"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Showing posts with label 1993-June. Show all posts
Showing posts with label 1993-June. Show all posts

Monday, June 20, 2016

வங்க மொழியில் ட்ரொட்ஸ்கிசப் பத்திரிகை



[‎Bengali language Trotskyist magazine launched in 1993 by ‪Socialist Labour League India‬.]

Thozhilalar Paathai, Volume 08
June, 1993

வங்க மொழியில் ட்ரொட்ஸ்கிசப் பத்திரிகை

இந்திய சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் வங்க மொழியில் 'ஷ்ரமிகேர் பாத்' (தொழிலாளர் பாதை) என்ற பத்திரிகையை வெளியிட்டுள்ளனர். தமிழ் மொழியில் தொழிலாளர் பாதை என்ற மாத இதழை ஏற்கனவே வெளியிட்டு வரும் சோ.தொ.. இன் இந்நடவடிக்கை வங்க மொழி பேசும் தொழிலாளர்கள் மத்தியில் அனைத்துலக சோசலிச வேலைத் திட்டத்தினை முன்னெடுக்கும் இலக்கினில் ஒரு திட்டவட்டமான ஆயுதமாக விளங்கும்.

இந்திய ஸ்டாலினிசக் கம்யூனிசக் கட்சிகளினதும் (CPM, CPI) மற்றும் சந்தர்ப்பவாதக் கட்சிகளதும் தேசியவாத நிலைப்பாடுகளை அம்பலப்படுத்தவும், மார்க்சிய சர்வதேச முன்னோக்கில் தொழிலாளர்கள், சோசலிச பாதையை நாடும் மத்திய தர வர்க்கத்தினர் புத்திஜீவிகளை வென்றெடுக்கவும் இப்பத்திரிகை போராடும் எனவும் சோ.தொ.கழகம் குறிப்பிட்டுள்ளது.

நான்கு தசாப்தங்களுக்கு மேலாக ஸ்டாலினிசத்துக்குப் புரட்சிகர முலாம் பூசி வந்த பப்லோவாதிகளதும் இந்திய முதலாளித்துவத்துக்கு முற்போக்கு முலாம் பூசியதன் மூலம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சுயாதீனமான பகுதியை இந்தியாவுள் கட்டியெழுப்புவதற்குத் தடையாக இருந்த பிரித்தானிய தொழிலாளர் புரட்சிக் கட்சிக்கு எதிராக அனைத்துலகக் குழு தொடுத்த பாட்டாளி வர்க்க சர்வதேசியத்துக்கான போராட்டத்தினை 'ஷ்ரமி கேர் பாத்' இந்தியாவில் முன்னெடுக்கும் என இந்திய ட்ரொட்ஸ்கிஸ்டுகள் குறிப்பிட்டுள்ளனர்.

'ஷ்ரமிகேர் பாத்' திற்கு தனது புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் பெருமகிழ்ச்சி அடைகின்றது.