"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Showing posts with label 1997-October. Show all posts
Showing posts with label 1997-October. Show all posts

Wednesday, June 15, 2016

இந்திய "சுதந்திரத்தின்" 50 ஆண்டுகள்: உழைக்கும் மக்களின் கொதிக்கும் பிரச்சனைகள் பிரமாண்டமான சமூகக் கிளர்ச்சிகளுக்கு சமிக்கை செய்கின்றது

இதழ் 484 (file 483) 1997 அக்டோபர்


இந்திய சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் செயலாளர் அருண் குமார்

இந்திய முதலாளித்துவ ஆளும் வர்க்கம் இந்தியாவின் "முன்னேற்றத்தை" முன்னிட்டு மீண்டும் இந்தியாவுக்கு வருகை தருமாறு ஏகாதிபத்தியவாதிகளை வெட்கமின்றி கெஞ்சும் அதேவேளையில் "இந்திய சுதந்திரத்தின்" 50 ஆண்டு நிறைவுகளையும் கொண்டாடுகின்றது! இந்திய சுதந்திரத்தின் 50 ஆண்டு விழா கேடுகெட்ட மோசடிகளைக் குறித்து நிற்கின்றது. பெரும் ஆடம்பரங்களுடன் கூடிய இந்த விழாவின் பேரில் கோடிக் கணக்கான ரூபாக்களைக் கொட்டுவது, இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு காந்தியின் "அஹிம்சை" போராட்டத்தின் மூலம் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் அவர்களுக்கு 'சுதந்திரம்" கிடைத்ததாக இந்தியாவின் பிரமாண்டமான பெரும்பான்மையினராக உழைகும் மக்களுக்கு "நினைவூட்டு" வதற்கேயாகும். ஏனெனில் எவரும் அதைப்பற்றி சட்டை செய்யாததால் ஆகும்! பொன்விழா கொண்டாட்டங்களில் இந்திய பொதுமக்களின் பெரும்பான்மையினர் இடையே நிலவுவது குதூகலம் அல்ல: துயரமும் வெறுப்பும் ஆத்திரமும். இதனை அரச உயர் பீடத்தினர் புரிந்து கொண்டுள்ளனர். அதன் பெறுபேறாக மத்திய, மாநில அரசாங்க அதிகாரிகள் பொதுமக்கள் இந்திய சுதந்திரம் பற்றிய தமது சுயாதீன சுதந்திர உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளக்கூடாது என எச்சரிக்கை செய்துள்ளார்கள். அதற்குப் பதிலாக அவர்கள் சிரித்த முகத்துடன் அரசாங்க நிறுவனங்களினால் ஒழுங்கு செய்யப்படும் விழாக்களில் கலந்து கொள்ள வேண்டும் என்றுள்ளார்கள். சுதந்திரம் பற்றி மேலும் என்ன பேச்சு?

சுதந்திர இந்தியாவின் சமூகத் துருவப்படுத்தல் எந்தளவுக்கு விரிந்து போயுள்ளது எனச் சொன்னால் ஒருவர் என்றும் பின்வரும் கேள்வியை எழுப்பும் வண்ணம் தள்ளப்படுகின்றார்: 1947ல் சுதந்திரம் பெற்று கடந்த 50 ஆண்டுகள் பூராவும் அதை அனுபவித்துள்ளது இந்தியாவின் எந்த பகுதியினர்? நன்கு தெளிவாகச் சொன்னால் அது இந்திய சமுதாயத்தின் எந்த தட்டினர்? இக்கேள்விக்குப் பதில் அளிக்கையில் எந்தவிதமான ஈடாட்டமும் இருக்க முடியாது. கடந்த 50 ஆண்டுகள் பூராவும் தமது செல்வத்தை நூறு மடங்குகளுக்கும் மேலாக அதிகரித்த விதத்தில் மலையெனக் குவித்துக் கொண்டுள்ளவர்கள். தேசிய முதலாளி வர்க்கத்தின் உயர் தட்டினர். டாட்டாக்களும் பிர்லாக்களும் இந்திய முதலாளி வர்க்கம் (இந்து, முஸ்லீம் என இரு தரப்பினரும்) இந்தியப் பொது மக்களின் புரட்சிகரக் கிளர்ச்சிகளைப் பிளவுபடுத்தி அடக்கி ஒடுக்குகையில் ஒத்துழைக்கும் பொருட்டு பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் அவர்களிடம் அரசியல் அதிகாரத்தை கையளித்தனர். இந்தியத் துணைக் கண்டத்தில் 1947ல் — யுத்தத்துக்கு பின்னைய ஏகாதிபத்திய சமரசம் — இந்திய முதலாளி வர்க்கம் இந்திய உழைக்கும் மக்களின் திட்டவட்டமான ஒடுக்குமுறையாளனாகவும் சுரண்டலாளனாகவும் மாறியது. ஏகாதிபத்தியவாதிகள் கூறியது என்ன? எமது தூதுப் பணி காலனித்துவ நாடுகளில் பொதுமக்களை நாகரீகமயமாக்குவதே! இந்தியாவின் முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேரு 1947 ஆகஸ்ட் 14ம் திகதி நிகழ்த்திய உரையில் பின்வருமாறு குறிப்பிட்டா: “இந்தியாவுக்கு சேவை செய்வது என்பதன் அர்த்தம், வறுமை, படிப்பறிவின்மை, சமத்துவமின்மை சந்தர்ப்பங்களை போக்குவதாகும்.”

மேற்கண்ட கூற்று நேருவின் ஒரு வாக்குறுதியை பிரதிபலிக்கவில்லை: ரூஷ்யத் தொழிலாளர் வர்க்கப் புரட்சியின் மூலம் பிரமாண்டமான்ன சுவைகண்டு, தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்ட இந்திய உழைக்ககும் மக்களின் எதிர்பார்ப்புகளை தடுத்து வைக்கும் ஒரு சாகஜமாகும்.

நிஜ நிலைமை

வறுமை, கல்வியறிவின்மை, சமத்துவமின்மை நிலைமையைப் போக்குதல்" பற்றிய செவிப்பறையை கலங்க வைக்கும் பேச்சுக்களின் பின்னர் 50 ஆண்டுகள் கடந்து சென்றுவிட்டது. இந்தியாவின் நிஜ சமூக சித்திரம், “வறுமையும் படிப்பறிவின்மையும்" அகன்று போய்விடாது. முடிவுற்ற தோற்றப்பாடாக வளர்ச்சி கண்டுள்ளதற்குச் சாட்சி பகர்கின்றது. கீழ்க்காணும் புள்ளிவிபரங்கள் அதற்கு சாட்சி பகர்கின்றது: 1947ல் இந்தியாவின் முழுச் சனத்தொகை 320 மில்லியன். ஆனால் 50 ஆண்டுகளின் பின்னர் 320 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர். 1993-94 ஆண்டில் வறுமை மட்டம் நூற்றுக்கு 37.27 ஆக உள்ளளதாக திட்டக் கமிஷன் (Planning Commission) ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தியாவில் இந்த வறுமை மட்டம் கணக்கிடப்படுவது அடிப்படை உணவை மட்டும் அதாவது, இதை உண்ணும் போது குறைந்த பட்சக் கலோரி கிடைக்கும் விலைக்கு வாங்குவதற்கு அவசியமான வருமானத்தைக் கணக்கில் கொண்டதாகும். ஆதலால் வறுமை மட்டமானது படுமோசமான வறுமைக் கோட்டின் மட்டத்தில் இருந்து நாகரீகமான வாழ்க்கையை நடாத்துவதற்கு வேண்டிய ஏனைய பண்டங்கள், சேவைகள் சகலதையும் ஒதுக்கி, உயிர் வாழ்க்கைக்கு அவசியமான உணவுக்கு வேண்டிய செலவை மட்டும் கருத்தில் கொண்டு கணிக்கப்பட்டுள்ளது.

சுபீட்சமான வாழ்க்கையை நடாத்துவதற்கு அவசியமான செல்வத்தை சமூகத்தின் உயர்மட்டத்தை சேர்ந்த 10 சதவீதத்தினர் மட்டுமே கொடுள்ளனர். இந்த உயர் மட்ட 10 சதவீதத்தினர் நாட்டின் மொத்த செல்வத்தில் நூற்றுக்கு 90 வீதத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுள்ளனர். இப்போது உலகின் உயர் மட்டமான 130 மில்லியன்களை எட்டியுள்ள இந்தியாவின் சிறுவர் உழைப்பு வளர்ச்சியின் அதிர்ச்சி தரும் அபிவிருத்தியும் அகில இந்தியாவிலும் உள்ள மில்லியன் கணக்கிலான அடிமை உழைப்பாளிகள் பற்றிய அம்பலத்துக்கு வந்துள்ள தரவுகளும் "சுதந்திர இந்தியா"வின் உழைக்கும் மக்களின் பெரும்பான்மையினரின் சமூக தரித்திர நிலைமையை அம்பலமாக்குகின்றது.

இந்தியா புத்தாயிரம் ஆண்டுகளுக்குள் நுழைவது தனது ஜனத்தொகையில் கிட்டத்தட்ட சரி அரைப்பங்கினர் (நாட்டின் மக்களில் நூற்றுக்கு 60 வீதத்துக்கும் அதிகமானோர்) படிப்பறிவு இல்லாது இருந்து கொண்டுள்ள ஒரு நிலையாகும். ஆரம்பப் பாடசாலை செல்லும் வயதைக் கொண்டவர்களுள் (5 வயது தொடக்கம் 11 வயது வரை) பாடசாலை செல்லாது இருக்கும் இந்தியப் பிள்ளைகளின் எண்ணிக்கை 1995ல் 78 மில்லியன் எனக் கணக்கிடப்பட்டது. (புரன்ட் லைன் 1997 ஆகஸ்ட் 22)

ஒதுக்கீடு செய்யும் முறை (Reservation System) பதிவு செய்யப்பட்ட சாதி, குலம் ஆக வகுக்கப்பட்ட மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கத் தொழில், கல்வி நிறுவனங்களில் மாணவர் வெற்றிடங்களில் ஒரு பகுதியை ஒதுக்கீடு செய்தல் முதலில் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் 1920ல் அறிமுகம் செய்யப்பட்டாலும் இம்முறை சுதந்திர இந்தியாவின் உள்ளும் தொடர்ந்தும் கடைபிடிக்கப்பட்டது. இம்முறையின் அடிப்படை நோக்கம் காலனித்துவ ஆட்சிக்கு முக்கியமான முண்டு கோலாக மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களிடையே வசதி வாய்ப்புக்கள் கொண்ட ஒரு சமூக தட்டை அபிவிருத்தி செய்வதே. மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் அபிலாசைகளின் பேரில் போராடுவதாகக் கூறிக் கொண்ட அம்பேத்கார் இயக்கம், எந்த ஒரு காலத்திலும் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியை எதிர்த்ததே கிடையாது என்பது தற்செயலானது அல்ல. பிரித்து ஆளும் விதிமுறையில் உலகில் நிபுணர்களாக விளங்கிய பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் இந்து மக்களுக்கிடையே இருந்து வந்த சாதி பேதங்களை சுரண்டிக் கொள்வதன் மூலம் இந்தியாவின் உழைக்கும் மக்களிடையே பிளவுகளை உருவாக்க முயன்றனர். எனினும் தேசிய முதலாளி வர்க்க ஆட்சியின் கீழ் ஒதுக்கீட்டு முறையின் 50 ஆண்டு கால அனுபவங்கள் இந்திய முதலாளித்துவ அரசியலமைப்பு சட்ட வடிவினுள் ஒடுக்கப்படும் மக்களின் மீட்சிக்கு எதுவிதமான மார்க்கமும் இருக்கவில்லை என்பதை பலம் வாய்ந்த முறையில் நிரூபித்துக் கொண்டுள்ளது.

தொழில் வாய்ப்புக்களும், கல்வி நிறுவனங்களில் வெற்றிடங்களும் அதிகரித்ததும் இந்த ஒதுக்கீட்டு வீதாசாரங்களை அதிகரிக்கும் படி கோரும் கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகின்றன.

தேசிய முதலாளி வர்க்கத்தின் ஆட்சியின் 50 ஆண்டுகளுக்கு பின்னர் பொதுமக்களால் பிரமாண்டமான பெரும்பான்மையினர் சுத்தமான குடிநீர், மின்சாரம், நாகரீகமான வீட்டு வசதி, கல்வி, சுகாதார வசதிகள் இல்லாமலேயே இருந்து கொண்டுள்ளனர். இந்தியாவில் உள்ள 5 இலட்சம் கிராமங்களில் நூற்றுக்கு 75 விதத்துக்கும் அதிகமானோர் இந்த வசதிகள் இல்லாமல் இருந்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான மக்கள் அசுத்தமான நீர், அசுத்தமான சுற்றாடல், வறுமை காரணமாக உருவாகும் நோய்களால் உயிர் துறக்கின்றார்கள். காசம், மலேரியா, கொலரா போன்றவை வருடாந்தம் 15 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பலியெடுக்கும் தோற்றுநோய்களாகும். உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி இந்தியாவில் 10 பேரில் இருவர் காச நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) அறிக்கையின்படி இந்திய பிள்ளைகளில் நூற்றுக்கு 53 வீதத்தினர் அல்லது 200 மில்லியன்களுக்கும் அதிகமானோர் போஷாக்கின்மையால் பீடிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் இந்தியாவில் 22 மில்லியன் குழந்தைகள் இறக்கின்றன.

தேசியக் கட்டிட அமைப்பின் மதிப்பீடுகளின்படி 1985ல் 25 மில்லியன்களாக இருந்த வீட்டுத் தட்டுப்பாடு 1988ல் 29 மில்லியன் வரை வளர்ச்சி கண்டுள்ளது. இந்த எண்ணிக்கை 2000 ஆண்டுகளில் 40 மில்லியன்களை எட்டும். பெரும் நகரங்களில் வேலை செய்யும் மக்களில் பெரும்பான்மையினர் சேரிகளிலேயே ஜீவிக்கின்றனர். 25 மில்லியன் நடைபாதைக் கடைகள் இந்திய மக்களின் வீடுகளாகி உள்ளன.

1951ல் வேலையில்லாதோர் எண்ணிக்கை மூன்று இலட்சம் என அறிக்கை செய்யப்பட்டது. ஆனால் இன்று இந்த எண்ணிக்கை 40 மில்லியன்களையும் தாண்டிவிட்டது. பதிவு செய்யப்படாத வேலையற்றோர் உட்பட வேலையில்லாதோர் எண்ணிக்கை 130 மில்லியன்களுக்கும் அதிகம்.

வேலையின்மையினதும் வறுமையினதும் அதிகரிப்பு காரணமாக தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை வளர்ச்சி கண்டுள்ளது. தேசிய குற்றவியல் அறிக்கை அலுவலகத்தின்படி 1994ல் தற்கொலை செய்து கொண்டோர் எண்ணிக்கை 89195. இது முன்னைய ஆண்டைக் காட்டிலும் 5000 அதிகம். ஸ்டாலினிஸ்டுகளின் ஆட்சியில் உள்ள மேற்கு வங்காளத்தில் மட்டும் 1994ல் 12389 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலை செய்து கொள்வோர் வீதாசாரத்தை பொறுத்தமட்டில் மேற்கு வங்காளம் ஏழு ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னணியில் நின்று கொண்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுள் இந்தியாவின் தலைநகரான புதுடில்லியில் மட்டும் தற்கொலை செய்து கொண்டோர் எண்ணிக்கை 300க்கும் அதிகம் (ஹிந்து-1997 மே 7)

பட்டினி மரணங்களில் பீஹார், ஒரிஸ்ஸா, ஹரியான மாநிலங்களின் கிராமங்களில் பேயாடுகின்றன. ஹரியான மாநில அரசாங்கம் வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வமான அறிக்கைகளின்படி புதுடில்லிக்கு மிகவும் அண்மையில் உள்ள சுரகோன் மாவட்டத்தில் சுமார் 470 கிராமங்களில் 3 மாத காலத்தினுள் 400 பேர் இறந்துள்ளனர். இந்த மாரணங்களுக்கான நெருங்கிய காரணம் மலேரியாவாக இருக்கலாம். என்றாலும் பிரதேச மக்கள் மோசமான போஷாக்கின்மையால் பீடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் அம்பலப்படுத்துகின்றன. பொதுவாக மனித இரத்தத்தில் ஹிமோக்லொபினின் அளவு நூற்றுக்கு 1 கிராமுக்கு குறையக் கூடாது எனினும் இப்பிரதேச மக்களின் ஹிமோக்லொபின் அளவு பொதுவாக நூற்றுக்கு 4 கிராமுக்கு குறைவாகும். (ஹிந்து 1996 நவம்பர் 28)

இந்திய ஜனத்தொகையில் நூற்றுக்கு 70வீதத்தினர் இன்னமும் கிராமங்களில் வாழ்கிறார்கள். விவசாய உற்பத்தி பொருட்களின் விலை வீழ்ச்சிக்கும் உர மற்றும் உற்பத்திக்கு அவசியமான பொருட்களின் விலை உயர்வுக்கும் முகம் கொடுக்கும் விவசாயிகள் பெரும் கடன் சுமையில் மூழ்கிப் போயுள்ளார்கள். இந்த ஏழை விவசாயிகள் நிலம் அற்ற விவசாய தொழிலாளர்களாகி வருகின்றார்கள். 19.. புள்ளிவிபரங்களின்படி 1986ல் .. மில்லியன்களாக இருந்த விவசாய தொழிலாளர் எண்ணிக்கை 1987ல் … மில்லியன்கள் வரை உயர்ந்துள்ளது. இவர்களில் நூற்றுக்கு 70வீதத்தினர் வாழ்வது வறுமைக் கோட்டின் கீழாகும். விவசாய தொழிலாளர்களின் நாட்சம்பளம் பொதுவாக ரூபா. 14.58 ஆகும். விவசாயக் கைத்தொழில் அல்லாத தொழிலாளியின் நாட் சம்பளம் ரூபா. 34.90 ஆகும்.

இன்று ஜனத்தொகையில் நூற்றுக்கு .. வீதத்தினர் நாட்டின் வருமானத்தில் … வீதத்தினை உழைக்கும் விவசாயக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஆதலால் சாதாரண விவசாய கைத்தொழில் தொழிலாளியின் வருமானம் விவசாய கைத்தொழில் தொழிலாளி அல்லாதவரின் வருமானத்தில் சரி அரைப் பங்காகும். (இந்தியா ரூடே 1997 ஆகஸ்ட் 18)

350
மில்லியன்களைக் கொண்ட உழைப்புப்படையில் தொழிற்சங்கங்களில் இணைந்து கொண்டுள்ளோர் நூற்றுக்கு 10வீதத்தினர் மட்டுமே. அங்ஙனம் தொழிற்சங்கங்களில் உள்ள பகுதியினரை சார்புரீதியில் சலுகைகள் கொண்ட உழைப்புப் படை என அழைக்க முடியும். உழைப்புப் படையில் பிரமாண்டமான பெரும்பான்மையினர் வேலை செய்வதும், வசிப்பதும் பயங்கரமான நிலைமைகளின் கீழாகும். வறுமைக் கோட்டினை நிர்ணயிக்கையில் ரூபா. 18000க்கு குறையாத வருடாந்த வருமானம் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் பயிற்சி பெறாத தொழிலாளியின் இன்றைய குறைந்த பட்ச வருமானம் வருடாந்தம் ரூபா. 10000ஐத் தன்னும் எட்டுவது கிடையாது. 1960ல் கைத்தொழில் தொழிலாளர்களுக்கான நுகர்ச்சி விலைச் சுட்டெண்ணுக்குச் சார்பு ரீதியில் ரூபாவின் பெறுமதியை அளவிட்ட போது 1996 செம்டம்பரில் அது 5.90 பைசா(சதம்) இறங்கி இருந்தது. அந்தப் பெறுமானம் 1966ல் இருந்து தொடர்ந்து வீழ்ச்சி கண்டுள்ளது. அது 1970ல் 54.26 பைசாவும் 1980ல் 25.64 பைசாவும் 1990ல் 10.89 பைசாவும் 1995ல் 6.64 பைசாவும் ஆகியது. இன்று தனியார் வருமானம் சாதாரண வருடத்துக்கு ரூபா. 12240 (540 டாலர்) ஆகும்.

பெரிதும் அடிப்படையான பிரச்சினை

ஆதலால் தேசிய அரச வடிவத்தினுள் 50 வருடகால தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியின் பெறுபேறு, உழைக்கும் மக்களின் பெரும்பான்மையினர் மீது சமூகப் பேரழிவின் தாக்குதலை ஒன்றன்பின் ஒன்றாக நடாத்தியதேயாகும். சுதந்திர ஆட்சியின் தோல்வி பற்றி முதலாளித்துவப் பத்திரிகைகளில் கட்டுரைகள் பிரசுமாகி உள்ளன. எனினும் இந்தச் சகல முதலாளித்துவ விமர்சகர்களும் தோல்விக்கான காரணமாக அரசியல்வாதிகளுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையே இருந்து வரும் ஊழல்களையே காட்டுகின்றன்றார்கள். ஆனால் இதைக் காட்டிலும் பெரிதும் அடிப்படையான பிரச்சினை இருந்து கொண்டுள்ளது.

ஸ்டாலினிச அதிகாரத்துவம் சோவியத் பொருளாதாரத்துக்குப் பிரமாண்டமான அழிவுகளை உருவாக்கினாலும், இந்த அதிகாரத்துவம் இறுதியில் சோவியத் யூனியனை கலைத்து முதலாளித்துவத்தை புனருத்தாரணம் செய்ய வழிவகுத்தாலும் மனித இனத்தின் வரலாற்றில் மாபெரும் தொழிலாளர் வர்க்கப் புரட்சியின் மூலம் பிறந்த அரசான சோவியத் யூனியன் 74 ஆண்டுகளாக இந்தச் சகல நெருக்குவாரங்களுக்கும் முகம் கொடுத்து நீடிக்க முடிந்தது. இக்காலப் பகுதியினுள் சோவியத் யூனியன் சுதந்திரம் அடைந்ததாகக் கூறிக் கொண்ட ஏனைய சகல பின்தங்கிய நாடுகளுடன் ஒப்பிடும் போது பெரும் பாய்ச்சலில் முன்சென்றிருப்பது தனியார் சொத்துடையை ஒழித்து, உற்பத்தி சாதனங்களில் அரசுடைமை ஸ்தாபிதம் செய்ததன் புண்ணியத்தாலேயேயாகும்.

ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள கைத்தொழில் அபிவிருத்திகளுடன் இணைந்து உற்பத்தியில் பூகோளமயமாக்கமும் உலகில் பொருளாதாரத்தின் ஒருங்கு இணைப்பும் தேசிய ரீதியில் நிர்வகிக்கப்பட்ட சகல பொருளாதாரங்களின் மீதும் மரண அடி தொடுத்துள்ளது. மிகவும் பின்னேற்றமான தேசிய பொருளாதார வேலைத்திட்டங்களை கடைப்பிடித்த கிழக்கு ஐரோப்பாவினதும் சோவியத் யூனியனதும் ஸ்டாலினிச ஆட்சியாளர்கள் புதிய பூகோள யதார்த்தத்தின் திட்டவட்டமான பலிகடாக்கள் ஆகினர்.

சுதந்திர இந்தியாவின் 50 ஆண்டு விழாவின் மத்தியில் இந்தியாவின் தேசிய முதலாளி வர்க்க ஆட்சியாளர்கள் ஒன்றிணைந்த பூகோளமயமான உலகச் சந்தையின் மீது ஆதிக்கம் கொண்டுள்ள ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களதும் (சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி) ட்ரான்ஷ்நஷனல் கூட்டுத்தாபனங்களதும் கட்டளையின் கீழ் கடந்த காலத்தில் தடைகளின்றி கொள்ளையில் இருந்து தப்ப விதிக்கப்பட்டிருந்த உயர்மட்ட சுங்க வரிகளால் காக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரத்தைத் திறந்துவிட்டுள்ளனர். தொழிலாளர் வர்க்கத்தின் எதிர்ப்பு உக்கிரம் காணாது இருந்திருக்குமேயானால் தேசிய முதலாளித்துவ ஆட்சியாளர்கள் முழுத் துணைக் கண்டத்தையும் உலகின் பரந்த மலிவு உழைப்பு வலயமாக மாற்றியிருப்பார்கள். ஸ்டாலினிச சீ.பி.. (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) சீ.பி.. (எம்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சிகளின் திட்டவட்டமான ஒத்துழைப்புடன் இன்று நாட்டை ஆட்சி செய்யும் மத்திய அரசாங்கம் அரச துறையைச் சேர்ந்த கைத்தொழில்களுக்கு நிதி வழங்காமல் அவற்றை தலைமூழ்கச் செய்து, இறுதியில் இழுத்து மூட அல்லது தனியார்மயமாக்குவதற்கான நிலைமைகளைச் சிருஷ்டிக்கின்றது. உலக வங்கியின் கட்டளையின் கீழ் மத்திய, மாநில அரசாங்கங்கள் கல்வி, சுகாதார சேவைகள், மின்சாரம், நீர்ப்பாசனம், உரம் போக்குவரத்துக்கான உதவி மானியங்களை வெட்டுவதையும் ஏற்கனவே ஆரம்பித்துள்ளது. ஐக்கிய முன்னணி அரசாங்கம் உதவி மானியத்தை அடியோடு ஒழித்துக் கட்டும் இலக்குடன் உதவி மானியம் பற்றிய வெள்ளை அறிக்கையை ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

பெற்றோலியம் பொருட்களின் விலைகளை அதிகரிக்கும் அரசாங்கத்தின் திட்டத்தினை நடைமுறைக்கிடும் போது பணீக்கம் குதிரை வேகத்தில் அதிகரிக்கும். உழைக்கும் மக்கள் சகித்து கொள்ள முடியாத அளவுக்கு வாழ்க்கைத் தரம் ஆதாளபாதாளத்தில் தள்ளப்படும். இந்நடவடிக்கைகள் வெகு விரைவில் முன்னொரு போதும் இல்லாத விதத்தில் துயரில் மூழ்கியுள்ள மக்களின் சமூகக் கிளர்ச்சிகளை மூளச் செய்யும்.

ஏகாதிபத்தியவாதிகளினால் கட்டளையிடப்பட்ட "பொருளாதார மறுசீரமைப்பு"க்களை விரைவுபடுத்துவது நாட்டை தமது பிடியில் கொண்டுள்ள ஸ்டாலினிஸ்டுகள் உட்பட்ட இந்தியாவின் தேசிய முதலாளித்துவ ஆட்சியாளர்கள் என்போரை ஏகாதிபத்திய எசமானர்களினதும் தமதும் பாதுகாப்புக்களின் பேரில் வீதிகளில் துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் அலுகோசுக்களாக கோடானுகோடி மக்களின் கண்களின் எதிரில் அம்பலமாக்கும்.

1975 ஜூன் மாதத்தில் அவசரகாலச் சட்டம் விதிக்கப்பட்டது. பொருளாதார முன்னணியில் தோல்வியும் அதனால் நாடு பூராவும் பரவிய அமைதியின்மையினாலும் ஆகும்.” (பிஸ்னஸ் டுடே - 1997 மே19-ஜூன் 1)

நிதி அமைச்சர் சிதம்பரம் செய்த நினைவூட்டலை தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான எச்சரிக்கையாகக் கொள்ள வேண்டும். சோவியத் யூனியனதும் சீனாவினதும் வீயட்னாமினதும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளதும் தலைவிதியையும் யுத்தத்துக்க பின்னர் அமைக்கப்பட்ட சுதந்திர அரசுகள் எனப்பட்டவற்றின் தலைவிதியையும் நோக்கும் போது ரூஷ்யத் தொழிலாளர் வர்க்க புரட்சியின் இணைத் தலைவரும் நான்காம் அகிலத்தின் ஸ்தாபகருமான லியொன் ட்ரொட்ஸ்கியின் அனைத்துலகவாத பார்வையும் முன்னோக்கும் தொழிலாளர் வர்க்கத்துக்கு நம்பிக்கையையும் எதிர்காலப் பாதையையும் வழங்குகின்றது.

ட்ரொட்ஸ்கி அன்று கூறியவை

ட்ரொட்ஸ்கி இந்தியத் தொழிலாளர்களுக்கு வரைந்த பகிரங்கக் கடிதத்தில் இந்திய முதலாளி வர்க்கத்தின் தொழிற்பாட்டை பின்வருமாறு அம்பலமாக்கினார்: “இந்திய முதலாளி வர்க்கத்தினால் புரட்சிகரப் போராட்டத்தை வழிநடாத்த இயலாது உள்ளது. அவர்கள் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளுடன் நெருக்கமாக இணைந்து கொண்டுள்ளனர். அவர்கள் தமது சொத்துக்களின் பேரில் அஞ்சி நடுங்குகின்றார்கள். அவர்கள் என்ன விலை கொடுத்தென்றாலும் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளுடன் சமரசம் செய்து கொள்ள முயன்று, மேலிருந்து வரும் சீர்திருத்தங்கள் பற்றிய எதிர்பார்ப்புக்கள் ஊடாக இந்தியப் பொதுமக்களை ஏமாற்றி வருகின்றார்கள். இந்த முதலாளி வர்க்கத்தின் தலைவரும் எதிர்கால பேச்சாளரும் காந்தி. குள்ளமான தலைவரும் போலி எதிர்காலப் பேச்சாளரும்! காந்தியும் அவரின் சகாக்களும் அபிவிருத்தி செய்துள்ள கோட்பாடு இதுதான்: “இந்தியாவின் நிலைமை தொடர்ந்து முன்னேற்றம் காணும். அதன் சுதந்திரம் தொடர்ந்து பரந்துபடும். இந்தியா படிப்படியாக சமாதான சீர்திருத்த வழியில் டொமினியன் அரசாக மாறும். பின்னர் பூரண சுதந்திரத்தைக் கூடக் கைப்பற்றிக் கொள்ளும். இந்த முழு முன்னோக்கும் அடியோடு தவறாது....”

இக்கடிதத்தின் இறுதியில் ட்ரொட்ஸ்கி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: “நாம் தவறான எதிர்பார்ப்புக்களை வீசிவிட்டு போலி நண்பர்களை துரத்தியடிக்க வேண்டும். நாம் எதிர்பார்ப்புக்களை எம் மீதும் எமது புரட்சிகர சக்திகள் மீதும் மட்டுமே கொண்டிருக்க வேண்டும். தேசிய சுதந்திரத்துக்கான சுதந்திர இந்தியக் குடியரசுக்கான போராட்டம் பிரிக்க முடியாத விதத்தில் விவசாயப் புரட்சியுடனும் வங்கிகளையும் ட்ரஸ்டுகளையும் தேசியமயமாக்குவதுடனும் இணைந்து கொண்டுள்ளது. நாட்டின் வாழ்க்கைத் தர மட்டத்தினை உயர்த்துகின்றதையும் உழைக்கும் மக்களை சுய தலைவிதியின் எஜமானர்கள் ஆக்குகின்றதுமான இலக்குடன் நடைமுறைக்கிடும் ஒரு தொகை பொருளாதார நடவடிக்கைகளுடனாகும். விவசாயிகளுடன் கூட்டுக்குச் செல்லும் தொழிலாளர் வர்க்கம் மட்டுமே இந்த பணியை இட்டு நிரப்புவதில் வெற்றி பெறும்..”

இந்தியா சம்பந்தமாக மட்டுமல்ல யுத்தத்தின் பின்னைய காலப்பகுதியில் ஆசியா, ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்காவில் அமைக்கப்பட்ட அந்தச் சகல "சுதந்திர" அரசுகளுக்கும் தேசிய முதலாளி வர்க்க ஆட்சியின் கீழ்மு தேசிய அரச அமைப்பினுள்ளும் சுதந்திரம் தொடர்பாக உரிமை கோருவதன் முழுத் தோல்வியையும் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி முன்நோக்கு நிரூபிக்கின்றது.

ட்ரொட்ஸ்கி உலக வரலாற்று கருத்துப்பாட்டின் அடிப்படையில் காலூன்றி நின்று, ரூஷ்யாவினுள் முதலாளி வர்க்கம் தனது முதலாளித்துவப் புரட்சியை நடாத்துவதில் மேலும் இலாயக்கற்றது என்பதை ஊர்ஜிதம் செய்தார். அவர்கள் புரட்சிகரத் தொழிலாளர் வர்க்கத்தை ஸார்வாத சர்வாதிகாரத்துக்கு அல்லது வெளிநாட்டு ஏகாதிபத்தியத்துக்கு இறுதியில் அவர்கள் சார்ந்து கொண்டிருந்ததும் வெளிநாட்டு ஏகாதிபத்தியத்தின் மீதே—பெரும் அச்சுறுத்தலாகக் கண்டனர்.

ஆதலால் இரண்டு கட்டப் புரட்சி பற்றிய மெனிஷிவிக்வாத, ஸ்டாலினிச கோட்பாட்டுக்கும் நான்கு வர்க்கங்களின் முன்னணி பற்றிய மார்ட்டி நோவ்வாத கோட்பாட்டுக்கும் எதிராக ட்ரொட்ஸ்கி தொழிலாளர் வர்க்கம் விவசாயிகளின் தலைமையை கைப்பற்றி கிராமப்புற நிலமானித்துவ உறவுகளைக் கொண்ட பழைய அமைப்பினைத் தூக்கி வீசி, ஜனநாயகப் புரட்சியின் பாத்திரத்தினை இட்டு நிரப்ப வேண்டும் என வலியுறுத்தினார். இப்பணியை நிலைவேற்றுகையில் எவ்வாறெனினும் தொழிலாளர் வர்க்கம் ஜனநாயக குடியரசினை ஸ்தாபிதம் செய்வதுடனும் நிலமானித்துவத்துக்கு முடிவு கட்டுவதுடனும் நிறுத்திக் கொள்ள முடியாது.

அதற்குப் பதிலாக தொழிலாளர் வர்க்கம் ஆட்சியை தனது கைக்குள் கொணர்ந்து உற்பத்தியின் சமூக சாதனங்களின் தனியுடமையைத் திட்டவட்டமாகச் சவால் செய்யும். சோசலிச தன்மை கொண்ட நடவடிக்கையை எடுக்கும் வண்ணம் தள்ளப்படுகின்றது.

1905 புரட்சியின் பின்னர் ட்ரொட்ஸ்கியினால் அபிவிருத்தி செய்யப்பட்ட இந்த முன்நோக்கு 1917 அக்டோபரில் அதன் பூரண நிரூபணத்தை கைவரப் பெற்றது. புரட்சி மறு அர்த்தத்தில் நிரந்தரமாகியது. சோசலிசப் புரட்சி ரூஷ்யாவில் ஆரம்பிக்கக் கூடும் என்றாலும் அது அனைத்துலகக் கிளர்ச்சியின் அடிப்படையில் மட்டுமே பூரணமாகும்.

1942ல் அமைக்கப்பட்ட நான்காம் அகிலத்தின் இந்தியத் துணைகண்டப் பகுதியான இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி 1951ல் பப்லோவாதிகளால் கரைக்கப்படுவதற்கு முன்னர் இந்திய உழைக்கும் மக்களுக்கு புரட்சிகரப் பாதையை காட்டிய ஒரே கட்சியாக விளங்கியது. மிகவும் குறுகிய காலத்தினுள் அது சென்னை, கல்கத்தா, பம்பாய் தொழிலாளர்களிடையே கணிசமான அளவு ஆதரவை வெற்றி கொண்டது.

பிரித்தானிய காலனித்துவத்தினதும் நிலமானித்துவத்தினதும் தேசிய முதலாளித்துவ ஆட்சியினதும் அரை நூற்றாண்டுகால பேரழிவுகளில் உரித்துக்களில் இருந்து, தலையெடுப்பதற்கான ஒரே வேலைத்திட்டம் சோசலிச அனைத்துலக வேலைத்திட்டமே. தொழிலாளர் வர்க்க அனைத்துலகவாத ஐக்கியத்திற்கான போராட்டத்தின் ஒரு பாகமாக இந்தியத் துணைக்கண்ட சோசலிசக் குடியரசு ஒன்றை ஸ்தாபிதம் செய்யும் பொருட்டு இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பர்மா, நேபாளம், பூட்டான், இலங்கை முதலான பல்வேறு முதலாளித்துவ அரசுகளினுள் வாழும் இந்தியத் துணைக் கண்டத்தின் தொழிலாளர்கள் ஒன்றுபடுவதன் மூலம் இந்தியத் துணைக் கண்ட முதலாளித்துவ ஆட்சிகளின் இராணுவ சப்பாத்துக்களினால் நசுக்கப்படும் சிறுபான்மை தேசிய இனங்கள் உட்பட்ட முழு ஒடுக்கப்படும் மக்களும் அவர்கள் சிறைவைக்கப்பட்டுள்ள விலங்குகளின் பிடியில் இருந்து நிஜமாக விடுதலை பெறுவர். இந்தியாவின் சோசலிசத் தொழிலாளர் கழகம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டு இந்த புரட்சிகர முன்நோக்கின் அடிப்படையில் போராடுகின்றது.