"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Sunday, September 4, 2016

முழு வர்க்க பலத்தையும் அணிதிரட்டி 30ம் தேதி பந்தை நாடு தழுவிய கால வரையற்ற பொதுவேலை நிறுத்தமாக்கு!


Thozhilalar Paathai Volume 24
July 1989


    * சிபிஐ (எம்), சிபிஐ தலைமைகளை முதலாளித்துவ கட்சிகளுடனான உறவை முறித்துக் கொண்டு சோசலிச வேலைத்திட்டத்தை செயற்படுத்தும் தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கத்தை அமைக்கப் போராடும்படி நிர்பந்தி!

    *
    சோவியத்துக்களை ஆட்சியமைப்புகளாக அமைக்கப் போராடு!
    ஸ்டாலினிச மார்க்சிசக் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றும் தொழிற்சங்க மையங்களும் விடுத்துள்ள ஆகஸ்ட் 30ம் தேதி அகில இந்திய பந்தில் முழுத் தொழிற்சங்க இயக்கமும் மற்றும் தொழிலாள வர்க்க இயக்கங்களும் தொழிலாள வர்க்கத்தின் முழு வர்க்க பலத்தை அணிதிரட்டிப் பங்கு கொள்ளுவதோடு அதனைக் காலவரையற்ற அகில இந்திய பொதுவேலை நிறுத்தமாக மாற்றி, ராஜீவ்காந்தி அரசாங்கத்தை மட்டுமல்லாது முழு முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியையும் அதன் ஏனைய பிரதிநிதிகளின் ஆட்சியையும் வெளியேற்றுமாறு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் ஐக்கியம் கொண்ட இந்தியாவில் உள்ள டிராட்ஸ்கிச இயக்கமாகிய சோசலிசத் தொழிலாளர் கழகம் அழைக்கிறது.

முதலாளித்துவ வர்க்கத்தின் நாற்றமெடுக்கும் அரைப் பிணத்திலிருந்து அதன் அரசு அதன் அரசியல் கட்சிகளில் இருந்து தன்னைக் துண்டித்து ஒரு சுதந்திரமான வர்க்கமாக தனது வர்க்க சர்வாதிகாரத்தை பல கோடி விவசாயிகளுடன் கூட்டமைத்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவுவதாகும். அதாவது தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கத்தை அமைக்கப் போராடுவதாகும்.




முதலாளித்துவம் உண்டாக்கும் இன்னல்கள், மனிதச் சீரழிவு, ஒடுக்குமுறை என்பனவற்றிற்குஉ எதிராக வளர்ந்து உக்கிரம் அடைந்து வரும் தொழிலாள வர்க்கத்தினதும், ஏழை விவசாயிகளினதும் மற்றும் ஒடுக்கப்படும் பரந்த மக்களினதும் புரட்சிகர எழுச்சியைப் பயன்படுத்தி ஆட்சியில் உள்ள டாட்டாக்கள், பிர்லாக்களின் ஒரு பிரதிநிதிக்குழுவை அகற்றி அதன் இடத்தில் டாட்டாக்கள் பிர்லாக்களின் பிரதிநிதிகளின் மற்றொரு குழுவை 1977ம் ஆண்டில் போல ஆட்சி பீடத்தில் ஏற்றுவதல்ல தொழிலாள வர்க்கத்தின் பணி. அதாவது ஆட்சியில் இருந்து ராஜீவ்காந்தியையும் அவரது இந்திரா காங்கிரசையும் அகற்றி, அவர்களின் இடத்தில் ஆட்சியில் வி.பி. சிங்குகள், தேவிலால்கள், ராமராவ்கள், கருணாநிதிகள் கூட்டை ஏற்றி தொழிலாள வர்க்கத்திற்கும், ஏழை விவசாயிகளுக்கும், ஒடுக்கப்படும் பரந்த மக்களுக்கும் எதிராக முதலாளித்துவ போலீஸ், ராணுவத் தாக்குதல்களையும், கதவடைப்புகளையும், சீரழிவுகளையும் அவர்கள் மேலும் திறம்பட கட்டவிழ்த்துவிடப் போராடுவது அல்ல தொழிலாள வர்க்கத்தின் பணி

இந்தியாவில் உள்ள தொழிலாளர்களின் வர்க்கப்பணி அவர்கள் கோடானுகோடி பலம் படைத்த சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தின் படைகளுடன் சர்வதேச ஐக்கியத்தை இறுக்கமாக உருவாக்கி, ஸ்டாலினிச சிபிஎம், சிபிஐ தலைமைகளை அவை முதலாளித்துவக் கட்சிகளுடன் அமைத்திருக்கும் கூட்டை உடைத்து, ஒரு தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கம் அமைக்க ஆகஸ்ட் 30ம் தேதி பந்தை, காலவரையற்ற அகில இந்திய பொது வேலை நிறுத்தமாக மாற்றும்படி நிர்பந்திக்க வேண்டும். அந்த அரசாங்கம் முதலாளித்துவ உடைமையாளர்களுக்கு நஷ்டஈடின்றி அனைத்து ஆலைகளையும் வங்கிகளையும், நிலங்களையும், தொழிலாளர் ஆதிக்கத்தின் கீழ் தேசியமயமாக்கும். அனைத்து ஏகாதிபத்திய வங்கிக்கடன்களையும் ரத்துச் செய்யும், தமிழ் ஈழம் நாகலாந்து, மணிப்பூர் போன்ற ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைகளை நடைமுறையில் உறுதிப்படுத்தும், இந்திய ஆக்கிரமிப்புப் படைகளைத் தமிழ் ஈழத்திலிருந்தும், மாலத்தீவிலிருந்தும் நிபந்தனையின்றி உடனடியாக வாபஸ் பெறுவதுடன் ஏகாதிபத்தியம் தீட்டிய இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ரத்துச் செய்யும் நாட்டுப்புறக் கடன்கள் அத்தனையையும் தள்ளுபடி செய்யும், விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு நியாய விலை வழங்கும், உழுபவனுக்கு நிலத்தை வழங்கும், உபகண்டரீதியாக நதிகளை இணைக்கும் நீர்பாசனத் திட்டத்தை ஆரம்பித்து வெள்ளங்களுக்கும், வறட்சிகளுக்கும் முடிவு கட்டும், அனைத்து மொழி, மற்றும் சிறுபான்மையினரின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தும், முதலாளித்துவ அரச எந்திரத்தின் போலீஸ் மற்றும் ஆயுதப்படைகள் அனைத்தையும் கலைத்து அவற்றின் இடத்தில் தொழிலாளர்கள், விவசாயிகளின் சோவியத்துகளின் கட்டுப்பாட்டின் கீழ் தொழிலாளர் விவசாயிகளின் படைகளை அமைக்கும். 1947ல் ஏகாதிபத்தியம் செய்த இந்திய உபகண்ட கூறுபோடலைத் தகர்த்து உலக சோசலிசக் குடியரசுகளின் ஒரு பகுதியாக இந்திய உபகண்டத்தின் சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தை அமைக்கும்.

ராஜீவ்காந்தி அரசாங்கத்தை வெளியேற்று!” என்ற முழக்கத்தை ஸ்டாலினிச சிபிஎம், சிபிஐ தலைவர்கள் அகில இந்திய பந்தின் முழக்கமாகவும், இலக்காகவும் ஆக்கியுள்ளளார்கள். ராஜீவ் காந்தி அரசாங்கத்தை வெளியேற்றத் தொடுக்கும் போராட்டத்துடன் அதற்கான மாற்று ஒன்றைக் கட்டும் பணியைப் பிரிக்க முடியாது என்று கூறிய நம்பூதிரிபாட்டுகள் "இடதுசாரி ஜனநாயக மதசார்பற்ற கட்சிகளின் அரசாங்கத்திற்கான" அவர்களின் முயற்சிகளையும் முடுக்கி விட்டுள்ளார்கள்.

இது இன்று வேறு எதுவும் அல்ல ஆனால் வி.பி.சிங்குகள், தேவிலால்கள், ராமராவ்கள், கருணாநிதிகள் மற்றும் ஸ்டாலினிச சிபிஎம், சிபை யின் அரசாங்கத்திற்கு ஸ்டாலினிஸ்டுகள் ஒட்டியுள்ள மற்றுமொரு லேபிளாகும்.

ஸ்டாலினிஸ்டுகளின் அரசியல் ஆதரவுடன் முதலாளித்துவ "தேசிய முன்னணி" கட்சிகளின் அரசாங்கம் ஆயினும் சரி அல்லது இந்த முதலாளித்துவக் கட்சிகளினதும், ஸ்டாலினிசக் கட்சிகளினதும் கூட்டு அரசாங்கம் என்றாலும் சரி அது ஒன்றில் 1977ல் ஆட்சி ஏறிய வலதுசாரி ஜனதா அரசாங்கம் போன்றோ அல்லது இன்று மேற்கு வங்கத்தில் ஊழல் புரையோடி போலீஸ் அடக்குமுறை தலைவிரித்தாடும், மண்ணெண்ணைக்காக காத்து நிற்கும் மக்களின் நீண்ட வரிசைகள் நிறைந்து, நூற்றுக் கணக்காக கதவடைப்புகள் பெருகி கொண்டிருக்கும் மாநில ஆட்சி போன்றதோ மத்தியில் வரும்.

இந்தியாவில் ஸ்டாலினிச கம்யூனிச கட்சி தலைமைகள் 1942ல் சுதந்திரப் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்ததற்காக ஆகஸ்ட் கருங்காலிகள் என்று அவப்பெயர் எடுக்கும் முன்பாகவும், மீண்டும் 1947ல் இந்திய உபகண்டம் முழுவதும் திரண்டெழுந்த தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அலையை முறியடிக்க பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும், இந்திய முதலாளித்துவமும் வகுப்புவாத ரீதியில் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த ஏற்படுத்திய பிரிவினைக்கு ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சித் தலைமைகள் ஆதரவளித்ததற்கு முன்பாகவே இந்தியப்புரட்சிக்கு ஸ்டாலினிஸ்டுகளால் ஏற்படும் அபாயத்தைப் பற்றி நான்காம் அகிலத்தின் ஸ்தாபகரான லியோன் டிராட்ஸ்கி இந்திய தொழிலாளர்களுக்கு 1939ல் எழுதிய பகிரங்க கடிதத்தில் பின்வருமாறு எச்சரித்தார்.

பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான கூட்டில் தலைமை தவர்க்க முடியாதபடி வலதுசாரிகளின் கைகளுக்கு செல்கிறது. அதாவது சொத்துள்ள வர்க்கங்களின் கைகளுக்குள்… முதலாளித்துவ வர்க்கத்துடனான கூட்டு ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சிகர போராட்டத்தை பாட்டாளி வர்க்கம் கைவிட வழிவகுக்கும். கூட்டுக்கொள்கை அர்த்தப்படுத்துவது நேரத்தை கணிப்பதும், காலம் கடத்துவதும், பொய்யான எண்ணங்களை உண்டு பண்ணுவதும், நேர்மை அற்ற திட்டங்களும், சதிகளும் ஆகும். இந்தக் கொள்கையின் விளைவாக, தொழிலாள மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாதபடி விரக்தி ஏற்படுகிறது. அதேசமயம் விவசாயிகள் தொழிலாளர்களுக்கு புறமுதுகு காட்டியவாறு சோர்வடைகின்றனர். ஜெர்மன் புரட்சி, ஆஸ்திரியப் புரட்சி, சீனப் புரட்சி, ஸ்பானிய புரட்சி அனைத்துமே கூட்டுக் கொள்கையின் விளைவாக நாசமாகின. அதை ஒத்த அபாயம் இந்தியப் புரட்சியை அச்சுறுத்துகிறது. அங்கே ஸ்டாலினிசவாதிகள் "மக்கள் முன்னணி" என்ற போர்வையின் கீழ் பாட்டாளி வர்க்கத்தை முதலாளித்துவ வர்க்கத்திற்கு கீழ்ப்படுத்தும் கொள்கையை முன்வைக்கின்றனர். செயலில் இது அர்த்தப்படுத்துவது புரட்சிகர விவசாய வேலைத்திட்டத்தை நிராகரிப்பதும், தொழிலாளர்களை ஆயுதபாணியாக்க மறுப்பதும், ஆட்சிக்கான போராட்டத்தை நிராகரிப்பதும், புரட்சியை நிராகரிப்பதும் ஆகும்". இன்று சர்வதேச சந்தையில் பிரதான ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளுக்கு (அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா) இடையில் நடக்கும் போட்டியும், தொழில்நுட்பம் மற்றும் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி அனைத்துமே இன்று உலக அளவில் போருக்கான நிலைமைகளையும், ஆலைமூடல்களையும், ஆட்குறைப்புகள், சம்பள வெட்டுகள், தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்படல், விலைவாசியேற்றம் போன்றவற்றை ஏற்படுத்தி வருகின்றன.

இவ்வாறு இருக்கையில் வேலை செய்யும் உரிமையை இந்த முதலாளித்துவ அரசியலமைப்பினுள் அடிப்படை உரிமையாக்குவதன் மூலமாக முதலாளித்துவ பொருளாதார விதிகளினால் ஏற்படும் வேலை அழிப்புகளை தடுக்க முடியும் என்றும் புதிய வேலைவாய்ப்புகள் வழங்க முடியுமென்றும் முதலாளித்துவ தேசிய முன்னணியின் தலைவரான வி.பி.சிங் உடன் இணைந்த "மார்க்சிய" நம்பூதிரிபாட்டுகள் குரல் எழுப்பி பித்தலாட்டம் செய்கின்றனர். உண்மையில் இவர்கள் வேலை செய்யும் உரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்று பேசுகையில், இன்று கூர்மை அடைந்து வரும் வர்க்கப் போராட்டத்தில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யும் போது கருங்காலிகள் தமது "வேலை செய்யும் அடிப்படை உரிமையை" பேணி வேலைநிறுத்தப் போராட்டங்களை உடைப்பதற்கே நாசுக்காக வழி செய்கின்றனர். ஒருபுறம் "நாட்டைக் காப்பதே தேசிய முன்னணியின் புது லட்சியம்" என்று வி.பி. சிங்கும், “எதிர் கட்சிகளை ஓரணியில் திரட்ட வேண்டுமாயின் நாட்டைக் காக்க வேண்டும் என்ற பிரச்சினையைத் தவிர வேறு எந்த பிரச்சினையையும் முன் வைக்க முடியாது என்று பாரதிய ஜனதா கட்சி தலைவர் வாஜ்பேயி மறுபுறமும், இன்னொரு புறம் எதிர்கட்சிகள் பிரிவினைவாத வகுப்புவாத பழமைவாத சக்திகளை ஆதரிக்கும் தேசத் துரோகிகள்" என்று ராஜீவ் காந்தியும் முழக்கமிடுகையில் தேசப்பற்றிலும் தேசிய ஒற்றுமையிலும் தாம் எவ்வையிலும் முதலாளித்துவ கட்சிகளுக்கு இளைத்தவர்கள் அல்ல என்று கூறியவாறு தேச ஒற்றுமையை பேண நாம் இரத்த தியாகம் செய்யத் தயாரென்று போட்டி போட்டுக் கொண்டு சிபிஎம், சிபிஐ தலைமைகளும் அவற்றின் இளைஞர் அமைப்பு தலைமைகளும் பிற்போக்கு தேசிய வெறியை நாளாந்தம் வாந்தி எடுத்து வருகின்றன.

கம்யூனிஸ்டுகள் தாய் நாட்டையும் தேசியத் தன்மையையும் இல்லாதொழிக்க விரும்புகின்றனர்" என்று முதலாளித்துவ வர்க்கம் குற்றம் சாட்டிய போது அதற்கு கம்யூனிச மூலவர்களான மார்க்சும் ஏங்கெல்சும் அளித்த பதில்: “தொழிலாளர்களுக்கு தாய்நாடு இல்லை. அவர்களிடம் இல்லாத ஒன்றை அவர்களிடமிருந்து பிடுங்குவது முடியாத காரியம். பாட்டாளி வர்க்கம் யாவற்றுக்கும் முதலாய் அரசியல் மேலாண்மை பெற்றாக வேண்டும். தேசத்தின் தலைமையான வர்க்கமாய் உயர்ந்தாக வேண்டும். தன்னையே தேசமாக்கிக் கொள்ள வேண்டும்" (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை மாஸ்கோ பதிப்பு பக்கம் 74) என்பதாகும்.

வர்க்கப் பகைமையுள்ள தேசத்தில் முதலாளித்துவ வர்க்கம் பொதுவாக 'தேசம்' என்று பேசுகையில் அவர்கள் கருத்தில் கொண்டு பேசுவது தமது சுரண்டல் நிறைந்த தேசத்தை பற்றியும் தமது வர்க்க நலன்களை காப்பது பற்றியுமாகும். இந்த தேசத்தை காக்கும் கோரசில் ஸ்டாலினிச சிபிஎம், சிபிஐ மற்றும் மாவோவாத தலைமைகளும் சேர்ந்தது தற்செயலானது அல்ல. 'தனியொரு நாட்டில் சோசலிசம்' என்ற பிற்போக்கு கொள்கையுடன் ஸ்டாலினிச அதிகாரத்துவத்தினால் சோவியத் யூனியனில் முன்னெடுக்கப்பட்ட மார்க்சிய விரோத நிலைப்பாடு, உலகப் பாட்டாளி வர்க்கத்தை காட்டிக் கொடுத்தது மட்டுமின்றி அக்டோபர் புரட்சியின் வெற்றிகளையும் அழிக்கும் முயற்சியில் முதலாளித்துவ சந்தை பொருளாதாரத்தின் "மேன்மையை" பற்றி புகழ்பாடி சோவியத் யூனியன், சீனா, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவ பொருள் உற்பத்தி முறையையும் முதலாளித்துவ தனிச்சொத்துடமையையும் மீண்டும் கொண்டு வர "அயராது உழைக்கின்றனர்.”

இதற்கேற்றாற்போல் சர்வதேச ரீதியாக ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சித் தலைமைகள், சோசலிச வேலைத்திட்டங்களுக்காக போராடுவது இன்றைய யதார்த்த மல்ல, பதிலாக திவாலடைந்த முதலாளித்துவ அமைப்பு முறையினால் ஏற்படுத்தப்படும் நெருக்கடிகளுக்கு தொழிலாளர்களை பலியாக்குவது மட்டுமே சாத்தியமானது என்று அவர்களது நடைமுறை கொள்கையில் எடுத்துக்காட்டி வருகின்றனர்.

இந்த துரோக ஸ்டாலினிச தலைமைகளுக்கும் ஏனைய தொழிலாள வர்க்க துரோகத் தலைமைகளுக்கும் எதிராக தொழிலாளர்களை சர்வதேச ரீதியாக மார்க்ஸ், ஏஞ்கெல்ஸ், லெனின், டிராட்ஸ்கி காட்டிய வழியில் ஒரு சர்வதேச புரட்சி கட்சியின் தலைமையின் கீழ் அணிதிரட்டி ஏகாதிபத்தியத்தையும் அதன் தேசிய முதலாளித்துவ, ஸ்டாலினிச, சமூக ஜனநாயகவாத, பப்லோவாத ஏஜண்டுகளையும் தூக்கி வீசி ஒரு திட்டமிட்ட உலக சோசலிச பொருளாதாரத்தை அமைக்க போராடி வருவது உலக டிராட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு மட்டுமே.

1947ல் இந்திய உபகண்டத்தில் திணிக்கப்பட்ட வகுப்புவாத அரசு அமைப்புமுறையை தூக்கிவீசி, மீண்டும் இந்திய உபகண்ட தொழிலாளர்களை பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தின் அடிப்படையில் ஒன்று திரட்டவும், உலக சோசலிச புரட்சியின் ஒரு பகுதியாக இந்திய உபகண்டத்தில் ஐக்கிய சோசலிச குடியரசுகள் அமைக்கவும், டிராட்ஸ்கியின் நிரந்தப் புரட்சி தத்துவத்தின் அடிப்படையில் சோசலிசத் தொழிலாளர் கழகம் போராடி வருகிறது.

தொழிலாள வர்க்கம் அதன் அடிப்படை உரிமைகளைப் பேண முதலாளித்துவ வர்க்கத்தில் இருந்து முழுமையான சுதந்திரத்துடனும் அதற்கு எதிராகவும் போராட வேண்டும். ஆனால் இன்றைய உலக முதலாளித்துவ நெருக்கடியின் மத்தியில் தொழிலாள வர்க்க இயக்கத்தில் உள்ள ஸ்டாலினிசத் தலைமைகளோ, தொழிலாள வர்க்கத்தின் சுதந்திரமான அணிதிரட்டலை விடுத்து, முதலாளித்துவத்துடன் அதனை முடிச்சுப் போடும் வேலையைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

மூன்றாம் அகிலத்தில் அப்போது தலைமையிலிருந்த ஸ்டாலினிச அதிகாரத்துவம் தொடங்கி வைத்த இந்த போக்கைப் பற்றி, நான்காம் அகிலத்தின் ஸ்தாபகரான டிராட்ஸ்கி இடைமருவு வேலைத்திட்டத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “அகிலமானது: (ஸ்டாலினிச அதிகாரத்துவத் தலைமையின் கீழ் மூன்றாம் அகிலம்) சீரழிந்து செல்லும் முதலாளித்துவ சகாப்தத்தில் சமூக ஜனநாயகத்தின் பாதையை பின்பற்றத் தொடங்கியுள்ளது. ஆனால் பொதுவாக, அங்கே வரிசைக்கிரமமான சமூக சீர்திருத்தங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை, பாட்டாளி வர்க்கத்தின் ஒவ்வொரு முக்கிய கோரிக்கையும் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் ஒவ்வொரு முக்கிய கோரிக்கையும் தவிர்க்க முடியாதபடி முதலாளித்துவ சொத்து உறவுகளின் மற்றும் முதலாளித்துவ அரசின் எல்லைகளுக்கு அப்பால் செல்கிறது!


நான்காம் அகிலத்தின் தொலைநோக்கு பணி முதலாளித்துவத்தை சீர்திருத்துவதில் அல்ல. அதைத் தூக்கி வீசுவதிலேயே உள்ளது. அதனுடைய அரசியல் நோக்கம் முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து அபகரிப்பதற்காக பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சி அதிகாரத்தை ஏற்படுத்துவது ஆகும்" (இடைமருவு வேலைத்திட்டம், 1938 பக்கம் 4, லேபர் பப்ளிகேஷன்ஸ்) எனவே வர்க்க நனவுள்ள தொழிலாளர்களே! ஏழை இளைஞர்களே! விவசாயிகளே! மார்க்சிசத்திற்கான போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கும் சோசலிசப் புரட்சியின் உலக கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் ஐக்கியம் கொண்ட சோசலிசத் தொழிலாளர் கழகத்தில் இணையுமாறு உங்கள் ஒவ்வொரு வரையும் அழைக்கிறோம்.

Wednesday, August 31, 2016

இந்தியாவுக்கு உதவி வழங்கும் குழு' துரித தாக்குதலுக்கு உத்தரவு


Thozhilalar Paathai collected volume 09
July 1993

இந்தியாவின் குரல்வளையை நெரிக்கும் ஏகாதிபத்திய நடவடிக்கை இறுக்கமடைந்து வரும் நிலையில் நரசிம்மராவ் அரசாங்கத்தின் அரசியல் நெருக்கடி மேன்மேலும் உக்கிரமடைய ஆரம்பித்துள்ளது.

 
இந்தியாவுக்கு உதவி வழங்கும் குழு எனப்பட்டதன் கூட்டம் ஜூலை 2ம் திகதி பாரிசில் கூடியது. இந்தியாவினுள் தமது சுரண்டலை நிலைநாட்ட ஏகாதிபத்தியம் அமைத்த இக்குழு, இம்முறை வழமைக்கு மாறாக எதிர்பார்த்ததை விட 20 கோடி டாலர் கூடுதலாக – 740 கோடி டாலர்களை உதவியாக வழங்கி தீர்மானித்துள்ளதென ராவ் அரசாங்கமும், முதலாளித்துவப் பத்திரிகைகளும் ஆர்ப்பரிக்கின்றன.

இந்த உதவி எனப்படுவது 1992 இறுதியில் இருந்த 7000 கோடி டாலர் கடன் மலையை மேலும் 740 கோடி டாலர்களால் அதிகரிக்கச் செய்துள்ளது. அக்கடன் பளு முழுவதும் பொதுமக்களின் முதுகெலும்பை உடைக்கும் ஒன்றாகும். அத்தோடு இதுவரை ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் தேசியப் பொருளாதாரம் என்பதை துடைத்துக் கட்டி, ட்ரான்ஸ்நஷனல் கம்பனிகளின் சுரண்டலை நிலைநாட்டும் வேலைத் திட்டத்தை துரிதப்படுத்த பொது மக்களின் தொழில், வாழ்க்கைத் தரம், நலன்புரி சேவை அனைத்தையும் ஒழித்துக் கட்டும் புதிய கட்டளைகள் 740 கோடி டாலர்களுடன் ராவ் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ராவ் அரசாங்கம் அமுல் செய்த சீர்திருத்தத் திட்டத்தை புகழ்ந்து "மகிழ்ச்சி" தெரிவித்த ஏகாதிபத்திய வங்கியாளர், இந்த உதவியுடன் "இந்திய அரசாங்கம் கையாண்டு வரும் சவால் நிறைந்த சீர்திருத்த நிகழ்ச்சி நிரலின் வெற்றியின் முழு முன்நோக்கினையும் உத்தரவாதம் செய்ய உதவும் வகையில் துரிதமானதும் தீர்க்கமானதுமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய துறைகள் சுட்டிக் காட்டப் பட்டுள்ளதாக" ஹிந்து பத்திரிகை குறிப்பிட்டது.

1996-97ல் நடைமுறைப்படுத்தி முடிக்கவுள்ள ஏகாதிபத்திய வேலைத் திட்டம் ஒன்றை 'செல்லையா குழு தீர்மானம்' என்ற பெயரில் அரசாங்கம் ஜூலை 9ல் வெளியிட்டது, அதில் ஓரம்சம், சுங்கவரி தீர்வையை நூற்றுக்கு 25%க்கு மேற்படாமல் வெட்டுவதாகும். இதனை "மேற்கத்திய நாடுகளின் சுங்கவரி தீர்வைக்கு ஒப்பானது" என விரிந்துரைத்தாலும், உண்மை நோக்கம் அதுவல்ல. ஏகாதிபத்தியம் உற்பத்திகளால் இந்தியச் சந்தையை நிருப்புவதற்கான நிலைமையைச் சிருஷ்டிப்பதே உண்மை நோக்கம்.

நடைமுறைக்கிடும் மற்றைய தீர்மானம் என்னவென்றால் 1993/94ல் மொத்தத் தேசிய வருமானத்தில் நூற்றுக்கு 7 வீதத்துக்குக் குறைக்கப்பட்டுள்ள வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறையை மேலும் வெட்டுவதாகும். அதாவது 1996-97ல் மாநில அரசுகளின் பற்றாக்குறையை நூற்றுக்கு 5% ஆகவும், மத்திய அரசாங்கத்தின் பற்றாக்குறையை நூற்றுக்கு 3% ஆகவும் வெட்டுவதாகும். நலன்புரி சேவை வெட்டு, விலைக் கட்டுப்பாட்டு முறையை அகற்றுதல், அரச துறைக்கான உதவித் தொகையை அகற்றுதல், அரச துறைக்கு மூடுவிழா என்பவற்றை அமுல்படுத்த வேண்டுமென்றே செல்லையா குழு இங்கு குறிப்பிடுகின்றது. தொழிலாள, ஒடுக்கப்பட்ட மக்களின் மேல் பாரிய அழிவினைச் சமுத்தும் இந்த தாக்குதலை "திடசங்கற்பத்துடன் நடைமுறைக்கிட வேண்டும்" என முதலாளிகள் கூறுகின்றனர். ஹிந்து பத்திரிகை அதன் ஜூலை 6ம் திகதிய ஆசிரியத் தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

எவ்வாறிருப்பினும் 1996-97 ஆண்டளவில் மத்திய, மாநில அரசுகளின் வரவு-செலவு திட்டப்பற்றாக்குறையை 3% அளவில் விளங்குமாறு குறைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளதைச் செயற்படுத்துவது பெரும் சிரமமாகும். நலன்புரி சேவை, விலைக் கட்டுப்பாட்டு என்பன தொடர்பாக வெறுப்புக்கிடமான முடிவெடுக்க நேரும். அத்தோடு மத்திய அரசாங்கம் பொருளாதாரச் சீர்திருத்தம் பூகோளமயமாக்கம் பற்றிய தமது கருத்துக்கு மாநில அரசுகளை இணைத்துக் கொள்ளவும், அதற்கு இணங்கச் செயற்பட அவற்றைத் தூண்டவும் நேரிடும்.”

செல்லையா குழு சிபாரிசு செய்யும் மற்றுமொரு தீர்மானம் ஏகாதிபத்தியம் ஏற்கனவே நிர்பந்தித்துள்ள "கைத்தொழில் பிரச்சினை மசோதாவைத்" திருத்துவதாகும். நோய் பிடித்த கம்பனிகளை மூடி, தொழிலாளரை வெளியேற்ற அரசாங்கத்தின் முன் அனுமதி தேவை என்ற சட்ட விதியை அகற்றிவிடுமாறு ஏகாதிபத்தியம் கோருகிறது, “வேலைநீக்க விதிமுறை" என்ற பெயரில் அரசாங்கம் வெளியிட்டுள்ள மசோதாவை அப்படியே நிறைவேற்றி அமுல் செய்ய உள்ளது.

உதவி வழங்கும் குழுக் கூட்டத்திற்கு இரு தினங்களுக்கு முன்னர் கல்கத்தாவில் ஸ்டாலினிஸ்டுகள் கூட்டிய மகாநாட்டில் கலந்து கொண்ட ராவ், ஏகாதிபத்தியவாதிகளின் கட்டளையை ஒன்றும் தவறாமல் செயற்படுத்த உள்ளதாக அறிவித்தார். “தனியார் துறையை ஊக்குவிக்க நாம் புதிய கைத்தொழில், வர்த்தக, நாணய கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்,” என ராவ் தெரிவித்துள்ளார்.

நரசிம்மராவ் அரசாங்கத்தினை பேருக்கு விமர்சனம் செய்து கொண்ட போதிலும், ராவ் அரசாங்கத்தினை ஆட்சியில் வைத்திருக்க தமது வாக்குகளையும், தொழிற்சங்கங்களைஉம் பாவித்து வரும் ஸ்டாலினிச இந்திய (மார்க்சிச) கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் மேற்கு வங்காள முதல் அமைச்சருமான ஜோதிபாசுவும் இம்மகாநாட்டில் பங்கு கொண்டார். பொருளாதாரத்தின் முக்கிய துறைகளில் முதலீடு செய்ய தனியார் துறை 'உற்சாகமின்றி' உள்ளது என்பதே ஸ்டாலினிச தலைவரின் முக்கிய வாதமாக விளங்கியது.

உலகச் சந்தைப் பங்கு போடலில் வெட்டுக் குத்து நடாத்தும் ஏகாதிபத்திய ஆளும் வர்க்கம்,இந்தியாவில் பாய்ச்சல் நடாத்த எடுத்துள்ள முயற்சி இந்திய முதலாளித்துவ வர்க்க நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளது. ராவ் அரசாங்கம், ஏகாதிபத்திய ஆணையை செயல்படுத்துவதாக உறுதிக்கு மேல் உறுதி வழங்கி வரும் சமயத்தில் தொழிலாள, ஒடுக்கப்படும் மக்களை அடக்க காங்கிரஸ் அரசாங்கத்தைக் காட்டிலும் தாம் சிறந்த விதத்தில் ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்யத் தகுதியுடையோர் என நிரூபிக்கும் முகமாக பாரதீய ஜனதா கட்சி இனவாதத்தை தூண்டி, பாசிச சக்திகளை அணிதிரட்ட முன் பாய்ந்துள்ளது.

பம்பாய் பங்கு முதல் சந்தை ஊழலின் பெரும் புள்ளியான ஹர்ஷத் மேத்தா, அரசாங்க பாதுகாப்பு பெற நரசிம்மராவுக்கு ஒரு கோடி ரூபா லஞ்சம் வழங்கியதாக அறிவித்தமை, ஆளும் வர்க்க அரசியல் இழுபறிகளின் ஆயுதம் ஆகியுள்ளது. காங்கிரஸ் கட்சி, ராவ் பரிசுத்தமானவர் எனத் தெரிவித்த அதே சமயம் பாரதீய ஜனதா கட்சி அரசாங்கத்தை ராஜினாமா செய்ய வைக்க இந்த ஊழல் குற்றச்சாட்டை பயன்படுத்துகின்றது.

ஏகாதிபத்தியத்தின் கொடிய கட்டளைகளுடன் அதை செயற்படுத்த ஆளும் வர்க்கம் நடாத்தும் எதிர்ப்புரட்சி தயாரிப்புக்களும் இந்திய ஏகாதிபத்திய பாணி முதலாளித்துவ ஆட்சியைத் தூக்கிவீசி சோசலிச அடிப்படையில் இந்தியத் தொழிலாள-ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகளை பேணும் வேலைத் திட்டத்துக்கு போராட வேண்டியதன் அவசியத்தை புலப்படுத்துகின்றது. முதலாளித்துவ வர்க்கத்தின் ஏகாதிபத்திய பூகோளமயமாக்கங்கள் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியத் தொழிலாள வர்க்கம் உலகத் தொழிலாள வர்க்கத்துடன் இணைந்து ஏகாதிபத்தியத்தை தூக்கிவீசும் உலக சோசலிச வேலைத் திட்டத்துக்கு போராட வேண்டும். இந்தியத் துணைக் கண்டத்தின் சோசலிசக் குடியரசுக்கான போராட்டம், இந்த வேலைத்திட்டத்தின் ஒரு பாகமாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கை கிளையான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் இந்தியாவின் சோசலிசத் தொழிலாளர் கழகமும் இவ்வேலைத் திட்டத்தின் அடிப்படையிலேயே போராடுகின்றன.

Tuesday, August 30, 2016

ஒரே முன்வழி தொழிலாள வர்க்க அனைத்துலக ஐக்கியமே


Thozhilalar Paathai collected volume 09
July 1993

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் அரசியல் ஐக்கியம் பூண்டதும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் தோழமை அமைப்புமான இந்திய சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் சார்பில் அதன் செயலாளர் தோழர். அருண் குமார் ஆண்டு நிறைவு விழாவில் வாழ்த்துச் செய்தி வழங்கி நிகழ்த்திய உரை

 
அன்பில் தோழர்களே,

நானும் தோழர் ராமும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் இந்த 25வது ஆண்டு நிறைவு விழாவுக்கு இந்திய சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் சகல அங்கத்தவர்களதும் புரட்சிகர நல்வாழ்த்துக்களுடன் வருகை தந்துள்ளோம். இச்சந்தர்ப்பத்தில் பு... வின் முன்னாள் பொதுச் செயலாளர் மறைந்த தோழர் கீர்த்தி பாலசூரியவை மிகுந்த கௌரவத்துடன் நினைவு கூர்வதோடு எமது மரியாதையையும் செலுத்துகின்றோம். அவ்வாறே பாட்டாளி வர்க்க அனைத்துலகவாதத்தினைக் காக்கும் தமது போராட்டத்தினுள் தமது உயிர்களைத் தியாகம் செய்த பு... அங்கத்தவர்களுக்கு நாம் மரியாதை செலுத்துகின்றோம். சோதனைக்குள்ளான காலத்தில் இருந்து தோன்றிய இன்றைய பு... தலைமை தோழர் கீர்த்தி பாலசூரியவும் ஏனைய தோழர்களும் உயிர்த்தியாகம் செய்த போராட்டத்தினை இறுதிவரை முன்னெடுப்பர் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

1985-86 பிளவின் போது தொழிலாளர் புரட்சிக் கட்சியின் பப்லோவாத கலைப்பாளர்களுக்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வேலைத்திட்ட அடிப்படையைக் காக்க புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் நடாத்திய திடசங்கற்பம் மிகுந்த போராட்டம் இல்லாது போயிருக்குமானால் இந்தக் கூட்டத்தில் நாம் கலந்து கொள்ள வாய்ப்புக் கிட்டியிராது. தோழர். கீர்த்தி பாலசூரிய, தோழர். டேவிட் நோர்த்துக்கு 1987 ஜூன் 17ம் திகதி எழுதிய கடிதத்தில் தொழிலாளி வர்க்கத்துக்கு இந்தப் பிளவின் அர்த்தத்தினை மிகவும் ஆழமாக வடித்திருந்தார். அவர் எழுதியது இதுதான்: “சரியாகச் சொன்னால், அனைத்துலகக் குழுவின் உள்ளிருந்து ஹீலி-பாண்டா-சுலோற்றரை ஒட்டிக் கலைத்தும் அவர்களை மார்க்சிசத்தின் எதிரிகளாக அம்பலப்படுத்தும் முழுப் போராட்டமும் இல்லாது போயிருந்தால் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் இந்தியாவில் சோசலிசத் தொழிலாளர் கழகமும் இன்றைய நிலைமையில் முதலாவது கட்டத்திலேயே அரசியல் நெருக்கடிக்கு முகம் கொடுத்திருக்கும். அவர்களின் ட்ரொட்ஸ்கிச பூச்சாண்டிகளை சவால் செய்யாது விட்டிருந்தால், சிறப்பாக இந்தியாவினுள் கையாலாகாத்தனமாக ஆளும் வர்க்கமும் இரு நாட்டினதும் குட்டி முதலாளித்துவ இயக்கங்களும் புரட்சிகர மார்க்சிஸ்டுகளை முழுமனே தனிமைப்படுத்த உதவும் வகையில் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்ய அனைத்துலகக் குழுவின் கிளைகள் வலதுசாரிப் போக்குகளால் கீழ்ப்படுத்தப்படுவது தவிர்க்க முடியாததாகியிருக்கும். நிரந்தரப் புரட்சிக் கோட்பாடு பற்றிய ஹீலி-பண்டா-சுலோற்றரின் நிலைப்பாட்டினை அனைத்துலகக் குழுவின் உள்ளே அம்பலப்படுத்துவது, துணைக் கண்டத்தினுள் வர்க்கப் போராட்டத்தின் இன்றைய கொடிய வெடிப்பின் தீர்க்க தரிசனம் மட்டுமன்று அது தேசிய முதலாளித்துவ வர்க்கமும் அதன் குட்டி முதலாளித்துவ ஏஜண்டுகளும் தொழிலாளி வர்க்கத்தினைத் தம்முடன் 'தேசிய' கசாப்புக் கடைக்கு இழுத்துச் செல்ல எடுக்கும் சகல முயற்சிகளுக்கும் எதிராகப் போராடும் பொருட்டு இருநாட்டினதும் தொழிலாளி வர்க்கத்தின் முன்னேறிய பகுதியினரைக் கோட்பாட்டு, அரசியல்ரீதியில் ஆயுதபாணியாக்குவதும் ஆகும்.”

வரலாறு, வேலைத்திட்டம், அடிப்படைக் கொள்கை தொடர்பான பிரச்சினை பற்றி தோழர். கீர்த்தி கொண்டிருந்த சமரசமற்ற மனப்பாங்கு, எம் அனைவருக்கும் பிரமாண்டமான உத்வேகத்தினை வழங்கியது. மத்தியவாதம், சந்தர்ப்பவாதத்துக்கு எதிரான போராட்டத்தின் தீர்க்கமான வரலாற்று அர்த்தத்தினை-அதாவது உலக சோசலிசப் புரட்சியின் வெற்றியும், ஆதலால் மனித இனத்தின் உயிர்வாழ்வும் எல்லாவற்றிற்கும் மேலாக இப்போராட்டத்தினுள் ட்ரொட்ஸ்கிச இயக்கம் காட்டும் ஈவிரக்கமற்ற தன்மையில் தங்கியுள்ளது என்பதை அவர் வேறு எவரைக் காட்டிலும் நன்கு ஆழமாகப் புரிந்து கொண்டிருந்தார்.

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாது இந்தியாவினுள் ட்ரொட்ஸ்கிசக் கட்சியைக் கட்டி எழுப்ப புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் போராடியது. தோழர்களே, நீங்கள் 1917ல் பங்களாதேஷ் யுத்தம் பற்றிய பத்திரங்களை வாசித்திருப்பீர்கள். தொ.பு.. தலைவர்கள் கிழக்குப் பாகிஸ்தானுக்கு அல்லது பங்களாதேஷ் எனப்படுவதற்கு நடாத்திய இந்திய இராணுவத் தலையீட்டினை ஒரு முற்போக்கு நடவடிக்கையாகத் தூக்கிப் பிடிக்கையில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அது மேற்கு, கிழக்கு வங்காளத் தொழிலாளர்களிடையேயான ஐக்கியத்தினை தவிர்ப்பதையும், அத்தருணத்தில் வீழ்ச்சி காண தொடங்கி இருந்த துணைக் கண்டத்தின் யுத்தத்தின் பின்னைய சமநிலையைப் பேணுவதையும் இலக்காகக் கொண்டு எடுக்கப்பட்ட பிற்போக்கு நடவடிக்கை என அம்பலப்படுத்தியது.

தோழர். கீர்த்தி 1960 பதுகளின் கடைப்பகுதியில் தோன்றிய நக்சலைட் இயக்கத்தினை மார்க்சிச விமர்சனத்துக்கு உள்ளாக்கியதில் இந்திய தொழிலாள வர்க்கத்துக்குச் சுயாதீனமான வர்க்க நிலைப்பாட்டினை கடைப்பிடிக்க பு... நடாத்திய போராட்டத்தினை கண்டு கொள்ள முடியும். இக்காலப் பகுதியிலேயே தோழர். கீர்த்தி ஜேவீபி பற்றிய சக்திவாய்ந்த மார்க்சிச ஆய்வினை எழுதினார்.

1985-86 பிளவு, பு...வுக்கும் சோசலிசத் தொழிலாளர் கழகத்துக்கும் இடையேயும், அவ்வாறே அனைத்துலகக் குழுவின் ஏனைய பகுதிகளுடனும் நெருக்கமான அரசியல் உறவுகளுக்கான கதவினைத் திறந்து விட்டது.

இந்திய-இலங்கை உடன்படிக்கையை எதிர்த்தும், வடக்கு-கிழக்கில் இருந்து இந்திய ஆக்கிரமிப்பு படைகளை வெளியேற்றவும் பாட்டாளி வர்க்க அனைத்துலகவாத அடிப்படைக் கொள்கைகளின் அடிப்படையில் சிங்கள-தமிழ் இந்திய தொழிலாளர்களின் ஐக்கியத்துக்குப் போராடிய இந்தியாவின் ஒரே கட்சி சோசலிசத் தொழிலாளர் கழகமே.

தொழிற்சங்க அதிகாரத்துவத்துக்கு எதிராக மாற்று ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்துக்கு உறுதியாகப் போராடும் சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் அங்கத்தவர்கள் தமது தொழிற்சங்கங்களின் தலைமைக் கமிட்டிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டதன் மூலம் சோ.தொ.. தொழிலாளர்களிடையே தமது செல்வாக்கினைத் தொடர்ந்து வளர்த்துக் கொண்டுள்ளதைக் காண முடியும். இந்தியாவின் பழையதும் பெரியதுமான ஆடைத் தொழிற்சாலையான பக்கிங்காம் கர்நாடக மில்லில் (பி&சி) ஸ்டாலினிச தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஒத்துழைப்புடன் நிர்வாகத்தின் வேட்டைக்கு உள்ளாகியுள்ள சோசலிச தொழிலாளர் கழகத்தின் தோழர். மோசஸ் கடந்த ஜூன் 19ம் திகதி தொழிற்சங்கக் கமிட்டி உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சென்னை ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் என்ற மற்றுமோர் பிரமாண்டமான மோட்டார் பக்டரியினுள் எமது தோழர். கைலாசம் கடந்த ஆண்டில் இருந்து இரண்டாவது தடவையாகவும் கமிட்டி உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சோசலிசத் தொழிலாளர் கழகம் இப்பொழுது இரண்டு மொழிகளில்—தமிழ், வங்காளி—பத்திரிகைகளை வெளியிடுகின்றது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வரலாற்று வேலைத்திட்டம், அடிப்படைக் கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாளி வர்க்கத்தின் முன்னேற்றமான பகுதியினர் அரசியல் விளக்கம் பெறவும், பயிற்சி பெறவும் எமது வரையறுக்கப்பட்ட வளங்களுடன் நாம் போராடி வருகின்றோம்.

கிழக்கு ஐரோப்பாவிலும் சோவியத் யூனியனிலும் ஸ்டாலினிச அதிகாரத்துவங்களின் வீழ்ச்சியும் இந்நாடுகளின் அரச அமைப்புகள் சிதறண்டு போனமையும் அனைத்துலகத் தொழிலாளர் வர்க்கத்தின் உள்ளே பிரமாண்டமான குழப்பத்தினை உண்டு பண்ணியுள்ளது. தொழிலாள வர்க்கத்தின் பழைய அமைப்புகளான தொழிற் சங்கங்களும் சமூக ஜனநாயகக் கட்சிகளும் ஸ்டாலினிசக் கட்சிகளும் அனைத்துலகத் தொழிலாளர் வர்க்கத்தின் வெற்றிகளுக்குத் தொடுக்கப்படும் தாக்குதல்களின் எதிரில் தமது பூரண வங்குரோத்தினையும் பிற்போக்கினையும் அம்பலமாக்கியுள்ளன. இலட்சோப லட்சம் அங்கத்தவர்களைக் கொண்டுள்ளதாகக் கூறிக் கொண்ட கட்சிகள் இரவோடிரவாக சிதறிச் சின்னாபின்னமாகிப் போயின.

ஐக்கிய செயலக பப்லோவாதிகளின் நிலைப்பாடும் அடியோடு எதிர்ப்புரட்சி என்பது முழுமனே அம்பலமாகியது. தொ.பு.. ஓடுகாலிகளுடன் 1985-86ல் ஏற்பட்ட பிளவு அனைத்துலகத் தொழிலாளி வர்க்கத்தின் முன்னேற்றமான பிரிவினிரடையே பிளவின் அடிப்படை அரசியல், கோட்பாட்டுப் பிரச்சினைகளை அரசியல் ரீதியில் தெளிவுபடுத்துவதற்கான வல்லமையை அனைத்துலகக் குழுவுக்கு வழங்கியது.

தொ.பு.. தலைமை எதிரி வர்க்க சக்திகளுக்கு அடிபணிந்து போயிருந்தது. இன்று இந்தச் சக்திகள் சுரண்டும் விதத்தினை அதிகரித்து, தொழிலாள வர்க்கத்தினை நசுக்கும் ஏகாதிபத்திய வாதிகளின் கைத்தேங்காயாக மாறியுள்ளன. ஸ்டாலினிச அதிகாரத்துவத்தினதும் தொழிற்சங்க, சமூக ஜனநாயக அதிகாரத்துவத்தினதும் முதலாளித்துவ தேசியவாதிகளதும் பண்பு ரீதியிலான பரிணாமத்தினை ஆழமாக ஆய்வு செய்த ஒரே அரசியல் கட்சி, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவே. அவர்களின் பண்பு ரீதியிலான பரிணாமத்துக்கு பின்னணியில் வெறும் கெட்ட பழக்க வழக்கங்கள் அன்றி நல்ல ஆழமாக நோக்கின், தேசிய அரச அமைப்பினை அடிப்படையாகக் கொண்ட தேசியவாத, சீர்திருத்தவாத வேலைத்திட்டம் உள்ளது.

கணினிமயமாக்கம், தொலைத் தொடர்பு, போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பப் புரட்சிகளுடன் இணைந்து உற்பத்தி பூகோளமயமானதும், முதலாளித்துவ உற்பத்தியின் பொருளாதார அலகாக விளங்கிய தேசிய அரச அமைப்புக்கு வரலாற்று ரீதியான நெருக்கடியை உருவாக்கி உள்ளது. உலக முதலாளித்துவத்துக்கான புதிய வாழ்க்கைக்கான மூச்சினை சிருஷ்டித்துக் கொடுத்த யுத்தத்தின் பின்னைய சமநிலையும் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள ஆழமான மாற்றங்களினால் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்நடைமுறையை நாம் அனைத்துலக ரீதியில் கண்டு கொள்ள முடியும்.

இந்திய முதலாளித்துவ ஆட்சியின் நெருக்கடி இந்தச் செயல்பாட்டின் ஒரு பாகமாகும். தமது வெறும் ஏகாதிபத்திய எதிர்ப்பு வாய்வீச்சுக்களினாலும் சுயபூர்த்தி வேலைத்திட்டத்தின் மூலமும் நான்கு தசாப்தங்கள் ஊடாக இந்தியாவை ஆட்சி செய்த இந்திய காங்கிரஸ் கட்சி, இன்று ராவ் தலைமையின் கீழ் ஏகாதிபத்திய நிதி அமைப்புகள், ட்ரஸ்டுகளின் கைக்கூலியாக முழுமனே பரிணாமம் அடைந்துள்ளது.

பிராந்தியவாத போக்குகள் இந்திய யூனியனில் இருந்து பிரிந்து செல்லும் எல்லை வரை வளர்ச்சி கண்டுள்ளது. ஒவ்வொரு பிராந்திய மாநில அரசுகளும் பன்னாட்டுக் கம்பனிகளின் முதலீடுகளை ஈர்க்கும் முகமாக ஆளுக்காள் போட்டியிட்டுக் கொண்டுள்ளன. தொழிலாளர்களை நெறிப்படுத்துவதில் தாம் எவ்வளவு நன்றாகத் தொழிற்படுகின்றோம் என்பதை ஏகாதிபத்தியவாதிகளுக்கு நிரூபிக்கும் முகமாக மாநில அரசாங்கங்கள் தொழிலாளர் போராட்டங்களுக்குத் துப்பாக்கிப் பிரயோகம் செய்யத் தொடங்கியுள்ளனர். தமிழ் நாட்டில் கடந்த மூன்று மாதங்களுக்குள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அரசாங்கம் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆடை நெசவு தொழிலாளர்களுக்கும், கரூரில் சீனித் தொழிலாளர்களுக்கும் தூத்துக்குடியில் துறைமுகத் தொழிலாளர்களுக்கும் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய உத்தரவிட்டுள்ளது.

1960பதுகளில் ஒரிஸ்சா துறைமுக நிர்மாண வேலைகளில் ஈடுபட்டிருந்த நூற்றுக் கணக்கான ட்ரக் வண்டிகளின் சில்லுகளால் 200 சிறுவர்களை நெரித்துக் கொன்றதை ஸ்டாலினிஸ்டுகளின் ஜனநாயக சகபாடி எனப்படும் ஒரிஸ்சா மாநில முதலமைச்சர் பிஜூ பட்நாயக் சமீபத்தில் அம்பலப்படுத்தினார்.

தமது மாநிலத்தில் சேவை கலாச்சாரத்தையும் தொழிற்சங்க இயக்கத்தினையும் விமர்சனம் செய்து இந்தியாவில் வதிவில்லாதவர்களும் (NRI) இந்திய கைத்தொழிலாளர்களும் தம்மிடம் அநேக முறைப்பாடுகளைச் செய்து கொண்டுள்ளதாக மேற்கு வங்காள ஸ்டாலினிச முதலமைச்சர் ஜோதி பாசு ஜூன் 22ம் திகதி கல்கத்தாவில் ...

அடிப்படை கொள்கைகளுக்கும், மூலோபாயத்துக்குமான 25 ஆண்டுகால உறுதியான போராட்டம்


[Indian Socialist Labour League leaders participate in the 25th anniversary of Revolutionary Communist League.]

Thozhilalar Paathai (File 439)
August 1993

பு... பொதுச் செயலாளர் விஜே டயஸ், 25 ஆண்டு நிறைவு விழாக் கூட்டத்தில் நிகழ்த்திய உரை

தோழர்களே, தோழியர்களே, நண்பர்களே

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் இந்த 25வது ஆண்டு நிறைவுக் கூட்டம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைக் கிளையான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினை கட்டி எழுப்பும் போராட்டத்தில் பல்வேறு விதத்திலும் பங்கு கொண்ட அனைவரும் பெருமைப்படக் கூடிய ஒரு தருணமாகும் என முதலில் குறிப்பிட விரும்புகின்றேன்.

பு... வை கட்டியெழுப்பும் போராட்டம், 25 ஆண்டுகள் பூராவும் மார்க்சிசப் புரட்சிகர அடிப்படைக் கொள்கைகளையும் உலக சோசலிசத்தின் மூலோபாயத்தினையும் தொழிலாள – ஒடுக்கப்படும் மக்களிடையே நிலை நாட்டத் தொடுத்த போராட்டமாகும். ஆரம்பத்தில் இருந்து புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அந்தத் தொழிலாள வர்க்க அனைத்துலகவாத அடிப்படையில் காலூன்றாமல் தொழிலாள வர்க்கத் தலைமை நெருக்கடியை தீர்த்து வைக்கும் ஒரு கட்சியைக் கட்டியெழுப்ப முடியாது என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறது.

சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியான நான்காம் அகிலத்தினைப் பிரதிநிதித்துவம் செய்து, அதன் ஜேர்மன் கிளையின் செயலாளர் தோழர் உலி றிப்பேர்டும், எமது தோழமை இந்திய சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் தோழர்களான அருண்குமார், ராம் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டதன் மூலம் அப்போராட்டத்தின் அடிப்படைத் தன்மை ருசுவாகியுள்ளது. ...