Thozhilalar
Paathai collected volume 09
July
1993
நான்காம்
அகிலத்தின் அனைத்துலகக்
குழுவுடன் அரசியல் ஐக்கியம்
பூண்டதும் புரட்சிக் கம்யூனிஸ்ட்
கழகத்தின் தோழமை அமைப்புமான
இந்திய சோசலிசத் தொழிலாளர்
கழகத்தின் சார்பில் அதன்
செயலாளர் தோழர்.
அருண்
குமார் ஆண்டு நிறைவு விழாவில்
வாழ்த்துச் செய்தி வழங்கி
நிகழ்த்திய உரை
அன்பில்
தோழர்களே,
நானும்
தோழர் ராமும் புரட்சிக்
கம்யூனிஸ்ட் கழகத்தின் இந்த
25வது
ஆண்டு நிறைவு விழாவுக்கு
இந்திய சோசலிசத் தொழிலாளர்
கழகத்தின் சகல அங்கத்தவர்களதும்
புரட்சிகர நல்வாழ்த்துக்களுடன்
வருகை தந்துள்ளோம்.
இச்சந்தர்ப்பத்தில்
பு.க.க.
வின்
முன்னாள் பொதுச் செயலாளர்
மறைந்த தோழர் கீர்த்தி
பாலசூரியவை மிகுந்த கௌரவத்துடன்
நினைவு கூர்வதோடு எமது
மரியாதையையும் செலுத்துகின்றோம்.
அவ்வாறே
பாட்டாளி வர்க்க அனைத்துலகவாதத்தினைக்
காக்கும் தமது போராட்டத்தினுள்
தமது உயிர்களைத் தியாகம்
செய்த பு.க.க.
அங்கத்தவர்களுக்கு
நாம் மரியாதை செலுத்துகின்றோம்.
சோதனைக்குள்ளான
காலத்தில் இருந்து தோன்றிய
இன்றைய பு.க.க.
தலைமை
தோழர் கீர்த்தி பாலசூரியவும்
ஏனைய தோழர்களும் உயிர்த்தியாகம்
செய்த போராட்டத்தினை இறுதிவரை
முன்னெடுப்பர் என்பதில் நாம்
நம்பிக்கை கொண்டுள்ளோம்.
1985-86
பிளவின்
போது தொழிலாளர் புரட்சிக்
கட்சியின் பப்லோவாத
கலைப்பாளர்களுக்கு எதிராக
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்
குழுவின் வேலைத்திட்ட
அடிப்படையைக் காக்க புரட்சிக்
கம்யூனிஸ்ட் கழகம் நடாத்திய
திடசங்கற்பம் மிகுந்த போராட்டம்
இல்லாது போயிருக்குமானால்
இந்தக் கூட்டத்தில் நாம்
கலந்து கொள்ள வாய்ப்புக்
கிட்டியிராது.
தோழர்.
கீர்த்தி
பாலசூரிய,
தோழர்.
டேவிட்
நோர்த்துக்கு 1987
ஜூன்
17ம்
திகதி எழுதிய கடிதத்தில்
தொழிலாளி வர்க்கத்துக்கு
இந்தப் பிளவின் அர்த்தத்தினை
மிகவும் ஆழமாக வடித்திருந்தார்.
அவர்
எழுதியது இதுதான்:
“சரியாகச்
சொன்னால்,
அனைத்துலகக்
குழுவின் உள்ளிருந்து
ஹீலி-பாண்டா-சுலோற்றரை
ஒட்டிக் கலைத்தும் அவர்களை
மார்க்சிசத்தின் எதிரிகளாக
அம்பலப்படுத்தும் முழுப்
போராட்டமும் இல்லாது போயிருந்தால்
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும்
இந்தியாவில் சோசலிசத் தொழிலாளர்
கழகமும் இன்றைய நிலைமையில்
முதலாவது கட்டத்திலேயே அரசியல்
நெருக்கடிக்கு முகம்
கொடுத்திருக்கும்.
அவர்களின்
ட்ரொட்ஸ்கிச பூச்சாண்டிகளை
சவால் செய்யாது விட்டிருந்தால்,
சிறப்பாக
இந்தியாவினுள் கையாலாகாத்தனமாக
ஆளும் வர்க்கமும் இரு நாட்டினதும்
குட்டி முதலாளித்துவ இயக்கங்களும்
புரட்சிகர மார்க்சிஸ்டுகளை
முழுமனே தனிமைப்படுத்த உதவும்
வகையில் செய்ய வேண்டிய
அனைத்தையும் செய்ய அனைத்துலகக்
குழுவின் கிளைகள் வலதுசாரிப்
போக்குகளால் கீழ்ப்படுத்தப்படுவது
தவிர்க்க முடியாததாகியிருக்கும்.
நிரந்தரப்
புரட்சிக் கோட்பாடு பற்றிய
ஹீலி-பண்டா-சுலோற்றரின்
நிலைப்பாட்டினை அனைத்துலகக்
குழுவின் உள்ளே அம்பலப்படுத்துவது,
துணைக்
கண்டத்தினுள் வர்க்கப்
போராட்டத்தின் இன்றைய கொடிய
வெடிப்பின் தீர்க்க தரிசனம்
மட்டுமன்று அது தேசிய முதலாளித்துவ
வர்க்கமும் அதன் குட்டி
முதலாளித்துவ ஏஜண்டுகளும்
தொழிலாளி வர்க்கத்தினைத்
தம்முடன் 'தேசிய'
கசாப்புக்
கடைக்கு இழுத்துச் செல்ல
எடுக்கும் சகல முயற்சிகளுக்கும்
எதிராகப் போராடும் பொருட்டு
இருநாட்டினதும் தொழிலாளி
வர்க்கத்தின் முன்னேறிய
பகுதியினரைக் கோட்பாட்டு,
அரசியல்ரீதியில்
ஆயுதபாணியாக்குவதும் ஆகும்.”
வரலாறு,
வேலைத்திட்டம்,
அடிப்படைக்
கொள்கை தொடர்பான பிரச்சினை
பற்றி தோழர்.
கீர்த்தி
கொண்டிருந்த சமரசமற்ற
மனப்பாங்கு,
எம்
அனைவருக்கும் பிரமாண்டமான
உத்வேகத்தினை வழங்கியது.
மத்தியவாதம்,
சந்தர்ப்பவாதத்துக்கு
எதிரான போராட்டத்தின் தீர்க்கமான
வரலாற்று அர்த்தத்தினை-அதாவது
உலக சோசலிசப் புரட்சியின்
வெற்றியும்,
ஆதலால்
மனித இனத்தின் உயிர்வாழ்வும்
எல்லாவற்றிற்கும் மேலாக
இப்போராட்டத்தினுள் ட்ரொட்ஸ்கிச
இயக்கம் காட்டும் ஈவிரக்கமற்ற
தன்மையில் தங்கியுள்ளது
என்பதை அவர் வேறு எவரைக்
காட்டிலும் நன்கு ஆழமாகப்
புரிந்து கொண்டிருந்தார்.
தொழிலாளர்
புரட்சிக் கட்சியின் எதிர்ப்பைப்
பொருட்படுத்தாது இந்தியாவினுள்
ட்ரொட்ஸ்கிசக் கட்சியைக்
கட்டி எழுப்ப புரட்சிக்
கம்யூனிஸ்ட் கழகம் போராடியது.
தோழர்களே,
நீங்கள்
1917ல்
பங்களாதேஷ் யுத்தம் பற்றிய
பத்திரங்களை வாசித்திருப்பீர்கள்.
தொ.பு.க.
தலைவர்கள்
கிழக்குப் பாகிஸ்தானுக்கு
அல்லது பங்களாதேஷ் எனப்படுவதற்கு
நடாத்திய இந்திய இராணுவத்
தலையீட்டினை ஒரு முற்போக்கு
நடவடிக்கையாகத் தூக்கிப்
பிடிக்கையில்,
புரட்சிக்
கம்யூனிஸ்ட் கழகம் அது மேற்கு,
கிழக்கு
வங்காளத் தொழிலாளர்களிடையேயான
ஐக்கியத்தினை தவிர்ப்பதையும்,
அத்தருணத்தில்
வீழ்ச்சி காண தொடங்கி இருந்த
துணைக் கண்டத்தின் யுத்தத்தின்
பின்னைய சமநிலையைப் பேணுவதையும்
இலக்காகக் கொண்டு எடுக்கப்பட்ட
பிற்போக்கு நடவடிக்கை என
அம்பலப்படுத்தியது.
தோழர்.
கீர்த்தி
1960 பதுகளின்
கடைப்பகுதியில் தோன்றிய
நக்சலைட் இயக்கத்தினை மார்க்சிச
விமர்சனத்துக்கு உள்ளாக்கியதில்
இந்திய தொழிலாள வர்க்கத்துக்குச்
சுயாதீனமான வர்க்க நிலைப்பாட்டினை
கடைப்பிடிக்க பு.க.க.
நடாத்திய
போராட்டத்தினை கண்டு கொள்ள
முடியும்.
இக்காலப்
பகுதியிலேயே தோழர்.
கீர்த்தி
ஜேவீபி பற்றிய சக்திவாய்ந்த
மார்க்சிச ஆய்வினை எழுதினார்.
1985-86
பிளவு,
பு.க.க.வுக்கும்
சோசலிசத் தொழிலாளர் கழகத்துக்கும்
இடையேயும்,
அவ்வாறே
அனைத்துலகக் குழுவின் ஏனைய
பகுதிகளுடனும் நெருக்கமான
அரசியல் உறவுகளுக்கான கதவினைத்
திறந்து விட்டது.
இந்திய-இலங்கை
உடன்படிக்கையை எதிர்த்தும்,
வடக்கு-கிழக்கில்
இருந்து இந்திய ஆக்கிரமிப்பு
படைகளை வெளியேற்றவும் பாட்டாளி
வர்க்க அனைத்துலகவாத அடிப்படைக்
கொள்கைகளின் அடிப்படையில்
சிங்கள-தமிழ்
இந்திய தொழிலாளர்களின்
ஐக்கியத்துக்குப் போராடிய
இந்தியாவின் ஒரே கட்சி சோசலிசத்
தொழிலாளர் கழகமே.
தொழிற்சங்க
அதிகாரத்துவத்துக்கு எதிராக
மாற்று ட்ரொட்ஸ்கிச
வேலைத்திட்டத்துக்கு உறுதியாகப்
போராடும் சோசலிசத் தொழிலாளர்
கழகத்தின் அங்கத்தவர்கள்
தமது தொழிற்சங்கங்களின்
தலைமைக் கமிட்டிகளுக்குத்
தெரிவு செய்யப்பட்டதன் மூலம்
சோ.தொ.க.
தொழிலாளர்களிடையே
தமது செல்வாக்கினைத் தொடர்ந்து
வளர்த்துக் கொண்டுள்ளதைக்
காண முடியும்.
இந்தியாவின்
பழையதும் பெரியதுமான ஆடைத்
தொழிற்சாலையான பக்கிங்காம்
கர்நாடக மில்லில் (பி&சி)
ஸ்டாலினிச
தொழிற்சங்க அதிகாரத்துவத்தின்
ஒத்துழைப்புடன் நிர்வாகத்தின்
வேட்டைக்கு உள்ளாகியுள்ள
சோசலிச தொழிலாளர் கழகத்தின்
தோழர். மோசஸ்
கடந்த ஜூன் 19ம்
திகதி தொழிற்சங்கக் கமிட்டி
உறுப்பினராகத் தெரிவு
செய்யப்பட்டுள்ளார்.
சென்னை
ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் என்ற
மற்றுமோர் பிரமாண்டமான
மோட்டார் பக்டரியினுள் எமது
தோழர்.
கைலாசம்
கடந்த ஆண்டில் இருந்து இரண்டாவது
தடவையாகவும் கமிட்டி உறுப்பினராகத்
தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சோசலிசத்
தொழிலாளர் கழகம் இப்பொழுது
இரண்டு மொழிகளில்—தமிழ்,
வங்காளி—பத்திரிகைகளை
வெளியிடுகின்றது.
நான்காம்
அகிலத்தின் அனைத்துலகக்
குழுவின் வரலாற்று வேலைத்திட்டம்,
அடிப்படைக்
கொள்கைகளின் அடிப்படையில்
தொழிலாளி வர்க்கத்தின்
முன்னேற்றமான பகுதியினர்
அரசியல் விளக்கம் பெறவும்,
பயிற்சி
பெறவும் எமது வரையறுக்கப்பட்ட
வளங்களுடன் நாம் போராடி
வருகின்றோம்.
கிழக்கு
ஐரோப்பாவிலும் சோவியத்
யூனியனிலும் ஸ்டாலினிச
அதிகாரத்துவங்களின் வீழ்ச்சியும்
இந்நாடுகளின் அரச அமைப்புகள்
சிதறண்டு போனமையும் அனைத்துலகத்
தொழிலாளர் வர்க்கத்தின்
உள்ளே பிரமாண்டமான குழப்பத்தினை
உண்டு பண்ணியுள்ளது.
தொழிலாள
வர்க்கத்தின் பழைய அமைப்புகளான
தொழிற் சங்கங்களும் சமூக
ஜனநாயகக் கட்சிகளும் ஸ்டாலினிசக்
கட்சிகளும் அனைத்துலகத்
தொழிலாளர் வர்க்கத்தின்
வெற்றிகளுக்குத் தொடுக்கப்படும்
தாக்குதல்களின் எதிரில் தமது
பூரண வங்குரோத்தினையும்
பிற்போக்கினையும் அம்பலமாக்கியுள்ளன.
இலட்சோப
லட்சம் அங்கத்தவர்களைக்
கொண்டுள்ளதாகக் கூறிக் கொண்ட
கட்சிகள் இரவோடிரவாக சிதறிச்
சின்னாபின்னமாகிப் போயின.
ஐக்கிய
செயலக பப்லோவாதிகளின்
நிலைப்பாடும் அடியோடு
எதிர்ப்புரட்சி என்பது முழுமனே
அம்பலமாகியது.
தொ.பு.க.
ஓடுகாலிகளுடன்
1985-86ல்
ஏற்பட்ட பிளவு அனைத்துலகத்
தொழிலாளி வர்க்கத்தின்
முன்னேற்றமான பிரிவினிரடையே
பிளவின் அடிப்படை அரசியல்,
கோட்பாட்டுப்
பிரச்சினைகளை அரசியல் ரீதியில்
தெளிவுபடுத்துவதற்கான வல்லமையை
அனைத்துலகக் குழுவுக்கு
வழங்கியது.
தொ.பு.க.
தலைமை
எதிரி வர்க்க சக்திகளுக்கு
அடிபணிந்து போயிருந்தது.
இன்று
இந்தச் சக்திகள் சுரண்டும்
விதத்தினை அதிகரித்து,
தொழிலாள
வர்க்கத்தினை நசுக்கும்
ஏகாதிபத்திய வாதிகளின்
கைத்தேங்காயாக மாறியுள்ளன.
ஸ்டாலினிச
அதிகாரத்துவத்தினதும்
தொழிற்சங்க,
சமூக
ஜனநாயக அதிகாரத்துவத்தினதும்
முதலாளித்துவ தேசியவாதிகளதும்
பண்பு ரீதியிலான பரிணாமத்தினை
ஆழமாக ஆய்வு செய்த ஒரே அரசியல்
கட்சி,
நான்காம்
அகிலத்தின் அனைத்துலக குழுவே.
அவர்களின்
பண்பு ரீதியிலான பரிணாமத்துக்கு
பின்னணியில் வெறும் கெட்ட
பழக்க வழக்கங்கள் அன்றி நல்ல
ஆழமாக நோக்கின்,
தேசிய
அரச அமைப்பினை அடிப்படையாகக்
கொண்ட தேசியவாத,
சீர்திருத்தவாத
வேலைத்திட்டம் உள்ளது.
கணினிமயமாக்கம்,
தொலைத்
தொடர்பு,
போக்குவரத்தில்
ஏற்பட்டுள்ள தொழில்நுட்பப்
புரட்சிகளுடன் இணைந்து
உற்பத்தி பூகோளமயமானதும்,
முதலாளித்துவ
உற்பத்தியின் பொருளாதார
அலகாக விளங்கிய தேசிய அரச
அமைப்புக்கு வரலாற்று ரீதியான
நெருக்கடியை உருவாக்கி உள்ளது.
உலக
முதலாளித்துவத்துக்கான புதிய
வாழ்க்கைக்கான மூச்சினை
சிருஷ்டித்துக் கொடுத்த
யுத்தத்தின் பின்னைய சமநிலையும்
உலகப் பொருளாதாரத்தில்
ஏற்பட்டுள்ள ஆழமான மாற்றங்களினால்
வீழ்ச்சி கண்டுள்ளது.
இந்நடைமுறையை
நாம் அனைத்துலக ரீதியில்
கண்டு கொள்ள முடியும்.
இந்திய
முதலாளித்துவ ஆட்சியின்
நெருக்கடி இந்தச் செயல்பாட்டின்
ஒரு பாகமாகும்.
தமது
வெறும் ஏகாதிபத்திய எதிர்ப்பு
வாய்வீச்சுக்களினாலும்
சுயபூர்த்தி வேலைத்திட்டத்தின்
மூலமும் நான்கு தசாப்தங்கள்
ஊடாக இந்தியாவை ஆட்சி செய்த
இந்திய காங்கிரஸ் கட்சி,
இன்று
ராவ் தலைமையின் கீழ் ஏகாதிபத்திய
நிதி அமைப்புகள்,
ட்ரஸ்டுகளின்
கைக்கூலியாக முழுமனே பரிணாமம்
அடைந்துள்ளது.
பிராந்தியவாத
போக்குகள் இந்திய யூனியனில்
இருந்து பிரிந்து செல்லும்
எல்லை வரை வளர்ச்சி கண்டுள்ளது.
ஒவ்வொரு
பிராந்திய மாநில அரசுகளும்
பன்னாட்டுக் கம்பனிகளின்
முதலீடுகளை ஈர்க்கும் முகமாக
ஆளுக்காள் போட்டியிட்டுக்
கொண்டுள்ளன.
தொழிலாளர்களை
நெறிப்படுத்துவதில் தாம்
எவ்வளவு நன்றாகத் தொழிற்படுகின்றோம்
என்பதை ஏகாதிபத்தியவாதிகளுக்கு
நிரூபிக்கும் முகமாக மாநில
அரசாங்கங்கள் தொழிலாளர்
போராட்டங்களுக்குத் துப்பாக்கிப்
பிரயோகம் செய்யத் தொடங்கியுள்ளனர்.
தமிழ்
நாட்டில் கடந்த மூன்று
மாதங்களுக்குள் அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகம் அரசாங்கம்
திருநெல்வேலி மாவட்டத்தில்
ஆடை நெசவு தொழிலாளர்களுக்கும்,
கரூரில்
சீனித் தொழிலாளர்களுக்கும்
தூத்துக்குடியில் துறைமுகத்
தொழிலாளர்களுக்கும் துப்பாக்கிப்
பிரயோகம் செய்ய உத்தரவிட்டுள்ளது.
1960பதுகளில்
ஒரிஸ்சா துறைமுக நிர்மாண
வேலைகளில் ஈடுபட்டிருந்த
நூற்றுக் கணக்கான ட்ரக்
வண்டிகளின் சில்லுகளால் 200
சிறுவர்களை
நெரித்துக் கொன்றதை
ஸ்டாலினிஸ்டுகளின் ஜனநாயக
சகபாடி எனப்படும் ஒரிஸ்சா
மாநில முதலமைச்சர் பிஜூ
பட்நாயக் சமீபத்தில்
அம்பலப்படுத்தினார்.
தமது
மாநிலத்தில் சேவை கலாச்சாரத்தையும்
தொழிற்சங்க இயக்கத்தினையும்
விமர்சனம் செய்து இந்தியாவில்
வதிவில்லாதவர்களும் (NRI)
இந்திய
கைத்தொழிலாளர்களும் தம்மிடம்
அநேக முறைப்பாடுகளைச் செய்து
கொண்டுள்ளதாக மேற்கு வங்காள
ஸ்டாலினிச முதலமைச்சர் ஜோதி
பாசு ஜூன் 22ம்
திகதி கல்கத்தாவில் ...
No comments:
Post a Comment