Thozhilalar
Pathai Volume 039
June
1991
சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் உறுப்பினர்கள், தேர்தல் வேட்பாளர்களை போலீஸ் இலாகாவை சேர்ந்தவர்கள் தொந்தரவு செய்வதை உடனடியாக நிறுத்தும்படி கோர நாம் இக்கடிதத்தை எழுதுகின்றோம்.
சோசலிசத்
தொழிலாளர் கழகம் (Socialist
Labour League) ஒரு
அங்கீகரிக்கப்பட்ட அரசியல்
இயக்கமும்,
இந்தியாவிலுள்ள
டிரொட்ஸ்கிச அமைப்புமாகும்.
இலங்கையில்
அரசு ஒடுக்குமுறைக்கு எதிராக
நடைபெற்ற ஒரு கூட்டத்தில்
சோ.தொ.க.
(SLL-India) வின்
உறுப்பினர் ஒருவர் பேசிய
பின்னரே இது தொடங்கியது.
- ஏப்ரல் 25, பிற்பகல் 4 மணிக்கு சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் அலுவலகத்திற்கு இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலுவலகத்திலிருந்து குருசாமி என்று தன்னை அடையாளம் காட்டிய அதிகாரி ஒருவர் விஜயம் செய்தார். அவர் சோ.தொ.க. வின் முன்னணி உறுப்பினரும், அதன் மாத இதழான 'தொழிலாள பாதை' ஆசிரிய குழுவின் உறுப்பினருமான S. ராமை விசாரிக்க விரும்புவதாக கூறினார்.
போலீஸ்
இலாகாவினால் S.
ராமை
விசாரணை செய்யவும்,
கேள்விகள்
கேட்கவும் எடுக்கும் முயற்சிகள்
S.
ராம்
ஏதோ குற்றம் செய்துவிட்டார்
என்பதால் அல்ல,
இது
"இலங்கையில்
நாட்டுப்புற படுகொலையும்,
இனவாத
யுத்தமும்—பின்னனணியும்
தீர்வும்"
என்ற
தலைப்பில் S.
ராம்
ஒரு சொற்பொழிவை நிகழ்த்திய
பின்னர் தொடங்கப்பட்டது.
இந்த
சொற்பொழிவு ஏப்ரல் 23ல்,
அண்ணாசாலையில்
உள்ள தேவநேய பாவாணர் நூலகக்
கட்டிடத்தில் சமூக அறிவியல்
மன்றத்தினால் ஏற்பாடு
செய்யப்பட்டது.
சட்டரீதியாகவும்,
ஒரு
அங்கீகரிக்கப்பட்ட அரசியல்
கட்சியாகவும் செயற்படும்
எமது அமைப்பின் உறுப்பினர்களின்
அரசியல் மற்றும் ஜீவாதார
உரிமைகள் மீது நியாயமற்ற
முறையிலும் சட்டவிரோதமாகவும்
மேற்குறிப்பிட்ட விசாரணைகளும்
கேள்விகள் கேட்கும் முயற்சிகளும்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது
சோ.தொ.க.
(SLL-India) இன்
உரிமையுள்ள,
சட்டரீதியான
வேலைகளில் அதன் கொள்கைகளையும்,
வேலைத்திட்டகளையும்
விளக்கி பிரச்சாரம் செய்வதையும்,
அதே
போல் வட சென்னை பாராளுமன்ற
தொகுதிக்கும்,
வில்லிவாக்கம்
சட்டமன்ற தொகுதிக்கும்
நிறுத்தப்பட்டுள்ள அதன்
வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரம்
செய்வதிலும் தலையீடு செய்வதாக
உள்ளது.
- மே, 12 ல் மேலே குறிப்பிட்ட குருசாமி என்ற போலீஸ் அதிகாரி, வட சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு சோ.தொ.க. யின் வேட்பாளரும் பி அண்டு சி மில் தொழிலாளியுமான P. மோசஸின் உறவினர்கள் வீடுகளுக்கும் விஜயம் செய்து மோசஸின் கடந்த காலம் பற்றியும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் அவரது குடும்பத்தைப் பற்றியும், அவரது அரசியல் வேலை பற்றியும் விசாரணைகள் நடத்தியுள்ளார்.
அதே
நாள் 5
மணிக்கு,
பி
அண்டு சி.
மில்
தொழிலாளர்களின் பெரம்பூர்
பேரக்ஸ் குடியிருப்பு வாசலில்
அதே போலீஸ் அதிகாரி குருசாமி
மோசசை சந்தித்து சோ.தொ.க.
வின்
இதர உறுப்பினர்கள் பற்றியும்,
சோ.தொ.க
பஸ் வேலை நிறுத்தத்தில்
தலையீடு செய்கின்றதா என்பது
பற்றியும் கேள்விகள் கேட்டார்.
- மே 16ல் திருமங்கலம் போலீஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட அண்ணாநகர் மேற்கு விஷேச போலீஸ் பிரிவைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் சிவலிங்கம் (பி.சி. 2179), வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு சோ.தொ.க.வின் வேட்பாளரும் ஸ்டாண்டர்டு மோட்டார் தொழிற்சங்கத்தின் முன்னாள் கமிட்டி உறுப்பினருமான எம். கைலாசத்தின் வீட்டுக்கு காலையும், மாலையும் இரு தடவைகள் விஜயம் செய்திருந்தார். பின்னர் திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் வந்து தன்னை தொடர்பு கொள்ளும் படி கைலாசத்திற்கு ஒரு செய்தியை அவரது வீட்டில் விட்டுச் சென்றார்.
- S. ராமுக்கு எதிராக புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் ஒரு பொய் வழக்கை தொடர்ந்துள்ளனர். டிசம்பர் 13, 1990ல் பி & சி மில் தொழிலாளர்களின் வாயில் கூட்டம் சென்னை தொழிலாளர் சங்கத்தினால் நடத்தப்பட்டது. அதற்கு தற்போது தலைவராக இருப்பவர் சி.பி.ஐ. (எம்) தொழிற்சங்கத் தலைவரே, 1989 சங்கத்தேர்தலில் வரதராஜனுக்கு எதிராக தலைவர் பதவிக்கு போட்டியிட்ட S. ராம் சோ.தொ.க.வின் பத்திரிகையான "தொழிலாள பாதை"க்கு செய்தி திரட்டுவதற்காக அக்கூட்டத்தில் பங்கு கொண்டார். அப்போது வரதராஜனால் வெளியேயிருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 30 குண்டர்கள் சிபிஐ (எம்) உறுப்பினரும் எம்.எல்.யு.வின் கமிட்டி உறுப்பினருமான குமரேசனின் தலைமையில் S ராம் மேல் ஒரு கொலைவெறி தாக்குதலை நடத்தினார்.
இந்த தாக்குதல் நடந்த போது பக்கத்திலுள்ள புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீஸ் அங்கே நின்றது. அவர்கள் கொலை வெறித்ததாக்குதல் நடத்திய குண்டர்களையோ அல்லது அவர்களுக்கு தலைமை தாங்கிய குமரேசனையோ கைது செய்யவில்லை. ஆனால் கூட்டத்தின் ஓரமாக நின்று கவனித்துக் கொண்டு நின்றவரும் குண்டர்களினால் தாக்கப்பட்டவருமான S. ராமை கைது செய்தனர். அவர்கள் S. ராமை கைது செய்ததுடன் நிறுத்தவில்லை. ஒருபடி மேலே சென்று அவருக்கு எதிராக இ.பி.கோ. வின் 75 வது பிரிவின்கீழ் எழும்பூர் பெருநகர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த சம்பவம் சம்பந்தமாக, நாம் கோருவது உடனடியாக இந்த பொய் வழங்கை வாபஸ் பெறப்பட வேண்டும். போலீசார் தகுந்த விசாரணை நடத்தி S. ராமை தாக்கியவர்களை கைது செய்து அவர்கள் செய்த குற்றத்துக்கு அவர்கள் மேல் வழக்குத் தொடர வேண்டும்.
இங்ஙனம்P.மோசஸ்
(சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் சார்பில்)சோசலிசத் தொழிலாளர் கழக உறுப்பினர்கள் மேல் பொய் வழக்குகள் தொடுப்பதையும், அதன் அரசியலாளர்கள் மீது தாக்குதல் செய்வதையும் கண்டனம் செய்து தொழிற்சங்கங்களிலும், தொழிலாளர் வர்க்க அமைப்புகளிலும் கண்டனத் தீர்மானங்களை நிறைவேற்றி இன்ஸ்பெக்டர் ஜெனரல் சப் போலீஸ் அலுவலகத்திற்கும் அதன் பிரதி ஒன்றை சோசலிசத் தொழிலாளர் கழகம், தபால் பெட்டி எண் 968, பெரம்பூர் பாரக்ஸ், சென்னை - 12 என்ற முகவரிக்கு அனுப்பும்படியும் கேட்டுக் கொள்கிறோம்.)
No comments:
Post a Comment