"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Monday, December 17, 2018

சிறிலங்கா டிராட்ஸ்கிஸ்டுகளின் மீது கை வைக்காதே!


Thozhilalar Paathai Volume 025
September 1989

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் இலங்கை பகுதியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் மீது சிறிலங்காவின் வலதுசாரி பிரேமதாசா ஆட்சியின் ... சோசலிசத் தொழிலாளர் கழகம் வன்மையாக கண்டினம் செய்கிறது. இந்த தாக்குதல்களை கண்டிக்கும்படியும், ராணுவத்தால் கைது செய்யப்பட்ட புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் தோழர்களை உடனே விடுதலை செய்ய கோரும்படியும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை நாம் அழைக்கிறோம்.

 
செப்டம்பர் 6ம்தேதி மாலை 6.30 மணிக்கு ராணுவத்தினர் புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்தின் அச்சக கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அவர்களால் அங்கு யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பின்பு பு... வின் தலைமையகத்திற்கு சென்றனர். அங்கே அவர்கள் பு...வின் வார இதழான 'கம்கறு மாவத்த' (தொழிலாளர் பாதை) பத்திரிகையின் ஆசிரியர் ஆனந்தவக்கும் புறவை தேடுவதாக கூறினர். அப்போது தலைமையகத்தில் இருந்த பு...வின் அரசியல் குழு உறுப்பினர் தோழர் W. சுனில் மற்றும் தோழர் அஜித்தையும் ராணுவத்தினர் கைது செய்து சென்றர். இதுவரை அவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பது தெரியாது.

மறுநாள் மதியம் 2 மணிக்கு மீண்டும் ராணுவத்தினர் பு...வின் தலைமையகத்திற்கு வந்து மேலும் மூன்று பு... உறுப்பினர்களை தாம் தேடுவதாக கூறினர். அந்தப்பட்டியலில் பு...வின் பொதுச்செயலாளர் தோழர் விஜே டயஸ் பெயரும், உள்ளடக்கப்பட்டிருந்தது. அவர்கள் தேடிய 3 பேரையும் அங்கு கண்டுபிடிக்க முடியாத நிலையில் அப்போது அலுவலகத்தில் இருந்த இரண்டு தோழர்களை கோரமாக ராணுவத்தினர் தாக்கிவிட்டுச் சென்றனர்.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் மீது பிரேமதாசா ஆட்சி தாக்குதல்களை உக்கிரப்படுத்தியிருக்கும் இந்த வேளையில், அந்நாட்டில் உள்நாட்டு யுத்தம் வளர்ச்சி அடைந்து வரும் சூழ்நிலைமையில் சர்வகட்சி மாநாட்டில் பங்கு பெறும்படி ஜே.வி.பி. பாசிஸ்டுகளுக்கு பிரேமதாசா அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா அரசின் படைகளுக்கு எதிராகவும் ஜேவிபி பாசிஸ்டுகளுக்கு எதிராகவும் இலங்கைத் தொழிலாள வர்க்கத்தைப் பேண, தொழிலாளர்களின் ஐக்கிய முன்னணி அமைக்க என்ற பிரச்சாரத்தையும், சுதந்திரமான தொழிலாளர் பாதுகாப்பு படைகள் அமைக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தையும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் முன்னெடுத்திருப்பது சிறிலங்கா முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு மரணபீதியை உண்டு பண்ணியதாலேயே இத்தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தின் அடிப்படையில் தமிழ்ஈழத் தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்து, தமிழ்ஈழ மற்றும் சிறிலங்காவின் ஐக்கிய சோசலிசக் குடியரசுகளை அமைக்கவே பு... போராடுகிறது.