[Indian
Socialist Labour League leaders participate in the 25th
anniversary of Revolutionary Communist League.]
Thozhilalar
Paathai (File 439)
August
1993
பு.க.க.
பொதுச்
செயலாளர் விஜே டயஸ்,
25 ஆண்டு
நிறைவு விழாக் கூட்டத்தில்
நிகழ்த்திய உரை
தோழர்களே,
தோழியர்களே,
நண்பர்களே
புரட்சிக்
கம்யூனிஸ்ட் கழகத்தின் இந்த
25வது
ஆண்டு நிறைவுக் கூட்டம்,
நான்காம்
அகிலத்தின் அனைத்துலகக்
குழுவின் இலங்கைக் கிளையான
புரட்சிக் கம்யூனிஸ்ட்
கழகத்தினை கட்டி எழுப்பும்
போராட்டத்தில் பல்வேறு
விதத்திலும் பங்கு கொண்ட
அனைவரும் பெருமைப்படக் கூடிய
ஒரு தருணமாகும் என முதலில்
குறிப்பிட விரும்புகின்றேன்.
பு.க.க.
வை
கட்டியெழுப்பும் போராட்டம்,
25 ஆண்டுகள்
பூராவும் மார்க்சிசப் புரட்சிகர
அடிப்படைக் கொள்கைகளையும்
உலக சோசலிசத்தின் மூலோபாயத்தினையும்
தொழிலாள – ஒடுக்கப்படும்
மக்களிடையே நிலை நாட்டத்
தொடுத்த போராட்டமாகும்.
ஆரம்பத்தில்
இருந்து புரட்சிக் கம்யூனிஸ்ட்
கழகம் அந்தத் தொழிலாள வர்க்க
அனைத்துலகவாத அடிப்படையில்
காலூன்றாமல் தொழிலாள வர்க்கத்
தலைமை நெருக்கடியை தீர்த்து
வைக்கும் ஒரு கட்சியைக்
கட்டியெழுப்ப முடியாது
என்பதில் உறுதியான நம்பிக்கை
கொண்டிருக்கிறது.
சோசலிசப்
புரட்சியின் உலகக் கட்சியான
நான்காம் அகிலத்தினைப்
பிரதிநிதித்துவம் செய்து,
அதன்
ஜேர்மன் கிளையின் செயலாளர்
தோழர் உலி றிப்பேர்டும்,
எமது
தோழமை இந்திய சோசலிசத் தொழிலாளர்
கழகத்தின் தோழர்களான அருண்குமார்,
ராம்
ஆகியோரும் இக்கூட்டத்தில்
கலந்து கொண்டதன் மூலம்
அப்போராட்டத்தின் அடிப்படைத்
தன்மை ருசுவாகியுள்ளது.
...
No comments:
Post a Comment