Thozhilalar
Paathai 470
May
1996
இந்தியாவில்
சமீபத்தில் நடைபெற்ற பொதுத்
தேர்தல் முடிவுகள் இந்திய
ஆளும் வர்க்கத்தையும் முழு
இந்தியத் துணைக் கண்டத்தையும்
பற்றிப் பிடித்துக் கொண்டு
வளர்ச்சி பெறும் பிரமாண்டமான
அரசியல் நெருக்கடியைக்
காட்டுகின்றது.
இந்த
அரசியல் நெருக்கடி இந்தியத்
துணைக் கண்டத்தில் சோசலிச
குடியரசு ஒன்றியத்துக்காகப்
போராடும் அவசியத்தை கோடானுகோடி
தொழிலாளர்-ஒடுக்கப்படும்
மக்கள் முன்னிலையில்
தோற்றுவித்துள்ளது.
வெளியான
சமீபத்திய பொதுத் தேர்தல்
முடிவுகளின்படி கடந்த ஐந்து
ஆண்டுகளாக ஆட்சி செலுத்திய
காங்கிரஸ் கட்சி படுமோசமான
தோல்வியைத் தழுவிக் கொண்டுள்ளது.
காங்கிரஸ்
கட்சி 136
இடங்களையே
கைப்பற்றியுள்ளது.
முன்னர்
அதற்கு லோக் சபாவில் 260
இடங்கள்
இருந்தன.
படுபிற்போக்கு
இனவாதக் கட்சியான பாரதீய
ஜனதா கட்சியும் பாசிச சிவசேனாவும்
கூட்டாக 195
இடங்களைக்
கைப்பற்றிக் கொண்டுள்ளன.
இது
லோக் சபாவின் முழு ஆசன
எண்ணிக்கையான 545
ல்
மூன்றில் ஒன்றுக்கு சற்று
அதிகமானதாகும்.
பீ.ஜே.பீ-சிவசேனா
கூட்டு ஜனாதிபதி சங்கர் தயாள்
ஷர்மாவின் அழைப்பின் பேரில்
லோக்சபாவில் அதிக எண்ணிக்கை
கொண்ட கட்சியாக அரசாங்கத்தை
அமைத்துக் கொண்டுள்ள போதினும்
அரசாங்கத்தில் இருந்து கொள்ள
இன்னும் 76
எம்.பீ.களின்
முண்டுகோலைத் தேடிக் கொள்ள
வேண்டும்.
அரசாங்கத்தை
அமைத்துக் கொண்டுள்ள பீ.ஜே.பீ.க்கு
முழு வாக்காளர் எண்ணிக்கையில்
நூற்றுக்கு 20
வீதம்
மட்டுமே கிடைத்துள்ளது.
தேசிய
முன்னணி-இடது
முன்னணி முதலாளித்துவக்
கூட்டுக்கு 117
ஆசனங்கள்
கிடைத்துள்ளத.உ
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,
இந்திய
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சி என்ற ஸ்டாலினிசக்
கட்சிகள் இந்த முதலாளித்துவ
கூட்டின் இடதுசாரி முன்னணியில்
உள்ளன.
இம்முன்னணிகள்
இன்று மக்களால் தோற்கடிக்கப்பட்ட
காங்கிரஸ் கட்சியின் முண்டுகோலுடன்
ஒரு அரசாங்கத்தை அமைக்க
முயற்சிக்கின்றனர்.
முதலில்
இக்கூட்டின் சீ.பீ.எம்.
தலைவரான
ஜோதி பாசுவை பிரதமர் பதவியில்
இருத்தி முதலாளித்துவ ஆட்சியின்
பொறுப்பை ஏற்க எண்ணிய போதிலும்
நெருக்கடியின் ஆழம் காரணமாக
இத்தருணத்தில் நேரடியாக
ஆட்சி அதிகாரத்துக்கு தோள்
கொடுக்காமல் கர்நாடகத்தின்
முதலாளித்துவ ஜனதாதளத்தின்
தலைவர் தேவ கவுடாவுக்கு
பிரதமர் பதவியைக் கையளிக்க
எண்ணப்பட்டுள்ளது.
பீ.ஜே.பீ-சிவசேனா
கூட்டரசாங்கம் தமக்கு லோக்
சபாவில் பெரும்பான்மை இருப்பதை
நிரூபிக்க மே 31
ம்
திகதி வரை கால அவகாசம்
வழங்கப்பட்டுள்ளது.
இதன்பேரில்
கட்சிகள்,
கூட்டுக்கள்,
சுயேட்சைக்
குழுக்களின் அங்கத்தவர்களை
விலைக்கு வாங்கும் இயக்கம்
திரைக்குப் பின்னால் நடைபெற்று
வருகின்றது.
இதில்
வாக்குகளைக் கறந்து கொள்ள
முடியாது போனால் இரண்டு கிழமை
வயதான பீ.ஜே.பீ-சிவசேனா
அரசாங்கம் வீழ்ச்சி காணும்.
இதன்
பின்னர் தேசிய முன்னணி-இடது
முன்னணி அரசாங்கம் ஆட்சிக்கு
வந்தாலும் முன்னைய முன்னணியைப்
போலவே இதுவும் இழுபறி முதலாளித்துவ
குழுக்களின் ஒரு முன்னணியாதலால்
இதன் ஆயுளும் சொற்பம்.
ஸ்டாலினிஸ்டுகளைக்
கொண்ட அத்தகைய ஒரு அரசாங்கத்தை
தற்காலிகமாக ஆட்சியில்
வைத்திருப்பது என்பது
தொழிலாளர்கள்-ஒடுக்கப்படும்
மக்களுக்கு எதிராக தாக்குதல்
நடாத்த அதைப் பயன்படுத்த
முதலாளித்துவ வர்க்கம்
எடுக்கும் தீர்மானத்திலேயே
அது தங்கியுள்ளது.
இந்தியப்
பொதுத் தேர்தலில் நூற்றுக்கு
60 சதவீதத்தினரே
வாக்களித்துள்ளனர்.
இது
வழக்கமான ஒரு போக்கு அல்ல.
இது
முதலாளித்துவ ஆட்சி தொடர்பாக
பொது மக்களிடையே வளர்ச்சி
கண்டு வரும் வெறுப்பினை
எடுத்துக்காட்டுகின்றது.
எந்த
ஒரு கட்சிக்கும் மக்கள்
அடிப்படை இல்லாமல் ஒரு
அரசாங்கத்தை அமைக்கும்
அளவுக்கு பெரும்பான்மையிலான
ஆசனங்கள் கிடைக்காமை காங்கிரஸ்
கட்சி நடாத்திய ஏகாதிபத்தியச்
சார்பு ஆட்சி முறை தொடர்பாக
பொதுஜன எதிர்ப்பும் அவ்வாறே
இரண்டாம் உலக யுத்தத்தின்
பின்னர் ஏகாதிபத்தியவாதிகள்
இந்தியாஇல் திணித்த அரசியல்
அமைப்பு தொடர்பாக மக்களின்
நம்பிக்கையீனமும் எதிர்ப்பும்
வளர்ச்சி கண்டு வருவதைச்
சுட்டிக் காட்டுகின்றது.
111
ஆண்டுக்கள்
வயதுகள் படைத்த இந்திய தேசிய
காங்கிரஸ் வீழ்ச்சி கண்டமை
முன்னொருபோதும் இல்லாத ஒரு
நிலைமையாகும்.
1947ம்
ஆண்டின் சுதந்திரம் எனப்படுவதன்
பின்னர் 4
ஆண்டுகள்
தவிர்த்த முழுக் காலத்தையும்
ஆட்சி செய்தது இந்திய காங்கிரஸ்
கட்சியேயாகும்.
இந்திய
முதலாளி வர்க்கத்தின் இக்கட்சி
பிரித்தானிய காலனித்துவ
ஆட்சியின் போதும் அதன் பின்னரும்
1950களிலும்
1960களிலும்
ஏகாதிபத்திய உலக அமைப்பினுள்
பொதுமக்களை கட்டுப்படுத்தி
வைக்கும் முக்கிய ஏகாதிபத்திய
உபகரணமாக விளங்கியது.
இக்கட்சி
1975ல்
இந்திராகாந்தி காலத்தில்
தோல்வி கண்டது.
அந்த
தோல்வி காங்கிரஸ் நாற்றமெடுப்பின்
ஒரு கட்டமாக இருந்த போதிலும்
இன்று நரசிம்மராவ் அரசாங்கத்தின்
தோல்வி முற்றிலும் அதற்குச்
சமானமானதல்ல.
நரசிம்மராவ்
அரசாங்கத்தின் தோல்வியும்
அனைத்துக் கட்சிகளதும்
நெருக்கடியின் பின்னாலும்
உள்ளவை இந்தியாவினுள்
கட்டவிழ்க்கப்பட்டுள்ள உலகப்
பொருளாதாரத்தின் பூகோளமயத்துடன்
ஒன்றிணைந்து கொள்ளும் வேலைத்
திட்டத்தினால் வர்க்க உறவுகளில்
ஏற்பட்டுள்ள பிரமாண்டமான
மாற்றமாகும்.
காங்கிரசின்
வீழ்ச்சியானது யுத்தத்தின்
பின்னைய பொருளாதார,
அரசியல்
உறவுகள் பூகோளரீதியில்
வீழ்ச்சி கண்டதைக் குறித்து
நிற்கின்றது.
ஏகாதிபத்தியத்தின்
கீழ் இடம் பெற்றுவரும்
பூகோளமயத்துடன் இணைந்து
கொள்ளும் பொருட்டு ராவோ,
அரசாங்கம்
வெளிநாட்டு முதலீடுகளுக்கு
இந்தியாவை திறந்துவிடவும்
அரசாங்கத் துறையை கரைத்துவிடவும்
ஆரம்பித்தது.
இந்திய
தேசியக் கைத்தொழில்கள்
வெளிநாட்டு முதலீடும்
இறக்குமதியும் பெருக்கெடுத்து
வரும் நிலையில் அடியுண்டு
போயிற்று.
தொழிலாளர்களுக்கும்
விவசாயிகள் உட்பட்ட ஒடுக்கப்படும்
மக்களுக்கும் கிடைத்து வந்த
உதவிமானிய வெட்டு ஆரம்பமாகியது.
கடந்த
நான்கு ஆண்டுகளுள் இடம் பெற்ற
பொருளாதார மறுசீரமைப்பின்
கீழ் ஒடுக்கப்பட்ட தொழில்களின்
எண்ணிக்கை ஒரு கோடியெனக்
கணக்கிடப்பட்டுள்ளது.
வேலையற்றோர்
எண்ணிக்கை 10
கோடிக்கு
அதிகமெனக் கணக்கிடப்பட்டுள்ளது.
முதலாளிகள்
ஏகாதிபத்தியக் கம்பனிகளுடன்
சேர்ந்து கோடிக்கணக்கான
ரூபாக்களை கமிஷனாகச் சுருட்டிக்
கொள்கிறார்கள்.
நாட்டினுள்
உயர்ந்த வருமானம் பெறும்
நூற்றுக்குப் 10
வீதத்தினர்
நாட்டின் முழு வருமானத்தின்
நூற்றுக்கு 90
வீதத்தை
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
இருக்கும் அளவுக்கு சமூகத்
துருவப்படுத்தல் உக்கிரம்
கண்டுள்ளது.
கடந்த
நான்கு வருடங்களுள் இந்தியாவின்
உத்தியோகப்பூர்வமான வறுமை
வீதம் சனத்தொகையின் 36
வீதத்தில்
இருந்து 48
வீதமாக
உயர்ந்துள்ளது.
பூகோளமயமாக்கலின்
ஒரு வெளிப்பாடாக இந்தியா
முழுவதும் குழந்தை உழைப்பு
எண்ணிக்கை 4
கோடிகளைத்
தாண்டியுள்ளது.
இந்தியா
சமூக ரீதியில் இரண்டு நாடாக
பிளவுண்டு போயுள்ளது;
அதாவது
- முதலாளிகளின்
இந்தியா,
தொழிலாளர்-ஒடுக்கப்படும்
மக்களின் இந்தியா.
தொழிலாளர்-ஒடுக்கப்படும்
மக்களின் பயணம்
இந்திய
பொதுத் தேர்தல் முடிவுகள்
ஏகாதிபத்தியவாதிகளதும்
ஏகாதிபத்தியச் சார்பு
முதலாளிகளதும் தாக்குதல்களுக்கு
எதிராக தொழிலாளர்-ஒடுக்கப்படும்
மக்கள் மேற்கொண்டுள்ள பயணத்தை
எடுத்துக் காட்டுகின்றது.
எனினும்
இந்தியாவின் தொழிலாளர்-ஒடுக்கப்படும்
மக்கள் தாம் முகம் கொடுக்கும்
ஆபத்துக்களைப் புரிந்து
கொண்டாக வேண்டும்.
தொழிலாளர்-ஒடுக்கப்படும்
மக்கள் முதலாளி வர்க்கத்தின்
தாக்குதல்களுக்கு முகம்
கொடுக்க பதிலீடு இல்லாமல்
செய்யப்பட்டுள்ள ஒரு நிலைமையில்
இதன் இலாபத்தை பிற்போக்காளர்கள்
சுரண்டிக் கொள்கிறார்கள்.
பீ.ஜே.பீ-சிவசேனா
கூட்டு நொண்டி அரசாங்கம்
அமைக்கும் அளவுக்கு ஆசனங்களைப்
பெற்றுக் கொண்டுள்ளது.
அவர்கள்
மக்களின் குழப்பநிலையை
மதவாதம்,
இனவாதம்
போன்றவற்றைப் பயன்படுத்திச்
சூறையாடிக் கொள்கிறார்கள்.
பாசிச
சக்திகளைப் பயன்படுத்திக்
கொள்ளுவதன் மூலம் தொழிலாளர்
வர்க்கத்தைத் திருப்பித்
தாக்குத் தயாராகி வருகின்றார்கள்.
இந்திய
ஆளும் வர்க்கத்தின் நீண்ட
கால கருவியான காங்கிரஸ் கட்சி
பொருளாதார பூகோளமயமாக்கத்தின்
எதிரில் சிதறுண்டு போகத்
தொடங்கியுள்ளது.
இது
ஆளும் வர்க்கம் தமது ஏகாதிபத்திய
அவசியங்களின் பேரில்
தொழிலாளர்-ஒடுக்கப்படும்
மக்களை நிர்வகிக்க பெரிதும்
வலதுசாரி இராணுவ-பாசிச
அமைப்புகளை கட்டி எழுப்பும்
திசையில் வேகமாகத் தள்ளப்பட்டுள்ளதைக்
காட்டிக் கொண்டுள்ளது.
இந்தியாவினுள்
வளர்ச்சி கண்டுள்ள நெருக்கடி
இந்தியத் துணைக் கண்டத்தின்
சகல நாடுகளின் உள்ளும் வளர்ச்சி
கண்டுள்ளள நிலைமைகளுடன்
இணைந்து கொண்டுள்ளது.
இந்நெருக்ககடியின்
தாற்பரியங்களை விளக்கித்
தீர்வுக்கான முன்னோக்கினை
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்
குழுவுடன் ஐக்கியம் பூண்ட
சோசலிசத் தொழிலாளர் கழகம்
மட்டுமே முன்வைத்துள்ளது.
நடந்து
முடிந்த பொதுத் தேர்தலில்
சோ.தொ.க.
மட்டுமே
இந்திய துணைக் கண்ட சோசலிசக்
குடியரசை அமைக்கும் மாற்று
வேலைத்திட்டத்தின் கீழ்
மூன்று வேட்பாளர்களை நிறுத்தியது.