"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Thursday, June 30, 2016

டிராட்ஸ்கி நினைவு நாள் கூட்டம் (துண்டறிக்கை)



[‎Socialist Labour League India‬ held Trotsky memorial day meeting in Chennai, India.]

Thozhilalar Paathai, Volume 391
July, 1989


அக்டோபர் புரட்சியில் லெனினுடன் இணைத் தலைவரும், செம்படையை அமைத்தவரும் நான்காம் அகிலத்தின் ஸ்தாபகரும் ஆன லியோன் டிராட்ஸ்கி ஸ்டாலினால் படுகொலை செய்யப்பட்டு 49வது ஆண்டை நினைவுகூரும் கூட்டம்.

நான்காம் அகிலத்தின் வெற்றியில் எனக்கு நம்பிக்கை உண்டு; முன்னேறிச் செல்லுங்கள்!” — லியான் டிராட்ஸ்கிச

இடம்: பெரியார் திடல் (எழும்பூர் தினத்தந்தி ஆபிஸ் அருகில்)

காலம்: 21.08.89; திங்கள்; மாலை; மணி: 5.30

ஸ்டாலினிச சி.பி.எம். சி.பி.. தலைமைகளை முதலாளித்துவ கட்சிகளுடனான அவற்றின் உறவுகளைத் துண்டித்து, தொழிலாளர்கள், விவசாயிகள் அரசாங்கத்தை அமைக்கப் போராடும்படி நிர்பந்தி!

Wednesday, June 29, 2016

சென்னையில் தோழர் கீர்த்தி பாலசூரியாவின் நினைவுக் கூட்டம்

தோழர் கீர்த்தி மிகப்பெரும் பாட்டாளி வர்க்க சர்வ தேசிய போராளிகளில் ஒருவர்: தோழர் பழனி உரை

இதழ் 385
1988 ஜூலை 15

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவுடன் அரசியல் ஐக்கியம் கொண்ட டிராட்ஸ்கிச இயக்கமான சோசலிசத் தொழிலாளர் கழகம், அதனைக் கட்டுவதற்காக அயராடு போராடிய ஒரு பாட்டாளி வர்க்க சர்வ தேசியவாதியும், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் ஒரு தலைவரும், இலங்கையில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் பொதுச் செயலாளருமான தோழர் கீர்த்தி பாலசூரியாவின் புரட்சிகர வாழ்க்கையையும் வேலையையும் கௌரவிக்கும் முகமாக சென்னையில் மார்ச் 13, 1988 இல் பெரம்பூர் பொம்மைக் கல்யாண மண்டபத்தில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் தொழிலாளர்களும், இளைஞர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு தோழர் பழனி தலைமை தாங்கினார். கூட்டத்தின் ஆரம்ப்த்தில் தோழர் கீர்த்திக்கு இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் தலைவர் பழனியின் உரையை தொடர்ந்து அருண்குமாரும் இறுதியாக சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் ஸ்தாபக உறுப்பினரான லாரன்சும் உரையாற்றினார்கள்.

தோழர் பழனி, கூட்டத்திற்கு வருகை தந்தவர்களை சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் சார்பில் வரவேற்றார். அதைத் தொடர்ந்து அவர் தலைமை உரை ஆற்றினார்:

தோழர் கீர்த்தி பாலசூரியா, அவருடைய பள்ளிப்பருவத்த்தில், 16 வயதில் புரட்சிகர அரசியலில் ஈடுபட்டார். அன்று முதல், அவரது கடைசி மூச்சு உள்ள வரை, சிறிதும் விட்டுக் கொடுப்பின்றி மார்க்ஸிசத்திற்காக போராடினார். 1964ல் இலங்கையில் சமசமாஜக் கட்சியின் மாபெரும் காட்டிக் கொடுப்புக்கு எதிராக, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் தலையீட்டினால் உருவாக்கப்பட்ட புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் பொதுச் செயலாளராக 19 வயதில் பொறுப்பேற்றார். தோழர் கீர்த்தியின் போராட்டம் இலங்கைத் தீவுக்குள் மட்டுப்படுத்தப்படவில்லை. அவர் உலகத் தொழிலாள வர்க்கத்தின் தலைமை நெருக்கடியை தீர்ப்பதில் தீர்க்கமான பங்கு வகித்தார். பாப்லோவாத திரிபுவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் முழு படிப்பினையையும் உறிஞ்சி எடுத்தார்.

1971ல் பங்களாதேஷில் இந்திய ராணுவத் தலையீட்டை ஆதரித்து பண்டா எடுத்த நிலைப்பாட்டை கடுமையாக எதிர்த்தார். இந்திய முதலாளித்துவத்தின் ராணுவம் அங்கு சென்றது. அங்குள்ள தொழிலாள, ஒடுக்கப்படும் மக்களின் சார்பில் அல்ல, ஆனால் அதற்கு எதிராக அங்கு மீண்டும் முதலாளித்துவ ஆட்சி முறையை தக்க வைப்பதற்காகத் தான் என எச்சரித்தார். அந்த எச்சரிக்கை எவ்வளவு ஆழமானதும், சரியானதும் என்று வரலாறு இன்று நிரூபித்துள்ளது. இன்று ஒரு லட்சத்திற்கும் அதிகமான இந்திய ராணுவம், தமிழ் ஈழத்தின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை குரூரமாக முறியடிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளது. இதனை பண்டாவும், இங்குள்ள ஸ்டாலினிச கம்யூனிசக் கட்சித் தலைமைகளும் ஆதரிக்கின்றனர்.

இந்நிலையில் ஒடுக்கப்படும் தமிழ் தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமையை பேணவும் இந்திய ராணுவத்தை உடனடியாக வாபஸ் வாங்கவும், அதன் தோல்விக்காகவும் போராடும் ஒரே ஒரு அரசியல் இயக்கம் சோசலிசத் தொழிலாளர் கழகமாகும். இலங்கையில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தமிழ் ஈழ, சிறிலங்க ஐக்கிய சோசலிச குடியரசுகள் என்ற புரட்சிகர முன்னோக்கின் அடிப்படையில் போராடுகிறது. தோழர் கீர்த்தி, குட்டி முதலாளித்துவ தலைமைகளின் திவாலான வேலைத்திட்டத்திற்கு எதிராக புரட்சிகர பாட்டாளி வர்க்க தலைமையின் கீழ் சோசலிசத்திற்கான போராட்டத்தையும், ஒடுக்கப்படும் மக்களின் போராட்டத்தையும் முன்னெடுக்கப் போராடினார்.

தோழர் கீர்த்தி பலவிதமான கஷ்டங்களின் மத்தியில், இந்தியாவில் ஒரு புரட்சிகர டிராட்ஸ்கிசக் கட்சியை கட்டுவதற்காக தொடர்ச்சியாகப் போராடினார். குறிப்பாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவிலிருந்து வெளியேற்றப்பட்ட, அதன் முன்னைய பிரிட்டிஷ் பகுதியின் தலைவர்களான ஹீலி, பண்டா, சுலோட்டரின் பெரும் துரோகங்களுக்கு எதிராகப் போராடினார். W.R.P. பிரிட்டிஷ் தேசியவாதத்திற்கு அடிபணிந்து, பாட்டாளி வர்க்கப் புரட்சிகர பங்கை நிராகரித்து, குட்டி முதலாளித்துவ தலைமைகளை மார்க்சிஸ்டுகளாக சித்தரித்த திரிபுவாதத்திற்கு எதிராக ஒர்க்கர்ஸ் லீக்கும், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவும் 1985-1987 நடத்திய போராட்டத்தில் தோழர் கீர்த்தி அந்த W.R.P. ஓடுகாலிகளை தோற்கடிக்க ஆக்ரோஷத்துடன் போராடினார்.

பின்தங்கிய நாடுகளில் தொழிலாள வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதன் மூலமே, அங்கு பூர்த்தி செய்யப்படாத ஜனநாயகப் புரட்சியின் கடமைகள் பூர்த்தியாக்கப்படும் என்ற டிராட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தையும், மேலும் நொறுங்கி வீழ்ந்து கொண்டிருக்கும் உலகப் பொருளாதார நெருக்கடியும், அதனால் ஏகாதிபத்தியங்களுக்கு இடையே வர்த்தக யுத்தமும், பின் தங்கிய நாடுகளின் திவாலான தன்மையும், சுரண்டலும், சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குமுறையும் அதிகரிக்கும் என்றும், இவை அனைத்துக்கும் இடையேயான உட்தொடர்புகளையும் ஆராய்ந்த கீர்த்தி எந்த ஒரு நாட்டிலும் அது தேசிய விடுதலைப் போராட்டம் என்றாலும் சரி, சோசலிசப் புரட்சிக்கான போராட்டமானாலும் சரி அது பாட்டாளி வர்க்க தலைமையின் கீழேயே பூர்த்தி செய்யப்படுமென்று தீர்க்கமாக எடுத்துரைத்தார்.

அதைத் தொடர்ந்து பேசிய தோழர் அருண்குமார், நிரந்தரப் புரட்சி தத்துவத்தை பேண தோழர் கீர்த்தி முன் எடுத்த போராட்டத்தைப் பற்றியும் தொழிலாளர் புரட்சி ஓடுகாலி சுலோட்டரின் பொய்களையும், திரித்துக் கூறுவதையும் தாக்கினார்.

தோழர் கீர்த்தியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்தை புரிந்து கொள்ள, அவர் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்த விஞ்ஞான சோசலிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை அறிந்து கொள்வது அவசியமாகும். ஏனெனில் மார்க்ஸ் காலம் முதல் இன்று வரைக்கும், விஞ்ஞான சோசலிசம் பல விதமான திரிபுவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திரிபுவாதங்கள் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல், தத்துவார்த்த ஆதிக்கத்தின் கீழ் உட்படுத்துவதையே அதன் சாராம்சமாக கொண்டதாகும். தொழிலாள வர்க்கம், அதன் உயர்ந்த வர்க்க நனவுடைய நடவடிக்கைகளினால் மட்டுமே தன்னை சுரண்டல் அமைப்பிலிருந்து விடுவித்து, தன்னை உற்பத்தி சாதனங்களின் எஜமானனாக்கி கொள்ள முடியும், தொழிலாள வர்க்கம், அதன் வரலாற்றுக் கடமைகளை நிறைவேற்ற கிளர்ந்து எழுவது, மார்க்சிஸ் கோட்பாடுகளை சிறிதளவும் விட்டுக் கொடுக்காமல் போராடும் ஒரு புரட்சிக் கட்சியின் வழி காட்டல் இன்றி சாத்தியமற்றதாகும். இதற்கு அவசியமானது தொழிலாள வர்க்கம் மத்தியில் உள்ள சந்தர்ப்பவாத துரோகத் தலைமைகளுக்கும் மற்றும் குட்டி முதலாளித்துவ மிதவாத சாகஸவாத அரசியலுக்கும் எதிரான ஒரு நீண்ட, தொடர்ச்சியான ஈவிரக்கமற்ற அரசியல் தத்துவார்த்த, போராட்டமாகும்.

தோழர் கீர்த்தியின் போராட்டம் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக சோசலிசப் புரட்சிக்கு தலைமை தாங்க வல்லமையுடைய ஒரே ஒரு தொடர்ச்சியான புரட்சிகர வர்க்கமான தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர வர்க்க நனவை உயர்த்துவதற்காக, பலவிதமான அழுத்தங்களுக்கு எதிராக விட்டுக்கொடுக்காமல் போராடி வந்ததாகும். அத்துடன் அவர் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தின் ஒரு சிறந்த போராளியாகும் இருந்தார்.

தோழர் கீர்த்தியின் அரசியல் பரிணாமம், சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியை கட்டுவதற்கு அவர் ஆற்றிய பங்கும், எமது சர்வதேச டிரொட்ஸ்கிச இயக்கத்திற்குள் ஏகாதிபத்திய அழுத்தங்களுக்கு அடிபணிந்த பப்லோவாத திரிபுவாதத்திற்கு எதிரான போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.

பப்லோவாதம், எதிர்புரட்சிகர ஸ்டாலினிச அதிகாரத்துவத்தின் அரசியல், சமூக வளர்ச்சி பற்றிய டிராட்ஸ்கியின் ஆழமான ஆய்வை நிராகரித்தது மட்டுமல்லாமல், சோசலிசப் புரட்சியானது தொழிலாள வர்க்க மத்தியில் நீண்ட, தொடர்ச்சியான மார்க்சியத்திற்கான போராட்டம் இன்றி சாத்தியமாகும் என்றது, அதாவது முதலாளித்துவத்தின் பிடியில் இருந்து தொழிலாள வர்க்கத்தின் அரசியல், தத்துவார்த்த சரீரரீதியான விடுதலை, குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் கெரில்லாவாதம் மூலம் அடையக்கூடியது என பப்லோவாதிகள் கூறினர்.

இந்த பப்லோவாதிகள் தான் இலங்கையில் 1964இல் இலங்கையில் லங்கா சம சமாஜக் கட்சி (L.S.S.P) சிறிமாவோ பண்டார நாயக்காவின் (S.L.F.P.) கூட்டரசாங்கத்தில் சேர்வதை ஆதரித்தனர். இந்த மாபெரும் பப்லோவாத காட்டிக்கொடுப்புக்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு தொடுத்த போராட்டத்தின் விளைவாக, 1966 இல் அமெரிக்காவில் ஓர்க்கர்ஸ்லீக்கும், 1968ல் இலங்கையில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும், அதைத் தொடர்ந்து சர்வதேச ரீதியாக மேலும் பல நாடுகளிலும், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பகுதிகள் கட்டப்பட்டன.

இங்கு நாம் நன்றாக கவனிக்க வேண்டியது—1964ல் சுமார் 70 லட்சம் உறுப்பினர்களை அதன் பரந்த இயக்கங்களில் கொண்டிருந்த லங்கா சமசமாஜக் கட்சி உலகத்தில் மிகப் பெரும் டிராட்ஸ்கிச கட்சி என கருதப்பட்ட, (உண்மையில் அதுவொரு இடைநிலைவாத கட்சியாக அப்போது இருந்தது) அந்த பெரும் இயக்கத்திலிருந்து, தனிமைப்படுத்தப்பட்டு, விடுவோம் என்ற அச்சமின்றி ஒரு சிறு குழுவினர் அதன் காட்டிக் கொடுப்பை கண்டித்து அதிலிருந்து வெளியேறி நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவுடன் உறவு கொண்டு புரட்சிக்கர டிராட்ஸ்கிசத்திற்கான போராட்டத்தை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் என்ற அமைப்பின் மூலமாக முன்னெடுத்தனர்.

ஆம், அந்த சிறிய எண்ணிக்கை கொண்ட உண்மையான புரட்சிகர டிராட்ஸ்கிஸ்டுகள், அந்த பெரும் எண்ணிக்கையை கொண்டிருந்த இயக்கத்தின் துரோகத் தலைமையிலிருந்து தனிமைப்பட்டிருக்க விரும்பினர். அதே போல் நாம் பல்வேறு விதமான துரோகத் தலைமைகளிலிருந்து தனிமைப்பட்டு இருக்க விரும்புகிறோம். ஆனால் இதன் மூலம் தான் மார்க்ஸிய கோட்பாடுகளுக்கான தொழிலாள வர்க்க மத்தியில் பொறுமையாக இடைவிடாது, ஸ்டாலிஸ்டுகளுக்கும்: சந்தர்ப்பவாதிகளுக்கும் எதிராக நடத்தும் அரசியல், தத்துவார்த்த போராட்டத்தின் மூலமாக இறுதியில் தொழிலாள வர்க்கத்தின் பெரும்பான்மையினரை நம் பக்கம் வென்றெடுக்க முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எமக்கு உண்டு. எனவே தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று கடமைகளை நிறைவேற்ற, அதனை தயார் படுத்தும் எமது இறுதி குறிக்கோளை அடைவதற்காக நாம் தற்காலிகமாக "தனிமைப்பட்டிருக்க" அஞ்சவில்லை.

இந்த தற்காலிக "தனிமைப்படுத்தலை" கண்டு அஞ்சிய, மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று புரட்சிப் பங்கை நிராகரித்த பொறுமை இழந்த குட்டி முதலாளித்துவ பகுதியினர் மிதவாத, சாகஸவாத அரசியல் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு ஆயுதப் போராட்டமே, அதி உயர்ந்த முன்னோக்காக மாறுகிறது. இவ்வாறான பகுதியினரை உலகின் பல பாகங்களில் நாம் பார்க்கிறோம். ஈழத்தில், தமிழ் முதலாளித்துவ தேசிய வாதிகள், இந்தியாவில் நக்சல் பாரிகள், 1949ல் நான்கு வர்க்க கூட்டுக் கொள்கையுடன் ஆட்சிக்கு வந்த மாவோசேதுங்குகள், கியூபாவில் காஸ்ட்ரோகளும் சேகுவாராக்களும் மேலும் பலரும் இந்த வகையறாக்களே.

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் ஓடுகாலிகளான ஹீலி, பண்டா, சுலோட்டர்கள் ஏகாதிபத்திய அழுத்தங்களுக்கு அடிபடிந்து கேவலமான முறையில் டிராட்ஸ்கிச கோட்பாடுகளை காட்டிக்கொடுத்ததற்கு எதிராக ஒர்க்கர்ஸ் லீக் தலைமையில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பெரும்பான்மையினர் தொடுத்த போராட்டத்தில் அந்த ஓடுகாலிகளை முறியடிப்பதற்கான போராட்டத்தில் தோழர் கீர்த்தி தீர்க்கமான பங்கு வகித்தார்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு திவாலானது என பிரகடனம் செய்த பண்டா இன்று எங்கே? மிக இழிவான முறையில் எதிர் புரட்சி ஸ்டாலினிசத்தை அரவணைத்துள்ளார். ஹீலி எங்கே? ஸ்டாலினிச அதிகாரத்துவத்திற்கு எதிரான அரசியல் புரட்சியை நிராகரித்து, அதனுடன் குலாவுகின்றனார்.

சுலோட்டர், ஸ்டாலினிசத்தின் மக்கள் முன்னணி கொள்கையை ஆதரிக்கின்றார். லண்டனில், தோழர் கீர்த்தி … (தொடர்ச்சி கிடைக்கவில்லை)

Wednesday, June 22, 2016

முன்னோடி மாநாடு (இந்திய சோசலிச தொழிலாளர் கழகத்தின் துண்டறிக்கை)



இதழ் 40 ஜூலை 1991


நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால்
நடத்தப்பட இருக்கும் பெர்லின் சர்வதேச தொழிலாளர் மாநாட்டிற்கான

முன்னோடி மாநாடு

ஏகாதிபத்தியப் போரையும் காலனி
ஆதிக்கத்தையும் எதிர்ப்போம்"


ஞாயிறு, 29.9.91, காலை 10 மணி

ஸ்ரீ பாலாஜி திருமண மண்டபம் 
1, தேவராஜ முதலி தெரு, (மகாலட்சுமி திரையரங்கு அருகில்)
பட்டாளம், சென்னை - 12.

Monday, June 20, 2016

வங்க மொழியில் ட்ரொட்ஸ்கிசப் பத்திரிகை



[‎Bengali language Trotskyist magazine launched in 1993 by ‪Socialist Labour League India‬.]

Thozhilalar Paathai, Volume 08
June, 1993

வங்க மொழியில் ட்ரொட்ஸ்கிசப் பத்திரிகை

இந்திய சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் வங்க மொழியில் 'ஷ்ரமிகேர் பாத்' (தொழிலாளர் பாதை) என்ற பத்திரிகையை வெளியிட்டுள்ளனர். தமிழ் மொழியில் தொழிலாளர் பாதை என்ற மாத இதழை ஏற்கனவே வெளியிட்டு வரும் சோ.தொ.. இன் இந்நடவடிக்கை வங்க மொழி பேசும் தொழிலாளர்கள் மத்தியில் அனைத்துலக சோசலிச வேலைத் திட்டத்தினை முன்னெடுக்கும் இலக்கினில் ஒரு திட்டவட்டமான ஆயுதமாக விளங்கும்.

இந்திய ஸ்டாலினிசக் கம்யூனிசக் கட்சிகளினதும் (CPM, CPI) மற்றும் சந்தர்ப்பவாதக் கட்சிகளதும் தேசியவாத நிலைப்பாடுகளை அம்பலப்படுத்தவும், மார்க்சிய சர்வதேச முன்னோக்கில் தொழிலாளர்கள், சோசலிச பாதையை நாடும் மத்திய தர வர்க்கத்தினர் புத்திஜீவிகளை வென்றெடுக்கவும் இப்பத்திரிகை போராடும் எனவும் சோ.தொ.கழகம் குறிப்பிட்டுள்ளது.

நான்கு தசாப்தங்களுக்கு மேலாக ஸ்டாலினிசத்துக்குப் புரட்சிகர முலாம் பூசி வந்த பப்லோவாதிகளதும் இந்திய முதலாளித்துவத்துக்கு முற்போக்கு முலாம் பூசியதன் மூலம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சுயாதீனமான பகுதியை இந்தியாவுள் கட்டியெழுப்புவதற்குத் தடையாக இருந்த பிரித்தானிய தொழிலாளர் புரட்சிக் கட்சிக்கு எதிராக அனைத்துலகக் குழு தொடுத்த பாட்டாளி வர்க்க சர்வதேசியத்துக்கான போராட்டத்தினை 'ஷ்ரமி கேர் பாத்' இந்தியாவில் முன்னெடுக்கும் என இந்திய ட்ரொட்ஸ்கிஸ்டுகள் குறிப்பிட்டுள்ளனர்.

'ஷ்ரமிகேர் பாத்' திற்கு தனது புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் பெருமகிழ்ச்சி அடைகின்றது.

Sunday, June 19, 2016

சோசலிசத் தொழிலாளர் கழகம் (துண்டறிக்கை)

இதழ்-21, ஜனவரி-பிப்ரவரி, 1989

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் ஐக்கியம் கொண்டது

நான்காம் அகிலத்தின் ஐம்பதாம் ஆண்டு நிறைவு சொற்பொழிவுத் தொடர்ச்சி

பிப்ரவரி 12, ஞாயிறு மாலை 4-30 மணிக்கு: கோர்பச்சேவின் முதலாளித்துவ மறுசீரமைப்பு (பெரஸ்து ரொய்கா): கொள்கையைத் தோற்கடி!

பிப்ரவரி 19, ஞாயிறு மாலை 4.30 மணிக்கு: உலக முதலாளித்துவ நெருக்கடியும் சோசலிசத்திற்கான போராட்டமும்!

பிப்ரவரி 26, ஞாயிறு மாலை 4-30 மணிக்கு: ஸ்டாலினிசமும் டிராட்ஸ்கிசமும்!

இடம்: கலைவாணி நர்சரிப் பள்ளி, படைவீட்டம்மன் கோயில் தெரு, (ஓட்டேரி பட்டேல் பூங்கா அருகில்) குயப்பேட்டை, சென்னை- 12.

பேருந்துகள்: 7B, 7D, 29A; 29B, 29C, 29J, 38C, 48A, 48, 48V (ஓட்டேரி ஸ்டாப்பிங்)

நான்காம் அகிலத்தின் ஐம்பதாம் ஆண்டு நிறைவு விழா

நாள்: மார்ச் 18, சனி-காலை 10-12.00 வரை புகைப்படக் கண்காட்சி; கூட்டம் மாலை 5-00 மணிக்கு

இடம்: சாந்தா கல்யாண மண்டபம், கந்தசாமி கோயில் தெரு, குயப்பேட்டை, சென்னை - 12 (தாசாமக்கான் ஸ்டாப்பிங்)

சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் மே தினக் கூட்டம்



[‎Socialist Labour League India‬ May Day meeting]

Thozhilalar Paathai, Volume 023
June, 1989

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவுடன் ஐக்கியம் கொண்ட சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் மே தினக் கூட்டம் சென்னையிலுள்ள கலைவாணி நர்சரிப் பள்ளியில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பல்வேறு தொழிற்துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பங்கு கொண்டனர். தோழர் மோசஸ் ராஜ்குமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. தோழர் மோசஸ் தொடக்க உரையில் முதலாளித்துவக் கட்சிகளும் ஸ்டாலினிசக் கட்சிகளும் போலித்தனமாக மேதினக் கூட்டங்கள் நடத்துகின்றனர் என்றும் டிராட்ஸ்கிச இயக்கம் மட்டுமே சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்துக்காக போராடுகிறதென்றும் குறிப்பிட்டார்.

ஸ்டாலினிஸ்டுகளின் பயங்கரவாதங்களுக்கும், தொந்தரவுகளுக்கும் மத்தியில் வியோன் டிராட்ஸ்கியின் தலைமையில் உருவாக்கப்பட்ட சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியான நான்காம் அகிலமே சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் மற்றும் ஒடுக்கப்படும் மக்களின் நலன்களுக்காக போராடுகிறது என மோசஸ் குறிப்பிட்டார். தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக முதலாளித்துவ வர்க்கம் தொடுக்கும் தாக்குதல்களுக்கு எதிர்புரட்சிகர ஸ்டாலினிசத் தலைமைகள் உடந்தையாக செயல்பட்டு வருகின்றனர்.

முதலாவது பேச்சாளராக தோழர் ராம், 8 மணி நேர வேலைக்கான போராட்டத்தில் அமெரிக்க தொழிலாளர்கள் பல உயிர்த்தியாகங்கள் செய்தனர் அதிலிருந்து அந்தப் போராட்டம் சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டமாக மாறியது என்று குறிப்பிட்டார்: சர்வதேசப் பாட்டாளி வர்க்கம் அதன் அடிப்படை உரிமைகளுக்காக போராடுவதற்காக நிறைய தியாயங்களைச் செய்தனர். ஆனால் நாம் இன்று பார்ப்பது சீர்திருத்தவாத, ஸ்டாலினிச இடைநிலைவாத தலைமைகளின் ஒத்துழைப்புடன் முதலாளித்துவ வர்க்கம் வரிசைக்கிரமமாக தொழிலாள வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளை அழித்து வருகின்றனர் என ராம் கூறினார்.

இந்தியாவில் துறைமுகத் தொழிலாளர்களின் போராட்டம் நடக்கும் அதே சமயத்தில் ஜப்பானிலும், பிரிட்டனிலும் உள்ள துறைமுகத் தொழிலாளர்களும் அவர்களுடைய வேலைகளைப் பேணவும், சம்பள உயர்வுக்குமாக போராட்டங்களை நடத்தினர். ஆனால் சமூக ஜனநாயக மற்றும் ஸ்டாலினிச துரோகத் தலைமைகள் சர்வதேச ரீதியாக இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்து பலப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென ராம் சாடினார். டிராட்ஸ்கி அன்று குறிப்பிட்டது போல் மனித இனத்தின் நெருக்கடி, தொழிலாள வர்க்கத்தின் தலைமை நெருக்கடியை தீர்ப்பதன் மூலமாகவே தீர்க்கப்படும் என்று ராம் கூறினார்.

உலக முதலாளித்துவத்தை இயக்குகின்ற வரையில் எந்த ஒரு தனி நாட்டிலும் சோசலிசம் பூரண வெற்றி அடைய முடியாது என்றும் ஸ்டாலினிச பிற்போக்கு 'தனி ஒரு நாட்டில் சோசலிசம்' என்ற கொள்கைக்கு எதிராக டிராட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித்தத்துவம் சரியானதென்று வரலாற்றுரீதியாக ருசுப்படுத்தப்பட்டுள்ளது என ராம் கூறினார்.

சர்வதேச ரீதியாக அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், ஆஸ்திரேலியாவிலும் இலங்கையிலும் செயல்படுகின்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பகுதிகள் ஒரே அரசியல் கண்ணோட்டத்துடன் சர்வதேசிய முன்னோக்குகளின் அடிப்படையில் தேசியவாதத்திற்கும் இனவாதத்திற்கும் எதிராக சர்வதேச பாட்டாளி வர்க்கத்தை உலக சோசலிசப் புரட்சிக்காக அணித்திரட்டப் போராடி வருகின்றன என ராம் கூறினார்.

அடுத்து பேசிய தோழர் பிரகாஷ் சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராவார். லாபத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் ஏகாதிபத்திய நாடுகள் மூன்று பிரதான வர்த்தக முகாம்களாக — அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான்—பிளவுண்டு நடத்தும் வர்த்தகப் போர் எவ்வாறு இன்று மூன்றாவது உலகப் போருக்கு வழி வகுக்கும் நிலைமைகளை உண்டு பண்ணுகின்றதென்பதை பிரகாஷ் விளக்கினார். இந்த சகாப்தத்தின் அடிப்படை முரண்பாடாக இருக்கும் ஒருங்கிணைக்கப்பட்ட உலகப் பொருளாதாரத்திற்கும் காலாவதியாய் போன தேசிய அரசு அமைப்பு முறைக்கும் இடையிலான முரண்பாடு ஒரு உயர் மட்டத்திற்கு கூர்மையடைந்து வருகிறது என பிரகாஷ் கூறினார்.

நமது சர்வதேசிய வேலைத்திட்டத்திற்கு மிக வளர்ச்சியடைந்த தொழில் நுட்பமும் நாடு கடந்த பன்னாட்டு கம்பனிகளின் வளர்ச்சியும் அதன் விளைவாக தோன்றிய சர்வதேசிய தொழிற்பங்கீடும், சர்வதேச தொழிலாள வர்க்கமும் ஒரு உறுதியான சடரீதியான அடித்தளத்தை வழங்கியிருப்பதாக பிரகாஷ் கூறினார். மேலும் "சர்வதேசிய வேலைத்திட்டம் உலகப் பொருளாதாரத்தையும், உலக அரசியல் அமைப்பையும் முழுமையாக எடுத்து அதன் அனைத்து தொடர்புகளிலும் முரண்பாடுகளிலும் அதாவது அதன் தனிப்பகுதிகள் பரஸ்பர ரீதியாக பகைமையுள்ளதாக ஒன்றுடன் ஒன்று தங்கியுள்ளது என்ற நிலைமைகளையும் எடுத்து ஆய்வு செய்வதிலிருந்து நேரடியாக ஊற்றெடுக்க வேண்டும்" என டிராட்ஸ்கி கூறியதை பிரகாஷ் மேற்கோளிட்டு காட்டினார்.

ஸ்டாலினிச வாதிகள் வர்க்கப் போராட்டத்தை கைவிட்டு வர்க்க சமரசத்தை கடைப்பிடித்து தொழிலாள வர்க்கப் போராட்டங்களை காட்டிக் கொடுத்து வருவதையும், ஏகாதிபத்தியத்துடன் இணைந்து இந்திய உபகண்டத் தொழிலாளர்களை வகுப்புவாத ரீதியில் கூறு போட ஸ்டாலினிசத் தலைமைகள் ஒத்துழைத்ததையும் பிரகாஷ் சுட்டிக் காட்டினார்.

இறுதியாக பேசிய தோழர் அருண்குமார் மார்க்ஸ், எங்கெல்ஸ்' லெனின் புரட்சிகர மரபில் டிராட்ஸ்கிச வாதிகள் சர்வதேச தொழிலாள வர்க்க ஐக்கியத்துக்காக போராடுகளையில் ஸ்டாலினிசத் தலைமைகள் அவர்களது மே தின அறிக்கையில் 'இந்திய தேசிய ஐக்கியத்துக்காக' போராடும்படி அறைகூவல் விடுத்துள்ளனர் எனவும் இந்த தேசிய வாதம், முதலாளித்துவ பிற்போக்குவாதம் என்பதையும் வர்க்க ரீதியாக பிளவுண்டுள்ள தேசத்தில் இதன் அர்த்தம் சுரண்டுவோருக்கும் சுரண்டப் படுவோருக்கும் ஒடுக்குவோருக்கும் ஒடுக்கப்படுவோருக்கும் ஐக்கியத்தை கோருவதையே அர்த்தப்படுத்தும் என அருண்குமார் ஸ்டாலினிச தலைமைகளின் முதலாளித்துவ ஏஜண்டு பாத்திரத்தை அம்பலப்படுத்தினார்.

எட்டு மணி நேர வேலைக்கான போராட்டத்தில் உலக முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக மே முதலாம் தேதி சர்வதேச பாட்டாளி வர்க்கத்தை ஒரு ஐக்கியப்பட்ட நடவடிக்கையில் ஈடுபடுத்த முடிந்திருக்குமாயின் இன்றுள்ள நிலைமையில் துறைமுக தொழிலாளர்களின், மோட்டார் தொழிலாளர்களின் உருக்கு மற்றும் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின், ஜவுளி ஆலை தொழிலாளர்களின் மற்றும் பல்வேறு தொழிற்துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் வேலைகளைப் பேணவும், வாழ்க்கைத் தரத்தையும் சிறந்த வேலை நிலைமைகளைப் பேணவும் நடத்தும் போராட்டங்களை சர்வதேச ரீதியாக ஒருங்கிணைத்து போராடுவது … சாத்தியமான ஒன்றாகும் என அருண்குமார் குறிப்பிட்டார். ஆனால் பிரச்சினை என்னவென்றால் தேசிய மண்ணில் வேரூன்றி இருக்கும் எந்த ஒரு தொழிற்சங்கத்தாலோ அல்லது தொழிலாள வர்க்கக் கட்சியாலோ இதைச் சாதிக்க முடியாது. அதாவது தொழிலாள வர்க்கத்தின் எந்த ஒரு முக்கியமான கோரிக்கையையும் அவர்களால் வென்றெடுக்க முடியாது. அக்கோரிக்கைகள் சர்வதேச ரீதியாக நாற்றமெடுக்கும் லாப உற்பத்தி முறையை தூக்கி வீசி ஒரு திட்டமிடப்பட்ட உலக சோசலிசப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான போராட்டத்தின் மூலமே சாத்தியமாக்கப்பட முடியும். அந்த அடிப்படையில் போராடும் ஒரே ஒரு சர்வதேசிய கட்சி நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவும், இந்தியாவில் அதனுடன் ஐக்கியம் கொண்டு செயற்படும் சோசலிசத் தொழிலாளர் கழகமுமே என அருண்குமார் குறிப்பிட்டார்.

இன்று சோவியத் யூனியன், சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் எதிர்கொள்ளும் ஆழமான பொருளாதார நெருக்கடிக்கு அந்த நாட்டு தலைமைகள் நீண்ட காலமாக பின்பற்றி வந்த 'தனி ஒரு நாட்டில் சோசலிச', 'ஏகாதிபத்தியத்துடன் சமாதான சக வாழ்வு' என்ற பிற்போக்கு கொள்கைகளின் மூலமாக உலக பாட்டாளி வர்க்க புரட்சிகரப் போராட்டங்களை காட்டிக் கொடுத்ததன் தவிர்க்க முடியாத விளைபயன்களாகும். தேசிய மயமாக்கப்பட்ட சொத்துடமைகளில் ஒட்டுண்ணியாக இருந்து சலுகைகளை அனுபவித்து வந்த ஸ்டாலினிச அதிகாரத்துவம் உலக முதலாளித்துவ சந்தையின் ஆதிக்கத்தின் கீழ் மூச்சுத் திணறும் சோவியத் சீன பொருளாதார நெருக்கடிகளின் மத்தியில் தனது அதிகாரத்துவ தட்டின் சடரீதியிலான (Material) நலன்களைப் பேண தனிச்சொத்துடமையை மீண்டும் கொண்டு வர செயற்பட்டு வருகின்றது. இதன் மூலமாக படிப்படியாக புரட்சியின் வெற்றிகள்-வெளிநாட்டு வர்த்தகத்தில் அரசின் ஏகபோகம் தேசியமயமாக்கப்பட்ட சொத்துடமை—போன்றன அழிக்கப்படும் அபாயத்தில் உள்ளது. ஸ்டாலினிச அதிகாரத்துவத்தின் இந்த முதலாளித்துவ சார்பு கொள்கைகளுக்கு எதிரான தொழிலாளர்களின், இளைஞர்களின் சக்தி வாய்ந்த இயக்கங்கள் ஏற்கனவே சீனா, யூகோஸ்லாவியா போன்ற நாடுகளில் தோன்றியுள்ளன இப்படியான இயக்கம் மிக விரைவில் சோவியத் யூனியனிலும் தொடங்கும் என அருண்குமார் குறிப்பிட்டார்.

ஆனால் அக்டோபர் புரட்சியின் மற்றும் சீனப் புரட்சியின் வெற்றிகளைப் பேணுவது அங்குள்ள ஸ்டாலினிச அதிகாரத்துவங்களை ஒரு அரசியல் புரட்சியின் மூலமாக தூக்கி வீசி சர்வதேசிய அளவில் அக்டோபர் புரட்சியை நீடிப்பதிலேயே தங்கியிருக்கிறது. உலக டிராட்ஸகிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு மட்டுமே முதலாளித்துவ நாடுகளிலுள்ள தொழிலாளர்களுக்கு சோசலிசப் புரட்சிக்கான வேலைத்திட்டத்தையும் ஸ்டாலினிச ஆட்சியின் கீழ் உள்ள நாடுகளிலுள்ள தொழிலாளர்களுக்கு அரசியல் புரட்சிக்கான வேலைத்திட்டத்தையும் வழங்குகிறது என அருண்குமார் கூறினார் ஏனெனில் நான்காம் அகிலம் மட்டுமே சர்வதேச ரீதியாக மார்க்சியத்தை பேணி வளர்ப்பதற்கான போராட்டத்தை செய்கிறது, வரலாற்று ரீதியான மார்க்சிய புரட்சிகர பாரம்பரியங்கள் இன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவினால் மட்டுமே கட்டிக் காக்கப்படுகிறது.