Thozhilalar
Paathai Volume 439
September
1993
நான்காம்
அகிலத்தின் அனைத்துலகக்
குழுவுடன் அரசியல் ஐக்கியம்
கொண்ட
சோசலிசத் தொழிலாளர்
கழகம்
37,
2வது
மாடி,
நாராயண்
மஸ்திரி வீதி,
ஒட்டேரி
சென்னை.
1993
ஜூலை
24
விலானி
பீரிஸ்,
தலைவி,
சுயாதீனத்
தொழிலாளர் விசாரணைக் குழு,
90,
1வது
மாளிகாகந்த ஒழுங்கை,
கொழும்பு
- 10, இலங்கை.
அன்பின்
தோழி,
பிரமேலால்
ஜயக்கொடியின் மரணம் பற்றியும்
சுதந்திர வர்த்தக வலயத்தின்
சேவை நிலைமைகள் பற்றியும்
ஆராயும் தொழிலாளர் விசாரணைக்
குழு 1993 ஜூலை
25ம்
திகதி கூடுவதாக பு.க.க.
பொதுச்
செயலாளர் தோழர்.
விஜே
டயசிடம் அறிந்தோம்.
துக்கத்தில்
ஆழ்ந்த ஜயக்கொடியின்
குடும்பத்தினருக்கும்,
தாம்
சேவை செய்து வந்த 5
தொன்
எடை கொண்ட நெரிக்கும்
இயந்திரத்தினுள் நசுங்குண்டு
ஜயக்கொடி இறந்து போகும் வரை
அவருடன் ஒன்றாக சேவை செய்த
கொரியா-சிலோன்
பாதணி கம்பனியின் தொழிலாளர்களுக்கும்
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்
குழுவுடன் அரசியல் ஐக்கியம்
கொண்ட இந்திய ட்ரொட்ஸ்கிச
சோசலிசத் தொழிலாளர் கழகம்
தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக்
கொள்கின்றது.
உங்களின்
விசாரணைக் கமிட்டிக்கு ஆதரவு
தர சோசலிசத் தொழிலாளர் கழகம்,
இந்தியத்
தொழிலாளி வர்க்கத்தின் உள்ளே
பிரச்சார இயக்கத்தினைத்
தொடுக்க உறுதி பூண்கிறது.
தோழமையுடன்
அருண்
குமார்
பொதுச்
செயலாளர்,
சோசலிசத்
தொழிலாளர் கழகம்