"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Sunday, June 5, 2016

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் ஐக்கியம் கொண்ட சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் தேர்தல் அறிக்கை



[‎The election manifesto (1991) of ‪SLL-India‬.]
 
Thozhilalar Pathai Volume 039
June, 1991


தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தை கட்ட!

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுதந்திரத்தை காக்க!

காஷ்மீர், பஞ்சாப் மற்றும் வடகிழக்கு பகுதிகளிலிருந்து இராணுவத்தை வாபஸ் வாங்க!
பாசிசத்திற்கு வழி அமைக்கும் கூட்டரசாங்கத்தில் சிபிஐ (எம்) சி.பி.. தலைமைகள் சேரும் முயற்சியை முறியடிக்க!

சி.பி.. (எம்), சி.பி.. ஸ்டாலினிச தலைமைகளை முதலாளித்துவக் கட்சிகளுடனான உறவைத் துண்டித்து, தொழிலாளர்-விவசாயி அரசாங்கம் அமைக்கப் போராடும்படி நிர்பந்திக்க!

இந்திய துணைக்கண்டத்தில் ஐக்கிய சோசலிசக் குடியரசுகளை நிறுவ!

சோசலிச மற்றும் புரட்சிகர ஜனநாயக வேலைத்திட்டங்களை நிறைவேற்றும் தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கம் அமைக்கப் போராட!
சோசலிசத் தொழிலாளர் கழக வேட்பாளர்கள்

வட சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு பி&இ தொழிலாளி பி. மோசஸ்

வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு ஸ்டாண்டர்ட் மோட்டார் தொழிலாளி எம். கைலாசம்

ஆகியவர்களை ஆதரித்து ரயில் என்ஜின் சின்னத்தில் முத்திரை இடுங்கள்!

டாட்டா, பிர்லாக்களின் முதலாளித்துவ கட்சிகளான—காங்கிரஸ், தேசிய முன்னணி, பி.ஜே.பி., தி.மு., அதிமுக வேட்பாளர்களை நிராகரியுங்கள்! மற்றைய தொகுதிகளில் சி.பி.. (எம்), சி.பி.. வேட்பாளருக்கு மட்டும் உங்கள் கண்டன வாக்குகளை அளியுங்கள்!

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவுடன் ஐக்கியம் கொண்ட இந்தியாவிலுள்ள டிராட்ஸ்கிச இயக்கமாகிய சோசலிசத் தொழிலாளர் கழகம் ஜூன் 15, 1991 இல் நடக்க இருக்கும் மக்களவை, சட்டசபைத் தேர்தல்களில் தலையீடு செய்கிறது. வட சென்னை மக்களவைத் தொகுதியில் சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் வேட்பாளராக மூடப்பட்டிருக்கும் பி அண்டு சி மில் தொழிலாளியும் தொழிற்சங்க போராளியுமான தோழர் பி. மோசஸ் நிறுத்தப்பட்டுள்ளார். வில்லிவாக்கம் சட்டசபைத் தொகுதிக்கு சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் வேட்பாளராக இரண்டு வருடங்களுக்கு மேலாக கதவடைப்பு செய்யப்பட்டிருக்கும் ஸ்டாண்டர்டு மோட்டார் தொழிலாளியும், தொழிற்சங்க போராளியுமான தோழர் எம். கைலாசம் நிறுத்தப்பட்டுள்ளார்.
இத்தேர்தலில் சோசலிசத் தொழிலாளர் கழகம் தொடுக்கும் புரட்சிகர சர்வதேசியத்துக்கான, சோசலிசக் கொள்கைகளுக்கான பிரச்சார இயக்கத்துக்கு ஆதரவளிக்கும்படி அனைத்து தொழிலாளர்களையும், மாணவர்களையும், இளைஞர்களையும், வேலையற்றோரையும், விவசாயத் தொழிலாளர்களையும் இல்லத்துப் பெண்களையும் கேட்கிறோம்.

இத்தேர்தலில் தொழிலாளர்களுக்கும், ஒடுக்கப்படும் பரந்த மக்களுக்கும் உண்மையை கூறும் ஒரே கட்சியும், வேட்பாளர்களும் சோசலிசத் தொழிலாள கழகமும் அதன் வேட்பாளர்களுமே தவிர வேறு யாருமல்ல. அதாவது தொழிலாளர்களும், ஏழை விவசாயிகளும், குடும்ப பெண்களும், ஒடுக்கப்படும் சிறிய தேசிய இனங்களும் சிறுபான்மை மதப் பிரிவைச் சேர்ந்தவர்களும் எதிர்கொள்ளும் வாழ்வா சாவா எனும் பிரச்சினைகளுக்கு, காலாவதியாகி, திவாலடைந்துள்ள முதலாளித்துவ அமைப்பை வர்க்கப் போராட்ட முறை மூலம் கவிழ்க்காமல் தீர்வு காண முடியாது.

இன்றைய சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் சமூக இன்னல்கள்—வேலையின்மை, வறுமை, வீடின்மை, கல்வியறிவின்மை, சத்துணவின்மை, ஆலைமூடல்கள், விலைவாசி ஏற்றங்கள், கொத்தடிமை முறை, இன, மதக்கலவரங்கள்—அத்தனையுமே இறுதி ஆய்வில் பார்க்கையில் சீரழியும் முதலாளித்துவ அமைப்பினால் ஏற்படுத்தப்படுபவை ஆகும். கோடானுகோடி தொழிலாளர்களின் மற்றும் ஒடுக்கப்படும் மக்களின் மிக அடிப்படைத் தேவைகள் மிகக் கோரமான டாட்டா, பிர்லாக்ககளின் லாபத் தேவைகளின் பலிபீடத்தில் பலியிடப்பட்டு வருகின்றன.

இன்றைய ஆழமான முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி நிலைமையின் மத்தியில் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சி அமைக்கும் எந்த ஒரு அரசாங்கமும் ஏகாதிபத்திய வங்கியாளர்களின் ஏஜண்டுகளாக, தொழிலாளர்கள் விவசாயிகளுக்கு எதிராக இதற்கு முன் கண்டிராத தாக்குதல்களை தொடுப்பார்கள். இவ்வாறு முதலாளித்துவ நெருக்கடியின் சுமையை தொழிலாள வரக்கத்தின் மேல் சுமத்துவதற்கு எதிராக வளர்ச்சி அடையும் வர்க்கப் போராட்டங்களை கட்டுப்படுத்தவும், பாசீச ஆட்சியை ஏற்படுத்துவதற்கான சமூக நிலைமைகளை உண்டு பண்ணவும் ஆளும் வர்க்கம் தொழிலாள வர்க்கத்தினுள் உள்ள சி.பி.எம். (எம்), சி.பி.. துரோக தலைமைகளின் சேவைகளை பயன்படுத்திக் கொள்ள அவர்களை கூட்டரசாங்கத்தில் சேர்த்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது.

தொழிலாள வர்க்கத்தின் மற்றும் ஒடுக்கப்படும் மக்களின் எதிர்காலம் நிச்சயமாக இந்தத் தேர்தல் முடிவுகளில் தங்கியிருக்கவில்லை. ஆனால் முதலாளித்துவத்துக்கு எதிரான புரட்சிகரமான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் பிரமாண்டமான சமூக சக்தியையும் அதன் பின்னால் ஏழை விவசாயிகளையும், ஒடுக்கப்படும் பரந்த மக்களையும் அணிதிரட்டுவதில் தான் தங்கி இருக்கிறது.

இந்த முக்கியமான உண்மையை தொழிலாள வர்க்கத்துக்கு எடுத்துரைக்கவே 1991 தேர்தல்களில் சோசலிச தொழிலாளர் கழகம் தலையீடு செய்கிறது. பரந்தளவில் ஆலைமூடல்கள், ஆட்குறைப்புகள், சம்பள வெட்டுக்கள், வேலையின்மை, வறுமை, ஏகாதிபத்திய வங்கியாளர்களின் நிபந்தனைகளுக்கு அடிபணிவு முதலிய நிலைமைகளிலிருந்து விடுபடுவதற்கான ஒரு புரட்சிகரமான சர்வதேசிய சோசலிச வேலைதிட்டத்தை லட்சக்கணக்கான தொழிலாளர்கள், இளைஞர்கள் முன்வைக்கவே நாம் தோழர்கள் மோசசையும், கைலாசத்தையும் இத்தேர்தல்களில் நிறுத்தியுள்ளோம்.

சோசலிசத் தொழிலாளர் கழகத்தில் வேலைத்திட்டம் திவாலான முதலாளித்துவ லாப உற்பத்தி அமைப்பை சீர்திருத்தம் செய்வதை இலக்காக கொண்டிருக்கவில்லை. மாறாக இந்த அமைப்பை கவிழ்ப்பதையே அதன் இலக்காக கொண்டுள்ளது. முதலாளித்துவ அரசியல்வாதிகளின் ஒரு அணியை அகற்றிவிட்டு அதனிடத்தில் மற்றொரு முதலாளித்துவ அரசியல்வாதிகளின் அணியை ஆட்சியில் ஏற்றவும், அவற்றின் ஒரு அணியுடன் கூட்டரசாங்கம் வைக்கமும் ஸ்டாலினிச சி.பி.. (எம்), சி.பி.. தலைமைகளைப் போல முயற்சிக்கவில்லை. ஆனால் முதலாளித்துவ வர்க்கத்தின், நிலப்பிரபுக்களின் உடைமைகளை சுவீகாரம் செய்து, சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் புரட்சிகர ஐக்கியத்தை ஏற்படுத்தி, சோசலிச சமுதாயத்தை நிர்மாணிக்கவே போராடுகின்றது.

சோசலிசத் தொழிலாளர் கழகம் நான்கு அடிப்படையான கடமைகளை தொழிலாள வர்க்கத்தின் முன்னால் வைக்கிறது.

  1. முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் அனைத்து நாடுகளையும் சேர்ந்த தொழிலாளர்களின் சர்வதேச ஐக்கியத்தைக் கட்டல்!

முதலாளித்துவம் ஒரு உலகப் பொருளாதார அமைப்பாகும். இந்தியாவிலுள்ள தொழிலாளர்கள் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு பகுதியாவார்கள். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்கள் பன்னாட்டு ஏகபோக கம்பெனிகளின் சுரண்டலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அவை பூகோள ரீதியாக உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன, பெருமளவு லாபங்களை தேடி ஒரு நாட்டிலிருந்து மற்றைய நாட்டுக்கு உற்பத்தியை மாற்றுகின்றன. அப்படியான பன்னாட்டு கம்பெனிகள் இந்தியா போன்ற பின்தங்கிய முதலாளித்துவ நாடுகளில் மலிவான கூலியைத் தோடி, இந்திய முதலாளிதுவத்துடன் கூட்டு நிறுவனங்கள் அமைக்க வருகின்றனர். இந்தக் கம்பெனிகளின் தாக்குதலுக்கு எதிரான வெற்றிகரமான போராட்டத்தை சி.பி.. (எம்), சி.பி.. மாவோவாத கட்சிகளின் தேசியவாத கொள்கையின் அடிப்படையில் செய்ய முடியாது. பூகோள ரீதியில் இயங்கும் ஏகாதிபத்திய கம்பெனிகளின், அவற்றின் கூட்டு நிறுவனங்களின் தாக்குதல்களை எதிர்கொள்ள இந்தியாவிலுள்ள தொழிலாளர்கள் முக்கியமாக ஏகாதிபத்திய நாடுகளிலுள்ள தொழிலாளர்களுடன் போராட்டத்தில் ஐக்கியப்பட வேண்டும். அவர்களுடைய நாடு, மொழி, நிறம், மதம் எதுவாக இருந்தாலும் தொழிலாளர்கள் பொதுவான நலன்களின் அடிப்படையில் ஒரே முதலாளித்துவ எதிரியுடன் தான் மோதுகின்றனர்.

இதற்காக சர்வதேசிய புரட்சிகர மூலோபாயத்தை வகுக்க வேண்டும்.

    2. இந்திய துணைக்கண்டத்தில் ஐக்கிய சோசலிசக் குடியரசுகளை உருவாக்கல்

இரண்டாம் உலகப் போரின் பிற்பாடு துணைக்கண்டத்தில் ஏகாதிபத்தியத்தினால் உருவாக்கப்பட்ட "சுதந்திர அரசுகளுக்கு" எதிராக தொழிலாளர்களும், விவசாயிகளும், ஒடுக்கப்படும் சிறிய தேசிய இனங்களும் கிளர்ச்சி இயக்கத்திலும், உள்நாட்டு யுத்தத்திலும் ஈடுபட்டுள்ளார்கள். அக்டோபர் புரட்சியின் குழிறிப்பாளன், சலுகை நிறைந்த ஒட்டுண்ணி அதிகாரத்துவத்தின் தலைவனான ஸ்டாலினின் வழிகாட்டுதலின்கீழ் இந்தியா, இலங்கையைச் சேர்ந்த ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சிகளின் அரசியல் ஆதரவுடன் 1947ல் இந்திய துணைக்கண்டத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும், இந்திய முதலாளித்துவமும், எதிர்புரட்சி சதி செய்து இந்தியப் பிரிவினை என்ற ரத்த வெள்ளத்தில் மதவகுப்புவாத அரசுகளை உருவாக்கினர். அதேபோல் 1948ல் இலங்கையில் இனவாத அரசு உருவாக்கப்பட்டது. இந்தியத் துணைக்கண்டம் இன்று பல்வேறு தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருந்து கொண்டிருக்கிறது. இத்தகைய அரசுகளினால் ஒடுக்கப்படும் காஷ்மீர்; தமிழ் ஈழம் போன்ற சிறிய தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையையும் சிறிய மொழி, மதப்பிரிவினரின் அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் அங்கீகரித்தல், ஏகாதிபத்தியத்திற்கும் அதன் அரசியல் ஏஜண்டுகளாக செயல்படும் தேசிய முதலாளித்துவ ஆட்சிகளுக்கும் எதிரான போராட்டத்தில் புரட்சிகர சர்வ தேசிய கொள்கையின், சோசலிசக் கொள்கையின் அடிப்படையில் துணைக்கண்டத் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தி, மதவகுப்புவாத அரசுகளைத் தகர்த்தெறிந்து உலக சோசலிச குடியரசுகளை நிறுவும் போராட்டத்தின் ஒரு பகுதியாக துணைக்கண்டத்தில் ஐக்கிய சோசலிசக் குடியரசுகளை அமைக்கப் போராடல்.

    3. காஷ்மீர், பஞ்சாப், மற்றும் வடகிழக்கு பகுதிகளிலிருந்து இராணுவத்தை வாபஸ் வாங்கு!

இந்திய அரசு நடத்தும் தேசிய ஒடுக்குமுறை யுத்தங்களை சோசலிசத் தொழிலாளர் கழகம் வன்மையாக எதிர்ப்பதுடன் காஷ்மீர், பஞ்சாப், அஸாம் மற்றும் வடகிழக்கு பகுதிகளிலிருந்து இந்திய முதலாளித்துவ இராணுவங்களை நிபந்தனையின்றி உடனடியாக வாபஸ் வாங்கும்படி கோருகிறது. இந்த யுத்தங்கள் இந்தியாவின் தேசிய ஐக்கியம், இறையாண்மை என அழைக்கப்படுவனவற்றை பாதுகாப்பதற்காக அல்ல, நிராயுத பாணியான மக்களை ஒடுக்குவதற்கான மனிதப் படுகொலை யுத்தங்களுக்கும் தேசிய ஒடுக்குமுறை யுத்தங்களுக்கும், மத ஒடுக்குமுறை யுத்தங்களுக்குமாகும்.

தொழிலாள வர்க்கத்தின் சார்பாக சோவியத் தொழிலாளர் கழகம் பிரகடனம் செய்வதாவது: பஞ்சாபிகள், காஷ்மீரிகள், அஸாமியர்கள் அல்லது வேறு எந்த தேசிய இனத்தவருடனோ அல்லது மதப்பிரிவினருடோ எமக்கு யுத்தம் ஏதுமில்லை. அவர்களையும், அவர்களது ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க வேண்டியது தொழிலாள வர்க்கத்தின் கடமைகளாகும்.

இந்த மனித படுகொலை யுத்தங்கள் தொடர்பாக தொழிலாள வர்க்கத்தின் சுலோகம் இந்த யுத்தத்திற்கு ஒரு பைசாவோ, ஒரு மனிதனையோ வழங்கக்கூடாது என்பதாக இருக்க வேண்டும். உங்களது துப்பாக்கிகளை உங்களது வர்க்க சகோதரர்களுக்கு எதிராக திருப்பாது உங்கள் உண்மையான எதிரியான முதலாளித்துவ இந்திய அரசாங்கத்துக்கு எதிராக திருப்புகள். தேசிய ஒடுக்குமுறை யுத்தங்களின் போது தொழிலாள வர்க்கம் அதன் 'சொந்த' முதலாளித்துவ அரசின் தோல்விக்காக பாடுபட வேண்டும்.

இந்திய—பாகிஸ்தான் யுத்தத்தை நிராகரி!

அதேபோல இந்தியா, பாகிஸ்தான் முதலாளித்துவ அரசாங்கங்களின் யுத்த முழக்கங்கள் தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான் தொழிலாளர்கள் அதே புரட்சிகர தோற்கடிப்புவாத நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இந்தியா, பாகிஸ்தான் தொழிலாளர்களுக்கு இடையே எந்த பகையும் கிடையாது. அவர்கள் ஒருவரை ஒருவர் கொல்ல மறுக்க வேண்டும். டில்லியிலும், இஸ்லாமாபாத்திலும் உள்ளவை முதலாளித்துவ அரசாங்கங்களாகும். எதிர்காலத்தில் ஒரு யுத்தம் வெடிக்குமாயின் இந்த இரு அரசாங்கங்களின் இராணுவத்தினர் அவர்களது துப்பாக்கிகளை பட்டினியில் வாடும் இரு நாடுகளையும் சேர்ந்த மக்களுக்கு எதிராக அல்ல மாறாக அவர்களை சுரண்டுபவர்களுக்கு எதிராக துப்பாக்கிகளை திருப்ப வேண்டும். இத்தகைய புரட்சிகர தோற்கடிப்புவாத கொள்கை இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மத யுத்தங்களை நிறுத்துவதற்கும், இந்திய பாகிஸ்தானைச் சேர்ந்த மக்களை ஒரு சோசலிச குடியரசினுள் கொண்டு வருவதற்குமான நிலைமையை உருவாக்கும். இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் சோசலிசத் தொழிலாளர் கழகத்தை கட்டுவதன் மூலமே இதனை உத்தரவாதம் செய்ய முடியும்.

இந்திய அரசாங்கத்தின் யுத்தங்களுக்கு சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் எதிர்ப்பானது ஒரு பொழுதுமே குட்டி முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களின், மதக் குழுக்களின் கொள்கைகளுக்கும், வேலைத்திட்டங்களுக்கும் எமது அரசியல் ஆதரவை அர்த்தப்படுத்தாது. அத்தகைய அமைப்புகள் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் மதக்குழுக்கள் நடுவே உள்ள ஒடுக்கப்படும் வர்க்கங்களுக்கு குருட்டு பாதையை காட்டுபவையும், பிற்போக்கானவையுமாகும்.

காலிஸ்தான் எனப்படும் மத ரீதியான அரசு அமைக்கும் பிற்போக்கு வேலைதிட்டத்தையும், காஷ்மீரில் இஸ்லாமிய அடிப்படை வாதத்தையும் நிராகரிக்கும்படி அழைக்கின்றோம். இப்படியான குட்டி முதலாளித்துவ குழுக்கள் தமது சொந்த சலுகைகளுக்கான ஆதிக்க பிரதேசங்களை உருவாக்க முயற்சிக்கின்றனர்.

இப்படியான அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்யும்படி சோசலிசத் தொழிலாளர் கழகம் அறை கூவுகின்றது.

    4. தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுதந்திரத்துக்காக போராடல்

    தொழிலாள வர்க்கம் அதன் அரசியல் அதிகாரத்தை நிறுவ வேண்டுமாயின் முதலாளித்துவ அரசியலில் இருந்து முழுமையாக சுதந்திரமாகவும் அதற்கு எதிராகவும் சளைக்காது போராட வேண்டும், பிற்போக்கு வர்க்கக் கூட்டு மக்கள் முன்னணி கொள்கையின் வழியில் சி.பி.(எம்), சி.பி.. தலைமைகள் தொழிலாள வர்க்கத்தை, முதலாளித்துவ கட்சிகளின் (அரசியல் ஆளுமையின்) கீழ் கொண்டு வரும் முயற்சிகளை தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும், மேலும் இந்த துரோக தலைமைகள் முதலாளித்துவ கட்சிகளுடன் வைத்திருக்கும் அரசியல் கூட்டை முழுமையாக துண்டிக்கும்படி தொழிலாளர்கள் நிர்பந்திக்க வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் விடுதலைக்கான, முன்னேற்றத்திற்கான வழிகாட்டியாக புரட்சிகர மார்க்சிச கட்சியை—அதாவது டிராட்ஸ்கிசக் கட்சியை கட்டப் போராட வேண்டும்.
  1. தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கம் அமைத்தல்

    இன்றைய சமூக நெருக்கடிக்கு காரணம் உலகம் பகைமை நிறைந்த தேசிய அரசுகளாக பிளவுப்படுத்தப்பட்டிருப்பதும், தனியுடைமையின் அராஜக உற்பத்தி முறையுமே ஆகும். வளர்ச்சியடைந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன் இறுக்கமாக ஒருங்கிணைக்கப்பட்ட உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய அரசு அமைப்புகளுக்கும் உள்ள முரண்பாடும், தனிஉடைமைக்கும் சமூக உற்பத்திக்கும் இடையே உள்ள முரண்பாடும் கூர்மையடைந்துள்ளது. தொழிலாளர் அனைவருக்கும் வேலையை உத்தரவாதம் செய்யவும், மூடிய ஆலைகளை திறக்கவும், ஆட்குறைப்புகளை தடுக்கவும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ற சிறந்த சம்பள உயர்வுக்கும், வறுமையை ஒழிக்கவும், அனைத்து சமூக சீரழிவுகளை இல்லாதொழிக்கவும், அனைத்து அடிப்படை தொழிற்துறைகளையும் வங்கிகளையும் முதலாளிகளுக்கு நஷ்ட ஈடின்றி தொழிலாள வர்க்க ஆதிக்கத்தின் கீழ் சுவீகாரம் செய்தல், ஏகாதிபத்திய வங்கியாளர்களின் கடன்களை தள்ளுபடி செய்தல் ஆகிய சோசலிச வேலைத் திட்டங்களை நிறைவேற்றவும், இந்து வகுப்புவாத, இந்தி பேரினவாத, மற்றும் தொழிலாளர் விரோத கறுப்புச் சட்டங்களையும் கொண்ட இந்திய அரசியலைப்பை அகற்றி எந்த தனிமொழிக்கோ அல்லது மொழிகளுக்கோ சிறப்பு ஸ்தானம் இல்லாமலும், மதத்தை தனிநபரின் விவகாரமாக்கி அரசிலிருந்து மதத்தைப் பிரிக்கும், சிறிய மொழி, மதப்பிரிவுகளின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும்.
ஏழை விவசாயிகளின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க, உழுபவர்களுக்கு நிலங்களை வழங்க புதிய புரட்சிகர விவசாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும், ஒடுக்கப்படும் சிறிய தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை உத்தரவாதம் செய்யும் தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கம் அமைக்கப் போராடல் வேண்டும்.

உலக முதலாளித்துவ நெருக்கடி

பாரசீக வளைகுடா யுத்தம், ஏகாதிபத்தியவாதிகள் மறுபடி உலகத்தை புதிய கூறுபோடுவதற்கான தொடக்கத்தை குறித்தது. முன்னர் ஒரு சமயம் அவர்களுடைய காலனிகளாக இருந்த பல பிரதேசங்களை மறுபடி அடிமைப்படுத்தி, காலனிகளாக்கி சூறையாட வேண்டும் என்பது பற்றி அவர்கள் அனைவரும் உடன்பட்டிருந்தாலும், இந்த வளர்ச்சிப் போக்கு தவிர்க்க முடியாதபடி அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் மோதல்களை அதிகரிக்கச் செய்துள்ளது.

வளைகுடா யுத்தச் செலவுகளுக்கு பங்களிப்பதாக ஜெர்மனி, ஜப்பானிய ஏகாதிபத்தியங்கள் வாக்குறுதி அளித்திருந்த போதிலும் அமெரிக்கா கூறும் யுத்தச் செலவு பற்றி அதிருப்தி கொண்ட ஜெர்மனி யுத்தச்செலவு விபரங்கள் பற்றி அறிய விரும்புவதாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் தெரிவித்துள்ளது. அதேபோல் வளைகுடா யுத்தத்திற்கு பின்னர் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களை ஒரு அனைத்து ஐரோப்பிய இராணுவ படை உருவாக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி விவாதித்தனர். இது ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் அதிகரித்துவரும் நம்பிக்கையின்மை பகைமை உணர்வுகளையும் பிரதிபலிப்பதாக உள்ளது.

எண்ணெய் வளம் நிறைந்த வளைகுடா பகுதியின் மீது அதன் சொந்த ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக புஷ் நிர்வாகம் ஈராக்கிற்கு எதிரான யுத்தத்திற்கு பொறுப்பெடுத்தது. ஐரோப்பிய ஜப்பானிய போட்டியாளர்களுக்கு மேலாக அதன் கைகளை பலப்படுத்திக் கொள்வதற்காக அமெரிக்கா இராணுவ வலிமையை காட்டி மிரட்ட எண்ணியது. ஆனால் ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க இராணுவ வெற்றியை தொடர்ந்து அமெரிக்காவின் நோக்கங்கள் அதன் செந்த கூட்டாளிகளினாலேயே ஆபத்துக்கு உள்ளாகியது. எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் எந்த ஒரு மத்திய கிழக்கு சமாதான மாநாட்டிலும் ஒரு பெரும் பங்கு தமக்குத் தேவையென்று ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள் கூறுகின்றனர். இதனை அமெரிக்கா இதுவரையில் எதிர்த்து வந்தது.

ஈராக்கின் வடபகுதியில் குர்திஷ் மக்களை கட்டுப்படுத்தவும் ஈராக்கினுள் ஏகாதிபத்திய சக்திகள் காலை ஊன்றுவதற்கு வசதியாகவும் பிரிட்டிஷ், பிரான்ஸ், ஜெர்மனி தலைமையில் ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள் தமது படைகளை வட ஈராக்கிற்கு நகர்த்தினர். வடக்கு பகுதியை பெரும்கூறு போடும் திட்டத்தில் ஐரோப்பாவினால் அமெரிக்கா புறக்கணிக்கப்படலாம் என்பதை உணர்த்தலும், தயக்கத்துடன் இறுதி நிமிடத்தில் புஷ் நிர்வாகமும் அமெரிக்கப் படைகளை வடபகுதிக்கு அனுப்பியது.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் முதலாளித்துவத்தின் ஸ்திரநிலை உத்தரவாதம் செய்யப்படுவதற்கு அத்திவாரமாக இருந்த அமெரிக்காவின் பிரமாண்டமான பொருளாதார சக்தி இன்று வீழ்ச்சிகண்ட நிலைமையில் அதனை மீட்டெடுக்க இராணுவ சாகஸத்தில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. அந்த சமயம் இன்று பெரும் பொருளாதார சக்திகளாக வளர்ச்சி கண்டுள்ள ஜெர்மனியும், ஜப்பானும் உலக விவகாரங்களில் அவர்களது அரசியல் பங்களை இரண்டாம் உலக யுத்தத்தில் அவர்களின் தோல்வி நிர்ணயிப்பதை சகித்துக் கொள்ள மாட்டார்கள்.

பூகோள உற்பத்தி

பூகோள ரீதியாக உற்பத்தி ஒருங்கிணைக்கப்பட்டதானது, அனைத்து வடிவமான பொருளாதார தேசிய வாதத்தையும் சாத்தியமற்றதாக்கி உள்ளது. முழு பூகோளமுமே முதலாளித்துவ உற்பத்திக்கும் விநியோகத்திற்கும் சேவை செய்யும் தொழிற்கூடமாக இருக்கிறது. சர்வதேச போட்டி அழுத்தத்திற்கு அரசு எல்லைக்கோடுகள் நீடித்த உத்தரவாதம் எதனையும் அளிக்கவில்லை. பன்னாட்டு கூட்டு நிறுவனங்கள் அவர்களது உள்நாட்டு சந்தைகளில் மட்டுமல்ல, உலக சந்தையிலும் கூட ஒரு ஆதிக்க நிலையை நிலைநாட்ட முடிந்தால் தான் பிழைத்திருக்க முடியும். பொருதாளார ரீதியாக அல்லது அரசியல் ரீதியாக அல்லது இராணுவ நடவடிக்கைகள் மூலமாக ஒவ்வொரு தேசிய அரசையும் சேர்ந்த ஏகாதிபத்தியவாதிகள் மேலாதிக்கத்திற்காக போராடும்படி நிர்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.

இந்திய முதலாளித்துவ நெருக்கடி

40 ஆண்டுகளாக உள்நாட்டு சந்தையை பாதுகாக்க இந்திய ஆளும் வர்க்கம் மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் சர்வதேச போட்டியின் அழுத்தத்தினால் தகர்ந்து வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மறுபடி இந்தியாவை காலனி நாடாக மாற்றவும் வரம்பற்ற சுரண்டலை நடத்தவும் ஏகாதிபத்தியங்கள் முயற்சித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களான உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகள் பிரமாண்டமான அழுத்தத்தைக் கொடுகின்றன. ஏற்கனவே இந்திய அரசாங்கம் இந்த நிதி நிறுவனங்களிடம் வாங்கிய 2 ¼ லட்சம் கோடி ரூபாவிற்கான கடனுக்கான வட்டியை செலுத்த முடியாத நிலைமையிலும், இறக்குமதி செய்ய முடியாத அளவிற்கு அந்நியச் செலாவணி இருப்பு நெருக்கடியிலும் உள்ளது.

இந்திய பொருளாதார நெருக்கடி பற்றி உலக வங்கியின் ஆசியப் பிரிவுக்கான துணைத்தலைவர் அட்டியா கராளாமானோக்லு வான்கூவரில் நடந்த ஒரு கருத்தரங்கில் பின்வருமாறு கூறினார்: 'இந்திய பொதுத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் பதவி ஏற்கும் புதிய அரசு, பல்வேறு பொருளாதார சீர்கேடுகளை சரிசெய்ய வேண்டியதிருக்கும். இந்தியாவைப் பொருத்த வரை, இப்போது அந்த நாடு நெருக்கடியான காலக்கட்டதில் … உண்மை நிலவரமாகும். ஒட்டுமொத்தமான பொருளாதார பிரச்சினைகளினால் முக்கிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் ஏற்கனவே பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. இப்போது இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடிக்கு வளைகுடா போர் மட்டும் காரணம் என்று கூறி விட முடியாது. ஏற்கனவே தீவிரமாகியிருந்த அன்னியச் செலாவணி இருப்புப் பற்றாக்குறையும் அதற்கு ஒரு காரணமாகும். இத்துடன் உள்நாட்டு நிதி பற்றாக்குறையும் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது.”

இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள அன்னியச் செலாவணி பற்றாக்குறை நெருக்கடியாவது, பின்தங்கிய தொழில் நுட்பத்தில் இயங்கும் இந்தியத் தொழிற்துறை உற்பத்திப் பொருட்கள் உலக சந்தையில் போட்டியிட முடியாத நிலைமையின் நிதி வெளிப்பாடாகும். இப்படியான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்திய ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதி ஏகாதிபத்தியங்களுடன் மேலும் நெருங்கிய உறவை ஏற்படுத்தி அவற்றிற்கு கீழ்படிந்து செயல்படுவதன் மூலமாக தமது நலன்களை காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கின்றன. பாதுகாக்கப்பட்ட உள்நாட்டுச் சந்தையில் மட்டும் தங்கியிருக்கும் சிறிய தொழிற்துறைகளை பிரதிநிதித்துவம் செய்யும் மற்றொரு பகுதி ஏகாதிபத்திய கம்பனிகளின் ஆதிக்கத்தினால் துடைத்துக்கட்டப்படும் அபாயத்தை எதிர்கொண்டதன் காரணமாக ஏகாதிபத்தியத்தின் திட்டங்களுக்கு எதிராக வாயளவிலான எதிர்ப்பை மட்டுமே தெரிவிக்கும் வல்லமையுடையவர்களாக இருக்கின்றனர். ஆனால் இரு பகுதியினருக்கும் தொழிலாள வர்க்கம் சம்பந்தமாக இருக்கும் பொதுவான பீதியின் காரணமாகும்.

அந்நிய செலாவணி பற்றாக்குறையை மட்டுமல்ல வரவு செலவு பற்றாக்குறை நெருக்கடியை தீர்ப்பதற்கும் இந்திய அரசாங்கம் ஏகாதிபத்திய வங்கிகளிடம் தங்கியிருக்க வேண்டியுள்ளது. ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்த அரசியல் நிலைப்பாட்டையும் நிர்ணயிப்பதாக உள்ளது. இதற்கு சிறந்த அண்மைக்கால எடுத்துக்காட்டு ஈராக்கிற்கு எதிராக அமெரிக்காவின் தலைமையில் உலக ஏகாதிபத்தியங்கள் நடத்திய காலனியாதிக்கத்திற்கான யுத்தத்தின் போது அமெரிக்க போர் விமானங்களுக்கு இந்தியாவில் எரிபொருள் நிரப்ப காங்கிரஸ் ஆதரவில் ஆட்சி செய்த சந்திரசேகர் அரசாங்கம் அனுமதி அளித்தது. இதற்கு ஸ்டாலினிச சி.பி.. (எம்), சி.பி.. தலைமைகளின் நிபந்தனையற்ற ஆதரவுடன் ஆட்சி செய்த வி.பி.சிங் அரசாங்கம் அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் அனுசரணையாக இருந்தது. இந்திய முதலாளித்துவ ஆளும் வர்க்கம் அதன் வர்க்க நலன்களை பாதுகாக்க ஏகாதிபத்திய வங்கியாளர்களின் கட்டளைப்படி செயற்படும் சேவகனாக இருந்து இந்திய தொழிலாளர்கள், விவசாயிகள் மேல் முன்கண்டிராத காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை தொடுக்க வேண்டியுள்ளது. இதற்கு எதிராக தொழிலாளர்கள், விவசாயிகள் மத்தியில் வளர்ச்சி அடையும் புரட்சிகரமான போராட்டங்களை எதிர் கொள்ள ஏகாதிபத்தியம் இரண்டு வழிகளை கையாளுகிறது. இதனை நான்காம் அகிலத்தின் ஸ்தாபகரான டிராட்ஸ்கி பின்வருமாறு விளக்கினார்: “ஒருபுறம் 'மக்கள் முன்னணிகள்' (வர்க்க கூட்டு அணிகள்)—மறுபுறம் பாசிசம் இவை இரண்டுமே பாட்டாளி வர்க்க புரட்சிக்கு எதிராக ஏகாதிபத்தியத்தின் கடைசி அரசியல் ஆயுதங்களாகும்.”

ஸ்டாலினிச மக்கள் முன்னணிகளின்—வர்க்க கூட்டு அணிகளின்—முழுமையான பிற்போக்கு குணாம்சத்தை டிராட்ஸ்கி பின்வருமாறு அம்பலப்படுத்தினார்: “பாராளுமன்ற பிரமைகள் மூலம் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் தூங்க வைப்பதன் மூலமும் போராடுவதற்கான அவர்களின் விருப்பத்தை செயலிழக்கச் செய்வதன் மூலமும் மக்கள் முன்னணிகள் பாசிச வெற்றிக்கான சாதகமான நிலைமைகளை தோற்றுவிக்கின்றன. முதலாளித்துவ வர்க்கத்துடன் கூட்டரசாங்கம் அமைக்கும் கொள்கைக்கு பாட்டாளி வர்க்கம் பல வருடங்கள் புதிய வேதனைகளையும் தியாகங்களையும் மட்டுமல்ல பல பத்தாண்டுகள் பாசிச பயங்கரத்தையும் அனுபவிக்க வேண்டியிருக்கும்.”

சிபிஐ (எம்) சிபிஐ தலைமைகளை கூட்டாரசாங்கத்திற்குள் கொண்டு வருவதற்கு இந்திய ஆளும் வர்க்கத்தின் முக்கிய பகுதி எடுக்கும் நடவடிக்கை தொழிலாள வர்க்க எதிர்ப்பை கட்டுப்படுத்தவும், தொழிலாள வர்க்கத்தை கையாலாகாத நிலைமைக்கு உள்ளாக்கி, தொழிலாளர் விரோத சமூக சக்திகளை பாசிச ஆட்சிக்கான சமூக தளங்களாக மாற்றக்கூடிய அபாயத்தையும் கொண்டுள்ளது. பாரதீய ஜனதாக் கட்சியின் இந்து வகுப்புவாத பிரச்சாரம் தொழிலாளர் விரோத சமூக சக்திகளை அணிதிரட்டுவதற்கான சித்தாந்தமாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் டிராட்ஸ்கி கூறியது போல் "எவ்வாறாயினும் வரலாற்று கண்ணோட்டத்தில் பார்க்கையில் இந்த இரண்டு வளங்களுமே தற்காலிகமானவை. முதலாளித்துவத்தின் சீரழிவு பிரான்சில் பிரிஜியன் தொப்பியின் கீழும் ஜெர்மனியில் சுவாஸ்டிகா சின்னத்தின் கீழும் தொடருகின்றது. முதலாளித்துவத்தை தூக்கி வீசுவதைவிட வேறு எவ்வழியிலும் புதிய பாதையை காண முடியாது.”

சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் சர்வதேசிய சோசலிச வலைத்திட்டத்தின் முக்கியத்துவம் இதில் தான் இருக்கிறது. இன்றைய அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிக்கான தீர்வு இந்திய முதலாளித்துவ ஆட்சியை தூக்கி வீசி தொழிலாள வர்க்க ஆட்சி அதிகாரத்தை ஏற்படுத்துவதன் மூலமும் சர்வதேச சோசலிசப் புரட்சியின் வெற்றிக்காக போராடுவதன் மூலமுமே தீர்க்க முடியும் என்ற உண்மையை இத்தேர்தல் பிரச்சாரத்தில் கூறும் ஒரே கட்சி டிராட்ஸ்கிசக் கட்சியான சோசலிசத் தொழிலாளர் கழகம் தான்.

"தேசிய ஐக்கியத்தைக் காக்க" “மதசார்பின்மையை காக்க" தேசிய இறையாண்மையை காக்க போன்ற வர்க்க சமரச ஏமாற்றுக் கோஷங்களை பயன்படுத்தி முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கத்தை பலியிடும் ஆளும் வர்க்கத்தின் மற்றும் அதன் அரசியல் ஏஜண்டுகளக சிபிஐ (எம்) சிபிஐ ஸ்டாலினிசத் தலைமைகளின் முயற்சிகளை தொழிலாள வர்க்கம் எதிர்க்க வேண்டும். முதலாளித்துவ நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கம் ஒரு போதும் பொறுப்பு எடுக்க முடியாது, எடுக்கவும் கூடாது.

தொழிலாள வர்க்க துரோகத் தலைமைகள்

தொழிலாள வர்க்கத்தின் துரோகத் தலைமைகளான ஸ்டாலினிச சிபிஐ (எம்) சிபிஐ தலைமைகள் அவர்களின் காட்டிக்கொடுப்பின் உச்சக்கட்டமாக ஆளும் வர்க்க கட்சிகளுடன் கூட்டரசாங்கத்தில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். இலங்கையிலும், சிலியிலும், இந்தோனேசியாவிலும் தொழிலாள வர்க்க துரோகத் தலைமைகள் முதலாளித்துவ கட்சிகளுடன் கூட்டரசாங்கத்தில் சேர்ந்ததன் அரசியல், சமூக பிரதிவிளைவுகளையும் அதன் படிப்பினைகளையும் இந்திய தொழிலாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். பாசிச ஆட்சிக்கான சமூக தளத்தை உண்டு பண்டும் கூட்டரசாங்கத்தில் ஸ்டாலினிசத் தலைமைகள் சேரும் முயற்சியை சிபிஐ (எம்) சிபிஐ சேர்ந்த கீழ்மட்ட உறுப்பினர்கள் முழு சக்தியையும் பயன்படுத்தி எதிர்க்க வேண்டும்.

கடந்த காலங்களில் முதலாளித்துவ ஆட்சியின் ஒவ்வொரு நெருக்கடி கால கட்டத்திலும் இந்த ஸ்டாலினிசத் தலைவர்கள் முதலாளித்துவ ஆட்சியை அபாயங்களிலிருந்து காப்பாற்ற அவர்கள் "மக்கள் முன்னணி" கொள்கை மூலம் வர்க்கப் பதட்டங்களை "சமாதானப்படுத்தினர். 1947 இல் இந்திய துணைக்கண்டத்தில் ஏகாதிபத்தியவாதிகளின், இந்திய முதலாளித்துவத்தின் கூட்டு எதிர்புரட்சி சதியினால் ஏற்படுத்தப்பட்ட பிரிவினைக்கு அன்று ஒன்றுபட்டிருந்த ஸ்டாலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் நியாயப்படுத்தலை வழங்கியது. 1969 ல் காங்கிரஸ் ஆட்சி நெருக்கடியில் தள்ளப்பட்ட போது சிபிஐ (எம்) சிபிஐ இரண்டுமே இந்திராகாந்தி ஆட்சக்கு ஆதரவளித்து தக்க வைத்தனர். இந்த இரு கட்சிகளுமே 1971 ல் பங்களாதேஷிலும், 1987 இல் தமிழ் ஈழத்திலும் இந்திய இராணுவத்தின் பிற்போக்கு தலையீட்டுக்கு ஆதரவளித்தனர். 1977 ல் அவசரநிலை ஆட்சிக்கு சிபிஐ ஆதரவளித்தது. இந்த வருடம் ஏகாதிபத்திய பொருளாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் சந்திரசேகர் அரசாங்கத்தின் இடைக்கால பட்ஜெட்டுக்கு சிபிஐ (எம்) சிபிஐ இரு கட்சிகளுமே ஆதரவாக வாக்களித்தனர்.

சிபிஐ (எம்) சிபிஐ இரண்டுமே தமது தேர்தல் அறிக்கையில் சமூக நீதியை காக்கவும், 'தேசிய ஐக்கியத்துக்கும்' 'தேசிய இறையாண்மையை காக்கவும்', 'மதசார்பின்மையை பாதுகாக்கவும்' பிரிவினைவாத வகுப்புவாத சக்திகளை தோற்கடிக்கவும் அழைப்பு விடுத்துள்ளனர். வர்க்க சாரமற்ற இந்த சுலோகங்களை ஸ்டாலினிசத் தலைமைகள் முன்வைப்பதற்கு காரணம் அவர்களது துரோகத்தனமான மக்கள் முன்னணி கொள்கையை தொடர்வதற்காகவாகும். பாரதீய ஜனதாக் கட்சியையும், காங்கிரஸ் () கட்சியையும் நாட்டின் பிரதான எதிரிகளென சிபிஐ (எம்) சிபிஐ தலைமைகள் முழங்கும் அதே சமயம் இப்படியான பிரிவினைவாத, வகுப்புவாத சக்திகளுடன் பஞ்சாபில் கூட்டு சேர்ந்து 'தீவிரவாதிகளுக்கு எதிராக' தேசிய ஐக்கியத்தை காக்க தேர்தல் உடன்பாடு பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவும் இத்தலைமைகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்! இந்நிலைப்பாடு இத்தலைமைகளின் அரசியல் மோசடியை மேலும் அம்பலப்படுத்தி உள்ளது. அவர்களுடைய அரசியல் அகராதியில் 'தேசிய ஐக்கியம்' என்பது அவர்களின் எஜமானர்களான ஆளும் வர்க்கத்துடன் ஐக்கியத்தைக் குறிக்கிறது.

மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் பரந்தளவில் கதவடைப்பினாலும் ஆட்குறைப்பினாலும் வேலை இழந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலைகளை பாதுகாக்க இந்த ஸ்டாலினிசத் தலைமைகள் மறுக்கின்றன. ஏகாதிபத்திய வங்கியாளர்கள் கோரும் போக்குவரத்து கட்டண உயர்வுகளை ஏற்க மறுக்கும் மக்களை மேற்கு வங்கித்தின் போலீசை ஏவி சுட்டுத் தள்ளுகின்றனர். ஸ்டாலினிசத் தலைமைகள் அவர்கள் ஆட்சி செய்யும் இம்மாநிலங்களில் முதலீடுகளை செய்யும்படி பிர்லா, அம்பானி, கோயாங்கா போன்ற முதலாளிகளிடம் மன்றாடுகின்றனர். கேரளாவில் தொழிற்துறை அமைச்சர் கௌரி, வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வுகாண தனியார் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்று கூறுமளவுக்கு சென்று விட்டார். சந்திரசேகரின் இடைக்கால பட்ஜெட்டுக்கு ஆதரவளித்ததன் மூலம் அவர்கள் வெளிப்படையாகவே தேசிய மயமாக்கப்பட்ட பொதுத் துறையை தகர்ப்பதற்கு ஆதரவளித்துள்ளனர். கதவடைப்பு செய்யப்பட்ட, ஆட்குறைப்பு செய்யப்பட்ட பல லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு மேலும் மேலும் இப்பொழுது தெளிவாகி வருவது என்னவென்றால் கதவடைப்பு செய்யப்பட்ட நலிந்த ஆலைகளை தேசியமயமாக்க வேண்டும் என்று இத்தலைமைகள் கோருவது ஒரு வஞ்சகத்தனமான ஏமாற்றுதலாகும். இது தொழிலாளர்களை ஒரு புரட்சிகரமான வேலைத்திட்டத்தில் அணிதிரட்டுவதை இத்தலைமைகள் நிராகரிப்பதை மூடிமறைப்பதற்கான ஒரு கோஷமாக பயன்படுத்தப்படுகிறது.

அவர்கள் தொழிலாள வர்க்கத்தை புரட்சிகரமான முறையில் அணி திரட்ட மறுப்பதற்கு காரணம் முதலாளித்துவ வர்க்கத்தின் "முற்போக்கு பகுதியினர்" என அவர்கள் அழைப்பவர்களுடன் அவர்களுக்குள்ள கூட்டை அது குழப்பிவிடும் என்பதினாலாகும். அதற்கு காரணம் இத்தலைமைகளை முதலாளித்துவ தனிச்சொத்துடைமையை காக்க கங்கணம் கட்டி நிற்பதனாலாகும். பிற்போக்கு ஆளும் வர்க்கத்தின் மத்தியில் "முற்போக்கு தன்மையை" இவர்கள் "கண்டுபிடிப்பதற்கு" காரணம் அவர்களது வர்க்கக் கூட்டு மக்கள் முன்னணி கொள்கையை நியாயப்படுத்துவதற்காகவாகும்.

இந்த மக்கள் முன்னணி கொள்கையின் அடிப்படையிலேயே இப்பொழுது அவர்கள் முதலாளித்துவ அமைச்சரவையில் அமைச்சர்களாகி தொழிலாளர்களை 'கட்டுப்படுத்துவதற்கு' அழைக்கப்பட்டிருக்கிறார்கள். முதலாளித்துவ வர்க்கத்துடன் உள்ள நேர்மையற்ற உறவை துண்டித்து முதலாளித்துவ ஆட்சியை தூக்கி வீசி ஒரு தொழிலாளர், விவசாயிகள் அரசாங்கம் அமைக்க தொழிலாளர்களுடன் நேர்மையான ஐக்கியத்தை ஏற்படுத்தும்படி தொழிலாளர்கள் இத்தலைமைகளை நிர்பந்திக்க வேண்டும் என்று சோசலிசத் தொழிலாளர் கழகம் அழைக்கிறது.

சிபிஐ (எம்) சிபிஐ -க்கு கண்டன வாக்குகள்

இந்த ஸ்டாலினிச தலைமைகளின் மேல் இன்னும் பிரமைகளை வைத்திருப்பவர்களுக்கு, தமது சொந்த நடைமுறை அனுபவத்தின் வாயிலாக அவர்களது துரோகத்தைக் கண்டு கொள்ள பின்வரும் கோரிக்கையை முன் வைக்கிறோம். சிபிஐ (எம்) சிபிஐ தலைமைகளை முதலாளித்துவக் கட்சிகளுடனான உறவைத் துண்டித்து, சோசலிச வேலைத் திட்டத்தை செயல்படுத்தும் தொழிலாளர்-விவசாயி அரசாங்கம் அமைக்கப் போராடுமாறு நிர்ப்பந்தித்து—டிராட்ஸ்கிஸ்டுகள் போட்டியிடாத தொகுதிகளில் சிபிஐ (எம்) சிபிஐ வேட்பாளர்களுக்கு மட்டும் உங்களது விமர்சன வாக்குகளை (Critical Vote) அளியுங்கள்!

புரட்சித் தலைமையை கட்டுங்கள்!

தொழிலாள வர்க்கத்தின் துரோகத் தலைமைகளின் காட்டிக்கொடுப்புகளின் காரணமாகவே தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் தாக்குதல்கள் பெருமளவில் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. தொழிலாள வர்க்கத்தின் தலைமை நெருக்கடி சர்வதேச ரீதியாக உள்ள பிரச்சினையாகும். இந்நெருக்கடியை தீர்ப்பதற்காகவே உலக டிராட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு போராடி வருகிறது. தொழிலாள வர்க்கத்தின் ஸ்டாலினிச மற்றும் சீர்திருத்தவாத தலைமைகளுக்கு எதிராகவும் குட்டி முதலாளித்துவ மாவோவாத தலைமைகளுக்கு எதிராகவும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்துக்காகவும், சோசலிசக் கொள்கைகளுக்காகவும் சமரசமின்றி போராடி வரும் இயக்கம் டிராட்ஸ்கிச இயக்கமாகும்.

டிராட்ஸ்கிச இயக்கத்துக்கும் தொழிலாள வர்க்க மத்தியிலுள்ள இதர அனைத்து அரசியல் போக்குகளுக்கும்—ஸ்டாலினிசம், மாவோயிசம், சீர்திருத்தவாதத்துக்கும்—இடையிலுள்ள அடிப்படையான வேறுபாடு சர்வதேசியத்துக்கும், தேசியத்துக்கும் இடையிலான வேறுபாடாகும். சர்வதேசயத்துக்கான போராட்டம் உலகப் பொருளாதார நெருக்கடியினால் உக்கிரப்படுத்தப்படும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை சோசலிசப் புரட்சியின் உலகக்கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் தலைமையின் கீழ் முதலாளிதுவத்திற்கு எதிரான பொதுப் போராட்டத்தை முன்னெடுப்பதாகும். மறுபுறம் தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் போக்குகள் முதலாளித்துவ நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கத்தை பலியிடும் வேலைத் திட்டத்தில் செயல்படுகின்றன.

இவ்வாறாக தொழிலாள வர்க்கத்தின் தலைமை நெருக்கடியை தீர்ப்பதற்காக அக்டோபர் புரட்சியையும் அதன் சர்வதேசிய முன்நோக்கங்களையும் குழிபறித்த ஸ்டாலினிசத்துக்கு எதிரான போராட்டத்தில் 1938ல் உருவாக்கப்பட்ட நான்காம் அகிலத்தின் போராட்டம் ஸ்டாலினிசத்துக்கு எதிரான வரலாற்று வெற்றியை அடைத்துள்ளது. சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் வீழ்ச்சி அடைந்தது சோசலிசம் அல்ல அதன் மரண எதிரியான ஸ்டாலினிசமே. இது தனி ஒரு நாட்டில் சோசலிசத்தைக் கட்ட முடியும் என்று கூறிய மார்க்சிச விரோத ஸ்டாலினிசத்துக்கு ஏற்பட்ட வரலாற்று தோல்வியாகும். மறுபுறம் அக்டோபர் புரட்சியை சர்வதேசியத்துக்கும் குறிப்பாக வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளுக்கு விஸ்தரிப்பதன் மூலமே சோசலிசத்தின் இறுதி வெற்றியை அடைய முடியும் என்று சர்வதேசிய முன்நோக்கில் மூன்றாம் அகிலத்தை 1919ல் கட்டிய லெனின், டிராட்ஸ்கியின் முன் எதிர்பார்ப்புகளும், சர்வ தேசியத்துக்கான போராட்டமும் மிகச் சரியானவை என்று ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே தொழிலாள வர்க்கத்தின் ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைக்கான வழிகாட்டியான டிராட்ஸ்கிசத்துக்கு இன்றைய மார்க்சிசத்துக்கு போராடும் கட்சியான இந்தியாவிலுள்ள டிராட்ஸ்கிச இயக்கமான சோசலிசத் தொழிலாளர் கழகத்தை தொழிலாள வர்க்கத்தின் பரந்த புரட்சிக் கட்சியாக மாற்ற முன்வரும்படி வர்க்க நனவுள்ள தொழிலாளர்களையும், புரட்சிகர அறிவுஜீவிகளையும் இளைஞர்களையும் அழைக்கிறோம்.

சோசலிசத் தொழிலாளர் கழகம் பின்வரும் வேலைத்திட்டங்களுக்காக போராடுகிறது:

முதலாளித்துவ லாப உற்பத்தி முறையின் உலக நெருக்கடியினால் அதிகரித்துவரும் ஆலைமூடல்கள், ஆட்குறைப்புகள் சம்பள வெட்டுக்கள் முதலியவற்றை தொழிலாள வர்க்கத்தின் மேல் திணிப்பதை முடியடிக்க சமுதாயத்தின் தேவையின் அடிப்படையில் உற்பத்தியை மறு ஒழுங்கமைக்க அனைத்து அடிப்படைத் தொழிற் துறைகளையும்,. வங்கிகளையும் முதலாளித்துவ உடமையாளர்களுக்கு நஷ்ட ஈடின்றி தொழிலாளர் ஆதிக்கத்தின்கீழ் தேசியமயமாக்கல்.

ஃ உலக வங்கி, .எம்.எப். போன்ற ஏகாதிபத்திய நிதி அமைப்புகளுக்கான கடன்களையும், உள்நாட்டு முதலாளிகளுக்கான கடன்களையும் திருப்பிச் செலுத்துவதை நிராகரித்தல்.

ஃ தொழிற்சங்க தலைமைகளின் ஆதரவுடன் தொழிலாளர்கள் மேல் முதலாளிகள் தொடுக்கும் தாக்குதலை எதிர்த்துப் போராட தொழிலாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆலைக் குழுக்களை அமைத்தல்! இந்தக் குழுக்கள் ஆலைமூடல் அபாயத்திற்கு எதிராக ஆலையில் உள்ளிருப்பு போராட்டத்தை தயார் செய்ய வேண்டும்!

ஃ வேலை நீக்கிம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் மீண்டும் வேலைக்கு அமர்த்தல்!

ஃ போராட்டத்திலுள்ள தொழிலாளர் சபைகளை (சோவியத்துக்களை) அமைத்தல்!

ஃ முதலாளித்துவ அரசின் படைகளின் பயங்கரவாதத்திற்கும் கருங்காலி குண்டர்களின் தாக்குதல்களுக்கும் எதிராக தொழிலாளர்கள் வேலை நிறுத்தங்களையும் மறியல் போராட்டங்களையும் ஊர்வலங்களையும் கூட்டங்களையும் பாதுகாக்க தொழிலாளர்களின் சொந்த பாதுகாப்பு படைகளை அமைத்தல்!

ஃ அனைத்து தொழிற்சங்க விரோத சட்டங்களையும், கறுப்புச் சட்டங்களையும் ரத்துச் செய்தல்!

ஃ சம்பள இழப்பின்றி வாரத்துக்கு 48 மணி நேர வேலையை 30 மணி நேரமாக்கல்!

ஃ அனைவருக்கும் இலவச மருத்துவம், கல்வி வசதிகளை உத்தரவாதம் செய்தல்!
ஃ அனைவருக்கும் குடியிருப்பு குடிநீர் வசதியை உத்தரவாதம் செய்தல்!

ஃ அனைத்து துறைகளிலும் ஆண், பெண் தொழிலாளர்களுக்கு சம ஊதியம் வழங்கல்!

இளைஞர்களுக்கு வேலைத்திட்டம்

ஃ கல்வி அமைப்பை மறு ஒழுங்கு செய்தல்: தொழிற்சங்கங்களின் மற்றும் மாணவர் குழுக்களின் கட்டுப்பாட்டின் கீழ் நவீன தொழில் நுட்ப வளர்ச்சிக்குத் தேவையான கல்வியை இளைஞர்களுக்கு ஏற்பாடு செய்தல்! பாடசாலை மற்றும் கல்லூரிகளில் இருந்து வெளியேறிய அனைத்து வேலையற்ற இளைஞர்களுக்கும் உடனடியாக ஒரு தரமான வாழ்க்கைத் தரத்தை உத்தரவாதம் செய்ய வேலையற்றோர் உதவித் தொகையை வழங்கல்! இல்லாமல் போய்க் கொண்டிருக்கும் வேலைகளுக்கு சாதி அடிப்படையில் வேலை என்ற மண்டல் கமிஷனுக்கு எதிராக அனைவருக்கும் கல்வி, வேலை தரக்கூடிய சோசலிச அமைப்பை நிறுவுதல்.

விவசாயிகளுக்கான வேலைத்திட்டம்

கடந்த இருபது ஆண்டுகளில் ஏற்பட்ட தொழில் நுட்ப புரட்சி தொழிற்துறையில் மட்டுமல்ல விவசாயத்துறையிலும் பெரும் மாற்றத்தை உண்டு பண்ணியுள்ளது. உலகப் பொருளாதாரத்தின் அழுத்தம் நகர்புற தொழில் துறைகளையும் நாட்டுப்புற விவசாய துறையையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது. மலிந்த விலையிலும் தரமாகவும் சந்தையில் விற்கப்படும் இறக்குமதி செய்யப்பட்ட விவசாய உற்பத்திப் பொருட்கள், உள்நாட்டு விவசாய உற்பத்திப் பொருட்களை சந்தையிலிருந்து அகற்றும் அபாயத்தை கொண்டுள்ளன.

இதற்கு எதிராக விவசாயத் தொழிலாளர்களும், ஏழை விவசாயிகளும் நகர்ப்புற தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியப்பட்டு உருவாக்கும் தொழிலாள வர்க்க அரசு, வெளிநாட்டு வர்த்தகத்தில் அரசின் ஏகபோகத்தை நிலைநாட்டும், விவசாய உற்பத்திக்கு தேவையான நவீன கருவிகளை குறைந்த விலையில் வழங்கவும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும், இலகுவான முறையில் திருப்பிச் செலுத்தக்கூடிய புதிய கடன்களை வழங்கும், விவசாய உரங்களுக்கு மானியங்களை வழங்கும், பெரும் நிலச் சுவான்தாரர்களிடமிருந்து நிலங்களை பறிமுதல் செய்து உழுபவர்களுக்கு நிலங்களை பகிர்ந்தளிக்கும். விவசாய உற்பத்தி பொருட்களுக்கு நியாயமான விலையை உத்தரவாதம் செய்யும்.

ஃ நிலப்பிரபுக்களின் நிலங்களை தொழிலாளர் அரசின் கீழ் தேசியமயமாக்கி உழுபவர்களுக்கு நிலங்களை பகிர்ந்தளித்தல்!

ஃ ஆறுகளை இணைத்து கால்வாய்களை வெட்டி விவசாயிகளின் நீர்ப்பாசனத்திற்கு உத்தரவாதம் செய்தல்!

ஃ விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தல்!

ஃ இலகுவான முறையில் திருப்பிச் செலுத்தக் கூடிய புதிய கடன்களை வழங்கல்!

ஃ விவசாயக் கருவிகளை குறைந்த விலையில் வழங்கல்!

ஃ மத வெறியர்களின் தாக்குதல்களுக்கு எதிராக சிறுபான்மை மதப்பிரிவினரை பாதுகாக்க தொழிலாளர் பாதுகாப்பு சபைகளை அமைத்தல்!

ஃ தேசிய பாதுகாப்புச் சட்டம் (என்.எஸ்..) மற்றும் இதர கறுப்புச் சட்டங்களின்கீழ் கைது செய்யப்பட்டு விசாரணை இன்றி வைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்தல்!

ஃ ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் (.ம்—காஷ்மீர், தமிழ் ஈழம், நாகலாந்து, மணிப்புரி, சிக்கிம்)

ஃ ஒடுக்கப்படும் மக்களின், ஏழை விவசாயிகளின் ஆதரவுடன் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஏற்படுத்த போராடல்!

ஃ உலக ஏகாதிபத்தியத்தை தோற்கடிக்க உலக சோசலிசப் புரட்சியின் வெற்றிக்காக போராடல்!

சோசலிச வேலைத்திட்டத்தை முன்னெடுக்கப் போராடும் டிராட்ஸ்கிச வேட்பாளர்களுக்கு ரயில் என்ஜின் சின்னத்தில் முத்திரையிடுங்கள்!

தமிழ் ஈழப் போராளிகளுக்கும், தமிழ் ஈழ அகதிகளுக்கும் எதிரான பிரச்சாரத்தை உடனடியாக நிறுத்தும்படியும் தமிழ் ஈழத்தைச் சேர்ந்த அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யும்படியும் சோசலிசத் தொழிலாளர் கழகம் கோருகிறது.

ஆந்திரப் பிரதேசத்தில் நாட்டுப்புறத்தில் இராணுவத்தின் ஒடுக்குமுறைகளை சோசலிசத் தொழிலாளர் கழகம் கண்டனம் செய்வதுடன் அப்பகுதிகளிலிருந்து உடனடியாக இராணுவத்தை வாபஸ் வாங்கும்படியும், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யும்படியும் கோருகிறது.

தொழிலாள வர்க்கத்தின், ஒடுக்கப்படும் மக்களின் அனைத்து அரசியல் அமைப்புகளின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க, அவர்களுடன் அரசியல் வேறுபாடுகள் இருந்த பொழுதிலும் சோசலிசத் தொழிலாளர் கழகம் போராடுகிறது. இவ்வாறாக உரிமைகள் அச்சுறுத்தப்படும் பொழுது வர்க்க சுதந்திரத்தின் அடிப்படையில் ஐக்கிய நடவடிக்கைகளுக்காகவும், பாதுகாப்பு அணிகள் அமைக்கவும் போராடுகிறது.

இத்தகைய சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராடும்

டிராட்ஸ்கிஸ்டுகளை ரயில் என்ஜின் சின்னத்தில் முத்திரையிட்டு ஆதரியுங்கள்!

Thursday, May 26, 2016

இந்திய மக்கள் முன்னணிக்கு இடமளிக்காதே!

தொழிலாளர் பாதை

20 நவம்பர் 1987 (இதழ் 376)

இந்திய மக்கள் முன்னணிக்கு இடமளிக்காதே!

சிபிஐ (எம்) - சிபிஐ ஸ்டாலினிச தலைமைகள் முதலாளித்துவ வர்க்க எதிர்யுடன் மக்கள் முன்னணி அமைப்பதை நிராகரி- இந்த தலைமைகள் ஒரு தொழிலாளர்-விவசாய அரசாங்கத்திற்கு சுயாதீனமாக போராட கோரு!

இந்திய சோசலிச தொழிலாளர் கழகத்தின் அறிக்கை


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இந்திய கம்யூனிஸ்ட் (சீ.பீ.ஐ) கட்சிகளின் துரோக ஸ்டாலினிஸ்ட் தலைமைகள் 'காங்கிரசுக்கு பதிலீடாக ஒரு தேசிய அரசாங்கம்' அமைக்க நாடு தழுவிய தீவிர பிரச்சாரத்தினை தொடுக்கப் போவதாக சீ.பீ.ஐ. (எம்) பொதுச் செயலாளர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத் டெல்லியில் அறிவித்துள்ளார்.

இந்த மக்கள் முன்னணி அரசியல்—முதலாளித்துவ வர்க்க எதிரியுடன் ஒரு வர்க்க கூட்டு அரசாங்கம் அமைக்கும் கொள்கை—சிலியிலும், இந்தோனேசியாவிலும் அந்நாடுகளின் ஸ்டாலினிசக் கம்யூனிஸ்ட் கட்சிகளால் கடைபிடிக்கப்பட்டது.

இது 1965 ல் இந்தோனேசியாவிலும், 1973 ல் சில்லியிலும் இலட்சோப லட்சம் தொழிற் சங்கவாதிகள், தொழிலாளர்கள், கம்யூனிஸ்டுகள் ஏனைய தொழிலாளர் வர்க்க கட்சிகள், இயக்கங்களின் ஆதரவாளர்களின் இரத்தம் தோய்ந்த படுகொலைகளுக்கும், எதிர்ப் புரட்சியின் வெற்றிக்கும் இட்டுச் சென்றது.

செப்டம்பர் (1987) நடுப்பகுதியில் இடதுசாரிக் கட்சிகள் எனப்படும் சீ.பீ.ஐ. சீ.பீ.எம் கட்சிகளின் ஸ்டாலினிச தலைமைகளும், புரட்சிகர சோசலிசக் கட்சி, போவாட் புளக்கும் தொடுக்கவுள்ள நாடு தழுவிய பிரச்சார இயக்கம் ஒரிசா, மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் வரட்சியால் இடம் பெறும் நூற்றுக் கணக்கான பட்டினிச் சாவுகளை நிறுத்திவிடாது.

இது, இக்கொடூரக் காட்சிகள் ஏனைய மாநிலங்களுக்குப் பரவுவதைத் தடுக்கவோ அல்லது அடுத்த சில மாதங்களில் இந்த பலி எண்ணிக்கை நூறுகளிலிருந்து ஆயிரங்களாக அதிகரிப்பதை நிறுத்தவோ போவதில்லை.

அவ்வாறே இந்த ஸ்டாலினிச தலைமைகள் தொடுக்க உத்தேசித்துள்ள பிரச்சார இயக்கமோ அல்லது 'தேசிய அரசாங்கமோ' வரட்சியின் பிடியில் அகப்பட்டு உள்ள நாட்டின் 25 மாநிலங்களுள் 21 மாநிலங்களின் நெல் வயல்களுக்குப் பசளையிடும் கால்நடைகளின் மரண எண்ணிக்கையை நிச்சயம் நிறுத்தப் போவதில்லை.

அவர்களின் பிரச்சாரத்தின் மூலம் காய்ந்து சுருக்கோடிய முகங்களோடும், வெறும் வயிறுகளோடும் குடிதண்ணீர் இல்லாமலும் வான் பார்க்கும் விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு ஏதும் வழி பிறக்குமா? ஒரு போதும் இல்லை.

மார்ச் (1987) மாதத்தில் இருந்து மனித வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பண்டங்களின் விலைகள் இரண்டு, மூன்று, நான்கு மடங்காக அதிகரிக்கத் தொடங்கி விட்டன.

இன்று வரை தமது பணத்தினை நிறுவனப் பங்குகளிலும் சொத்து ஊகங்களிலும் முதலீடு செய்து வந்த 'பண மூட்டைகளின்' கண்கள் இலாப வீதத்தை பெருக்க பிணம் தின்னும் கழுகுகளைப் போல் நாட்டுப் புற ஆடுகள், மாடுகளிலிருந்து அரிசி, கோதுமை, சமையல் எண்ணெய் பக்கம் திரும்பி உள்ளது.

மத்திய அரசாங்கம் தனது ஐந்தாண்டு திட்டங்களுக்கு வருடாந்தரம் 200,00 கோடி ரூபாக்களை ஒதுக்கீடு செய்கையில் கறுப்பு பணத்தின் திரட்சி வருடாந்தம் 40,000 கோடி ரூபாக்களாக உயர்ந்தது என மாஜி. நிதி அமைச்சர் வி.பி. சிங் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டும் அன்றி சிங் மேலும் கூறியதாவது: 'ஆளும் கட்சிக்கும் பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கும் இடையே தொடர்புகள் இருந்து வருகின்றன. இது ஜனநாயகத்துக்கு முரணானது. எனினும் அரசாங்கம் கருணை காட்டும் கொள்கையை கடைப்பிடிக்கிறது. அத்தோடு ஒரு வகையான சமரசப் போக்கும் நிலவி வருகின்றது.”

பெரும் முதலாளித்துவப் பத்திரிகைகளால் 'காந்தி அரசாங்கத்துக்கு எதிராக தீவிரமாகப்ப ஓராடும் ஒரு மனிதனாக' வரவேற்கப்பட்டு முன்னணிக்கு கொணரப்பட்டுள்ள இந்த வீ.பி. சிங், சீ.பீ.ஐ. (மார்க்சிஸ்ட்) செயலாளரால் பின்வருமாறு புகழப்பட்டார்:

“மாஜி நிதி அமைச்சர், காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களை கிளர்ச்சி செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார். ஊழல் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க அவர் விரும்புகிறார். உட்கட்சி ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் கட்சியை … லீக், சிவசேனை, பாரதீய ஜனதா போன்ற இனவாத கட்சிகளுடனான காங்கிரஸ் கட்சியின் உறவுகளுக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர்.

“அவர் மதச் சார்பற்ற ஒரு அரசியல் சட்டத்தைக் கோருகின்றார். அவர் கைத்தொழில்களின் நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு பற்றல் போன்ற சில தீவிரவாத நடவடிக்கைகளை விரும்புகின்றனர். அத்தோடு அவர் எமது மக்களின் வாழ்வில் பயங்கர உருவெடுத்துள்ள வரட்சி பிரச்சினை பற்றியும் பேசுகிறார்.

“இந்த விவகாரங்கள் அனைத்தும் அவரால் எழுப்பப்பட்டு உள்ளன. இந்த விவகாரங்களில் காந்தி அரசாங்கத்தை எதிர்த்தாக வேண்டும் எதிர்க்கவும் முடியும். இந்தப் போராட்டம் ஒரு அரசியல் போராட்டம் அன்றி எவ்விதத்திலும் ஒரு கோஷ்டி போராட்டம் அன்று.”

('காங்கிரஸ் ஆட்சியை அகற்றுவோம்'—துண்டுப் பிரசுரம் — பக்கம் — 13-14)

இறுதியில் ஸ்டாலினிசக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும் காங்கிரஸ் கட்சியில் இருந்து கழன்றவர்களும் — வீ.பி. சிங் போன்றவர்கள் — ஒரு பொது அரசியல் மேடையை அமைத்து உள்ளனர். சோசலிசப் புரட்சியின் உயிராபத்து எதிரிகளான முதலாளி வர்க்கத்தினராலும் அவர்களது பத்திரிகைகளாலும், ஸ்டாலினிசக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களாலும் ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்ட வீ.பி. சிங்கின் 'காந்தி எதிர்ப்பு' கண்டனங்களின் உள்ளடக்கத்தினை எந்தவொரு வர்க்க நனவுள்ள தொழிலாளியும் இனங்கண்டு கொள்வான்.

விவசாய மாநிலமான ஹரியானாவில் சமீபத்தில் இடம் பெற்ற தேர்தலில் நாட்டின் ஜனத் தொகையில் பெரும்பான்மையினராக விளங்கும் ஏழை விவசாயிகள், முதலாளித்துவ காங்கிரஸ் ஆட்சியாளர்கள் மீதான தமது வெறுப்பை வெளிக் காட்டினர்.

தேவிலால் தலைமையிலான முதலாளித்துவ லோக்டால் கட்சி ஆளும் காங்கிரஸ் கட்சியை ஏறக்குறைய துடைத்துக் கட்டிய … — ஏகப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றியது.

ஏழை விவசாயிகளின் 2.27 பில்லியன் கடன்களை ரத்துச் செய்வோம் என்பதே லோக்டால் கட்சியின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாகும் என்பது சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

முதலாளித்துவ காங்கிரஸ் கட்சியின் பல தசாப்த கால ஆட்சி, வேலையற்றோரின் எண்ணிக்கையை 10 கோடிக்கும் மேலாக அதிகரித்துள்ளது. 42 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்கு, கீழே வாழ்ந்து கொண்டு உள்ளனர். 120,000 கைத்தொழில்கள் 'நோய் அலகு' களாக பிரகடனம் செய்யப்பட்டு மூடப்பட்டு உள்ளன.

சுமைகள்

நாட்டுப் புறங்களில் விசாயத் தொழிலாளர்கள் நிலச்சுவாந்தர்களால் முரட்டுத்தனமாக சுரண்டப்பட்ட அடகு வகைகப்பட்ட தொழிலாளர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். தமது உற்பத்தி பொருட்களுக்கு நியாய விலையைப் பெற்றுக் கொள்ள முடியாத ஏழை விவசாயி, தமது தலைக்கு மேல் பிரமாண்டமான வங்கிக் கடன்சுமைகள் தொங்கிய வண்ணம் கொள்வனவுச் சுமையையும் இழந்து உள்ளனர்.

செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் இந்தத் தாக்குதல்கள் அனைத்துக்கும் எதிராக இடம் பெற்ற நாடு தழுவிய எதிர்ப்பியக்கத்தில் இலட்சம் விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள் பங்கு கொண்டனர்.

இந்திய முதலாளித்துவ அரசாங்கம் ஏகாதிபத்திய வங்கிகளிடம் இருந்து 285 பில்லியன் ரூபாக்களை கடனாக பெற்று உள்ளன. இந்தக் கடன்களுக்கான வருடாந்த வட்டிக் கொடுப்பனவு ரூபா. 6.7 பில்லியன்கள். இது நாட்டின் தேசிய வருமானத்தில் 20 சதவீதமாகும். 1987-88 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டப் பற்றாக்குறை 8.8 கோடி ரூபாக்கள் ஆகும்.

இந்திய முதலாளி வர்க்கம் சார்ந்துள்ள உலக ஏகாதிபத்திய வங்கிகள் பேரளவிலான நிதி நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளன. பல லத்தீன் அமெரிக்க நாடுகளுள் பிரேசிலும் மெக்சிக்கோவும் மட்டும் 20,000 கோடி டாலர்கள் கடன் பெற்றுள்ளன. பிரேசில் இன்னுமோர் 4 வருடங்களுக்கு வட்டிக் கொடுப்பனவை இடை நிறுத்தி உள்ளது.

சிக்கன நடவடிக்கைகளை

அநேக லத்தீன் அமெரிக்க நாடுகள் தமது தேசிய வருமானத்தில் பெரும் வீதத்தை வட்டி கொடுப்பனவுக்கான ஒதுக்கீடு செய்கின்றன. இதைத் தொடர்ந்து இந்நாடுகளின் ஆட்சியாளர்கள் தொழிலாளர்கள், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை வீழ்த்தும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை திணிக்கின்றனர்.

உலகச் சந்தையில் தனது பிடியை இழந்ததன் பின்னர் அமெரிக்க ஏகாதிபத்தியம், ஜப்பானிய, ஐரோப்பிய, ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான கடும் வர்த்தக யுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. ஜப்பானுடனான அமெரிக்க வருடாந்த வர்த்தகப் பற்றாக்குறை 5,070 கோடி டாலர்களை எட்டி உள்ளது. சமஷ்டி வருவு செலவுத் திட்டம் கூட வெளிநாட்டுக் கடன்காரர்களாலேயே நிதீயீட்டம் செய்யப்படுகின்றது.

அமெரிக்கா இன்று பெரும் கடனாளி நாடாகி உள்ளது. அமெரிக்கா நிகரகுவா, ஈரானுக்கு எதிரான ஆத்திரமூட்டும் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தினதும் ஏனைய ஏகாதிபத்திய நாடுகளதும் வரலாற்று உரித்தான அரசியல், பொருளதார நெருக்கடியின் நல்ல வெளிப்பாடாகும்.

உலகப் பொருளாதார நெருக்கடியின் தாக்கங்கள் இந்தியாவிலும் வெளிப்பட்டு உள்ளன. இந்திய முதலாளிகளின் உற்பத்திப் பண்டங்களுக்கு ஏனைய முதலாளித்துவ போட்டியாளர்களுடன் போட்டியிடும் அளவுக்கு உலகச் சந்தையில் கேள்வி இல்லை. அவ்வாறே உள்ளூர் சந்தையில் பெரும்பான்மை மக்களின் கொள்வனவுச் சக்தியின் வீழ்ச்சியால் அவை வர்த்தக நிலையங்களில் குவிந்து போய் கிடக்கின்றன. இதன் பிரதி பலனாக மேலும் ஆயிரக் கணக்கான பக்டரிகள் மூடப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

வட்டிக் கொடுப்பனவுகளை திரட்டும் பொருட்டு ஏகாதிபத்திய வங்கியாளர்கள் தொழிலாளர்களை மிலேச்சமான முறையில் சுரண்டும் கடும் சிக்கன நடவடிக்கைகளை இந்திய அரசாங்கத்தின் ஊடாக அமுல் செய்து வருகின்றனர். இந்த தாக்குதல்கள் நகரங்களிலும் அத்தோடு நாட்டுப் புறங்களிலும் வர்க்கப் போராட்டத்தை உக்கிரம் அடையச் செய்துள்ளது.

இந்திய முதலாளி வர்க்கத்தின் முக்கிய கட்சியான ஆளும் காங்கிரஸ் கட்சியின் கீழும் முதலாளித்துவ அரசின் கீழும் இனவாதப் படுகொலைகள் பன்மடங்கு அதிகரித்து உள்ளன. இது மூரூட்டில் முஸ்லீம் மக்களுக்கும் பஞ்சாபில் சீக் மக்களுக்கும் எதிரான ஹிந்து இனவாதத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டது. இவற்றின் பின்னணியில் பொலிஸ், இராணுவம், காங்கிரஸ், ஆர்.எஸ்.எஸ். ஆயுதக் குண்டர்கள் இருந்து வருகின்றனர் என்பது நன்கு பிரசித்தம். இந்தச் சம்பவங்களால் உழைக்கும் மக்களின் பெரும்பான்மையினரின் வெறுப்பினை அரசாங்கம் ஈட்டிக் கொண்டுள்ளது.

நூற்றுக் கணக்கான மக்களின் உயிர்களைப் பலி கொண்டுள்ள வரட்சி முதலாளி வர்க்கத்தின் உயிராபத்து நெருக்கடியைத் ஆழமாக்கியுள்ளது. இந்நிலைமைகளின் கீழ் வீ.பி.சிங் இடதுசாரிக் கட்சிகளை (ஸ்டாலினிஸ்டுகள்) தனது இயற்கையான சகாக்களாகப் பிரகடனம் செய்தார். ஆளும் முதலாளி வர்க்கம் தொடர்பாக நகர்புற, நாட்டுப்புற பல இலட்சம் உழைக்கும் ஜனத்தொகை கொண்டுள்ள வெறுப்பு, விசனங்களோடு தன்னை 'இனங்காட்டிக் கொள்ளும்' சுலோகங்களை எழுப்புகின்றார்.

ஜனதா கட்சியின் ஒரு தலைவரான பிஜூ பட்நாய்க் கூறியது போன்று "பட்டினியால் வாடும் மக்களை கிளர்ந்து எழுந்து, ஆட்சியாளர்களை பலாத்காரமாக தூக்கி எறியும் படி" அழைப்பு விடுக்கும் வீ.பி. சிங் கின் "போராட்டம்", அத்தகைய ஒரு நிலைமை ஏற்படாமல் தடுப்பதே, உயிர் நீத்துக் கொண்டுள்ள முதலாளித்துவ அமைப்பினைக் காக்கும் பொருட்டு பாராளுமன்றப் போராட்டத்தை ஒரு மாற்று "தீர்வாக" முன் வைப்பதே சிங்கின் நோக்கம். ஸ்டாலினிசக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் இதன்படி செயல்பட்டு வருகின்றனர்.

மாஜி. ஜனாதிபதி ஷெயில் சிங்குக்கும் ராஜீவ் காந்திக்கும் இடையிலான தகராறில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் உரத்த குரலில் கூறியதாவது, “ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ராஜீவ் காந்தியின் அரசாங்கம் ஜனாதிபதியால் தள்ளுபடி செய்யப்படுவதை நாம் அனுமதிக்கப் போவதில்லை" அத்தோடு "நாம் ஜனநாயகத்தையும் அரசியல் அமைப்புச் சட்டத்தையும் பேணுவோம்" என்றனர்.

ஆனால் இந்நிலைப்பாடு, வர்க்கப் போராட்டத்தின் சூட்டினால் விடவதற்குள் மாற்றும் அடைந்தது. தபால் தொழிலாளர்களின் முழு அளவிலான வேலை நிறுத்தப் போராட்டத்தில் இருந்து பல்கலைக்கழ, கல்லூரி ஆசிரியர்களின் ஒரு மாத கால வேலை நிறுத்தம் வரை காட்டிக் கொடுத்த இந்த ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் அயோக்கியர்கள், இன்று இடைத் தவணை தேர்தலை கோரி வருகின்றனர்!

கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் வீ.பி. சிங்குடன் இணையக் காரணம், ஊழல் வகுப்புவாதம், பொருளாதார கொள்கைகள் ஆகியன மனித ஜீவன்களில் நல்லதும் கெட்டதுமான ஒழுக்கங்களில் இருந்து தோன்றுவன போல் காட்டுவதே! இந்த ஒழுக்கவியலாளர்களைப் பற்றி ருஷ்யப் புரட்சியின் இணைத் தலைவரான லியோன் ட்ரொட்ஸ்கி எழுதியதாவது:

“நான்காம் அகிலம் சர்வ ரோக நிவாரணிகளை தேடுவதும் இல்லை. கண்டு பிடிப்பதும் இல்லை. அது முற்றிலும் மார்க்சிசத்தின் அடிப்படையிலேயே தனது நிலைப்பாட்டினை கொண்டுள்ளது. ஒரே புரட்சிகரக் கோட்பாடு என்ற முறையில் அது ஒருவர் யதார்த்தத்தை புரிந்து கொள்ளவும், தோல்விகளுக்குப் பின்னால் உள்ள காரணங்களைக் கண்டு பிடிக்கவும், வெற்றிக்கு நனவாகத் தயார் செய்யவும் உதவுகின்றது.

"நான்காம் அகிலம், ஆட்சியை கைப்பற்றுவது எப்படி என்பதை பாட்டாளி வர்க்கத்துக்கு முதலில் காட்டிய போல்ஷிவிசத்தின் பாரம்பரியங்களை தொடர்ந்து கடைப்பிடிக்கின்றது.

“நான்காம் அகிலம், அரை வைத்தியர்கள் போலிகள், வேண்டத் தகாத ஒழுக்க ஆசான்களை துடைத்துக் கட்டுகின்றது. சுரண்டலை அடிப்படையாகக் கொட ஒரு சமூகத்தில் சமூகப் புரட்சியின் ஒழுக்கமே உயர்ந்தது.

“தொழிலாளர்களின் வர்க்க நனவை உயர்த்துகின்றதும், தமது சொந்த சக்திகளில் நம்பிக்கை வைக்கின்றதும், போராட்டத்தில் சய தியாகத்துக்கு ஆயத்தமானதுமான சகல விதிமுறைகளும் சிறப்பானவை. தமது ஒடுக்குவோரின் முன்னிலையில் ஒடுக்கப்படுவோரிடையே அச்சம் அடிபணிவுகளை திணிக்கும் விதிமுறைகளை அனுமதிக்க முடியாது. இவை எதிர்ப்பு, வெறுப்புகளை நசுக்குகின்றன. அல்லது வெகுஜனங்களின் விருப்புக்குப் பதிலாக தலைவர்களின் விருப்பினை பதிலீடு செய்கின்றன.

“எனவே தான் மார்க்சிசத்தை வேசையாட்டத்துக்கு பயன்படனுத்தும் சமூக ஜனநாயகம், போல்ஷிவிசத்தின் எதிரிடையான ஸ்டாலினிசம் இரண்டும் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கும், அதன் ஒழுக்கத்திற்கும் உயிராபத்து மிக்க எதிரிகளாகும்.”

('இடைமருவு வேலைத்திட்டம்'—லேபர் பிரசுரம் —39-39)

4 லட்சம் அங்கத்தவர்களையும், 2 கோடி ஆதரவாளர்களையும் கொண்ட இந்தியாவின் இரண்டாவது பெரும் கட்சி என ஜம்பம் அடித்த படி சீ.பீ.ஐ. (மார்க்சிஸ்ட்) கட்சியின் செயலாளர் நம்பூதிரிபாத் கூறியதாவது: “மதச்சார்பற்ற ஏனைய எதிர்கட்சிகளுடன் உடன்பாடு கொண்டிருக்க வேண்டி உள்ளதால் நாம் சுயாதீனமாக செல்ல விரும்பவில்லை. எமது நோக்கம் ஒரு பொது இயக்கத்தை விருத்தி செய்வதே. நாம் அந்த இலக்கில் சென்று கொண்டிருக்கிறோம்.” ('ஹிந்து'—செப்டம்பர் 10)

தனியார் சொத்தை ஒழிக்கத் தனது கட்சிக்கு வேலைத்திட்டம் கிடையாது என்பதைக் கூற முதுகெலும்பு இல்லாத நம்பூதிரிபாத் ஒரு புதிய சக்தி (!) நாட்டில் உருவெடுத்து வருவதாகவும், அச்சக்திகள் ஐக்கியப் படுத்தப்பட வேண்டும், ஐக்கியப் படுத்த முடியும் என்று உள்ளார். “இந்தப் புதிய சக்திகளில் ஒன்று இடதுசாரி கட்சிகள் (!) இரண்டாவதாக காங்கிரஸ் தலைமைக்கு எதிரான கிளர்ச்சி செய்யும் காங்கிரஸ் காரர்களுக்கும், இனவாத சக்திகளுக்கும் (!!) இடையேயான தொடர்புகள் மூன்றாவதாக பீ.ஜே.பீ. (பாரதீய ஜனதா கட்சி) முஸ்லீம் லீக் போன்ற இனவாதச் சக்திகளுடனான சந்தர்ப்பவாதக் கூட்டுக்களுடன் எதிர்க்கட்சிகளிலுள்ள இடதுசாரி அல்லாத சக்திகள் மனமுறிவு கண்டுள்ளன". (காங்கிரஸ் ஆட்சியை நீக்குவோம்'—பக்கம் 30)

முதலாளித்துவக் கட்சிகளுடனான ஸ்டாலினிச மக்கள் முன்னணிக் கோலத்தை இங்கு நீங்கள் காண்கிறீர்கள். இந்த ஸ்டாலினிச வேடதாரிகள் தாம் 'காங்கரிஸ் அரசாங்கம் கடைபிடிக்கும் முதலாளித்துவ அபிவிருத்தி பாதையை அடிப்படையில் எதிர்ப்பதாகவும்'! முழங்குகின்றன்றர். (பீபிள்ஸ் டெமோகிரசி—செப்டம்பர் — 13) ஆனால் பாராளுமன்ற விதிமுறைகளினூடாக எப்படி? முதலாளித்துவக் கட்சிகளுடான கூட்டினாலா?

இந்தியா உட்பட அனைத்துலக ரீதியில் இந்த ஸ்டாலினிச கட்சிகள் கொலைகாரத் தனமான மக்கள் முன்னணி அரசியலையும், 'சோசலிசத்துக்கான பாராளுமன்ற பாதையையும்' கடைப்பிடிக்கின்றன. அநேக நாடுகளில் இது இலட்சோப லட்சம் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்க வழி வகுத்தது. சில்லி கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்புரட்சி நிலைப்பாடு காரணமாக 1973 செப்டம்பரில் சீ.ஐ.ஏ. ஆதரவு இராணுவச் சதியினால் ஆயிரக் கணக்கான தொழிலாளர்களும், விவசாயிகளும் படுகொலை செய்யப்பட்டனர்.

அலன்டேயின் சீர்திருத்தவாதக் கட்சியுடன் ஆட்சியைப் பகிர்ந்து கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி, சீ.ஐ.ஏ யினால் பயிற்றப்பட்ட சில்லி இராணுவத்தினரை 'சீருடையில் உள்ள மக்கள்' என வருணிக்கும் அளவுக்கு சென்றது. பாசிச சதியினால் அவர்களின் மக்கள் முன்னணி அரசாங்கம் வீழ்த்தப்படுவதற்கு சிறிது காலத்துக்கு முன்னதாக சில்லி கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தவரான பஞ்சாரோ இந்த ஸ்டாலினிச போக்கினைப் பற்றி கூறியதாவது:

“அதிதீவிர இடதுசாரி போக்குகள் சோசலிசத்தை உடனடியாக 'அறிமுகம்' செய்யுமாறு கூக்குரல் போடுகின்றனர். எவ்வாறு எனினும் தொழிலாள வர்க்கம் பூரண அதிகாரத்தை படிப்படியாக தேடிக் கொள்ளும் என நாம் நம்புகிறோம். அரச இயந்திரத்தினை எமது கட்டுப்பாட்டுக்குள் கொணரும் நடவடிக்கையாக நாம் இதனை புரட்சியின் மேலாய அபிவிருத்தியின் நலன்களாக பரிணாமம் செய்வோம்.

ஆனால் சில்லியின் அரச இயந்திரம் இந்த போலி தீர்க்கதரிசிகளையும் அரசியல் சூழல்நிலைகளையும் எங்ஙனம் உருமாற்றியது என்பதை சகலரும் அறிவர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவுடன் ஐக்கியம் பூண்ட சோசலிச தொழிலாளர் கழகம், இந்தியாவில் மற்றுமோர் சில்லியை தயார் செய்யும் ஸ்டாலினிஸ்டுகளுக்கு எதிராக உறுதியான அரசியல் போராட்டத்தை தொடுக்க முன்வருமாறு வர்க்க நனவுள்ள சகல தொழிலாளர்களையும், இளைஞர்களையும் வேண்டுகின்றது.

இதனை ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் ஸ்டாலினிசம், சீர்திருத்தவாதம் மத்தியவாதங்களுக்கு எதிராக ஈவிரக்கமற்ற போராட்டத்த்தின் மூலம் அனைத்துலக தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்படும் மக்களையும் உலக சோசலிச புரட்சியின் பக்கம் வென்றெடுக்கும் போராட்டத்தை —நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் போராட்டத்தில் இருந்து வேறு படுத்திவிட முடியாது.

கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களை முதலாளித்துவ கட்சிகளுடனான சகல உறவுகளையும் துண்டித்துக் கொண்டு, சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாளர் — விவசாயிகளின் அரசாங்கத்தை அமைக்கும்படி தொழிலாள வர்க்கம் கோர வேண்டும்.

இப்போராட்டம் ஸ்டாலினிசத் தலைமைகளின் 'கம்யூனிஸ்ட்' முகமூடிகளை கிழித்தெறிய வாய்ப்பளிக்கும்.

இப்போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்ல சோசலி தொழிலாளர் கழகம், நகர நாட்டுப்புற தொழிலாளர்களை உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில்—நான்காம் அகிலத்தின் அனைத்துலக்க் குழுவில் சேருமாறு வேண்டுகின்றனது.

தொழிலாளர்கள், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை பின்வரும் கோரிக்கைகளுக்காகப் போராடும்படி கோர வேண்டும்:

சகல ஏகாதிபத்திய வங்கிக் கடன்களையும் இரத்துச் செய்!

சகல வங்கிகள் 'கறுப்பு பணங்களை' நஷ்ட ஈடின்றி தொழிலாளர் அதிக்கத்தின் கீழ் தேசியமயமாக்கு!

கல்வி, சுகாதாரம், குடியிருப்பு, தொழில்களை அடிப்படை உரிமைகளாக்கு!

சகல நிலங்களையும் நஷ்ட ஈடின்றி தேசியமயமாக்கி, ஏழை விவசாயிகளுக்கு அவற்றை பகிர்ந்து கொடு!

விவசாயிகளின் கடன்களை இரத்துச் செய்து இலகுவான கடன்களை வழங்கு!

விவசாய உரங்களுக்கு மானியம் வழங்கு!

விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலை!

முதலாளித்துவ அரச இயந்திரத்தை நிர்மூலமாக்கி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலைநாட்டு!

ஆயுதம் தாங்கிய தொழிலாளர்களைக் கொண்ட சோவியத்களை நிறுவு!

ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை உத்தரவாதம் செய்!

இந்திய ஆக்கிரமிப்பு படைகளை ஈழத்திலிருந்து வாபஸ் பெறு.

சென்னை பெரியார் திடல் பொதுக் கூட்டம்

தொழிலாளர் பாதை"

08 செப்டம்பர் 1989 (இதழ் 391)

சென்னை பெரியார் திடல் பொதுக் கூட்டம்:

உள்நாட்டில் தொழிலாளர் போராட்டங்களை நசுக்கும் இராணுவம், வெளிநாட்டில் விடுதலை போராட்டத்தினைக் காப்பது எப்படி?

சோசலிச தொழிலாளர் கழகம்

'புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் மூன்று தோழர்கள் பாசிச மக்கள் முன்னணியினரால் படுகொலை செய்யப்பட்டமைக்குக் காரணம் பு.க.க. வின் போராட்டம் பாட்டாளி வர்க்க அனைத்துலக வாதத்தினை அடிப்படையாக கொண்டுள்ளதே. பு.க.க. இலங்கை முதலாளி வர்க்கத்தின் இனவெறிக்கும் தமிழ் முதலாளித்துவ தேசியவாதத்துக்கும் எதிராக தமிழ், சிங்கள தொழிலாளர்களை தமிழ் ஈழம் -இலங்கையைக் கொண்ட ஒரு ஐக்கிய சோசலிச அரசினை அமைக்க அணிதிரட்டி வருகின்றனது.'

பு.க.க. சிலாபம் உறுப்பினர் தோழர், கிறேஷன் கீகியனகே பாசிச ம.வி.மு. யால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய இந்திய சோசலிச தொழிலாளர்கள் கழகத்தின் உறுப்பினரும் பி அன்ட் சி ஆலை சென்னை தொழிலாளர் சங்க உறுப்பினருமான தோழர். மோசஸ் ராஜ்குமார் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்திய ட்ரொட்ஸ்கிச இயக்கமான சோசலிசத் தொழிலாளர் கழகத்தினால் ஜூலை 22 இல் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் பேசிய தோழர். மோசஸ் இங்கைப் பிரச்சினைகள் சம்பந்தமான பொய்களும், திருப்புகளும் பரப்பப்பட்டு வரும் நிலையில் உண்மை நிலையை விளக்குமுகமாகவே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக குறிப்பிட்டார்.

தென் ஆசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் ஏகாதிபத்திய பொலிஸ் ஏஜன்டு பாத்திரத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் தோழர் கைலாசம் பின்வருமாறு குறிப்பிட்டார்:

ஏகாதிபத்தியத்தின் பூரணமான ஆசீர்வாதங்களுடன் இந்திய முதலாளி வர்க்கம் தென் ஆசியாவில் ஏகாதிபத்திய பொலிஸ் பாத்திரத்தை வகித்து வருகின்றது. முன்னர் பங்களதேஷிலும் இன்று இலங்கை மாலத்தீவிலும் அதை செய்து வருகிறது. பங்களாதேஷிலும் தமிழ் ஈழத்திலும் புரட்சிகரப் போராட்டங்களை நசுக்கும் இந்திய முதலாளி வர்க்கத்தின் பாத்திரத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் முற்போக்கானதென சாயம்பூசி வந்துள்ளன. இந்திய-இலங்கை உடன்படிக்கை தமிழர்களைக் காப்பதற்கன்றி விடுதலைப் போராட்டத்தை நசுக்கவே கைச்சாத்திடப்பட்டது. … தென் ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உப குழுவின் தலைவரான ஸ்ரீபன் கே. சொலார்ஸ் இந்திய-இலங்கை உடன்படிக்கையை பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை நசுக்கக் கைச்சாத்தான காம்ப் டேவிட் ஒப்பந்தத்துடன் ஒப்பிட்டதைச் சுட்டிக்காட்டிய தோழர். கைலாசம், ஸ்ரீபன் காந்தி - ஜயவர்தன பேர்களை நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்ததையும் கூட்டத்தினருக்கு நினைவுபடுத்தினார்.

அடுத்து பேசிய தோழர் ராம் பு.க.க. உறுப்பினர் தோழர் கிறேஷன் படுகொலை செய்யப்பட்ட வர்க்க நிலைமையை விளக்குகையில் பின்வருமாறு குறிப்பிட்டார்:

மரண நெருக்கடி

உலக முதலாளித்துவ நெருக்கடியின் ஒரு பாகமாக இலங்கை முதலாளி வர்க்கம் மரண நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. தோழர் கிறேசன் தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் முன்னணிக்கு வந்து கொண்டுள்ள நிலையிலேயே பாசிச ம.வி. முன்னணியால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பு.க.க. பாட்டாளி வர்க்க அனைத்துலகவாதத்தின் அடிப்படையில் தமிழ் தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிப்பதனை அடிப்படையாக கொண்டு தமிழ் ஈழம் -இலங்கையை கொண்ட ஐக்கிய சோசலிச அரசுகளை நிறுவ தொழிலாள வர்க்கத்தினை அணி திரட்டிக் கொண்டுள்ள சமயத்திலேயே இப்படுகொலை இடம் பெற்றுள்ளது. தோழர் கிறேசன் மட்டுமின்றி கடந்த வருடம் தோழர்கள் பிட்டவெலவும், குணபாலவும் ஜே.வி.பி. பாசிஸ்டுகளால் கொலை செய்யப்பட்டனர்.

பிரித்தானிய ஒடுக்குமுறைக்கு எதிரான அயர்லாந்தின் போராட்டம் சம்பந்தமாக மார்க்சின் அறிவுரையை சுட்டிக் காட்டுகையில் தோழர். ராம் கூறியதாவது:

அயர்லாந்து

அயர்லாந்தின் விடுதலைப் போராட்டத்துக்காக போராடாத வரையில் பிரித்தானிய தொழிலாள வர்க்கம் பிரித்தானிய முதலாளி வர்க்கத்தில் இருந்து எங்ஙனம் தன்னை விடுவித்துக் கொள்ள முடியாதோ அங்ஙனமே இந்திய தொழிலாள வரக்கம் தமிழ் ஈழத்தின் சுய நிர்ணய உரிமைக்காக போராடாத வரையில் இந்திய முதலாளி வர்க்கத்தில் இருந்து விடுபட முடியாது எனக் குறிப்பிட்டார்.

'மக்கள் விடுதலை முன்னணி பாசிஸ்டுகளதும் யூ.என்.பி. குண்டர் படைகளதும் கொலை மிரட்டல்களுக்கு மத்தியில் பு.க.க. தோழர்கள் ட்ரொட்ஸ்கிச கொள்கைகளுக்காக உறுதியான போராட்டத்தினை தொடுத்துள்ளனர். பாசிஸ்டுகள் தோழர்களை உடல்ரீதியாக ஒழித்துக் கட்ட முயன்றுள்ளனர்.'

இந்திய ஆக்கிரமிப்பு படைகளை தமிழ் ஈழத்தில் தொடர்ந்தும் வைத்திருப்பதில் இந்திய ஸ்டாலினிஸ்டுகளின் துரோகப் பாத்திரத்தை கூட்டத்தினருக்கு சுட்டிக் காட்டிய ராம், உள்நாட்டில் துறைமுகத் தொழிலாளர்கள், புகையிரத் தொழிலாளர்கள், டாக்டர்களின் போராட்டங்களை நசுக்கி வரும் இராணுவம் வெளிநாட்டில் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பது எப்படி? எனக் கேட்டார்.

இந்திய படைகளை தமிழ் ஈழத்தில் இருந்து வாபஸ் பெறுவது தொடர்பான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் வேலைத்திட்டத்துக்கும் பாசிச மக்கள் விடுதலை முன்னணியின் இனவாத இந்திய எதிர்ப்பு கூச்சலுக்கும் இடையேயான பண்புரீதியிலான அடிப்படை வேறுபாட்டை விளக்கிய தோழர் ராம் 'இந்திய படைகளை வெளியேற்றும் ம.வி. முன்னணியின் கோரிக்கை இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. அவர்கள் 'தேசபக்த இராணுவ அரசாங்கத்துக்காக' போராடுகின்றனர். ம.வி. முன்னணியின் இந்திய விஸ்தரிப்புவாத கொள்கை தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக முடுக்கி விடப்பட்டுள்ளது. தொழிலாள வர்க்க கட்சிகளுக்கும் தலைமைக்கும் எதிரான புதிய தாக்குதல்களைத் தொடுக்கப் போவதாக ம.வி.மு. அறிவித்துள்ளது. 'இந்திய ஐந்தாம் படையின் ஆலோசனையின் பேரில் சிங்கள இந்திய ஏஜன்டுகள் இடதுசாரிகளாக வேடம் பூண்டுள்ளதாக' அது குறிப்பிட்டுள்ளது. இந்தப் பிரகடனத்தின் பேரில் தொழிலாள வர்க்கக் கட்சிகளின் பல அங்கத்தினர்கள் சமசமாஜ கட்சி மத்திய குழு உறுப்பினர்கள், பு.க.க. உறுப்பினர்கள் உட்பட—ம.வி.மு யால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

'ம.வி.மு தொழிலாளர்களை துப்பாக்கி முனையில் 'வேலைநிறுத்தங்களுக்கு' இட்டுச் செல்லும் யூ.என்.பி. ஆட்சியாளர்கள் துப்பாக்கி முனையில் தொழிலாளர்களை வேலைக்குத் தள்ளுவதும் 'அன்றாட நிகழ்ச்சி'களாகி விட்டன. இதன் விளைவாக நூற்றுக் கணக்கான தொழிலாளர்களும் தொழிற்சங்க தலைவர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

'பாசிஸ்டுகள் ஆட்சிக்கு வரும் நிலையில் அது உடனடியாக தனது பிற்போக்கு இனவாத, மத அரசினைக் காக்கும் பொருட்டு இந்திய முதலாளி வர்க்கத்துடன் சமரசம் செய்து கொள்ளும். ஐக்கிய முன்னணிக்கான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அழைப்பு இலங்கையிலும், அனைத்துலக தொழிலாள வர்க்கத்திடையேயும் ஆதரவினை வென்று வருகிறது. நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு இந்த ஐக்கிய முன்னணிக்கான போராட்டத்தினை அனைத்துலக தொழிலாள வர்க்கத்திடையே ஆழமாக எடுத்துச் செல்கின்றது.

பூரணத்துவம் செய்யப்படாத ஜனநாயகப் புரட்சியின் பாத்திரத்தினை நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் பூர்த்தி செய்யும் பொருட்டு இலங்கையில் புரட்சி கம்யூனிஸ்ட் கழகமும், இந்தியாவில் சோசலிச தொழிலாளர் கழகமும் இந்திய துணை கண்டத்தில் ஒரு சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தினை — உலக சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்தின் ஒரு களமாக நிறுவ போராடி வருகின்றது எனவும் தோழர். ராம் குறிப்பிட்டார்.