"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Tuesday, June 14, 2016

சென்னை: பொலிசாரும் தொழிற்சங்கத் தலைவர்களும் தொழிலாளர்களுக்கு எதிராக பொய்க் குற்றச்சாட்டு

இதழ் 490 செப்டம்பர் 1998


தொழிற்சங்க அதிகாரிகளுடன் ஏற்பட்ட மோதலின் பின்னர் பொய்க்குற்றச்சாட்டுக்களுக்கு முகம் கொடுத்துள்ள ஐந்து ஆடைக் கைத்தொழிலாளர்களைப் பாதுகாக்க இந்திய சோசலிசத் தொழிலாளர் கழகம் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. சோசலிசத் தொழிலாளர் கழகம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் அரசியல் ஐக்கியத்துடன் செயற்படும் ஒரு அமைப்பாகும்.

இந்தச் சம்பவத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கைத்தொழில் தொழிலாளர் சங்க சம்மேளனத்தின் மாவட்டத் தலைவர்கள் தமக்கு எதிரான சங்க அங்கத்தவர்களைத் தாக்கப் போவதாகப் பயமுறுத்தியதோடு சோ.தொ.. ஆதரவாளராகப் பெயர்பெற்ற ஒரு தொழிலாளியையும் தாக்கினர்.

. ராமதாஸ், எச். ஆனந்தன், ஜே. சிறீனிவாசன், . லீலா நந்தபூசணம் ஆகியோரே இந்தக் குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ளனர். இந்த நால்வரும் கடந்த ஆண்டு சென்னை 'வெல் நிர்' ஆடைத் தொழிற்சாலையில் இடம்பெற்ற வேலைநிறுத்தத்தில் வேட்டைக்கு உள்ளான 14 தொழிலாளர்களுள் அடங்குவர். இந்தப் 14 தொழிலாளர்களையும் வேலையில் இருந்து இடைநிறுத்தம் செய்ததன் பின்னர் அவர்களை சேவையில் இருந்து அப்புறப்படுத்தவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யுடன் இணைந்த சீ.பீ.ரீ.யூ. தொழிற்சங்கவாதிகள் ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவு வழங்கினர்.

கடந்த ஆண்டு வேலைநிறுத்தம் 60 தொழிலாளர்கள் பக்டரியில் இருந்து வெளியேறி, துண்டு வேலை முறைக்கான சம்பளத்தைக் கூட்டும்படி கோரி ஆரம்பமாகிறது. அது இரண்டு கிழமைகளின் பின்னர் 2000 தொழிலாளர்கள் பங்கு கொண்ட வேலைநிறுத்தமாக வளர்ச்சி கண்டது. ஹொங்கொங்கை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்தக் கம்பனி 23 தொழிலாளர்களை வேலை இடைநிறுத்தம் செய்தது. இதில் நால்வர் வேலைநிறுத்தத்தில் தாம் எவ்விதமான பாத்திரத்தையும் வகிக்கவில்லை எனக் கூறி மீண்டும் வேலையில் சேர்ந்து கொண்டனர்.

1997 ஜூலை தொடக்கம் இந்த ஆண்டு மே மாதம் வரை 14 தொழிலாளர்கள் தொடர்ந்து இடைநிறுத்தத்துக்கு உள்ளாகி இருந்தனர். 'வெல் நிட்' கம்பனியும் சீ..ரீ.யு.வும் புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதன் பின்னர் வேலைநிறுத்தத்துக்கு தலைமை தாங்கிய 14 தொழிலாளர்களையும் வேலைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆடைத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை மிகவும் அற்பமான ரூபா. 125ல் அதிகரிக்கும் இந்த உடன்படிக்கை ஒரு காட்டிக் கொடுப்பாகும் என வெல்நிட் தொழிலாளர்கள் கண்டனம் செய்தனர்.

ஆகஸ்ட் 1ம் திகதி 40 தொழிலாளர்கள் தொழிற்சங்கத் தேர்தல் நடைபெறும் தினத்தை அறியும் பொருட்டு சீ..ரீ.யூ. அலுவலகத்துக்கு சென்றனர். சங்க அமைப்பு விதிகளின்படி தேர்தல் கடந்த மே மாதத்தில் நடைபெற்று இருக்க வேண்டும். தொழிற்சங்க மகாநாட்டை நடாத்துவதாக இருந்தால் சகல தொழிலாளர்களும் ரூபா. 125 வீதம் செலுத்த வேண்டும் என்பது தொழிற்சங்க அதிகாரிகளின் பதிலாக விளங்கியது. சீ..ரீ.யு.வின் இணைச் செயலாளர் சிவக்குமார் பின்வருமாறு கூறினார்: “ரூபா. 125 செலுத்தாமல் எவரும் வாய் திறந்தால் உங்கள் சகலவரையும் உதைத்து விரட்டுவோம். சங்கத் தேர்தல் கிடையாது.” சீ.பீ.. (எம்) கட்சியின் தலைவர்களில் ஒருவரான இந்தச் சிவகுமார் அடுத்து சோ... ஆதரவாளர் பக்கம் திரும்பி "இந்தக் கரைச்சல்களுக்கு நீதான் காரணம்" எனக் கூறி முகத்தில் அறைந்ததோடு "இவனை ஓட்டோவில் போட்டு எமது மாவட்டத்துக்கு கொண்டு போ" என சங்க அதிகாரிகளுக்கு வெறிபிடித்த தொனியில் கட்டளையிட்டார். ஆனால் தொழிலாளர்கள் இதனால் ஈடாட்டம் கண்டுவிடவில்லை. அவர்கள் சோ.தொ.. ஆதரவாளருடன் வெளியேறினர்.

இரண்டு நாட்களுக்கு பின்னர் எதிரணி தொழிலாளர்களுக்கும் சிவகுமாருக்கும் இடையே மற்றொரு கலகம் ஏற்பட்டது. சீ..ரீ.யூ. அதிகாரிகள் இப்போது தொழிலாளர்களுக்கு எதிராக கொலை முயற்சி, கொள்ளை குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளனர். ஐந்தாவது எதிரி கே. பக்ராஜ் என்ற தொழிலாளியாவார்.

பொலிசார் இந்தச் சம்பவத்தை பாவித்து வெல்நிட் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறை இயக்கத்தை நடாத்த முயன்று வருகின்றனர். ஆகஸ்ட் 9ம் திகதி தாம்பரத்தில் கைது செய்யப்பட்ட சிறீனிவாசன் என்ற தொழிலாளி தாம்பரம் பொலிஸ் நிலையத்தில் மோசமாகத் தாக்கப்பட்டுள்ளார். பின்னர் இந்த பொலிஸ் நிலையத்தில் ஒரு பொலிஸ் கோஷ்டி வெல்நிட் கம்பனி தொழிலாளர்களைத் தாக்கியுள்ளது. அவர்கள் அந்தப் பக்டரியில் வேலை செய்பவர்கள் அல்ல என்பதை பொலிசார் தாக்குதலின் பின்னரே அறிந்துள்ளனர். இத்தாக்குதலினால் தொழிலாளர் காயமடைந்துள்ளனர்.

சோ.தொ.. வெல்நிட் பக்டரி தொழிலாளர்களின் சார்பில் தொழிலாளர் வர்க்கத்தின் ஆதரவை வென்றெடுக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. தொழிலாளர்கள் மீதான தாக்குதலை எதிர்க்குமாறும் அவர்களுக்கு எதிரான சகல குற்றச்சாட்டுக்களையும் வாபஸ் பெறுமாறும் நெருக்கி பொலிசுக்கு கடிதம் அனுப்பும்படியும் சோ.தொ.. வேண்டியுள்ளது.

கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி:
Inspector of Police,
Sugumaran,
Tambaram Police Station,
Tambaram, Madras – 3
Tamilnadu
India.

No comments:

Post a Comment