"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Monday, August 8, 2016

பு.க.க. மே தினச் செய்தி: உலக யுத்தத்துக்கும் காலனிமயமாக்கலுக்கும் எதிராகப் போராடு!


[“The Revolutionary Communist League's May day message states that the Sri Lankan section of ICFI (RCL) and India Socialist Labour League were fighting to mobilise the Indian sub-continent working class for revolutionary program under Trotsky's Permanent Revolution theory.”]

Thozhilalar Paathai, Volume 405 (File 039)
April, 1991

உலகத்தை மீண்டும் பங்கு போடும் கொடிய காலனித்துவத்துக்காக ஏகாதிபத்தியவாதிகளிடையே இழுபறிகள் ஏற்பட்டுள்ள முன்றாவது அணுவாயுத உலக யுத்தத்துக்கு எதிராக உலகத் தொழிலாள வர்க்கம்—ஒன்றிணைந்த அனைத்துலக புரட்சிகரச் சக்தியாகக் கிளர்ந்து எழ வேண்டும் என நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைக் கிளையான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் இந்த மே தினத்தில் வேண்டிக் கொள்கிறது. …

இந்தியத் துணைக்கண்டம்

சீர்திருத்தவாதிகளும் ஸ்டாலினிச அதிகாரத்துவங்களும் ஏகாதிபத்தியச் சார்பு முதலாளித்துவ ஆட்சியாளர்களைக் காக்கும் பொருட்டு தம்மை அர்ப்பணம் செய்து கொண்டுள்ளன. இந்த அழிவினை தொழிலாள ஒடுக்கப்படும் மக்கள் மீது திணிப்பது பற்றி இலங்கையிலும் இந்தியாவிலும் இருந்து கிடைக்கும் அறிக்கைகள் மிகவும் கேவலமான வடிவங்களை எடுத்துள்ளன. இவை ஏனைய இடங்களில் இழைக்கப்பட்ட காட்டிக் கொடுப்புக்களை எல்லாம் தாண்டிச் செல்கின்றன.

இலங்கையில் சமசமாஜ, ஸ்டாலினிச தலைவர்களும் இந்தியாவில் ஸ்டாலினிசக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் திணிக்கப்பட்ட பிற்போக்கு முதலாளித்துவ அரசாங்கங்களும் அடிபணிந்தமையானது கோடானுகோடி இந்திய, பாகிஸ்தானிய, பங்களாதேஷ், பர்மிய, இலங்கை மக்களுக்கு சகிக்க முடியாத வேலையின்மை பஞ்சம், பட்டினியையே தேடிக் கொடுத்துள்ளது. இவற்றுக்கு எதிராகத் தலைதூக்கும் மக்கட் போராட்டங்களை இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கும் தயாரிப்பு நடவடிக்கையாக ஏகாதிபத்தியச் சார்பு முதலாளித்துவ ஆளும் வர்க்கம் தொழிலாள, ஒடுக்கப்படும் மக்களை இடைவிடாமல் இன, மத மோதுதல்களில் ஈடுபடச் செய்து இராணுவ—பாசிச சர்வாதிகாரத்தினை திணிக்க முயன்று வருகின்றது. 1947-48ல் இந்தியாவை பிரிவினை செய்த வேளையில் இந்தியத் துணைக்கண்டம் பூராவும் இடம் பெற்ற இரத்தக் களரியை தாண்டும் ஒரு தொகை மோதுதல்களை தூண்டிவிடுவதில் பிற்போக்கு ஆட்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் ஒடுக்கப்படும் தமிழ் தேசிய இனத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் பயங்கர இயக்கமானது இந்த காட்டுமிராண்டி நடவடிக்கையின் ஒரு பாகமே.

யுத்தத்தின் பின்னைய ஏகாதிபத்திய உலக அமைப்பின் பொறிவானது இந்தியத் துணைக்கண்டத்தின் உள்ளே ஏகாதிபத்தியச் சார்பு தேசிய முதலாளித்துவ ஆட்சியாளர்களின் பிற்போக்கும், அழிவும் இலட்சோப இலட்சம் மக்களுக்கு வசிப்பிடமும் இல்லாமல் செய்வதன் மூலம் வெளிப்பாடாகியுள்ளது. இன்று பாகிஸ்தான், பங்களாதேஷ், பர்மா, இந்தியா, இலங்கை முதலான சகல முதலாளித்துவ நாடுகளில் திணிக்கப்படும் இன-மத ஒடுக்குமுறைகளைச் … மக்களும், ஏழைகளும் ஒரு நாட்டில் இருந்து மறு நாட்டிற்கு அகதிகளாக கலைக்கப்பட்டு வருகின்றார்கள். இந்தியாவின் பஞ்சாப், காஷ்மீர் பகுதிகளில் இருந்து பாகிஸ்தானுக்குப் பெருக்கெடுக்கும் அகதிகளும் பங்களாதேஷ் முஸ்லீம் அடிப்படைவாதிகளின் ஒடுக்குமுறையைச் சகிக்க முடியாமல் இந்தியாவுக்குள் பெருக்கெடுக்கும் இலட்சக்கணக்கான … மக்கள் உட்பட ஒடுக்கப்படும் மக்களும், பர்மாவின் இராணுவ ஒடுக்குமுறையினாலும் முஸ்லீம் எதிர்ப்பினாலும் பங்களாதேசுக்குள்ளும் இந்தியாவுக்குள்ளும் பெருக்கெடுப்போரும், வடகீழ் மாகாண தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத யுத்தத்தினால் அவர்களின் வீடுவாசல்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட 8 இலட்சம் மக்கள் இந்தியாவுக்குச் சென்றமையும் இந்த சரணாகதியடைந்த மாபெரும் மக்கட் சனத்தொகையின் ஒரு சிறு துளியாகும்.

விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் மாபெரும் வெற்றிகளை ஈட்டிக் கொண்டுள்ள இன்றைய உலக நிலையில் குறைந்தபட்ச மனித வாழ்க்கை வசதிகள் தன்னும் இல்லாமல் இங்ஙனம் புகலிடம் தேடிக் கொண்டுள்ள இலட்சோப லட்சம் மக்கள் ஏகாதிபத்திச் சார்பு முதலாளித்துவ ஆட்சிகளுக்கு எதிராகத் தொடுக்கும் பலத்த குற்றச்சாட்டாகும்.

இது வெறுமனே இன்று அடைக்கலம் தேடிக் கொண்டுள்ள மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள அழிவு மட்டுமின்றி முழுத் தொழிலாள-ஒடுக்கப்படும் மக்கள் மீதும் மிலேச்ச ஏகாதிபத்திய இராணுவ ஆட்சியினை திணிக்க எடுக்கப்பட்டு வரும் ஆரம்ப நடவடிக்கையாகும். இதனை ஈராக்கில் இடம்பெறும் சம்பவங்கள் எந்தவித சந்தேகத்துக்கும் இடமின்றி நிரூபித்துக் கொண்டுள்ளன, அந்தந்த நாடுகளில் மக்கள் வாழ்க்கைகளை நாசமாக்கும் முறையில் தலையிட்டு வரும் ஏகாதிபத்தியவாதிகள். அந்நாடுகளில் தமது படைகளை இருத்தும் திட்டங்களுக்கான நிலைமைகளைச் சிருஷ்டித்து வருகின்றார்கள். இந்த விதத்திலேயே ஈராக் குர்திஷ் மக்களின் அவலநிலையை அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

தமிழ் தேசிய இனத்துக்கு எதிரான இனவாத யுத்தமும் அதனால் உருவான அகதிகள் பெருக்கமும் 1987ல் ஏகாதிபத்தியவாதிகளின் ஆதரவு பெற்ற இந்திய படைகளின் நுழைவுக்குப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. இன்று இந்த வேலைத்திட்டம் உலகம் பூராவும் நடைமுறைப்படுத்தும் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது இந்நிலைமையில் பாரதீய ஜனதா கட்சி மற்றும் முதலாளித்துவ கட்சிகள், குழுக்களும் முஸ்லீம் எதிர்ப்பு இந்து வெறியை தூண்டுவதானது இந்தியாவிலும் துணைக்கண்டம் பூராவும் ஏகாதிபத்திய நிலைமைகளைச் சிருஷ்டிப்பதாக உள்ளது. …

புரட்சித் தலைமை

இந்த சகல அபிவிருத்திகளும் தொழிலாள வர்க்கத்தினதும், ஒடுக்கப்படும் மக்களதும் பாரிய நலன்களை இட்டு நிரப்ப அவசியமான அனைத்துலகவாத புரட்சித் தலைமை பற்றிய பிரச்சினையைத் தோற்றுவிக்கின்றன. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைக் கிளையான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் இந்திய சோசலிசத் தொழிலாளர் கழகமும் லியொன் டிரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் இந்திய துணைக்கண்ட தொழிலாள வர்க்கத்தினை புரட்சிகர வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அணிதிரட்டப் போராடி வருகின்றது. ஒடுக்கப்படும் தேசிய இனங்களும் சகிக்க முடியாத ஒடுக்குமுறைக்கும் அடக்குமுறைக்கும் ஆட்பட்டு வரும் மதக் குழுக்கள் தாழ்த்தப்பட்ட மக்களும் இளைஞர்கள் இல்லப் பெண்கள் இளைஞர்கள் இல்லப் பெண்கள், கிராமப்புற ஏழை விவசாயிகள் அனைவரையும் தொழிலாள வர்க்கத்தினைச் சூழ புரட்சிகரமான முறையில் அணிதிரட்டுவதன் மூலம் ஏகாதிபத்தியச் சார்பு முதலாளித்துவ அரசினைத் தூக்கி வீசி, சோசலிச சோவியத் குடியரசு ஒன்றியத்தினை நிறுவுவதே அப்போராட்டத்தின் இலக்காகும். உலக சோசலிசப் புரட்சியின் முன்நோக்கின் அடிப்படையில் இடம்பெறும் இப்போராட்டத்துடன் இணைவதென சகல தொழிலாள வர்க்கப் போராளிகளும், ஒடுக்கப்படும் மக்களும் இந்த மே தினத்தில் தீர்மானம் செய்ய வேண்டும்.

  • யூ.என்.பி யை வெளியேற்று!
  • மக்கள் முன்னணிகளை நிராகரி!
  • இலங்கை-தமிழ் ஈழம் சோசலிச குடியரசினை கட்டி எழுப்பு!
  • இந்தியத் துணைக்கண்ட சோசலிச சோவியத் குடியரசு ஒன்றியத்தினை நோக்கி முன்னேறு!
  • புரட்சிக் கட்சியை கட்டி எழுப்பு!

No comments:

Post a Comment