[The
Young Socialists 10th national summit pledges to fight to build Sri
Lankan section Revolutionary Communist League and Indian Socialist
Labour League as working class revolutionary leadership.]
Thozhilalar Paathai Volume 409 (File no 041)
August
12, 1991
நான்காம்
அகிலத்தின் அனைத்துலகக்
குழுவினால் நவம்பர் 16ம்
17ம்
திகதிகளில் ஜேர்மன் பேர்ளின்
நகரில் கூட்டப்படவுள்ள
ஏகாதிபத்திய யுத்தத்துக்கும் காலனித்துவத்திற்கும் எதிரான
உலகத் தொழிலாளர் மகாநாட்டுக்கு
இம்மகாநாடு தனது பேராதரவினை
வழங்குகின்றது.
உலகம்
பூரவும் ஏகாதிபத்தியவாதிகள்
உலகினை தம்மிடையே காலனிகளாகப்
பங்கிட்டுக் கொள்ளும் பகற்கொள்ளை
இலக்கில் மூன்றாவது அணுவாயுத
உலக யுத்தத்துக்கு தயாராகி
வரும் நிலையில் கூட்டப்படவுள்ள
இம்மகாநாடு,
ஏகாதிபத்தியவாதிகளின்
அந்த நாசகார முயற்சிகளை
தோற்கடிக்கும் பொருட்டு
அனைத்துலகத் தொழிலாள வர்க்கம்
ஏகாதிபத்தியத்தினை இப்பூகோளத்தில்
இருந்து துடைத்துக் கட்டும்
உலகச் சோசலிசப் புரட்சி
முன்நோக்கினை அடிப்படையாகக்
கொண்டிருக்கும்.
5
இலட்சத்துக்கு
அதிகமான ஈராக்கிய மக்களைக்
படுகொலை செய்தும் ஈராக்கின்
பொருளாதார கைத்தொழில் துறைகளை
அடியோடு நாசமாக்கியும்
அமெரிக்கா தலைமையிலான
ஏகாதிபத்தியவாதிகள் நடாத்திய
யுத்தம்,
திரும்பவும்
மீண்டும் ஏகாதிபத்தியவாதிகள்
உலக யுத்தத்துக்கும் திரும்பியதைச்
சுட்டிக் காட்டுகின்றது.
அவ்வாறே
ஏகாதிபத்தியவாதிகள் ஈராக்குக்கு
எதிரான பொருளாதாரத் தடையைத்
தொடர்ந்தும் கடைபிடிக்க
எழுவர் குழுவின் மகாநாட்டில்
தீர்மானம் செய்தனர்.
பாரசீக
வளைகுடாவிலும் வடக்கு
ஈராக்கிலும் தமது படைகளை
இருத்துவதன் மூலம் எண்ணெய்
வளங்களைக் கொள்ளையடிக்கவும்
மத்தியகிழக்கு ஒடுக்கப்படும்
மக்களிடையே மோதுதல்களைத்
தூண்டிவிடும் யுத்தத்துக்கு
ஏகாதிபத்திய வல்லரசுகள்
தயாராகி வருகின்றன.
இதைக்
குறிக்கும் விதத்தில் அமெரிக்கா,
பிரித்தானிய,
பிரான்சிய
ஏகாதிபத்தியத்தின் தலைவர்கள்
மீண்டும் ஈராக்கினை தாக்கப்
போவதாக எச்சரிக்கை செய்தனர்.
ஈராக்குக்கு
எதிரான யுத்தத்தில் உலகம்
பூராவும் உள்ள தொழிலாளர்
அதிகாரத்துவங்கள் -
ஸ்டாலிஸ்டுகள்,
சமூக
ஜனநாயகவாதிகள்,
பப்லோவாதிகள்
அத்தோடு அமெரிக்க AFL-சீ.I.O
உட்பட
தொழிற்சங்கத் தலைவர்கள்
ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவு
வழங்கினர்.
இதன்
மூலம் இந்தத் துரோகத் தொழிலாளர்
தலைவர்கள் ஏகாதிபத்தியவாதிகளின்
உலக யுத்தத்தினதும் காலனித்துவ
வேலைத்திட்டதினதும் அழிவுகளை
உலகத் தொழிலாளர்-ஒடுக்கப்படும்
மக்கள் மேல் திணிக்கும்
ஏகாதிபத்தியச் சார்பு
ஏஜண்டுகளாகச் செயற்படுகின்றார்கள்.
ஆதலால்
இந்தச் சகல ஏகாதிபத்திய ஏஜன்டு
அதிகாரத்துவங்களை தொழிலாள
வர்க்கத்திலிருந்து வெளியேற்றி
புரட்சித் தலைமையாக நான்காம்
அகிலத்தின் அனைத்துலகக்
குழுவினை உலகளாவிய ரீதியில்
கட்டி எழுப்புவதன் மூலமே உலக
யுத்தத்துக்கும் காலனித்துவத்துக்கும்
எதிரான உலகத் தொழிலாளர்களை
அணி திரட்ட முடியும்.
இந்நூற்றாண்டில்
ஏகாதிபத்தியவாதிகள் இருதடவை
உலகினை காலனிகளாகப் பகிரும்
யுத்தத்தின் மூலம் கோடானுகோடி
தொழிலாளர்களையும்,
ஒடுக்கப்படும்
மக்களையும்,
பேரளவிலான
உற்பத்திச் சக்திகளையும்
அழித்தொழித்தனர்.
முதலாம்
உலக யுத்தத்தில் சமூக ஜனநாயகவாத
தலைவர்கள் தத்தம்,
நாடுகளின்
ஏகாதிபத்திய முதலாளி வர்க்கங்களின்
பின்னால் அணி திரண்டு தொழிலாள
– ஒடுகப்படும் மக்களை யுத்தத்தின்
பேரழிவுக்கு பலியாக்கினர்.
இரண்டாம்
உலக யுத்தத்தின் போது சமூக
ஜனநாயகவாதிகளை அணிதிரட்டிய
ஸ்டாலினிசத் தலைவர்கள்
ஏகாதிபத்திய பகற்கொள்கை
யுத்தத்துக்கு பூரண ஆதரவு
வழங்கியதன் மூலம்,
மீண்டும்
ஒரு தடவை தொழிலாள – ஒடுக்கப்படும்
மக்களை இரத்தப் பலியெடுக்க
உதவினர்.
அத்துடன்
நின்றுவிடாது இத்துரோகிகள்
இரண்டாம் உலக யுத்தத்தின்
பின்னர் ஏகாதிபத்தியத்துடன்
புரட்சிகரமான முறையில்
கணக்குவழக்குகளைத் தீர்த்துக்
கொள்ள அனைத்துலகத் தொழிலாள
வர்க்கம் எடுத்து முயற்சியைத்
தடுத்ததோடு உலகம் பூராவும்
சமபல நிலையை ஏகாதிபத்தியம்
சிருஷ்டிக்கப் பூரண முண்டு
வழங்கினர்.
இன்று
ஸ்டாலினிச,
சமூக
ஜனநாயக தலைவர்களும் இரண்டாம்
உலக யுத்தத்தின் பின்னர்
திணிக்கப்பட்ட ஏகாதிபத்திய
உலக அமைப்புக்கு அடிபணிந்த
பப்லோவாத திரிபுவாதிகள்
உள்ளடங்கலான துரோகத் தொலிழாளர்
தலைவர்களும் மூன்றாம் அணுவாயுத
உலக யுத்தத்துக்கு உலகத்
தொழிலாள-ஒடுக்கப்படும்
மக்களை அடிமைப்படுத்த
ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவு
வழங்க முன் வந்துள்ளனர்.
முதலாளித்துவத்தினைப்
புனருதாரணம் செய்து தத்தம்
நாடுகளில் ஏகாதிபத்திய நிதி
மூலதனத்தின் சுரண்டலுக்கு
களம் அமைத்துக் கொடுக்க,
சோவியத்
யூனியன்,
கிழக்கு
ஐரோப்பா,
சீனா
வியட்நாம் ஸ்டாலினிச
அதிகாரத்துவங்கள் கடைப்பிடித்து
வரும் வேலைத்திட்டங்கள்
ஏகாதிபத்திய யுத்ததினதும்
காலனித்துவத்தினதும்
வேலைத்திட்டத்துடன் இணைந்தன.
இந்தியாவிலும்
இலங்கையிலும் ஏகாதிபத்தியச்
சார்பு முதலாளித்துவ அரசாங்கங்கள்
உலக வங்கி,
சர்வதேச
நாணய நிதியத்தின் கட்டளைப்படி
இந்நாடுகளை ஏகாதிபத்திய
யுத்தம்,
காலனித்துவ
திட்டங்களுடன் முழுமனே
இணைத்துக் கொண்டுள்ளனர்.
சிலாபத்தில்
350 ஏக்கர்
நிலம் 'வொயிஸ்
ஒப் அமெரிக்கா'
- யுத்தக்
குரல் நிலையத்துக்கு ஒதுக்கிக்
கொடுத்தன் மூலம் பிரேமதாச
அரசாங்கம் இந்தியத் துணைக்
கண்டத்தில் ஏகாதிபத்திய
இராணுவ மோதுதல்களுக்கு
இலங்கையில் திடல் அமைத்துக்
கொடுத்துள்ளது.
இந்தியாவில்
சீபிஐ,
சீபிஎம்
ஸ்டாலினிச கட்சிகளின்
தலைவர்களும் இலங்கையில் சம
சமாஜ கம்யூனிச,
நவசம
சமாஜ, இ.
தொ.
கா,
தம்பு
தலைமைகளும் ஏகாதிபத்திய
யுத்த திட்டங்களுக்குள்
முழுமனே இணைந்து கொண்டு தத்தம்
நாடுகளில் முதலாளித்துவ
அரசாங்க,
ஏகாதிபத்திய
யுத்தத் தயாரிப்புக்களின்
பின்னால் அணிதிரண்டுள்ளனர்.
இந்நிலையில்
இலங்கையினுள் யூ.எம்.பி—சி.ல.சு.க.
ஏகாதிபத்திய
சார்பு அரசியல் கட்சிகளுக்கு
ஆதரவு தரும் சமசமாஜ கம்யூனிச
நவசம சமாஜ,
இ.
தொ.
கா,
தம்பு
போன்ற துரோகத் தலைமையை
வெளியேற்றி இந்திய துணைக்
கண்டத்தினுள் சீபிஐ சீபிஎம்
கட்சிகளை வெளியேற்றியும்
தொழிலாள வர்க்கப் புரட்சித்
தலைமையாக நான்காம் அகிலத்தின்
அனைத்துலகக் குழுவின் இலங்கைக்
கிளையான புரட்சிக் கம்யூனிஸ்ட்
கழகத்தையும் இந்தியாவில்
அதன் சகோதர இயக்கமான சோசலிச
தொழிலாளர் கழகத்தையும் கட்டி
எழுப்புவது பெரிதும் தீர்க்கமானது.
அதன்
பேரில் போராட இந்த இளம்
சோசலிஸ்டுகள் மகாநாடு சபதம்
பூணுகின்றது.
அவ்வாறே
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்
குழுவின் முன்நோக்கினை
இந்தியத் துணைக்கண்டம்
பூராவுமுள்ள கோடானுகோடி
தொழிலாள—ஒடுக்கப்படும்
மக்கள் மத்தியில் எடுத்துச்
செல்வதன் மூலம் பேர்ளினில்
நடைபெறும் உலக தொழிலாளர்
மகாநாட்டிற்கு பலம் வாய்ந்த
பேராளர் குழுவை அனுப்ப
இம்மகாநாடு சபதம் பூணுகின்றது.