"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Thursday, June 9, 2016

இந்திய சோசலிசத் தொழிலாளர் கழகம் தமிழ்நாடு முதலமைச்சருக்கு பகிரங்கக் கடிதம்


தொகுப்பு இலக்கம் - 15

தேதி- 16.1.1996


நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவுடன் ஐக்கியம் கொண்ட இந்தியாவில் உள்ள ட்ரொட்ஸ்கிசக் கட்சியான சோசலிசத் தொழிலாளர் கழகம் யூலை 10ம் திகதி காலை பத்து மணி முதல், பன்னிரெண்டு மணிவரை சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் முன்னால் மறியல் செய்ய அனுமதி கோரியது. இந்த அனுமதி, தமிழ்நாடு பொலீஸ் மற்றும் சென்னை பொலீஸ் கமிஷனர் ஆகியோரின் கட்டளைப்படி நிராகரிக்கப்பட்டது. இந்த நிராகரிப்பை சோசலிசத்தொழிலாளர்கழகம் வன்மையாக எதிர்க்கின்றது. அனுமதியை நிராகரித்த பொலீஸ் ஆணை "கிரிமினல் சட்டத்தின் கீழ் மறியல் செய்யும் செயல் குற்றங்களைக் கவரும்" ஆதலால் மறியல் செய்ய அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றது.



உங்களது உத்தரவின் கீழ் தமிழ்நாடு பொலீஸ் கூறியுள்ள காரணம் எதை வெளிப்படுத்துகின்றது என்றால், “ஜனநாயக" அரசாங்கம் எனப்படும் உங்களது அரசாங்கத்தின் ஜனநாயக விரோதத் தன்மையையேயாகும். இதன் பின் பதினெட்டு நாட்கள் கழித்து ஆயிரம் விளக்கு பொலீஸ் நிலையத்தின் பொலீஸ் அலுவலர்கள் ஒருபடி முன்னேறியுள்ளனர். அவர்கள் "இலங்கையில் இனவாதயுத்தமும், இந்திய முதலாளித்துவமும்" என்ற தலைப்பின் கீழ் சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் தலைமை உறுப்பினர்களில் ஒருவர் உரையாற்ற இருந்த கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களிடம் சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் பேச்சாளர் ஆற்ற இருந்த உரையை எழுத்தில் முழுமையாக, கூட்டம் நடத்துவதற்கான அனுமதி விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என்று கோரினர். இது மிதக்கும் பனிப்பாறையின் உச்சியின் நுனியை ம்மட்டும் கண்ணுக்குக் காட்டுகின்றது. மிகவும் அடிப்படையான உரிமைகளை அடக்கி, ஒடுக்குவதற்கு முதலாளித்துவ ஜனநாயகத்தினைத் தகர்த்து தரைமட்டமாக்கப்பட்ட முன் முகப்பின் இடிபாடுகளின் கீழ் உங்களது அரசாங்கம் ஆற்றிவரும் தயாரிப்புகளின் முன்னேறிய நிலையைத் தான் இது வெளிப்படுத்தியுள்ளது.



மத்திய அரசாங்கத்தால்ல நிறுவப்பட்ட தேசிய மனித உரிமைகள் ஆணையம் என்று அழைக்கப்படும் அமைப்பு கூட அது ஆரம்பிக்கப்பட்டு பதினெட்டு மாதங்களுள் காவல் கைதிகள் மற்றும் சிறைக் கைதிகளின் மரணங்கள், பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அட்டூழியங்கள், மற்றும் பொலீஸ் நடத்திய சித்திரைவதைகள் பற்றிய 7,000 முறையீடுகளை (மே 31 வரை) பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இவற்றுள் ஏழில் ஒரு பகுதி அல்லது எட்டில் ஒரு பகுதி முறையீடுகள் தமிழ்நாட்டில் இருந்து பெற்றப்பட்டவை என்று அது குறிப்பிட்டுள்ளது. (இந்து பத்திரிகை, யூலை 17, 1995 பக்கம் 6)



உண்மை எதுவென்றால் நீங்கள் தொழிலாளவர்க்கத்தின் கட்சியான சோசலிசத் தொழிலாளர் கழகம் அதன் அடிப்படை ஜனநாயக உரிமையைப் பயன்படுத்த அதற்குள்ள உரிமையை மறுத்துள்ளீர்கள். சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் தோழமைக் கட்சியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் நடத்திய பகிரங்கக்கூட்டத்தில் அதற்கு எதிராக பாசிஸ்டுகள் மற்றும் இலங்கையின் அரச படையினர் ஒன்றாகத் தாக்குதலைத் தொடுத்துள்ளனர். இதை எதிர்த்து இலங்கைத் தூதரகத்தின் முன் மறியல் செய்து இலங்கையிலுள்ள தனது தோழமைக் கட்சியினுடனான தனது சர்வதேச ஐக்கியத்தை வெளிப்படுத்தச் சோசலிசத் தொழிலாளர் கழகத்திற்கு உள்ள அடிப்படை உரிமையை நீங்கள் மறுத்துள்ள அதே மூச்சில் வெறும் நான்கு நாட்கள் கழித்து யூலை 14ம் திகதி, தமிழ் வகுப்புவாத முதலாளித்துவக் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இலங்கைத் தூதுவரகத்தின் முன் மறியல் செய்ய நீங்கள் அனுமதித்துள்ளீர்கள். இதற்குப்பின் ஒன்றன்பின் ஒன்றாக ஏறக்குறைய பத்து, பன்னிரெண்டு முதலாளித்துவக் கட்சிகளுக்கு அவை இலங்கைத் தூதுவரகத்தின் முன் மறியல் செய்ய நீங்கள் அனுமதி கொடுத்துள்ளீர்கள். வேறு வார்த்தைகளில் கூறினால் நீங்களும் உங்களது பொலீசும் எழுத்துமூலம், மற்றும் செயல்மூலம் எதைக்கூற முயற்சிக்கின்றீர்கள் என்றால், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சி, அது இலங்கையில் உள்ள தனது தோழமைக்கட்சியின் பாதுகாப்பிற்காக இலங்கைத் தூதரகத்தின் முன் மறியல் செய்யும் உரிமையைப் பயன்படுத்துமாயின், அது "கிரிமினல் சட்டத்தின் கீழ் குற்றங்களைக் கவரும்" என்பதையே. ஆனால் அதேநேரத்தில் உங்களது சக முதலாளித்துவ வகுப்புவாதக் கட்சிகளுக்கு அதே இலங்கைத் தூதுவரகத்தின் முன்னால் அக்கட்சிகளுக்கு உங்களால் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது உங்களது வார்த்தைப்படி அது எந்தவிதத்திலும் "கிரிமினல் சட்டத்தின் கீழ் குற்றங்களைக் கவராது" என்று அர்த்தமாகிறது.



அது எதை அர்த்தப்படுத்துகின்றது என்றால், நீங்கள் உங்களது முதலாளித்துவ வர்க்கத்தை, மற்றும் முதலாளித்துவக் கட்சிகளை அவை மறியல் செய்யும் உரிமையை செயலிற் பயன்படுத்த மட்டுமல்லாது, அவை மறியல் செய்வதற்கு முன்னர், ஆர்ப்பாட்டம் செய்யும் மற்றும் கூட்டங்கள் நடத்தும் உரிமையை கூட பயன்படுத்த இடமளிப்பீர்கள் என்பதையே ஆகும். ஆனால் தொழிலாளர் வர்க்கம் மற்றும் அதன் கட்சியான சோசலிசத் தொழிலாளர் கழகம், அவை இலங்கைத் தூதரகத்தின் முன்னால் மறியல் செய்ய உங்களிடம் அனுமதி கோருவனவாயின் நீங்கள் உடனே அனுமதியை நிராகரிப்பதோடு, சோசலிசத் தொழிலாளர் கழகம் மற்றும் தொழிலாளர்வர்க்கம் மட்டும் மறியல் செய்தால் அச்செயல் "கிரிமினல் சட்டத்தின் கீழ் குற்றங்களைக் கவரும்" என்று மிரட்டும் உங்களதுஉ கட்டளை உங்களது கிரிமினல் சட்டங்களின் வர்க்க தன்மையை வெளிப்படுத்துகின்றது.



நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்துடன் சோசலிசத் தொழிலாளர் கழகம் நெருக்கமாக உழைத்து வருவது உங்களது அரசாங்கத்திற்கு நன்கு தெரியும். இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களின் இனவெறி அரசியலுக்கு எதிராக கொள்கை மாறாது பாட்டாளிவர்க்க சர்வதேசியத்தின் அடிப்படையில் தொடர்ந்து போராடி வந்த பெருமை மிக்க வரலாறு தான் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் வரலாறு. அது இந்திய உபகண்டத்தின் தொழிலாளர் வர்க்கத்தை உலகத் தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பகுதியாக கொழும்பு அரசாங்கத்தின் சிங்கள இனவெறிக்கு எதிராகவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாளித்துவ தேசியவாதத்திற்கு எதிராக ஐக்கியப்படுத்த சோசலிசத் தொழிலாளர் கழகத்தோடு ஒத்துழைத்து வருகின்றது. வடகிழக்கிலிருந்து இலங்கைத் துருப்புகளை வாபஸ் வாங்க புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் போராடி வருகின்றது. அது தீவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்துவரும் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக சந்திரிக்கா குமாரதுங்காவின் மக்கள் கூட்டணி அரசாங்கம் தொடுத்துவரும் இனவாத யுத்தத்தின் அச்சம் தரும் விளைபயன்களை அம்பலப்படுத்தப் போராடுகின்றது. முழுமையாக இக்காரணங்களினாலேயே புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், பாசிஸ்டுகளால் மற்றும் அரச படைகளால் தாக்கப்பட்டது.



இலங்கை விமானப்படை விமானங்கள் யாழ்பாணத்தில் நூற்றுக் கணக்கான அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேல் தாறுமாறாகக் குண்டுகள் போடுவதற்கு எதிராக தமிழீழப் போராட்டத்தை நசுக்க இந்திய முதலாளித்துவம் தனது துருப்புகளை அனுப்பியதற்கான்ன வர்க்க தேவைகளை மூடிமறைக்க நீங்கள் 1987ம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு முன்பும், பின்பும் முதலைக்கண்ணீர் விட்டீர்கள். ஆனால் இம்முறை நீங்கள் அந்த முதலைக்கண்ணீரைக் கூட விடவில்லை. இது பொதுவாக இந்திய முதலாளித்துவ அரசாங்கத்திற்கு எதிராகவும், குறிப்பாக உங்களது அ...தி.மு.. அரசாங்கத்திற்கு எதிராகவும் வெறுப்பு உண்டாக்குகின்ற நீங்காப்பழியைச் சுமத்தியுள்ளது. இன்று தமிழ்ச் சிறுபான்மையினருக்கு எதிராகக் கொழும்பு அரசாங்கம் இனவாத யுத்தத்தை தொடுத்து வருகின்றது. அதேநேரத்தில் அது பத்திரிகைச் சுதந்திரத்தை ஒடுக்குகின்றது. தொழிலாளர்களை மற்றும் தென்னிலங்கையின் இரணவிலவில் உள்ள அமெரிக்க தளத்தை எதிர்ப்பவர்களை அது சுட்டுப் பொசுக்குகின்றது. இவை அனைத்தையும் நீங்கள் முழுமையாக உள்ளம் உவர்ந்து ஆதரிக்கின்றீர்கள்.



நீங்கள் கொழும்பு அரசாங்கத்திற்கு அளிக்கும் ஆதரவு பொதுவாக முதலாளித்துவ வர்க்கத்தின் வர்க்க நலன்களை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. அதேவேளையில் அது இந்திய மூலதனம் இலங்கையில் செய்துள்ள முதலீடுகள் மற்றும் இந்திய ஏற்றுமதிக் கம்பனிகள் இலங்கையுடன் நடத்தும் வர்த்தகம் முதலியவற்றைப் பாதுகாக்கும் நோக்கினைக் குறிப்பாகக் கொண்டுள்ளது. இந்த நலன்களைத் தான் நீங்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றீர்கள், பாதுகாக்கின்றீர்கள். இலங்கையின் இனவாதயுத்தத்திலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாக வந்தவர்களை நீங்கள் அரசியல் கைதிகளாகப் பல பாதுகாப்பு முகாம்களில் சிறைப்படுத்தி துன்புறுத்தி வருகின்றீர்கள். இவர்களைத் தவிர இலங்கையிலிருந்து இலட்சக்கணக்கான தமிழீழ அகதிகள் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளார்கள். இவர்களுக்குத் தேவையான மிகவும் அடிப்படையான உ..., மருத்துவ, கல்வி, கலாச்சார மற்றும் வீட்டுவசதிகளைக் கூட நீங்கள் மறுத்து வருகின்றீர்கள். இந்தியப் பேரின வெறியின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகள் விரோத பிரச்சாரத்தை உண்மையில் தமிழீழத் தமிழர் விரோத பிரச்சாரத்தை நீங்கள் தொடுத்து வருகின்றீர்கள். இது வேறொன்றும் அல்ல. இந்தியாவில் … தொழிலாளர் வர்க்கம் மற்றும் ஒடுக்கப்படும் … மக்கள் சிறீலங்காவில் மற்றும் தமிழீழத்தில் … தமது வர்க்க சகோதரர்களுடன், சகோதரிகளுடன் கொண்டுள்ள வர்க்க ஐக்கியத்தை உடைப்பதற்கு இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் மற்றும் … திராவிடப்பகுதி என்று அழைக்கப்படும் பகுதி... மேற்கொண்டுள்ள ஆற்றொணாத மற்றும் வெறுக்கத்தக்க முயற்சியாக தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் என்றழைக்கப்படும் "அபாயத்தை" எதிர்த்துப் போ... என்ற கந்தலாய்ப்போன மூடுதிரையின் கீழ் அதி... ஆயுதங்கள், தளவாடங்கள் மற்றும் வாகனங்கள் வாங்கி மாநிலப் பொலிசை உங்களது அரசாங்கம் நவீனமயமாக்கியுள்ளது. அதோடு அது பெரும்படையை மேலும் "நவீனமயமாக்க" பெரும் நிதியை டில்லியிடம் கோரியுள்ளது. இது … எதற்குமல்ல, ஏனைய மாநில அரசாங்கங்களுடன் போட்டிபோட்டு ஏகாதிபத்திய நாடு கடந்த கம்பனிகளுக்கு அதிமலிவான கூலிஉழைப்பை வழங்க இந்த அதிநவீனமயமாக்கப்பட்ட பெரும்படையைத் தமிழ்நாட்டின் தொழிலாள வர்க்கத்திற்கு மற்றும் ஒடுக்கப்படும் பரந்த மக்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்கே ஆகும்.



சோசலிசத் தொழிலாளர் கழகமும் … உலகக் கட்சியான அனைத்துலகக் குழுவினால் வழிநடாத்தப்படும் நான்காம் அகிலமும் தமிழீழ விடுதலைப்புலிகள் சம்பந்தமாகக் கொண்டுள்ள நிலைப்பாட்டை நாம் தெளிவாக மற்றும் வெளிப்படையாக கூற விரும்புகின்றோம். தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு முதலாளித்துவ தேசியவாத இயக்கம் என்று கருதுவதை இ... சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். ஒடுக்கப்படும் தமிழ் மக்களை, தமிழீழ விடுதலைப் புலிகள் முதலாளித்துவ தேசியவாத வேலைத்திட்டத்திற்கு எதிராக, நமது பாட்டாளிவர்க்க சர்வதேச ம... சர்வதேச சோசலிசப் பதாகையின் கீழ் அணித்திரட்ட நாம் போராடி வருகின்றோம்.



சோசலிசத் தொழிலாளர் கழகம் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் தோழர்களுக்கு எதிரான பாசிச மற்றும் அரச தாக்குதலை எதிர்த்து இந்திய தொழிலாள வர்க்கத்தின் மத்தியிலும், ஒடுக்கப்படும் பரந்த மக்கள் மத்தியிலும் தனது அரசியல் பிரச்சார இயக்கத்தை மேலும் அதிகப்படுத்தும். … பேச்சுரிமை, பத்திரிகைச் சுதந்திரம் மற்றும் … செய்யும் உரிமை ஆகியவற்றிற்கு எதிராக உங்கள் அரசாங்கத்தின், பொலீசின் எந்த ஒரு அத்துமீறல் எவ்விதத்திலும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என்பதை நீங்கள் எவ்வித ஐயத்திற்கும் இடமின்றி நம்பி இருக்கலாம்.



அருண்குமார்

தேசிய செயலாளர்,

சோசலிசத் தொழிலாளர் கழகம்

No comments:

Post a Comment