[SEP-Sri
Lanka struggles along with Socialist Labour League India to
establish revolutionary leadership.]
Thozhilalar
Paathai, Volume 487
April,
1998
இந்தியாவின்
கடந்த பொதுத் தேர்தலின்
பின்னர் எந்த ஒரு கட்சியோ
அல்லது முன்னணியோ ஒரு அரசாங்கத்தை
அமைப்பதற்கு அவசியமான
பொரும்பான்மை ஆசனங்களைக்
கொண்டிராத காரணத்தினால்
இரண்டு கிழமைகளாக இடம் பெற்ற
கயிறிழுப்புக்களின் பின்னர்
வலதுசாரி பாரதீய ஜனதா கட்சி
(பீ.ஜே.பி.)
அரசாங்கத்தை
அமைத்துக் கொண்டுள்ளது.
பீ.ஜே.பி.
தலைவர்
அத்தல் பிஹாரி வாஜ்பாய்
பிரதமராகியுள்ளார்.
இந்தியப்
பொதுத் தேர்தல் முடிவுகளும்
அதைத் தொடர்ந்து வந்த அரசியல்
நிலைமைகளும் அந்நாட்டின்
ஏகாதிபத்தியச் சார்பு முதலாளி
வர்க்க ஆட்சியின் ஈடாட்ட
நிலைமையையும் பிரமாண்டமான
சமூக குமுறல் நிலைமை வெடித்துக்
கொண்டுள்ளதையும் அவ்வாறே
தொழிலாளர்,
ஒடுக்கப்படும்
மக்கள் முன்னிலையில் இருந்து
கொண்டுள்ள பாரிய அரசியல்
ஆபத்துக்களையும் எடுத்துக்காட்டிக்
கொண்டுள்ளது.
பாரதீய
ஜனதா கட்சியானது ராஸ்ட்ரிய
சுவயம் சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.)
சிவசேனா
போன்ற பாசிச அமைப்புகளைக்
கொண்ட 17
கட்சிகளின்
முன்னணியில் இருந்து கொண்டுள்ளது.
1947ல்
மகாத்மா காந்தியை படுகொலை
செய்தது,
இந்த
ஆர்.எஸ்.எஸ்.
என்பது
குறிப்பிடத்தக்கது.
இந்த
முன்னணியில் சேர்ந்து கொண்டுள்ள
கட்சிகள் யாவும் இன,
மத,
சாதி
அடிப்படையில் காங்கிரஸ்
கட்சியில் இருந்து பிரிந்து
அமைக்கப்பட்ட கட்சிகள்.
இந்தப்
பிற்போக்குக் கட்சிகளை
அரவணைத்துக் கொண்டுள்ள பா.ஜ.க.
“ஒரே
நாடு, ஒரே
இனம், ஒரே
கலாச்சாரம்"
என்ற
இந்து சோவினிச ஆத்திரமூட்டல்
சுலோகத்தை முன்னெடுத்துள்ளது.
இந்தியாவில்
வாழும் பதினொரு கோடியே பத்து
இலட்சம் முஸ்லீம் மக்களுக்கு
எதிராக மதவெறி இரத்தக் களரியைத்
தூண்டும் இக்கட்சி,
தொழிலாளர்
ஒடுக்கப்படும் மக்களை ஒடுக்கித்
தள்ளும் வலதுசாரி சக்திகளைக்
கொண்ட ஆட்சியை நிறுவத்
துடிக்கும் ஒரு கட்சியாகும்.
1996
ஜூனில்
இருந்து 17
மாத
காலங்கள் ஆட்சியில் இருந்து
வந்த ஐக்கிய முன்னணி "இடதுசாரி"
முன்னணியான
முதலாளித்துவக் கூட்டின்
ஆசனங்களின் எண்ணிக்கை 179ல்
இருந்து 98
ஆக
வீழ்ச்சி கண்டுள்ளது.
இக்கூட்டின்
முக்கிய கட்சியான ஜனதா தள்
கட்சி 1996
தேர்தலில்
48 ஆசனங்களைப்
பெற்றிருந்த போதிலும் இத்தடவை
அது 6 ஆசனங்களை
மட்டுமே வெற்றி கொள்ள முடிந்தது.
இம்முன்னணியின்
முக்கியஸ்தர்களாகவும்
முற்போக்காளர்களாகவும்
இந்தியன் ஸ்டாலினிஸ்டுகளால்
தலைமேல் வைத்துக் கொண்டாடப்பட்ட
தெலுங்கு தேசம் கட்சித்
தலைவரான சந்திரபாபு நாயுடுவின்
ஆதரவுடனேயே பா.ஜ.க.
அரசாங்கம்
அமைத்துக் கொள்வது சாத்தியமாகியது
என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
உத்தரபிரடை
தோல்வி
காங்கிரஸ்
கட்சி தலைமையில் கொண்ட
முன்னணிக்கு 167
ஆசனங்கள்
மட்டுமே கிடைத்தது.
காங்கிரசுக்கு
தனித்து 141
ஆசனங்கள்
கிடைத்துள்ளது.
சோனியா
காந்தி பிரிவு இணைந்து கொண்டதன்
பின் புத்துயிரூட்டப்பட்டதாகக்
கூறிக் கொள்ளப்படும் இக்கட்சி
கடந்த தேர்தலிலும் பார்க்க
ஒரே ஒரு ஆசனத்தை மட்டுமே
கூடுதலாக வெற்றி கொண்டுள்ளது.
ஜவஹர்லால்
நேரு குடும்பத்தின் (காந்தி)
கோட்டை
எனக் கூறக்கொள்ளப்படும்
உத்தர பிரதேச ஆசனத்திற்கு
சோனியா காந்தியால் தெரிவு
செய்து நியமிக்கப்பட்ட
காங்கிரஸ் வேட்பாளர் 23261
வாக்குகளால்
தோற்கடிக்கப்பட்டார்.
இது
முதலாளித்துவ வெகுஜனத்
தொடர்புச் சாதனங்களால் பெரும்
புள்ளியாக கொண்டாடப்பட்ட
"சோனியா
காந்தி பிரிவு"க்கு
கிடைத்த ஒரு பலத்த அடியாகும்.
1996
பொதுத்
தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி
தோல்வி கண்டதோடு எந்த ஒரு
இந்திய முதலாளித்துவக்
கட்சிக்கும் புதுடில்லியில்
அரசாங்கம் அமைக்கக்கூடிய
அளவுக்கு பெரும்பான்மைப்
பலம் கிட்டவில்லை.
இந்நிலையில்
முதலாளித்துவ ஆட்சியைப்
பேணிக் கொண்டு,
ஒரு
முதலாளித்துவக் கூட்டரசாங்கத்தை
அமைக்க முன்நின்றவை இந்த
பாரதீய ஜனதா கட்சியும் இந்திய
ஸ்டாலினிசக் கட்சிகள் இரண்டும்
இத்தடவையும் ஒரு முதலாளித்துவக்
கூட்டரசாங்கத்தை அமைக்க
முன்னின்று உழைத்துள்ளன.
தேர்தல்
முடிவுகள் வெளியானதும்
சீ.பி.ஐ.
(எம்)
கட்சியின்
பொதுச் செயலாளர் ஹரி கிருஷ்ணன்
சிங் சுர்ஜித் "காங்கிரஸ்
கட்சியின் பொருளாதாரக்
கொள்கையுடன் சீ.பி.ஐ
(எம்)
உடன்பட்டு
போகாது விடினும் கூட இனவாத
சக்திகளுடன் காங்கிரஸ்
சமரசத்துக்கு சென்றாலும்
அதை ஒரு இனவாதக் கட்சியாக
கருதாதிருப்பதாக"
அறிக்கை
வெளியிட்டார்.
இதன்மூலம்
காங்கிரசுடன் கூட்டுக்கு
தமது தயார் நிலையை காட்டிக்
கொண்டது.
மார்ச்
4ம்
திகதி சீ.பி.ஐ.
(எம்),
சீ.பி.ஐ.,
போவார்ட்
புளொக்,
சோசலிசக்
கட்சி ஆகியன ஒன்றுகூடி எடுத்த
முடிவின் பிரகாரம்,”
காங்கிரஸ்
நிர்வாகக் குழு கூடி எமது
ஆதரவுடன் கூடிய அரசாங்கத்தை
அமைக்க எமக்கு அழைப்பு
விடுத்தால் எமது கருத்தை
நாம் வெளியிடுவோம்"
என
அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த
விதத்தில் ஸ்டாலினிஸ்டுகள்
தோள் கொடுக்க முன்நிற்பது
யாருக்கு?
ஆறு
மாதங்களுக்கு முன் இடதுசாரிக்
கூட்டு முன்னணி அரசாங்கத்தை
தூக்கி வீசிய காங்கிரஸ்
தலைமையிலான அரசாங்கம்
ஒன்றுக்கேயாகும்.
காங்கிரஸ்
கட்சி தனது கூட்டை உடைத்து,
அந்த
அரசாங்கத்தை வீழ்ச்சி காணச்
செய்தது.
பிரதமர்
குஜ்ரால் அரசாங்கமானது 40
இலட்சம்
அரசாங்க ஊழியர்களது வேலை
நிறுத்தம் வெடிக்குமோ என்ற
பயத்தில் 40
வீதம்
சம்பள உயர்வு உட்பட 13
கோரிக்கைகளை
வழங்கிப் பின்வாங்கியமையே
இதற்கான முக்கிய சாட்டாக
அமைந்தது.
தேர்தல்
பகிஷ்கரிப்பு
சர்வதேச
நாணய நிதியத்தின் கட்டளையை
நிறைவேற்றி,
தொழிலாளர்
ஒடுக்கப்படும் மக்களை அடக்குவது
தொடர்பாக எந்த ஒரு பின்னடிப்பும்
இருக்கக் கூடாது என்பதே
காங்கிரஸ் முதலாளிகளின்
நிலைப்பாடாக இருந்து வந்தது.
இந்தக்
காங்கிரஸ் முதலாளிகளின்
கூட்டுக்குள் நுழைந்து கொள்ளத்
தருணம் பார்ப்பதானது,
இந்த
ஸ்டாலினிசக் கட்சிகள்
ஏகாதிபத்தியவாதிகளின்
கைத்தேங்காயாக மாறி,
தொழிலாளர்
வர்க்கத்தை அடக்கியொடுக்க
தருணம் பார்க்கின்றது என்பதற்கு
புதியதோர் எடுத்துக்காட்டாகும்.
கடந்த
தடவைகளில் முதலாளித்துவக்
கட்சிகளிடம் இருந்து கிடைத்த
அழைப்பை ஏற்காததன் மூலம்
இழைத்த "வரலாற்று
தவறை"
இனிமேல்
இழைப்பது இல்லை எனவும்,
இந்தியாவில்
முதலாளித்துவ அரசாங்கத்தின்
பிரதமர் பதவியை பொறுப்பேற்க
தாம் ஒரேயடியாக தயாராக
இருப்பதாகவும் மேற்கு வங்காள
முதலமைச்சரும் சீ.பி.ஐ.
(எம்)
தலைவருமான
ஜோதிபாசு இத்தடவை தேர்தல்
பிரச்சாரங்களின் போது திரும்பத்
திரும்ப வலியுறுத்தினார்.
இத்தடவை
பொதுத் தேர்தலில் கோடிக்
கணக்கான பொதுமக்கள் கலந்து
கொள்ளவில்லை.
இது
இந்திய ஆளும் வர்க்கம்
தொடர்பாகவும் அது நடைமுறைக்கிட்டுள்ள
ஏகாதிபத்தியவாதிகளின்
சிபார்சுடன் கூடிய வேலைத்திட்டம்
தொடர்பாகவும் பொதுமக்களுக்கு
இடையே வளர்ச்சி கண்டுள்ள
வெறுப்பையும் எதிர்ப்பையும்
காட்டிக் கொண்டுள்ளது.
இந்தியாவின்
93 கோடியே
60 இலட்சம்
ஜனத்தொகையில் 60
கோடியே
50 இலட்சம்
மக்களுக்கு வாக்குரிமை இருந்து
கொண்டுள்ளது.
இதில்
33 கோடிக்கு
சற்று அதிகமானோரே தமது வாக்குகளை
பாவித்துள்ளனர்.
27 கோடி
வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை.
இந்த
விதத்தில் வாக்களிக்காதோர்
நூற்றுக்கு 45
வீதமாகும்.
1952ல்
இருந்து நடைபெற்றுள்ள 11
பொதுத்
தேர்தல்களில் பொதுவாக நூற்றுக்கு
60 வீதத்தினர்
வாக்களித்துள்ளனர்.
ஆனால்
இத்தேர்தலில் நூற்றுக்கு
55 வீதத்தினரே
வாக்களித்துள்ளனர்.
இந்தியாவின்
"சமகால
கல்வி நிலையம்"
என்ற
அமைப்பின் சமூக விஞ்ஞானியான
மஹேஷ் ரங்கராஜன் வாக்காளர்களிடையே
பரந்து போயுள்ள நம்பிக்கையீனம்
தொடர்பாக பின்வருமாறு
கூறியுள்ளார்.
“மொத்தத்தில்
கட்சிகள் சம்பந்தமாக
வாக்காளர்களிடையே ஒரு வகையான
அலட்சியப் போக்குக் காணப்பட்டது.”
அதற்கு
காரணம் காட்டுகையில் அவர்
கூறியுள்ளதாவது:
“எந்த
ஒரு கட்சியும் சரி தமது
பிரச்சாரங்களின் போது பொதுமக்கள்
முகம் கொடுக்கும் முக்கிய
பிரச்சினையான அத்தியாவசியப்
பண்டங்களின் விலை உயர்வு,
வேலையின்மையின்
உயர்வு,
அடிப்படை
வசதிகள் இன்மை பற்றி ஒரு
வார்த்தை தன்னும் கூறாததினால்
பொதுமக்கள் ஆத்திரமடைந்துள்ளார்கள்"
என்றுள்ளார்.
அரசியல்
விஞ்ஞானியான ரதனி கொதாரி,
சோனியா
காந்தியின் தலையீட்டினால்
காங்கிரஸ் கட்சிக்கு பலன்
இல்லாது போனதற்கான காரணம்
என்ன என்பதை ஆய்கையில் அவர்
பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
“சுத்தமான
குடிதண்ணீர் இல்லாம,
மகளிருக்கு
எதிரான வன்முறை,
இளைஞர்
வேலையின்மை,
வீட்டு,
பொது
வசதிகள் இல்லாமை தொடர்பாக
வாக்காளர்களுடன் சோனியா
காந்தி பேசியிருக்கவில்லை.”
முதலாளித்துவ
ஆட்சியின் ஐந்தொகை
சகல
முதலாளித்துவக் கட்சிகளும்
பொதுமக்கள் முகம் கொடுக்கும்
சமூகப் பிரச்சினைகள் தொடர்பாகவும்
வாய் திறக்காததும்,
ஒவ்வொருவரினதும்
குப்பைக் கூடைகளையும்
கவிழ்த்துக் கொட்டியதன்
மூலம் பொதுமக்களை தவறான
வழியில் திசை திருப்ப
முயன்றதற்கும் காரணம் இந்த
முதலாளித்துவக் கட்சிகளிடம்
இந்தப் பிரச்சினைகளுக்கு
எந்தவிதமான தீர்வும் இருந்து
கொண்டிராததேயாகும்.
பொதுமக்களின்
கண்களில் மண் தூவுவதன் மூலம்
இந்த முதலாளித்துவக் கட்சிகள்
ஆட்சிக்கு வர முயன்றதற்குக்
காரணம் ஏகாதிபத்தியவாதிகளின்
சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதன்
மூலம் அவற்றின் ஏஜன்சியாக
வயிற்றை நிரப்பிக் கொள்ளும்
அதேவேளையில் பொது மக்களைச்
சமூகப் பிரச்சினைகளின்
படுகுழியில் தள்ளி
வீழ்த்துவதற்கேயாகும்.
கடந்த
ஆண்டு சுதந்திரம் எனப்படுவதன்
ஐம்பதாண்டு நிறைவை கொண்டாடிய
இந்திய முதலாளித்துவ அரசாங்கமும்
ஆளும் வர்க்கமும் தொழிலாளர்,
ஏழை
விவசாயிகள் மீது தொடுத்துள்ள
கொடூரமான சமூகச் சீரழிவுகளையும்
துயரங்களையும் வார்த்தைகளில்
கூற முடியுமா?
1997 டிசம்பர்
முதல் வெளியீட்டில் "பிஸ்னஸ்
இந்தியா"
சஞ்சிகையானது
இந்தியாவின் ஜனத்தொகையில்
52 சதவீதமான
மக்கள்,
வறுமைக்
கோட்டின் கீழ் வாழ்பவர்களாகக்
குறிப்பிட்டுள்ளது.
முதியவர்களில்
ஜனத்தொகையின் 48
வீதத்தினருக்கு
எழுத வாசிக்க தெரியாது.
பெண்களில்
64 வீதத்தினர்
இங்ஙனம் படிப்பறிவற்றவர்களாக
இருந்து கொண்டுள்ளனர்.
ஐந்து
வயதுக்குக் கீழ்ப்பட்ட
சிறுவர்களில் 53
சதவீதத்தினர்
போஷாக்கின்மையால் வாடுகின்றனர்.
ஜனத்தொகையில்
71 வீதத்தினருக்கு
குடிநீர்,
மலசல
கூட வசதி போன்ற அடிப்படை
வசதிகள் கூடக் கிடையாது.
தமது
உயிரைப் பிடித்து வைக்க எந்த
வழியுமற்று நாளாந்தம் பாலர்,
பெண்கள்
ஆகிய 250 பேர்
விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு
வருவதாக ஒரு முதலாளித்துவப்
பத்திரிகைச் செய்தி
குறிப்பிடுகின்றது.
10 கோடி
சிறுவர்களைக் கொண்ட சனத்தொகையில்
3½ கோடியினர்
வாழ்நாளில் பாடசாலைப் பக்கமே
தலைவைத்தும் படுக்க முடியாத
தரித்திர வாழ்க்கையைக்
கொண்டுள்ளனர்.
அரசாங்கத்தினதும்
முதலாளித்துவ சமூக விஞ்ஞானிகளதும்
சகல அறிக்கைகளும் 1991ல்
ஆட்சிப் பொறுப்பை ஏற்ற
நரசிம்மராவின் காங்கிரஸ்
கட்சி ஆட்சிக் காலத்தில்
இருந்து இந்தியா பூகோளமயமாக்கல்
செயற்பாடுகளில் இறங்கியதில்
இருந்து இந்த சமூக தரித்திர
நிலைமை தீவிரமடைந்துள்ளதையும்
தேசிய வருமானத்தில் முதலாளித்துவ
வர்க்கம் பறித்துக் கொள்ளும்
செல்வம்,
பாரிய
அளவில் அதிகரித்துக்
கொண்டுள்ளதையும் காட்டிக்
கொண்டுள்ளது.
இதனால்
சமூக சமத்துவமின்மை தீவிரம்
கண்டுள்ளதையும் அம்பலமாக்குகின்றது.
இந்தியாவில்
ஒரு சமூகக் குமுறல் வளர்ந்து
கண்டு வருகின்றது.
1997 செப்டம்பர்
24ம்
திகதி 40
லட்சத்துக்கு
மேற்பட்ட அரசாங்க ஊழியர்
சம்பள உயர்வு உட்பட்ட
கோரிக்கைகளின் அடிப்படையில்
பொதுவேலை நிறுத்தத்திற்குத்
தயாராகினர்.
கடந்த
ஆண்டு ஆகஸ்டில் 15
இலட்சம்
இந்திய வங்கி ஊழியர்கள்,
அரசாங்கத்தின்
தனியார்மயமாக்கல் தயாரிப்புகளுக்கு
எதிராக இரண்டு நாள் அடையாள
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கடந்த
வருடம் அக்டோபர் மாதத்தில்
ஸ்டாலினிச மாநில அரசாங்கம்
இருந்து வரும் கேரளத்தில்
விவசாயத் தொழிலாளர்களும்
ஏழை விவசாயிகளும் ஸ்டாலினிச
தொழிற்சங்கத் தலைவர்களின்
காட்டிக் கொடுப்புகளுக்கு
மத்தியிலும் வயல்களுக்கு
ஊடாக ஆர்ப்பாட்ட ஊர்வலம்
சென்று வாழ்க்கைத் தரத்தை
உயர்த்தும்படி கோரும்
கோரிக்கைக்காகப் பிரச்சாரம்
செய்தனர்.
தொழிலாளர்,
ஒடுக்கப்படும்
மக்களிடையே இந்த விதத்தில்
ஒரு சமூகக் குமுறலுக்கான
நிலைமைகளே சிருஷ்டிக்கப்பட்டு
வருகின்றது.
இந்நிலைமைகளின்
கீழ் ஏகாதிபத்தியவாதிகளின்
திருப்தியீனமும் முதலாளிகளின்
குழப்பமும் வெளியரங்குக்கு
வந்துள்ளது.
முதலாளி
வர்க்கம் அப்பட்டமாகக் கூறுவது
என்ன?
ஏகாதிபத்தியவாதிகள்
சிபாரிசு செய்துள்ள கொள்கைகளை
நடைமுறைப்படுத்த "உறுதியான
அரசாங்கம்"
அவசியம்
என்கிறார்கள்.
இந்தியத்
தேர்தலின் பின்னர் குஜராத்தில்
முதலமைச்சர் ஒருவர் வெளியிட்ட
கருத்து முதலாளித்துவ
வர்க்கத்தின் பொது நோக்கை
எடுத்துக் காட்டுகின்றது:
“எமக்கு
அவசியமாகியுள்ளது ஐந்து
வருடகால அரசாங்கத்தைக் கொண்டு
நடாத்த முன்நோக்குள்ள பலம்
வாய்ந்த தலைமையே ஆகும்.”
பா.ஜ.க.
அரசாங்கத்திற்கு
இந்தியாவிலும் வெளிநாட்டிலும்
முதலாளிகளிடையே பொதுவான
ஆதரவு வலுப்பட்டு வருவதாக
'ரொய்டர்'
அறிக்கையாளர்
குறிப்பிட்டுள்ளார்.
பம்பாய்
பங்கு முதல் சந்தையின் தலைவர்
கோபால் தமானி என்ற முதலாளி.
ஏகாதிபத்தியவாதிகள்
பா.ஜ.க.
அரசாங்கத்தை
தமது கொள்கைகளின் பேரில்
வழிநடாத்த தற்சமயம் திரும்பி
உள்ளது.
இந்த
வருடத்தில் அமெரிக்க ஜனாதிபதி
பில் கிளின்டன் இந்தியாவில்
சுற்றுலாவில் ஈடுபடுவதற்கான
தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில்
பா.ஜ.க.
அரசாங்கம்
முன்னொருபோதும் இல்லாத
விதத்தில் கொடிய தாக்குதல்களை
தொழிலாளர் ஒடுக்கப்படும்
மக்களுக்கு எதிராகத் தொடுப்பது
நிச்சயம்.
கடந்த
சில வருடங்களாக இந்தியாவில்
நரசிம்மராவ் அரசாங்கமும்
பின்னர் ஸ்டாலினிஸ்டுகளின்
முண்டுபலத்துடன் ஆட்சிக்கு
வந்த ஐக்கிய முன்னணி அரசாங்கமும்
பொருளாதாரத்தின் கதவுகளை
மேலும் மேலும் திறந்து
விடுவதையிட்டு மகிழ்ச்சி
தெரிவித்ததோடு ஏகாதிபத்தியவாதிகளின்
கோஷம் "இது
காணாது"
என்பதாக
விளங்கியது.
1997 டிசம்பரில்
முழு இந்தியாவுக்கும் விஜயம்
செய்த யப்பானிய வர்த்தகத்
தூதுக் கோஷ்டியின் தலைவர்
ஹொண்டா கம்பனி தலைவர் நொபுஹித்தோ
மோட்டோ "உறுதியான
ஆட்சி"யையிட்டு
மகிழ்ச்சி தெரிவித்த அதேவேளையில்
மற்றோர் முதலாளி கூறுயதாவது:
“சில
தடைகள் இன்னமும் இருந்து
கொண்டுள்ளதால் இந்தியாவில்
முதலீடுகள் ஆபத்தானவை"
எனக்
கணிப்பதாக இந்தச் சகல
நெருக்குவாரங்களும் குறைந்த
செலவில் இலாபத்தையும்
வளங்களையும் கொள்ளையடிக்க
குறைந்த செலவுடன் கூடிய
நிலைமையை உருவாக்க முயலும்
ட்ரான்ஸ்நஷனல் கூட்டுத்தாபனங்களிடம்
இருந்தும் அவற்றின் ஏஜன்டுகளிடம்
இருந்துமே ஏற்பட்டது.
கடந்த
வருடம் டிசம்பர் மாதத்தில்
இந்தியா ஜெனீவாவில் கையொப்பம்
இட்ட உலக வர்த்தக அமைப்பின்
( ) உடன்படிக்கைக்கு
இணங்க, 1999ல்
இந்தியாவில் காப்புறுதி,
வங்கி
துறைகள் முழுமனே அனைத்துலக
மூலதனத்துக்குத் திறந்து
விடப்பட வேண்டும்.
பா.ஜ.க.
தயார்
நிலை
முன்னர்
தேசியவாத கதைகளை வாந்தி
எடுத்து வந்த பா.ஜ.க.
தேர்தல்
பிரச்சாரம் ஆரம்பித்து தான்
தாமதம் தாம் வெளிநாட்டு
மூலதனத்தின் கையாளாகத்
தொழிற்படப் போவதை அப்பட்டமாக
உத்தரவாதம் செய்து கொண்டது.
இதன்
மூலம் இந்திய முதலாளிகளதும்
ட்ரான்ஸ்நஷனல் கூட்டுத்தாபனங்களதும்
ஆதரவை வென்று கொள்ளும்
அறிக்கைகளை வெளியிடத்
தொடங்கியது.
பெப்பிரவரி
9ம்
திகதி புதுடில்லியில் நடந்த
பத்திரிகையாளர்கள் மாநாட்டில்
பேசிய பா.ஜ.க.
தலைவர்
எல்.கே.
அத்வானி
பின்வருமாறு குறிப்பிட்டார்:
“பா.ஜ.க.
பொருளாதார
சீர்திருத்தங்களை நிறுத்திவிடப்
போவதில்லை.
ஏதாவது
செய்ய வேண்டுமாயின் அது இந்த
வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தவே
செய்யும்"
என்றுள்ளார்.
நுகர்வு
பண்ட உற்பத்தியில் ஈடுபட்டு
வந்த வெளிநாட்டுக் கம்பனிகளை
நாட்டில் இருந்து ஓட்டிக்
கலைக்கப் போவதாக இன்றைய
பாதுகாப்பு அமைச்சரான ஜோர்ஜ்
பெர்டினண்ட்ஸ் அமைச்சரவை
கயிறிழுப்புக்கள் இடம்பெற்று
வந்த சமயத்தில் வெளியிட்ட
ஒரு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால்
இந்த அறிக்கையை வாபஸ் பெறுமாறு
அவரை பா.ஜ.க.
கடுமையாக
நிர்பந்திப்பதாக அச்சஞ்சிகை
குறிப்பிட்டிருந்தது.
ஆட்சிபீடம்
ஏறும் வாய்ப்புகள் இருந்து
வந்த ஒரு நிலையில் இக்கட்சி
தான், இன,
மத,
சாதி
பிரிவினைகள் மூலம் ஆத்திரமூட்டல்களைத்
தூண்டிவிட்டு வந்தது.
இதன்
மூலம் தொழிலாளர் ஒடுக்கப்படும்
மக்களை நசுக்குவதற்கான
வலதுசாரி தாக்குதலை நடாத்த
உள்ளது.
இத்தேர்தலின்
மூலம் இந்தியாவில் வெளிப்பட்டுள்ள
அரசியல் நிலைமை,
தொழிலாளர்,
வறிய
விவசாயிகள் உட்பட்ட ஒடுக்கப்படும்
மக்கள்,
இளைஞர்,
புத்திஜீவிகளிடையே
மிக முக்கியமான கேள்வியை
எழுப்பியுள்ளது.
புதிய
முன்நோக்கும் தலைமையும்
இல்லாமல் இந்தப் பொதுமக்கள்
எதிரில் தோன்றியுள்ள எந்த
ஒரு ஆழமான சமூக அரசியல்
பிரச்சினைக்குமே தீர்வு
கிடைக்குமா?
ஸ்டாலினிச
சீ.பீ.ஐ.
(எம்),
சீ.பீ.ஐ.,
சீ.பி.ஐ.
(மார்க்சிச,
லெனினிச)
கட்சிகளும்
பல்வேறு குட்டி முதலாளித்துவ
கும்பல்களும் பொதுமக்களைத்
திசைதிருப்பவும் அடக்கி
வைக்கவும்,
ஏகாதிபத்தியவாதிகளுக்கு
அவர்களை பலிகொடுக்கவும்
முதலாளித்துவ ஏஜன்டுகளாகச்
செயற்படுகின்றன.
ஸ்டாலினிஸ்டுகள்
இனவாத, மதவாச்
சக்திகள் ஆட்சிப்பீடம்
ஏறாவண்ணம் தாம் தடுப்பதாகக்
கூறிக் கொள்கின்றன.
இங்ஙனம்
கூறியபடி காங்கிரஸ் கட்சியினர்
உட்பட்ட பல்வேறு முதலாளித்துவ
கட்சிகளுடன் பாராளுமன்ற
கூட்டுக்குள் நுழையும்
தீர்மானத்தை எடுத்துக்
கொண்டுள்ளனர்.
இது
தொழிலாளர் வர்க்கத்தின்
வர்க்க சுயாதீனத்திற்குக்
குறிபறித்து,
முதலாளி
வர்க்கத் தாக்குதலுக்கு
இட்டுச் செல்லும் ஒரு
பொறிக்கிடங்காகும்.
தற்சமயம்
இந்த ஸ்டாலினிஸ்டுகள்
முதலாளித்துவக் கூட்டு மூலம்
ஒழித்துக் கட்டிவிட முடியும்
எனக் கூறிக் கொண்ட பா.ஜ.க.
உட்பட்ட
சக்திகள் புதுடில்லியின்
ஆட்சியைக் கைப்பற்றிக்
கொண்டுள்ளன.
இது
எந்த விதத்திலும் இந்திய
வலதுசாரி கன்னை தொடர்பாகவும்
ஏனைய முதலாளித்துவக் கட்சிகள்
தொடர்பாகவும் பொதுமக்களுக்கு
இடையே இருந்து வந்த ஆதரவு
மேலோங்கிக் கொண்டுள்ளதைக்
குறிக்காது.
ஸ்டானிஸ்டுகளின்
காட்டிக்கொடுப்புடன் குழம்பிப்
போன சில குட்டி முதலாளித்துவ
மத்தியதர வர்க்க பகுதியினரின்
தோள்களில் ஏறிக் கொள்ள
முதலாளிகளுக்கு வாய்ப்புக்
கிடைத்துள்ளதையே இது
காட்டுகின்றது.
இந்திய
முதலாளி வர்க்க ஆட்சியின்
ஸ்திரமின்மையும் நெருக்கடியும்
உலக யுத்த கால ஏகாதிபத்தியவாதிகளினால்
உலகரீதியில் சிருஷ்டிக்கப்பட்ட
அரசியல் பொருளாதார இயந்திரத்தின்
தகர்வினால் ஏற்பட்டவை.
யுத்தம்
நிறுத்தப்பட்டதும் இந்திய
உப கண்டம் பூராவும் வெடித்தெழுந்து
காணப்பட்ட பொதுஜனப் போராட்டங்களை
நசுக்கிவிட பிரித்தானிய
ஏகாதிபத்தியவாதிகள் ஆட்சியை
1947ல்
ஏகாதிபத்தியச் சார்பு முதலாளி
வர்க்கத்திடம் கைமாற்றினர்.
ஒரு
கோடி மக்களை மதவாத இரத்தக்
களரி கொலைகளுக்கு கீழ்ப்படுத்துவதன்
மூலம் இந்தியா-பாகிஸ்தான்
என்ற இரண்டாக பிரித்துவிட
பிரித்தானிய,
இந்திய,
பாகிஸ்தானிய
முதலாளிகளால் செய்யப்பட்ட
சதியைத் தொடர்ந்து இது இடம்
பெற்றது.
காலனித்துவ
ஆட்சிக் காலத்தில் ஸ்டாலினிஸ்டுகளுக்கு
வாய்ப்பான முறையில் ஏகாதிபத்திய
எதிர்ப்பு மக்களியக்கத்துக்கு
தோள்கொடுக்க இந்திய முதலாளிகளின்
இந்திய தேசிய காங்கிரசினால்
முடிந்தது.
கடந்த
நாற்பது ஆண்டுகளாக இந்த
முதலாளித்துவ வர்க்கமானது
சோவியத் அதிகாரத்துவத்தின்
தோளில் கைபோட்டுக் கொண்டு
தேசியவாத வேலைத்திட்டங்களைக்
கொண்டு நடாத்த ஏகாதிபத்தியவாதிகளுடன்
பேரம்பேசுவதில் ஈடுபட்டிருந்தது.
இந்திய
முதலாளிகள் கொழுத்தாலும்
தொழிலாளர்,
ஒடுக்கப்படும்
மக்களது எந்த ஒரு சமூக
பிரச்சினையுமே தீர்க்கப்படவில்லை.
தமது
வர்க்க ஆட்சியை கொண்டு நடாத்தும்
பொருட்டு,
இந்த
முதலாளிகள் இன,
மத,
சாதி
பிளவுகளை தூண்டுவதன் மூலம்
மக்களை அடக்கி வைத்திருப்பது
தொடர்ந்ததைக் காணலாம்.
ஒரு
புறத்தில் ஏகாதிபத்திய
எதிர்ப்பு கூச்சல்களில்
ஈடுபட்டனர்.
மறுபுறத்தில்
சோவியத் அதிகாரத்துவத்தின்
பக்கம் சாய்ந்து கொண்ட இந்திய
காங்கிரஸ் கட்சி,
முதலாளித்துவ
ஆட்சியைப் பெரிதாகக் காட்டியது.
சோவியத்
ஸ்டாலினிஸ்டுகள்,
இந்தியா
உட்பட உலகம் பூராவும் இருந்து
வந்த ஸ்டாலினிஸ்டுகள்
மட்டுமின்றி,
நான்காம்
அகிலத்தில் இருந்து விட்டோடிய
பப்லோவாதிகளும் தொழிலாளர்,
ஒடுக்கப்படும்
மக்களை ஏமாற்றுவதற்கு இந்த
முதலாளித்துவ ஆட்சியினை
முற்போக்கானதென வர்ணித்தனர்.
ஏகாதிபத்திய
உற்பத்தி பூகோளமயமாக்கத்துக்கு
உட்பட்டதன் பின்னர் தமது
இலாபப் பொதியைக் காக்கும்
அமைப்பினைப் பேணுவதற்கான
தாக்குதலில் இறங்கியதும்
இந்தத் தேசிய முதலாளிகளது
தேசியவாத வேலைத்திட்டம்
குழிபறிந்து போயிற்று,
இப்போது
இந்த முதலாளிகள் ஏகாதிபத்திய
ட்ரான்ஸ்நஷனல் கம்பனிகளுடன்
சேர்ந்து,
சுரண்டலைத்
தொடரும் போட்டாபோட்டியில்
ஈடுபட்டுள்ளனர்.
கடந்த
50 ஆண்டுகளாக
அவமானத்துக்கு உள்ளான இந்த
இந்திய தேசிய காங்கிரஸ்
இறுதியில் பொறிந்து வீழ்ந்தது,
பூகோளமயமாக்க
வேலைத்திட்டத்திற்கு முற்றாகத்
தொடர்பு பூண்டு இயங்கிய
காலக்கட்டத்திலேயே ஆகும்.
ஆளும்
வர்க்கத்திற்கும்
ஏகாதிபத்தியத்திற்கும்
தற்போது புதிய ஒரு ஏஜன்டு
தேவைப்படுகின்றது.
காங்கிரஸ்
முதலாளிகள் எஞ்சியுள்ள
பிரிவையும் கட்டிக்காக்கும்
அவசியத்தை நிறைவேற்றி வைக்க
ஆட்சிக்கு வரத் துடிக்கும்
போது பா.ஜ.க.
இந்து
மதவெறி மூலம் உருவான அரசியல்
குழப்பநிலையை பாவித்து
ஆட்சிப்பீடம் ஏறப் போட்டியிட்டது.
“தீவிர
தேசியவாதிகள்"
ஆகக்
காட்டிக் கொண்ட பா.ஜ.க.
முதலாளிகள்
இப்போது ஏகாதிபத்தியவாதிகளின்
வேலைத்திட்டங்களைச் செயற்படுத்த
பகிரங்கமாக வாக்குறுதி தந்து
அரசாங்கம் அமைத்துக் கொண்டுள்ளனர்.
இது
தேசியவாதம்,
இன்று
தொழிலாளர்,
ஒடுக்கப்பட்டும்
மக்களுக்கு எதிரான பாசிச
வெறியாக மாறிக் கொண்டுள்ள
விதம் மீண்டும் உறுதியாகி
உள்ளதைக் காட்டுகின்றது.
முன்நோக்கு
ஏகாதிபத்தியத்தினாலும்
ஏகாதிபத்தியச் சார்பு முதலாளி
வர்க்கத்தினாலும் ஆழமாக்கப்படும்
சமூகச் சிக்கல்களில் இருந்து
தலையெடுக்க மக்களுக்கு இருந்து
கொண்டுள்ள ஒரேயொரு முன்நோக்காக
நிரந்தரப் புரட்சி வேலைத்திட்டத்தின்
அடிப்படையிலான தொழிலாளர்
வர்க்க முன்நோக்கே விளங்குகின்றது.
இந்தியா
பூராவும் பெரும் சமூக
சமத்துவமின்மை பரந்து
பட்டுள்ளது.
பெரும்
செல்வந்தர்கள் ட்ரான்ஸ்நஷனல்
கூட்டுத்தாபனங்களிடம் தரகு
பெற்றுக் கொண்டும் சுரண்டலுக்கு
கூட்டுச் சேர்ந்து கொண்டும்
எழுச்சி கண்டு வருகின்றனர்.
தொழிலாளர்
ஒடுக்கப்படும் மக்கள் ஒரு
வேளை உணவுக்கு ஆலாய்ப் பறக்கும்
நிலைக்கு இழுத்துத்
தள்ளப்பட்டுள்ளனர்.
உலக
ஜனத் தொகையில் ஏழில் ஒரு
பங்கினரும் நூற்றுக்கு 14
சதவீதத்தினருமான
இந்திய பொதுமக்களுக்கு இந்த
சமூக சமத்துவமின்மை தரித்திர
நிலைக்குள்ள தள்ளியுள்ளது.
சமூக
சமத்துவத்தின் அடிப்படையிலான
நாகரீக வாழ்க்கைக்கு அவசியமான
நிலைமைகளை ஸ்தாபிதம் செய்ய
உற்பத்திச் சக்திகளின் உரிமையை
முதலாளிகளின் கைகளில் இருந்து
தொழிலாளர் வர்க்கத்தின்
கைகளுக்கு கொணர்ந்து,
பொதுமக்களின்
அபிலாசைகளை இட்டு நிரப்புவதன்
மூலம் பொருளாதாரத்தை
மறுசீரமைப்புச் செய்ய வேண்டும்.
இலாபம்
சுரண்டும் முதலாளிகளின்
அவசியங்களுக்குள்
சிறைப்பிடிக்கப்பட்டுள்ள
உற்பத்தி சக்திகளை பொதுமக்களின்
அடிப்படை அவசியங்களை சிருஷ்டிக்க
கட்டவிழ்த்துவிட வேண்டும்.
இதற்கு
தொழிலாளர் வர்க்கமானது ஏழை
மக்களையும்,
விவசாயிகளையும்
இன, சாதி,
மத
அடிப்படையில் விடுதலை செய்து
வைக்கும் தலைவனாக கிளர்ந்து
எழுந்து,
ஏகாதிபத்தியச்
சார்பு முதலாளி வர்க்க ஆட்சியை
தொழிலாளர் விவசாயிகள்
அரசாங்கத்தின் மூலம் அதாவது
இந்திய துணைக்கண்ட சோசலிச
குடியரசு ஒன்றியத்தினால்
பதிலீடு செய்ய வேண்டும்.
இந்தியாவில்
தொழிலாளர் வர்க்கம் ஒடுக்கப்படும்
மக்களின் தலைவனாக அந்தப்
போராட்டத்தில் ஈடுபட
ஏகாதிபத்தியத்துக்கு எதிரான
அனைத்துலகத் தொழிலாளர்
வர்க்கத்துடன் ஒன்றுபட்டாக
வேண்டும்.
அதனை
அனைத்துலக சோசலிசத்துக்கான
நனவான போராட்டத்தின் ஒரு
பாகமாக மட்டுமே நடாத்த முடியும்.
இன்று
இந்த வேலைத் திட்டத்துக்காக
இந்தியாவினுள் போராடி வருவது
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்
குழுவின் பகுதியாக சோசலிச
சமத்துவக் கட்சியை அமைக்கும்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள
சோசலிச தொழிலாளர் கழகமேயாகும்.
இந்தியாவின்
அரசியல் அபிவிருத்திகள்
இலங்கைத் தொழிலாளர்,
ஒடுக்கப்படும்
மக்களின் போராட்டத்துடன்
ஒன்றுடன் ஒன்று இணைந்து
கொண்டுள்ளது.
கடந்த
சில தினங்களாக பொதுத் தேர்தல்
இடம்பெற்று வந்த ஒரு நிலையிலும்
அதன் பின்னரும் இலங்கை முதலாளி
வர்க்க அரசாங்கமும் முதலாளித்துவக்
கட்சிகள்,
முதலாளித்துவ
வெகுஜனத் தொடர்புச் சாதனங்களும்
இதைச் சுட்டிக் காட்டிக்
கொண்டன.
தமது
ஏகாதிபத்தியச் சார்பு
வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துச்
செல்வதற்காக இந்தியாவில்
புதிதாக அமைக்கப்படும்
அரசாங்கத்துக்குக் கிடைக்கும்
அரசியல் முண்டுகோலையிட்டு
இலங்கை முதலாளிகள் கணித்துக்
கொண்டதை அதில் காண முடிந்தது.
அது
இலங்கை அரசியில் நிலையையிட்டு
இந்திய முதலாளிகள் காட்டும்
பிற்போக்கு அக்கறையைப்
போன்றது.
தமது
இலாப அமைப்பைக் கட்டிக்
காக்கும் பொருட்டு,
ஏகாதிபத்தியவாதிகள்
பூகோளமயமாக்கத்தின் மூலம்
தூண்டிவிடும் தாக்குதல்கள்
இலங்கை முதலாளி வர்க்கம்
மூலம் நடைமுறைக்கு விடப்படும்
நிலைமையினுள் இலங்கையிலும்
இந்தியத் துணைக்கண்டத்திலும்
தொழிலாளர்கள் முகம் கொடுத்திருப்பது
ஒரே பொதுப் பிரச்சினைக்கேயாகும்.
இலங்கைத்
தொழிலாளர் வர்க்கத்தினதும்
இந்திய தொழிலாளர் வர்க்கத்தினதும்
போராட்டங்களை இணைப்பதற்காக
இலங்கை சோசலிச சமத்துவக்
கட்சி நடாத்தும் போராட்டமும்,
இந்தியாவினுள்
சோசலிச தொழிலாளர் கழகத்துடன்
சேர்ந்து புரட்சித் தலைமையை
ஸ்தாபிதம் செய்வதற்காக
நடாத்தும் போராட்டமும் இன்று
பெரிதும் தீர்க்கமானதாகியுள்ளதற்குக்
காரணம் இதுவே.
இந்தியாவின்
அரசியல் அபிவிருத்திகள்
தொடர்பாக இந்த பரந்த பார்வையை
செலுத்துமாறும் புரட்சிகர
முன்நோக்கினை ஸ்தாபிதம்
செய்யவும் தலைமையைக் கட்டி
எழுப்பவும் சோசலிச சமத்துவக்
கட்சி நடாத்தும் போராட்டத்துடன்
இணையுமாறும் நாம் உங்களை
வேண்டுகின்றோம்.