்சங்கத் தலைவர் பதவிக்காக போட்டியிட்டார். ராம் மீது தாக்கியவர்களுக்கு தலைமை தாங்கிய குமரேசன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) அங்கத்தவரும், MLUவின் நிர்வாகக் குழு அங்கத்தவருமாவார்.

இத்தாக்குதலின்போது அருகாமையிலுள்ள புளியந்தோப்பு பொலீஸ் நிலையத்தின் பொலீஸ்காரர்கள் ஒருவித தலையீடும் செய்யாது முடமாகி நின்றதுடன் தாக்குதல் முடிந்தவுடன் தோழர் ராமை கைது செய்து அவருக்கெதிராக குற்றச்சாட்டுக்களையும் சோடித்தனர்.

சோசலிசத் தொழிலாளர் கழகம் அவர்களிற்கெதிரான தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் துன்புறுத்தல் நடவடிக்கைகளை முடிவிற்கு கொண்டு வரும்படியும், தோழர் ராமிற்கு எதிரான பொய்க் குற்றச்சாட்டுக்களை வாபஸ் வாங்கும்படியும் நிர்பந்தம் செய்கின்றது.

சோசலிசத் தொழிலாளர் கழகத்திற்கு மேலான தாக்குதல்கள் தொழிலாள வர்க்கம் முழுமைக்குமான தாக்குதல்களின் ஒரு பகுதியாகும்.

கண்டனக் கடிதங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:-

THE DIRECTOR GENERAL OF POLICE
TAMIL NADU
STATE POLICE HEADQUARTERS
DR. RADAKRISHNAN SALAI,
MADRAS 600 004, INDIA.

பிரதிகள் அனுப்ப வேண்டிய முகவரி:-

Tholilalar Pathai,
POSTFACH 1609
71020 BIETIGHEIM.

Tuesday, August 9, 2016

இந்தியா: பஞ்சாப், அசாம் தேர்தல்களுக்கு ஸ்டாலினிஸ்டுகள் எதிர்ப்பு


[SLL-India announces that "ICFI's fraternal organization Socialist Labour League was the only one which was struggling against the treacherous politics of the Stalinist's Popular Front to build alternative revolutionary leadership among Indian working and oppressed people. For the establishment of working class state with a revolutionary program, SLL-India had listed its candidates in North Chennai and Villivakkam constituencies."]

Thozhilalar Paathai, Volume 405 (File 039)
April, 1991

 
இந்தியாவின் பிரசித்தி பெற்ற துணிநெசவு ஆலையான பீ.அன்.சீ. மில் மூடப்படுவதற்கு எதிராக இடம்பெற்ற ஒருநாள் 'பந்த்' போராட்டத்தினால் சென்னையும் அண்ணா மாவட்டமும் ஸ்தம்பித்தது. பாடசாலை மாணவர்களின் பரீட்சை காரணமாக பல்லவன் போக்குவரத்துச் சேவையும், ஆஸ்பத்திரி சேவையும் இந்த 'பந்தில்' சம்பந்தப் படுத்தப்படவில்லை. அரசாங்க, தனியார் துறையைச் சேர்ந்த சகல பக்டரிகள், வர்த்தக நிலையங்கள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டு, வீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன. சென்னையின் முக்கிய கைத்தொழில் பிரதேசங்களான மாதவரம், அயனாவரம், பேரம்பூரில் போக்குவரத்துச் சேவை ஸ்தம்பித்துக் கிடந்தது. தொழிலாளர்கள் வீதித் தடைகளை ஏற்படுத்தி வீரியத்துடன் தலையிட்ட இடங்களில் பொலிசார் 600 தொழிலாளர்களை கைது செய்தனர்.

ஸ்டாண்டர்ட் மோட்டார்சுடன் சேர்ந்து இன்று பீ அண்ட் சீ. மில்லின் மூடுவிழாவானது உலக நெருக்கடியையும் ஏகாதிபத்திய முதலீடுகளுக்குச் செய்யப்படும் தயாரிப்பையும், இந்தியாவின் பாரம்பரிய தேசியக் கைத்தொழில்கள் துடைத்துக் கட்டப்பட்டு வருவதையும் சுட்டிக் காட்டுகின்றது.

இந்தியாவின் 'தேசிய' கைத்தொழிலும் பொருளாதாரத் துறையும் முற்று முழுதாய் நெருக்கடிக்குள்ளாகி வரும் நிலையிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்டாலினிஸ்டுகள் வீ.பி. சிங்கின் ஜனதா டால் கட்சியுடன் முதலாளித்துவ கூட்டரசாங்கம் அமைப்பதற்கான தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள். மே 20, 23, 26ம் திகதிகளில் நடைபெறவுள்ள இந்தியப் பொதுத் தேர்தலில் ஜனதா தளம் உள்ளடங்கலான முதலாளித்துவக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து, போட்டி தவிர்ப்புகளில் ஈடுபடத் தயாராகி வருகின்றார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) தேசிய சபையின் பிரேரணை இக்கூட்டினைப் பற்றி கூறியதாவது: “எமது அரசியல் இலக்கு பாரதீய ஜனதா கட்சியையும் காங்கிரஸ் () கட்சியையும் தோற்கடிப்பதும் லோக்சபையில் (இந்திய பாராளுமன்றம்) இடதுசாரிச் சக்திகளின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவும் குறைந்தபட்ச வேலைத்திட்டத்தினை கொண்ட இடதுசாரி-தேசிய முன்னணிக் கூட்டின் மத்திய அரசாங்கம் ஒன்றினை கட்டி எழுப்புவதே.”

இந்திய ஸ்டாலினிஸ்டுகளின் மற்றோர் பிரிவினரான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - சிபிஎம்) தேசிய முன்னணியுடன் கூட்டரசாங்கத்தில் நுழைவது சம்பந்தமான தமது தயார் நிலையை வெளிப்படுத்தியுள்ளது. 'தீர்மானம் செய்வது தொடர்பான நெருக்குவாதம் ஏற்படுத்த முடியாதெனில் அரசாங்கத்தில் சேர தாம் விரும்பவில்லை' என அவ்வறிக்கை கூறிக் கொண்டுள்ளது.

இதற்கிடையே வீ.பி. சிங்கின் ஜனதா தளத்துக்கும் காபந்து பிரதமர் சந்திரசேகரின் ஜனதா தளத்துக்கும் (எஸ்) இடையே கூட்டுக்கான இரகசியப் பேச்சு வார்த்தைகள் தற்சமயம் இடம் பெற்று வருகின்றது.

ஜனதா தளத்தின் தேசிய இணைப்புக் கமிட்டிக்கும் ஸ்டாலினிசக் கட்சிகள் உள்ளடங்கலான 'இடதுசாரிக் கூட்டுகளுக்கும் இடையே ஏப்ரல் 5ம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் சீ.பி.. தலைவர் எம். பாரதியும் சீ.பீ.(எம்) அரசியல் குழு உறுப்பினர் ஹர்கிஜன் சிங் சந்தித்து ஒரு நிலைப்பாட்டினை வகித்தனர்: ஜனதா தளத்துடனான (எஸ்) கருத்துப் பரிமாறலை உடனடியாக முறித்துக் கொள்ளக் கூடாது. மார்ச் 29, 30, 31ம் திகதிகளில் நடைபெற்ற இலங்கை ஸ்டாலினிசக் கம்யூனிஸ்ட் கட்சியின் மகாநாட்டில் கலந்து கொள்ள வந்த சீ.பி.. பிரதிநிதி தாம் இந்தியாவினுள் ஒரு கூட்டரசாங்கத்தை அமைக்க ஆயத்தமாகி வருவதாகத் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் முதலாளித்துவக் கூட்டரசாங்கங்களுக்கு வெளியில் இருந்து கொண்டு அவற்றுக்கு முண்டு கொடுத்து வந்த இந்திய ஸ்டாலினிஸ்டுகள் இம்முறை அவற்றில் நேரடியாக இணைந்து கொள்ள முடிவு செய்தமை, அவர்களின் எஜமானனாக ஏகாதிபத்தியத்துக்கும் இந்திய முதலாளித்துவ வர்க்கத்துக்கும் சேவை செய்யும் தமது எதிர்ப்புரட்சி தொழிற்பாட்டினை புதிய மட்டத்திற்கு உயர்த்திக் கொண்டுள்ளதைச் சுட்டிக் காட்டுகின்றது.

இந்திய ஸ்டாலினிச சகாக்கள் முதலாளித்துவக் கூட்டரசாங்கத்தில் அமைச்சர் பதவி ஏற்றுக் கொள்ள எடுத்த முடிவினை இலங்கை ஸ்டாலினிஸ்டுகள் 'அந்த' பத்திரிகையில் பெருமகிழ்ச்சி ததும்ப, உஜாருடன் வெளியிட்டனர். வெளியில் இருந்து கொண்டு அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கையில் 'மக்கள் நம்பிக்கை' குறைந்து போவதால், அரசாங்கத்தில் நேரடியாக நுழைவது அவசியம் என இலங்கையின் ஸ்டாலினிஸ்டுகள் வாதிட்டு வந்தனர்.

அசாம், பஞ்சாப் மாநிலங்களில் தேர்தல் நடாத்தாமல் தொடர்ந்தும் அவற்றை புது டில்லியின் நேரடி ஒடுக்குமுறையின் கீழேயே வைத்திருக்க வேண்டும் என்ற பிரச்சாரத்துக்கும் இந்திய ஸ்டாலினிஸ்டுகள் ஆதரவு அளித்துள்ளனர். இது சம்பந்தமாக ஒரு நினைவூட்டல் கடிதத்தினைக் கூட சீ.பீ.., சீ.பீ.எம் தலைமைகள் காங்கிரஸ் () படுபிற்போக்கு இந்துவெறி பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விமர்சனம்

எதிர்வரும் தேர்தலில் அரசியல் இலாபத்தின் பேரில் சந்திரசேகரின் காபந்து அரசாங்கம், பஞ்சாபிலும், அசாமிலும் தேர்தல் நடாத்தும்படி ஏப்ரல் 11ம் திகதி ஜனாதிபதிக்கு சிபாரிசு செய்தது. இந்தச் சிபாரிசினை கடுமையாக விமர்சனம் செய்த சீ.பி.(எம்) தலைவர்கள், அதனை அமுல் செய்ய வேண்டாம் என ஜனாதிபதியைக் கோரி இருந்தனர். தமது அதிகாரத்தினைப் பாவித்து இம்முடிவினை அமுல் செய்வதை தவிர்க்குமாறு சீ.பீ.(எம்), தேர்தல் ஆணைக் குழுவைக் கேட்டுள்ளதாக அதன் அரசியல் குழு உறுப்பினரான ஹர்கிஷன் சிங் சுர்ஜிட் பீ.டீ.. செய்திச் சேவையிடம் குறிப்பிட்டார்.

இன்றைய அரசாங்கம் தீவிரவாதிகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் செயல்பட முயற்சிக்கிறது. லோக் சபை தேர்தலை நடாத்துவதன் மூலம் சட்டத்தையும் ஒழுங்கையும் உறுதி செய்ததன் பின்னர் தேர்தல் நடாத்துவது பற்றிய விளக்கத்துக்கு வர சகல அரசியல் கட்சிகளும் தயாராக உள்ள நிலையில் அரசாங்கத்தின் நடவடிக்கை கலைக்கப்பட்ட லோக்சபாவின் பெரும்பான்மையினரைப் பிரதிநிதித்துவம் செய்த பல்வேறு அரசியல் கட்சிகளின் அபிப்பிராயம் பற்றி இன்றைய அரசாங்கம் எவ்வித அக்கறையும் காட்டவில்லை" என்பதைக் குறிக்கிறது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

பாரதீய ஜனதா கட்சியின் இனவாதம், மதவாதம் சம்பந்தமான அவர்களின் 'விமர்சனம்' ஒருபுறமிருக்க, இந்திய ஸ்டாலினிஸ்டுகள் பஞ்சாபையும், அசாமையும் ஹிந்து மதவெறி மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத்துக்கு கீழ்ப்படுத்தி வைக்க பாரதீய ஜனதா கட்சியுடனும் வெளிவெளியாகக் கோர்த்துக் கொண்டுள்ளனர். சமீப காலம் வரை பஞ்சாபிலும், அசாமிலும் தேர்தல் நடாத்த வேண்டும் எனக் கேட்டு வந்த சீ.பி.. தலைவர்கள் கூட 180 பாகையில் குத்துக்கரணமடித்து அம்மாநிலங்களில் தேர்தல் இரத்தாக வேண்டும் என்ற பிரச்சாரத்தில் குதித்துள்ளனர். இந்தக் குத்துக்கரணத்தின் மூலம் நம்மிடையே இருந்து வந்த சிறுசிறு கருத்து வேறுபாடுகள் மறைந்து, நெருங்கித் தொழிற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சீ.பீ.எம். தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நாளாவண்ணம் எதிர்ப்புரட்சி அரசியலின் உச்சக் கம்பத்துக்கு ஏறிக் கொண்டுள்ள இந்தி சீ.பீ.., சீ.பீ.எம். தலைவர்களையே 'இந்தியாவின் இடது சக்திகள்' என சந்தர்ப்பவாத தலைவர்கள் அரவணைத்துக் கொண்டுள்ளனர். இந்தியாவினுள் சிறுபான்மை தேசிய இனங்களையும் மதக் குழுக்களையும் நசுக்கவும், தொழிலாள வர்க்கத்தினை ஏகாதிபத்தியச் சார்பு முதலாளிகளுக்குப் பலியிடவும் இந்திய ஸ்டாலினிஸ்டுகள் தொழிற்படுகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற நவசமசமாஜக் கட்சியின் 13வது ஆண்டு நிறைவு விழாவுக்கு சீ.பீ.எம். மின் தமிழ்நாடு நிறைவேற்றுக் குழு 'நல்வாழ்த்து' அனுப்பியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலினிஸ்டுகளின் இந்த துரோக நடவடிக்கையை தமக்கு முற்றிலும் சாதகமாக்கிக் கொண்டுள்ள படுபிற்போக்கு இந்திய வலதுசாரி பாரதீய ஜனதா கட்சி, இன-மதவெறிப் பிரச்சாரத்தினை முன்னெடுத்துள்ளது. ஏப்ரல் 4ம் திகதி புது டில்லியில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய பா.. கட்சி தலைவர் எல். ஜே. அத்வானி பாகிஸ்தானத்தின் நிர்வாகத்துக்குள் வரும் 'காஷ்மீரினை இந்தியாவுக்குப் பெறும் பொருட்டு தமது கட்சி செயற்பட்டு வருவதாகக் கூறினார். விஸ்வ ஹிந்து பரிசத் மற்றும் ஆர். எஸ். எஸ். போன்ற வலதுசாரி இனவெறியர்களுடன் சேர்ந்து இத்தகைய இன-மத ஆத்திரமூட்டல்களில் பாரதீய ஜனதா கட்சி ஈடுபடக் காரணம், இந்தியத் தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக பாசிச இயக்கம் ஒன்றைக் கட்டி எழுப்புவதே.

தொழிலாள வர்க்கத்தின் மீது அத்தகைய மிலேச்ச பாசிச சர்வாதிகாரத்தினைத் திணிக்க அவசியமான நிலைமைகளை சிருஷ்டிப்பதற்கு இந்திய தொழிலாள வர்க்கத்தினை முதலாளித்துவ மக்கள் முன்னணி பொறிகளில் மாட்டுவதற்கு ஸ்டாலினிச ஏஜன்டுகளின் சேவை இந்திய ஆளும் வர்க்கத்துக்கு அவசியம். சீ.பீ.., சீ.பி.எம். தலைவர்கள் தமது எஜமான்களுக்கு இச்சேவையை வழங்கத் தயாராகி வருகின்றனர்.

ஸ்டாலினிஸ்டுகளின் இந்த மக்கள் முன்னணி துரோக அரசியலுக்கு எதிராக மாற்றுப் புரட்சித் தலைமையைக் கட்டி எழுப்புவதற்கு இந்தியத் தொழிலாள, ஒடுக்கப்படும் மக்களிடையே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தோழமை இயக்கமான சோசலிசத் தொழிலாளர் கழகம் மட்டுமே போராடி வருகின்றது. முதலாளித்துவ ஜனநாயக நப்பாசைகளுக்கு எதிராக இந்திய முதலாளி வர்க்க ஆட்சியைத் தூக்கி வீசி, தொழிலாள வர்க்க அரசினை ஸ்தாபிதம் செய்வதற்கான புரட்சிகர வேலைத்திட்டத்துடன் சோ.தொ.. வட சென்னை, வில்லிவாக்கம் தேர்தல் தொகுதிகளில் தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

Monday, August 8, 2016

பு.க.க. மே தினச் செய்தி: உலக யுத்தத்துக்கும் காலனிமயமாக்கலுக்கும் எதிராகப் போராடு!


[“The Revolutionary Communist League's May day message states that the Sri Lankan section of ICFI (RCL) and India Socialist Labour League were fighting to mobilise the Indian sub-continent working class for revolutionary program under Trotsky's Permanent Revolution theory.”]

Thozhilalar Paathai, Volume 405 (File 039)
April, 1991

உலகத்தை மீண்டும் பங்கு போடும் கொடிய காலனித்துவத்துக்காக ஏகாதிபத்தியவாதிகளிடையே இழுபறிகள் ஏற்பட்டுள்ள முன்றாவது அணுவாயுத உலக யுத்தத்துக்கு எதிராக உலகத் தொழிலாள வர்க்கம்—ஒன்றிணைந்த அனைத்துலக புரட்சிகரச் சக்தியாகக் கிளர்ந்து எழ வேண்டும் என நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைக் கிளையான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் இந்த மே தினத்தில் வேண்டிக் கொள்கிறது. …

இந்தியத் துணைக்கண்டம்

சீர்திருத்தவாதிகளும் ஸ்டாலினிச அதிகாரத்துவங்களும் ஏகாதிபத்தியச் சார்பு முதலாளித்துவ ஆட்சியாளர்களைக் காக்கும் பொருட்டு தம்மை அர்ப்பணம் செய்து கொண்டுள்ளன. இந்த அழிவினை தொழிலாள ஒடுக்கப்படும் மக்கள் மீது திணிப்பது பற்றி இலங்கையிலும் இந்தியாவிலும் இருந்து கிடைக்கும் அறிக்கைகள் மிகவும் கேவலமான வடிவங்களை எடுத்துள்ளன. இவை ஏனைய இடங்களில் இழைக்கப்பட்ட காட்டிக் கொடுப்புக்களை எல்லாம் தாண்டிச் செல்கின்றன.

இலங்கையில் சமசமாஜ, ஸ்டாலினிச தலைவர்களும் இந்தியாவில் ஸ்டாலினிசக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் திணிக்கப்பட்ட பிற்போக்கு முதலாளித்துவ அரசாங்கங்களும் அடிபணிந்தமையானது கோடானுகோடி இந்திய, பாகிஸ்தானிய, பங்களாதேஷ், பர்மிய, இலங்கை மக்களுக்கு சகிக்க முடியாத வேலையின்மை பஞ்சம், பட்டினியையே தேடிக் கொடுத்துள்ளது. இவற்றுக்கு எதிராகத் தலைதூக்கும் மக்கட் போராட்டங்களை இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கும் தயாரிப்பு நடவடிக்கையாக ஏகாதிபத்தியச் சார்பு முதலாளித்துவ ஆளும் வர்க்கம் தொழிலாள, ஒடுக்கப்படும் மக்களை இடைவிடாமல் இன, மத மோதுதல்களில் ஈடுபடச் செய்து இராணுவ—பாசிச சர்வாதிகாரத்தினை திணிக்க முயன்று வருகின்றது. 1947-48ல் இந்தியாவை பிரிவினை செய்த வேளையில் இந்தியத் துணைக்கண்டம் பூராவும் இடம் பெற்ற இரத்தக் களரியை தாண்டும் ஒரு தொகை மோதுதல்களை தூண்டிவிடுவதில் பிற்போக்கு ஆட்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் ஒடுக்கப்படும் தமிழ் தேசிய இனத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் பயங்கர இயக்கமானது இந்த காட்டுமிராண்டி நடவடிக்கையின் ஒரு பாகமே.

யுத்தத்தின் பின்னைய ஏகாதிபத்திய உலக அமைப்பின் பொறிவானது இந்தியத் துணைக்கண்டத்தின் உள்ளே ஏகாதிபத்தியச் சார்பு தேசிய முதலாளித்துவ ஆட்சியாளர்களின் பிற்போக்கும், அழிவும் இலட்சோப இலட்சம் மக்களுக்கு வசிப்பிடமும் இல்லாமல் செய்வதன் மூலம் வெளிப்பாடாகியுள்ளது. இன்று பாகிஸ்தான், பங்களாதேஷ், பர்மா, இந்தியா, இலங்கை முதலான சகல முதலாளித்துவ நாடுகளில் திணிக்கப்படும் இன-மத ஒடுக்குமுறைகளைச் … மக்களும், ஏழைகளும் ஒரு நாட்டில் இருந்து மறு நாட்டிற்கு அகதிகளாக கலைக்கப்பட்டு வருகின்றார்கள். இந்தியாவின் பஞ்சாப், காஷ்மீர் பகுதிகளில் இருந்து பாகிஸ்தானுக்குப் பெருக்கெடுக்கும் அகதிகளும் பங்களாதேஷ் முஸ்லீம் அடிப்படைவாதிகளின் ஒடுக்குமுறையைச் சகிக்க முடியாமல் இந்தியாவுக்குள் பெருக்கெடுக்கும் இலட்சக்கணக்கான … மக்கள் உட்பட ஒடுக்கப்படும் மக்களும், பர்மாவின் இராணுவ ஒடுக்குமுறையினாலும் முஸ்லீம் எதிர்ப்பினாலும் பங்களாதேசுக்குள்ளும் இந்தியாவுக்குள்ளும் பெருக்கெடுப்போரும், வடகீழ் மாகாண தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத யுத்தத்தினால் அவர்களின் வீடுவாசல்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட 8 இலட்சம் மக்கள் இந்தியாவுக்குச் சென்றமையும் இந்த சரணாகதியடைந்த மாபெரும் மக்கட் சனத்தொகையின் ஒரு சிறு துளியாகும்.

விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் மாபெரும் வெற்றிகளை ஈட்டிக் கொண்டுள்ள இன்றைய உலக நிலையில் குறைந்தபட்ச மனித வாழ்க்கை வசதிகள் தன்னும் இல்லாமல் இங்ஙனம் புகலிடம் தேடிக் கொண்டுள்ள இலட்சோப லட்சம் மக்கள் ஏகாதிபத்திச் சார்பு முதலாளித்துவ ஆட்சிகளுக்கு எதிராகத் தொடுக்கும் பலத்த குற்றச்சாட்டாகும்.

இது வெறுமனே இன்று அடைக்கலம் தேடிக் கொண்டுள்ள மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள அழிவு மட்டுமின்றி முழுத் தொழிலாள-ஒடுக்கப்படும் மக்கள் மீதும் மிலேச்ச ஏகாதிபத்திய இராணுவ ஆட்சியினை திணிக்க எடுக்கப்பட்டு வரும் ஆரம்ப நடவடிக்கையாகும். இதனை ஈராக்கில் இடம்பெறும் சம்பவங்கள் எந்தவித சந்தேகத்துக்கும் இடமின்றி நிரூபித்துக் கொண்டுள்ளன, அந்தந்த நாடுகளில் மக்கள் வாழ்க்கைகளை நாசமாக்கும் முறையில் தலையிட்டு வரும் ஏகாதிபத்தியவாதிகள். அந்நாடுகளில் தமது படைகளை இருத்தும் திட்டங்களுக்கான நிலைமைகளைச் சிருஷ்டித்து வருகின்றார்கள். இந்த விதத்திலேயே ஈராக் குர்திஷ் மக்களின் அவலநிலையை அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

தமிழ் தேசிய இனத்துக்கு எதிரான இனவாத யுத்தமும் அதனால் உருவான அகதிகள் பெருக்கமும் 1987ல் ஏகாதிபத்தியவாதிகளின் ஆதரவு பெற்ற இந்திய படைகளின் நுழைவுக்குப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. இன்று இந்த வேலைத்திட்டம் உலகம் பூராவும் நடைமுறைப்படுத்தும் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது இந்நிலைமையில் பாரதீய ஜனதா கட்சி மற்றும் முதலாளித்துவ கட்சிகள், குழுக்களும் முஸ்லீம் எதிர்ப்பு இந்து வெறியை தூண்டுவதானது இந்தியாவிலும் துணைக்கண்டம் பூராவும் ஏகாதிபத்திய நிலைமைகளைச் சிருஷ்டிப்பதாக உள்ளது. …

புரட்சித் தலைமை

இந்த சகல அபிவிருத்திகளும் தொழிலாள வர்க்கத்தினதும், ஒடுக்கப்படும் மக்களதும் பாரிய நலன்களை இட்டு நிரப்ப அவசியமான அனைத்துலகவாத புரட்சித் தலைமை பற்றிய பிரச்சினையைத் தோற்றுவிக்கின்றன. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைக் கிளையான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் இந்திய சோசலிசத் தொழிலாளர் கழகமும் லியொன் டிரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் இந்திய துணைக்கண்ட தொழிலாள வர்க்கத்தினை புரட்சிகர வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அணிதிரட்டப் போராடி வருகின்றது. ஒடுக்கப்படும் தேசிய இனங்களும் சகிக்க முடியாத ஒடுக்குமுறைக்கும் அடக்குமுறைக்கும் ஆட்பட்டு வரும் மதக் குழுக்கள் தாழ்த்தப்பட்ட மக்களும் இளைஞர்கள் இல்லப் பெண்கள் இளைஞர்கள் இல்லப் பெண்கள், கிராமப்புற ஏழை விவசாயிகள் அனைவரையும் தொழிலாள வர்க்கத்தினைச் சூழ புரட்சிகரமான முறையில் அணிதிரட்டுவதன் மூலம் ஏகாதிபத்தியச் சார்பு முதலாளித்துவ அரசினைத் தூக்கி வீசி, சோசலிச சோவியத் குடியரசு ஒன்றியத்தினை நிறுவுவதே அப்போராட்டத்தின் இலக்காகும். உலக சோசலிசப் புரட்சியின் முன்நோக்கின் அடிப்படையில் இடம்பெறும் இப்போராட்டத்துடன் இணைவதென சகல தொழிலாள வர்க்கப் போராளிகளும், ஒடுக்கப்படும் மக்களும் இந்த மே தினத்தில் தீர்மானம் செய்ய வேண்டும்.

  • யூ.என்.பி யை வெளியேற்று!
  • மக்கள் முன்னணிகளை நிராகரி!
  • இலங்கை-தமிழ் ஈழம் சோசலிச குடியரசினை கட்டி எழுப்பு!
  • இந்தியத் துணைக்கண்ட சோசலிச சோவியத் குடியரசு ஒன்றியத்தினை நோக்கி முன்னேறு!
  • புரட்சிக் கட்சியை கட்டி எழுப்பு!